திண்ணை என் கடிதத்தை எடிட் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பியது.
நான் எதிர்பார்த்தது தான். ஒன்றும் இல்லை , வாசகர் சுவாரஸ்யத்துக்காக வம்பு சண்டைகளை எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள் என்று யோசித்தேன்.
சரி, திண்ணைக்கு எடிட்டிங் அறிவு மிகவும் குறைவு என்பது ஊரே அறிந்த விஷயம்தானே...
கடிதத்தின் திருத்திய வடிவம் இது. இதற்காவது, மிஸ்டர் கேனையன் பதிலளிக்கிறாரா என்று பார்க்கிறேன். அவரால் சத்தியாமாய் பதில் சொல்ல முடியாது என்பது நான் அறிந்ததே...
அப்படியும் அவர் பதில் சொன்னால் இன்னும் நூறு கேள்விகளை எழுதி அனுப்புவதாய் இருக்கிறேன்.
மிஸ்டர் கேனையன் என்ன செய்கிறார் என்றுதான் பார்க்கிறேன்.....
திண்ணையின் ஜனனாயகம்தான் என்னை புல்லரிக்க வைக்கிறது.
***********************************************
திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். இருப்பினும், நாத்திகத்தின் கருத்தாங்களின் பிடியில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல்.முடிந்தால் ஆசாரகீனன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தொடர்ந்துபதில் சொல்லிவிட்டு கட்டுரைகளை மேற்கொண்டு எழுதிச் செல்லட்டும்.
உதாரணமாய் கடவுளை சிலை மட்டுமே என்கிற மூடத்தனத்தை பெரியாரியம் பரப்புவதை அடியோடு வெறுக்கிறேன். என்வேதான் பெரியாரிகளுக்கு,சிலைக்கு செருப்பு மாலை போடும் மிக இழிந்த ஒரு யோசனை உருவாயிற்று. இது பெரும் பாலான மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்பதை கூடவா அந்த இயக்கத்தால் யோசிக்கமுடியவில்லை. இவர்களில் பலர் நாய்க்கும், பாம்புக்கும் பயப்படுபவர்கள். ஆனால் கடவுளுக்கு பயப்படாதவர்கள் என்னே இவர்களது வீரம்.
உதாரணமாய் ஒரு கேள்வி,
ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடைய உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை "கடவுள்" என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?
இவர்கள் "கொழுனன்" என்றால் புருசன் என்று அர்த்தம் கற்பிப்பார்கள்.
"கற்பு" என்றால் உடல் ரீதியானது என்று அர்த்தம் செய்துகொண்டு,கற்பு என்பது என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். பெய் என்று சொன்னால் மழை பெய்யலையே, அதனால் எல்லா பெண்களும் கற்பில்லாதவர்களா என்று வாய் கூசாமல் கேட்பார்கள்.
ஜால் சாப்பு செய்யாமல், கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். பெரியார் கடவுளை ஒத்துகொண்ட இடம்
கட்டுரைகளில் எழுதப்படாமல் இருக்கலாம். நீங்களும் படிக்காமல் இருக்கலாம். வரலாஅற்று சம்பவங்களையும், பெரியார் "எனக்கு பின்னால் ஒரு கூட்டம் வளர்ந்து விட்டது, என்னால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிகொள்ள முடியாது" என்று சொன்னதை பார்த்தவர்களும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாகத்தெரியும்.
இது போல் ஆயிரம் கேள்விகளை என்னால் அள்ளி வீசமுடியும். என் நோக்கம் அதுவல்ல.
பெரியாரிகளையோ, அவரது கருத்துகளை இகழ்வதோ என் நோக்கமல்ல. மாறாக பெரியாரியத்தை பேணுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற என் ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்.
******************************************************
Posted at 08:36 pm by karthikramas