|
|
 |
Friday, October 15, 2004
Hello ,
As Blogdrive is not supporting well with the Thamizmanam news Aggrigator, I have moved my Blog to http://karthikramas.blogspot.com You can read my blogs over there. Thanks for the patience and sorry for the inconvience. Happy Blogging!!
Posted at 01:30 pm by karthikramas
Permalink
Tuesday, October 12, 2004
சில்லென்ற சில வெண்மேகங்களும்....
சில்லென்ற சில வெண்மேகங்களும், நீண்ட பெருமூச்சும்.
---------------------------------------------
நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், மீண்டும்.ஏனோ எழுதுவது பிடித்திருக்கவில்லை 2 மாதங்களாக.
காரணம் மனநிலையும், அரைநொடியும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடங்கொடுக்க இயலாத வேலைகளும்.
சில்லென்ற வெண்மேகங்கள் என் பயணமுழுதும் என் நண்பர்களாய் உரசிக்கொண்டே வந்தன. நான் உறங்கும்போதும் அவை என்னோடு கதை பேசிக்கொண்டிருந்தன. சில் நேரங்களில் நான் அவைகளின் பேச்சுக்கு மறுமொழி உரைக்கவில்லை.
நான் கடந்த காலங்களில் எழுதிக்கொண்டிருந்த மனநிலையை இன்று எண்ணிப்பார்த்தால்,
வெட்கமும், இவையெல்லாம் சரிதானா என்ற கேள்வியும் மிஞ்சியுள்ளது.
இப்படித்தான் திரிந்துகொண்டிருந்தேன்.
நான், என் வாளை எடுத்துக்கொண்டு அலைந்ததுண்டு.
யார் தலையாவது எப்போதாவது குனியாதா
அப்போது ஒரு வீச்சு
வீசலாம் என்று.
எத்தனையோ என்னுடைய தலைகளும்
உருண்டு ஓடுவதை பார்த்ததுண்டு.
இந்த எழுத்துக் காட்டாற்றின் வேகம்தான் எத்தனை
என்று மார்பிலே தாங்கி, மூச்சினைப் பிடித்துக்கொண்டு
நேராய் நடந்ததுண்டு.
இன்னொருவரையோ, எந்த அளவுக்கு நேர்மையாய் எழுதுகிறார் என்று
சோதித்துவிடலாம் இன்று.
இப்படியும் சில நாட்கள் அலைந்ததுண்டு.
இன்னொருவர், எந்த நூல் நேர்க்கோட்டைப் பிடித்துக்கொண்டு
இப்படி வேகமாய் எழுதுகிறார்.
அவருடைய இந்த நூலைக் கத்தரித்துவிடுகிறேன்,
பிறகு என்ன செய்கிறார் என்று பார்க்கிறேன்.
இன்னொருவரோ மிகுந்த வீரத்துடன் எழுதுகிறாரே.
இப்படித்தான் எல்லா நேரத்திலும் இருப்பாரா?
சற்று அமைதியாய் இவரை கவனித்துப்பார்க்கிறேன்.
இவருக்கு என்னதான் வேண்டும்?
இவர் எதைப் பரப்ப முயற்சிக்கிறார்?
அந்த கடைசிக் கோபுரக் கல்லை
இப்போதே உடைக்கிறேன்!
இவ்விதமாய் பல பல எழுத்துக்கள்
வாதங்கள், அடிதடிகள்.
சில நேரத்தில்
இவையெல்லாம் தேவையில்லை இனி
என்று தீர்மானமாய் நினைப்பதுண்டு.
இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
எழுதுவது என்று ஒருபாதி மனமும்
மறுபாதி கைகளைப்பிசைந்துகொண்டும்.
எழுதவா? எழுதவா? எழுத வா?
------------------------
என்னை ஏற்கனவே இணையத்தில் விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
Posted at 10:53 am by karthikramas
Permalink
Thursday, July 29, 2004
அன்புள்ள குசும்பன்,
ஆமாம்.உங்கள் நீண்ட கமெண்டை படிக்கவில்லை.
ரொம்ப நாளா வலைப்பதிவு செய்ய ஒன்னும் இல்லையா அதுதான். அதுக்கு நன்றி.
சரி உங்க கான்டெஸ்ட்டை நான் புரிஞ்சுக்கிட்டேன். ஏன் ஆர் எஸ் எல் (ஜெயஸ்ரீயா , எனக்கு நீங்க யாருன்னே தெரியாது இதுல ஜெயஸ்ரீய தெரியும்மான்னு கேக்குறதெல்லாம் பொல்லாத குசும்பு) எழுதுன கான்டெக்ஸ்ட் புரியலயா உங்களுக்கு. எத்தனை பெண்களை ,கையில் ஒரு வருஷம் , வயித்துல மூணு மாசம்னு பாத்திருப்பீங்க. அவங்க கஷ்டத்துக்கு பகவானா காரணம். இப்படி திட்டமில்லாம் ப்ரொடக்ஷன் பண்ணும் ஆண்களை 'அரிப்புன்னு ' சொல்லாமல் வெறெப்படி சரியாக சொல்லமுடியும்? பெண்கள் பட்ற கஷடத்த யோசிச்சீங்கன்னா உங்களுக்கே புரியும். "இடைவெளி விடுங்க" "இடைவெளி விடுங்க" ந்னு தேர்தல் பிரச்சாரம் மாதிரி கூவுறது எதுக்கு? அவங்க இந்த இடத்தில தாம்பத்தியத்தைப் பத்தி பேசவே இல்லை. தம்பத்தியத்தை தாறூமாறா செய்ற ஆண்களைத்தான் சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன். அதனால் எல்லா ஆண்களும் அப்படித்தான்னும் கிடையாது. அவரை இப்படி எழுதுனா நல்லா இருக்கும்னு நீங்கள் சொலவ்து அபத்தம். அவங்களுக்கு முழு சுதந்திரம் குடுங்கன்னுதான் நான் கேக்குறேன்.
அது கிடக்கட்டம் , ஆங்கிலத்தில் 'ஹார்னி'ன்னு ஒரு வார்த்தை இருக்கே அதுக்கு சமமா தமிழ்ல ஏதாவது வார்த்தை இருக்கா. பாரதியார் 'காமாக்நி'ன்னு உப்யாகபடுத்தியிருக்கார். சமீபத்தில் நேசமுடன் வெங்கடேஷின் இதழில் படித்தது. அது தவிர?
Posted at 09:14 am by karthikramas
Permalink
Wednesday, July 28, 2004
மூக்கனின் பிரசவ வலி பதிவு குறித்தும், அதை
மூக்கனின் பிரசவ வலி பதிவு குறித்தும், அதைத்தொடர்ந்து குசும்பனின் பதிவு குறித்தும் இன்று பாலாஜியும் நானும்் யாகூவில் சில கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம்.
1, முதலில், குசும்பன் ஜெயஸ்ரீ எழுதியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இது அவரது ஆணாதிக்க மனம் அவருக்கு தெரியாமல் வெளிப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கலாம். இதே 'அரிப்பு' என்ற வார்த்தையை இன்னொரு ஆண் வலைப்பதிவு நண்பர் எழுதியிருந்தால் என்ன யோசித்திருப்பார் என்பதும் சிந்தனைக்குரியது. ஆண்கள் எதை வேண்டுமெனில் பேசலாம் , எழுதலாம் , ஆனால் பெண்கள் இதை எழுதினால் அசிங்கம்,வக்கிரம் என்று (குசும்பன் அப்படி சொல்லவில்லை) நிலவும் தமிழ் சமூகக் கருத்து எனக்கு ஏற்புடையதில்லை. இதற்கு எந்த கலாச்சாரக் கூறை மேற்கோள் காட்டினாலும் , அந்த கலாச்சாரத்தை நான் எட்டி உதைப்பேன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்னைப்பொறுத்தவரை. தாம்பத்யத்தை போற்றுதலுக்குரியது என்று உண்மையில் நினைப்பவர்கள் பெண்ணையும் அதே போற்றுதலுக்குரியது என்று ஏன் நினைப்பதில்லை என்பது ஆச்சரியத்துகுரிய ஆனால் சிந்தனைக்குரிய கேள்வி.
2. பிரசவ வலி குறித்து என் கருத்து என்ன என்று கேட்டு பாலாஜி கொஞ்சம் சதாய்ச்சார். நான் யோசிக்க வேண்டிய விஷயம் என்றேன். என்ன 'எஸ்கேப்பிஸமா?" என்று மீண்டும் கலாய்த்தார்.
அவருடைய கேளிவியைத் தொடர்ந்து நான் தந்த பதிலகளை கீழே தமிழில் தருகிறேன்.
1. பிரசவத்தை ஒரு ஆண் பார்க்க சம்ம்திக்கவில்லை என்றால் அவன் தன் மனைவியை காதலிக்கவில்லை என்று அர்த்தமல்ல.
2. பாலாஜி, அமெரிக்கர்கள் செய்ய முடியும்போது நாமும் செய்ய வேண்டும். நம்மாலும் முடியவேண்டும் என்றார். ஆண்களால் இருக்க முடியாதது , அதைப் பற்றி புரிந்து கொள்ள இயலாமைக்கு வழி கோலும் என்றார்.
3. நான்., இது நீங்கள் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையின் பழக்கத்தினைப் பொறுத்தது என்றேன்.
இது ஒரு பாடம் படித்தல் போன்றது. அவசியம் கற்க வேண்டிய பாடம். ஆனால் முதல் முறையே அப்படி பிரசவத்தைப் பார்த்து கற்றுக் கொள்வதற்கு போதிய மனோபலம் தேவை. மிகவும் கடினமான பாடம் அந்தவகையில் என்றேன்.
4. பாலாஜியோ, நீங்கள்(பொதுவாக ஆண்களை) ஒரு ஆணாக இருப்பதால், அதை சாக்காக பயன் படுத்திக் கொண்டு தப்பிக்கிறீர்கள் என்றார். மூக்கன் எழுதியது அவரது நேர்மையை காட்டுவது என்றார். மேலும் இது ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயமல்ல, மிக வெளிப்படையான விஷயம்.
5. ஆனால் பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை என்று சொன்ன பாலாஜியை, நான் 'ஏன் செய்வதில்லை?' என்று கேள்வி கேட்டேன்.
6. தொடர்ந்து நானே, ஆண்கள் செய்ய ஆசைப்படாதற்கு காரணம் அல்லது தவிர்ப்பதற்கு காரணம் , ஆண்கள் பிரசவ காட்ச்சியினைப் பற்றி ஒரு முன்கருத்து வைத்திருப்பார்கள். அல்லது சின்ன வயதில் பிரசவத்தை பார்க்க விடாமல் பெரியவர்கள் தடுத்து அப்படியே மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் காட்சி மிகவும் கோரமானதாக இருக்கும் என்றும் அவர்களால் அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளமுடியாது என்றும் நினைத்திருப்பர்.
7. என்னால் ஒரு பிரசவத்தைப் பார்க்க முடியும். ஆனால் நான் எல்லா ஆண்களையும் அப்படி எதிர்பார்ப்பது முறையல்ல.
8. இதை சரியாக சொல்லிக் கொடுக்காத நமது சமூகத்தைதான் நான் குற்றம் சொல்வேன்.
ஆணையும் பெண்ணையும் பிரித்து வளர்த்தே பழக்கிய நம் சமூகமே இதற்கு காரணம். இது மாதவிடாய் காலத்திலிருந்து தொடங்குகிறது. பெண்ணின் பிரச்சினையில் ஆண் ஒதுங்கி இருக்கவேப்பழக்கப்படுத்தப் படுகிறான். பின் தீடிரென் ஒரு நாள் பிரசவத்தைப் பார், ரத்தத்தைப் பார் என்றால் அவன் என்ன செய்ய முடியும்?
(இந்த இடத்தில் பாலாஜி என்னைப் பாராட்டினார், அது இப்போ அவசியமில்லை :)))
9. ஆனால் ஆண் வேண்டாம் எனத் தவிர்ப்பது ஒரு எஸ்கேப்பிஸமே. அதற்கு போதிய மனோ தைரியம் இல்லாததைக் காரணமாகச் சொல்லலாம்.
இப்படி நடந்த எங்கள் பேச்சு, இந்திய சமூக திருமணத்தைப் பற்றித் திருப்பியது. பாலுறவு பிரச்சினைகள் பார்க்கப்படும் விதம் குறித்தும் ஓரிரு கருத்துக்களைப் பரி மாறிக் கொண்டோம். அதை அடுத்த பதிவில் தருகிறேன்.
கொசுறு : :)
Avoid hospitals that do not allow husbands into the labor and delivery rooms. It's your husband's baby too, and he belongs with you. Arm yourself for arguments on this point by reading Robert M. Bradley's book, HUSBAND-COACHED CHILDBIRTH.
Posted at 09:06 pm by karthikramas
Permalink
Monday, July 19, 2004
அன்புள்ள நண்பருக்கு,
அரசு அங்கீகாரம் தடைக்கல் என்று நான் சொல்லவில்லை. ஒரு மொழி
செம்மொழி என்று ஏற்றுக்கொள்ள அரசு அங்கீகாரம் தேவையில்லை. இது மொழி அறிஞர்கள்ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து.தமிழ் கூறும் உலகப் பல்கலைக்கழகங்கள் தமிழைச் செம்மொழியாக என்றோஏற்றுக் கொண்டுவிட்டன. அரசு அங்கீகாரதுக்காகப் போராடினோம் என்பது அரசியல்.அரசுஅங்கீகாரத்துக்குஅர்த்தமேயில்லை என்கிறபோது எதற்குப் போராட்டம்? ஒரு non-issueக்குப்போராடவேண்டியஅவசியமென்ன என்பதுதான் என் கேள்வி. இப்பொழுது சமர்ப்பிக்கிப்பட்டுள்ளபட்ஜெட்டில்தமிழ் செம்மொழி என்ப¨தைச் செயல்படுத்த ஏதேனும் நிதி ஒதுக்கீடு
அறிவிக்கப்பட்டுள்ளதா?இல்லை. இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டுஅதைக் கற்பிக்கவும், ஆய்வு செய்யவும், பட்ஜெட்டில் இடம்பெறாமல், நிதிஎங்கிருந்து வரும்?வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதுவரக நூல்நிலையங்களில் ஆங்கில, ஹிந்திப்
புத்தகங்கள்மட்டுந்தாம் இருக்கின்றனவேதவிர, சம்ஸ்கிருதத்துக்கு இணையான தொன்மையடையதமிழ்செவ்வியல் நூல்கள் கூட இடம் பெறவில்லை. தமிழ் மீது ஆணையிட்டுஅரியணையேறியஅரசியல் கட்சிகள் இதுவரை இது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? இது பற்றிநான் தினமணியில்ஒரு கட்டுரை 1988ல் எழுதியிருக்கிறேன். அரசியல் கட்சிகள்இப்பிரச்னையைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.இது போன்ற இன்னும் தமிழ் அரசியல் கட்சிகள்தமிழுக்காகஎழுப்பவேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. எல்லவற்றையும் விட்டுவிட்டு ஒரு non-issueக்காகப்போராடி அது ஒரு சாதனையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்
என் கருத்து.
இந்திரா பார்த்தசாரதி
----- Original Message -----
From: karthikramas <karthikramas@y...>
To: <RaayarKaapiKlub@yahoogroups.com>
ஆக
வேண்டிய காரியங்களுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடுமோ
என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது
1. நண்பருக்கு, வார்த்தைகளை எடுத்துக் கொடுத்துக்கு நன்றி. முதலி
லிருந்தே இதைத்தான் நான் கேட்கிறேன். அரசியலை விடுத்து,
இந்த அங்கீகாரம் எப்படி 'தடைக்கல்லாய்' இருக்க முடியும் என்று
யாராவது சொல்லுங்கள். உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால்
மனபூர்வமாய் ஏற்றுக் கொள்கிறேன்.
நிஜமாய், எனக்குத்தான் புரியவில்லை இல்லை எல்லோரும் நடிக்கி
றார்களா என்று அச்சம் ஏற்படுகிறது. இ.பா. வாவது என் அறிவுக்
கண்ணைத் திறந்தால் தேவலை!
:-))
2. வணிக ரீதியில் தமிழ் முன்னேறுவத்ற்கு என்ன செய்ய
வேண்டும்? டப்பு வேணுமே? யார் தருவார்கள்?
:))
Posted at 12:22 pm by karthikramas
Permalink
Friday, July 16, 2004
அம்மா எங்கே! சாக்லெட் எங்கே!...
காலையில் அம்மாவின் பால சாதமும்
அதை ஊட்டுகையில் அவளது விரல் சுவையும்
பையில் இடைவேளைசாப்பாடு
கொஞ்சம் தண்ணீர்
ஒரு துண்டு சாக்லெட்
முதல் மணி அடிக்கும் போது
பள்ளிகூரை பற்றிகொள்ளும் என்று
சொல்லவே இல்லையே அம்மா!
மறந்துவிட்டாளா!
அவளுக்கு தெரிந்திருக்கவில்லையோ!
இந்த டீச்சர் எங்கே போனாள்?
அதற்குள் சாப்பிட்டுவிடலாம் இந்த சாக்லெட்டை!
னினைவுகளை எரிக்கும் விதமாய்
சர்ரென பிஞ்சுத் தொடையில் பாய்ந்து துளைக்கும்
எறியும் தீக் கட்டை
சாக்லெட்டு உருகிவிடுமோ!
கண் ஏன் சொக்குது
முடிவில்லாத இருள்!!
அம்மா எங்கே! சாக்லெட் எங்கே!
News: The bodies are so badly charred it's difficult to identify the children or their sexes
Posted at 05:11 pm by karthikramas
Permalink
Wednesday, July 14, 2004
நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக..
நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக , ராயரில் எழுதிய என் இரண்டாம் கடிதம்.
அன்பு கார்த்திக்ராமஸ்,
>
> பொ¢ய எழுத்தாளர் என்றாலும் அவருடைய கருத்துக்களை
மறுத்துச் சொல்கிற உங்களின் அந்தத் துணிச்சலை
> பாராட்டுகிறேன். என்றாலும் உங்கள் கருத்துக்களை நயம்பட
சொல்லலாமே... முகத்தில் அறைகிறாற் போன்ற
> வார்த்தைகள் பொ¢ய எழுத்தாளருக்கு அல்ல, இன்று புதிதாய்
எழுதத் துவங்குகிற எழுத்தாளருக்கு கூட வேண்டாமே..
>
> இல்லை, அதிர்ச்சியாய் ஏதாவது சொல்லி, அதன் மூலம் மற்றவர்
கவனத்தை கவருகிற உத்தி என்றால் அது
> நீடித்து நிலைக்காது என்று நம்புகிறேன்.
>
> இந்தமாத காலச்சுவடில் இதுபற்றிய வேங்கடாசலபதியின்
கட்டுரையை வாசித்தீர்களா?
அன்புள்ள சுரேஷ்-க்கு,
நன்றி, தமிழுணர்வு கொஞ்சம் தலைக்கேறிவிட்டதுதான் காரணம்
என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதில் வருத்தப்பட எனக்கேதும்
இல்லை. இதையே இ.பா. அல்லாது வேறு யார் எழுதியிருந்தாலும்
இபபடித்தான் எழுதியிருப்பேன். எழுதுவேன்.
எதிர்வினை எழுதும்போது , கருத்தைச் சொன்னவர் பெரிய
எழுத்தாளரா அல்லது துணுக்கு எழுத்தாளரா, நோபெல் பரிசு வாங்கி
யவரா என்றெல்லாம் பார்த்து எழுதுவதில்லை. கருத்தை மட்டும்தான்
பார்க்கிறேன். அதனால் ஆகப்பெரிய நன்மை என்ன என்று
பார்த்துவிட்டு, சுத்தமாய் பலனற்ற கருத்து என்று பட்டால் 'போட்டுத்
தாக்கு' என்று எழுதுவதுதான்.
இனி விஷயம் பற்றி.
அரசின் எல்லா முடிவுகளிலும் அரசியல் இருக்கத்தான் செய்யும்.
ஏனெனில் அது அரசியல் புழங்கும் இடம். ஆனால் முடிவுகளுக்குபி
ன் ஏது நன்மை உள்ளதா என்று பார்த்தான் எடை போட
வேண்டும்.
தீராநதி போன்ற ஒரு பெரும் வாசகர் வட்டமுடைய இடத்தில்
இது போன்றதொரு கட்டுரை எழுதி எதை முன்னெடுத்துச் செல்ல வி
ழைகிறார் இ.பா. இந்தக்கட்டுரையால் என்ன சிந்தனையைத் தூண்டிவி
டப்போகிறார்?
இந்த அரசின் அங்கீகாரத்தால் ஒரு 10 ரூபாய் தமிழுக்காக கி
டைத்தால் கூட சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளத்தானே
வேண்டும். அதில் இரண்டாம் கருத்து இருக்க முடியுமா? இதில்
எங்கே 'அரசியலும்','Wஇதானமான சிந்தனையும்' முன்னிலைப்படுத்த
வேண்டிய அவசியம் உல்ளது. அரசியலுக்கு அப்பற்பட்ட முடிவான
நன்மையை எழுதுவது அழகா? இல்லை அரசியல் பேசுவது அழகா?
உலக அரங்கில் தமிழைப்பற்றி பிற நாட்டவர் தெரிந்து கொல்ள
இது போன்ற முடிவுகள் டாகுமெண்ட் அளவிலாவது உதவும்.
இன்றைய அளவில், செம்மொழி என கிரேக்கத்தையும்,
லத்தீனையும் பல நாட்டு பலகலை கழகங்களில் படிக்கச் சொல்லி
மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். இதே வரிசையில் , பல வேறு
காரணங்களுக்காகவோ அல்லது மாற்றாகவோ தமிழ் பிற்காலத்தில்
சேரமுடியும். இதற்கு அரசு அளவில் முயற்சி நடந்தால் , அது
போன்ற செயற்பாடுகளுக்கும் இம்முடிவு உதவும். எக்ச்சேண்ஜ்
மாணவர்கள் எனப்படும் இணைமாற்று முறைப்படி, இந்தியாவந்து தமி
ழைக கற்றவும் அதற்கு நிதி உதவி அளிக்கவும் இது உதவலாம்.
இது நேரடியாக உதவில்லை என்றாலும் கூட மறைமுகமாக் பல வி
தங்களில் உதவும் சாத்தியகூறுகள் உள்ளன.
நேரடியாகவே கேட்கிறேன். பணம் சம்பாதிக்க மட்டும் தான் தமி
ழும் தமிழுணர்வுமா? பிற எதற்கும் தமிழுணர்வு தேவைஇல்லையா?
எழுத்தாளர் எவரைக்கேட்டாலும், தமிழில் இத்தனை நாவல்கள்,
தமிழ் கட்டுரைகள் இத்தனை, தமிழ் விருதுகள் இத்தனை
என்றுதானே மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இதில் உள்ள
நன்மையை இனம் காணமுடியவில்லையா? ஆச்சரியம் அல்லது
வெட்கக கேடு!! மேற்சொன்ன எதற்காவது இது மிகச் சிறிய காரணி
யாக இருந்தாலும் இது வரவேற்கப்படவேண்டியதே!
நான் எதிர் வினை எழுதுவதால் இ.பா.வின் புகழ் மங்கிவிடப்
போவதுமில்லை. அவர் பெரிய எழுத்தாளர் என்பது மாறிவிடப்
போவதுமில்லை. பெரிய எழுத்தாளர்களிடம் கொஞ்சம் அதிகமான
ஜீரண சக்தியை எதிர்பார்ப்பது முறை என்றே நினைக்கிறேன்.
என் கேள்விகளையே பாரதியோ , பாரதிதாசனோ
கேட்டிருந்தால்தான் ஒத்துகொள்வீர்களா?:) அப்படியே அவர்கள்
கேட்டிருந்தாலும் என்ன பதில் சொல்வீர்கள்/வார்கள்.
நகைச்ச்சுவை:
ராயர் காப்பி கிளப்பில் கவனத்தை ஈர்த்து நான் என்ன அய்யா
சாதிக்கப்போகிகிறேன். :-) இந்தக் குறும்புதானே வேண்டாம் -ங்கி
றது.
---
காலச்சுவடு கட்டுரையை வாசிப்பேன்,தகவலுக்கு நன்றி.
Karthikramas
Posted at 12:41 pm by karthikramas
Permalink
Friday, July 09, 2004
அங்கீகாரமும் தகுதியும்...
அங்கீகாரமும் தகுதியும்
இ.பா. இந்தக் கட்டுரையால் என்ன சொல்ல வருகிறார் என்று யாருக்காவது புரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்.
1. செம்மொழி என்றால் அது இறந்த மொழியாய் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறாரா?
இப்படி இல்லாத ஒரு தகுதியைஇருக்கவேண்டும் என்று மனித வளத்துறைக்கு இவரே பரிந்துரைதாலும் ஆச்சரியமில்லை.
2. அங்கீகாரம் என்றால் என்ன எனபது அவருக்கு புரியவில்லையா?
3, செம்மொழி அங்கீகாரத்தினால் என்ன நட்டம் வந்துவிடும் என்று சொல்லமுடியுமா அவரால்?
அங்கீகாரம் என்பது என்ன? ஒரு எழுத்தாளர் அவார்டு வாங்குவது கூட அங்கீகாரம் தானே. பரிசுத்தொகை வாங்குவது கூட அங்கீகாரம் தானே. இது போன்ற அங்கீகாரங்கள் தீமைகளைத் தராத போது போது, எப்படி தமிழ் செம்மொழி என்ற அரசின் அங்கீகாரம் மட்டும் நட்டத்தைத்தரும்.
கேட்பவன் கியானையன் என்றால் கேழ்வரகில் கூட நெய் வடியத்தான் செய்யுமோ.
உதாரணமாய், ஒரு மாலய் மொழியையோ, அல்லது ஸ்பானிய மொழியையோ அதன் அல்லது அது போன்ற பன்மொழி நாடிடில் ஒரு 2000 வருட காலம் வாழ் மொழியை அவ்வரசு செம்மொழி 'அந்தஸ்து' தருவதாய் அறிவித்தால் கூட அதை வரவேற்போம். ஆனால் தமிழை அங்கீகரித்தால்தான் நிதானமாய் யோசிப்போம். இதுகூட தமிழ் மீது உள்ள காதலால் அல்லது உரிமையால்தான் போல.
4. உணர்வுவசப்படவேண்டாம், நிதானமாக யோசிக்க வேண்டும் என்று சொல்கிறாரா?
உணர்ச்சிவசப்படாமல் ஆராயவேண்டும் என்று சொல்வதற்கும் ,ஒரு அநாகரிகம் தேவை. தமிழை தாயென்று பாடியவனுக்கு அறிவில்லை என்று சொல்கிறாரா? மொழியும்பண்பாடும் எப்படி இணைந்துள்ளது எனபதை விட மொழியும் அதன் வளர்ச்சிக்கான பணத்தேவையும் எப்படி இணைதுள்ளது எனபதை அறியவில்லையா இவர்.
இ.பா.வின் இந்தக் கட்டுரை உடைப்பில் போடக் கூட லாயக்கற்றது.
Posted at 12:36 pm by karthikramas
Permalink
10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இ
என் போன பதிவில் 12 சென்ட்டுகளுக்கு இந்தியாவுக்கு தொலைபேசுவது எப்படி எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விஷயம் எப்படியோ கசிந்து போட்டியாளரான வீடீடெலிகாமின் காதுகளுக்கு சென்றிருக்கும் என் நம்புகிறேன். எனவே மறு நாளே வீடிடெலிகாமின் விலை சரசரவென சரிந்து 10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பேச முடியும் என அறிவித்தது. அதன் தலைவழுக்கையான தலைவர் ஒருவர் எனக்கு அனுப்பிய பிரத்யேக கடிதத்தில் பின் வருமாறு எழுதியுள்ளார்.
" அன்புள்ள கார்த்திகேயனுக்கு,
உங்கள் அடங்காத ஆசையினால் நீங்கள் இந்தியாவுக்கு தொலைபேசி உங்கள் சொத்து எல்லாவற்றையும் இழக்கவேண்டாம் , இனி நிமிடத்துக்கு 10 சென்ட்டுகள் செலவிலேயே இந்தியாவுக்கு தொலை பேசுங்கள்.
உங்கள் நாள் நன்றாய் இருக்க வேண்டும்.
இப்படிக்கு,வீடீ டெலிகாம் (தலை வழுக்கையான தலைவர்)
பி.கு. இந்த கடிதத்தின் உண்மையான வடிவத்தை எல்லோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏன்னு
கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. :)
Posted at 10:13 am by karthikramas
Permalink
Tuesday, July 06, 2004
12 சென்ட் -களில் இந்தியாவுக்கு பேச.
அண்மையில் நண்பர் ஒருவர் சொன்னது. ரிலையன்ஸ் இந்தியா கால் என்கிற ரிலையன்ஸின் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து இந்தியா பேச குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.இதை வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். ஓரளவு நன்றாய் உள்ளது. நிமிடத்துக்கு 12 சென்ட்டுகள். இந்தியாவின் எந்த ஊர்களுக்கு பேசுவதானாலும் இதே விலைதான்.
இதற்கு முன் வீடீடெலிகாம் என்கிற தொலைபேசி கார்டுகளை உபயோகித்துக் கொண்டிருந்தேன். அதன் விலையோ நிமிடத்துக்கு 21 சென்டுகள் எனவே பாதி விலையில் இந்தியாவுக்கு தொலை பேசுவதில் ஆனந்தம்தான். அந்த ஆனந்தம் உங்களுக்கும் கிட்டட்டும். :)
இதன் தள முகவரி:https://www.relianceindiacall.com
Posted at 05:18 pm by karthikramas
Permalink
|