கண்டேன் பெர்ராரியை...
புத்திமான் பலமான் ஆவான் என்பதை ஒரு எளியவழியில் மீண்டும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் அல்லது வணிக மேலாளருக்கு
ஒரு 55 முதல் 60 வயது இருக்கும். அவறை இதுவரை நான் குறிப்பிட்டுரிந்தால் வணிகன் அல்லது
வெள்ளை வணிகன் என்றுதான் குறிப்பிட்டிருப்பேன். ஆனால் மனிதன் இப்படி என்னை மேலாளர் அவர்களே என்று குறிப்பிட வைத்துவிட்டார். எல்லாம் இந்த இரண்டு நாட்களாய் தான்.
நான் சமீபத்தில் ஒரு கார் வாங்கியிருந்தேன். அதில் கொஞ்சம் தேசி புத்தியை விடுத்து கோண்டா டயோட்டா போன்ற காரை வாங்குவதில்லை என்று ஒத்தை காலில் நின்றுகொண்டிருந்தேன். சுமாராய் 4 வருடங்களாய் இப்படி ஒற்றை காலில் நின்று நின்று இரண்டு கால்களில் ஒன்று குட்டையாய் ஆனதுதான் மிச்சம்.
சரி 4 வருஷமாய் கார் இல்லாமல் அமெரிக்காவில் கார் இல்லாமலிருப்பது, இந்தியாவில் 4 வருஷத்துக்கு துணி இல்லாமல் அலைவது போல்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆபாசமாக எழுதக்கூடாதே என்று நினைத்ததால் , 4 வருஷத்துக்கு சைக்கிளில்லாமல் கஷ்டப்படும் நிலையில்தான் இருந்தேன்னு எழுதிக்கறன்.
ஆனால் எப்படியோ என் நண்பரிகளின் புண்ணியத்தில் இரண்டு டயோட்டாக்களின் சாவிகளும், ஒரு நிஸ்ஸான் அல்டிமாவின் சாவியும், கொஞ்சம் அவன்களின் திட்டோடு என்னிடம் வந்து சேர்ந்தது. எனவே இந்த மூன்று கார்களையும் ஓட்டியது போக மிச்ச நேரத்தில் ஒற்றை காலில் நிற்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.
நான் கார் வாங்கியதும் , என்னடா! இனிமே எங்க காரெல்லாம் ஒட்ட மாட்டியே? சாவியெல்லாம் துக்கி போட்டுவிடுவாயா என்று கேட்டான்கள்.
அதுக்கு நான், "என் கார் சாவி காசு குடுத்து வாஙங்கியது, இந்த பழைய மூன்று சாவிகளும் அன்பால வாங்கியது, எதுக்கு மதிப்பு அதிகம்"னு கேட்டு எல்லார் கண்லயும் தண்ணீர் வரவச்சேன்.
இருந்தாலும் இந்த சனியனால நம்ம காருக்கு இனி தொந்தரவு இல்லை என்றுதான் அவன்கள் நினைத்திருப்பான்கள்.
இப்படி என் ஒற்றை கால் விரதத்தை முடித்து விட்டு, லேசாக நொண்டிக்கொண்டே ஒண்றரை கால்களில் சென்று வாங்கிய காருக்கு 2 கதவுகள் தான்.
இந்த கார் வாங்கும் இடத்துல நடந்தத பத்தின கூத்துக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். கொஞ்ச நாளா ஒரு கதவு வேற சரியா வேலை செய்யல. எனவே நண்பர்கள் "ஒன் டோர் கார்த்திக்" என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள். இது ஒருபுறமிருக்க, அமெரிக்க கார்களுக்கும் , இந்திய கார்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா , கல்யாண மண்டபத்த விட்டு நேரா விவாகரத்து ஆபிஸக்கு தான் போயி நிக்கும். அப்படி ஒரு 16 க்கு 0 பொருத்தம் தான். இந்தியாவுல 4 டோர் காருக்கு தான் மவுசு ஜாஸ்தி, இங்க 2 டோர் காருக்குதான் மவுசு, கீபோர்டு எல்லமே ஜாஸ்தி. இந்தியாவுல பெரிய காருக்கு தான் விலை அதிகம். இங்க அமெரிக்காவுல நண்டு மாதிரி மூஞ்சி இருக்குற இல்லன்னா வாத்து மாதிரி சப்ப மூக்கு இருக்குற காருக்குதான் விலை அதிகம். சைஸ் ஒரு குப்பதொட்டை அளவ விட கொஞ்சம் பெருசுதான். அந்த காரை வாங்கி இரண்டு கத்திரிக்கா அத்கமா வாங்கி டிக்கில வச்சு எடுத்துக்குட்டு கூட வரமுடியாது, அத்தன சின்ன டிக்கி..அமெரிக்காவுல டிக்கி சொன்னா சிரிப்பானுங்க, பூட்டு இல்லன்னா ட்ரங்கு இப்படிதான் சொல்லுவாங்க. டிக்கி அப்படீகிறது ஆபாச சொற்கள் வரிசையில வரும். ஆனா நிறைய வெள்ளைக்காரணுங்க மட்டும் டிக் டிக் க்குன்னு பேர் வச்சிப்பானுங்க , நாசமா போனவனுக.
சரி நண்ட பத்தி,எல்லாமே எத்தனை Hகார்ஸ்பவரு (குதிரை ஓட்ட சக்தி) இருக்கு வண்டில அப்படீங்கறதுலதான் பிரச்சினையே. பாக்க நண்டு மாதிரி இருந்தாலும் , இந்த நண்டுங்க ரோட்டுல பண்ர அளும்பு இருக்கே, பாக்க முடியாதுங்கறேன். ஆமாம்!! உண்மையிலே பாக்க முடியாதுதான். ஏன்னா பாக்கறதுக்குள்லெ நண்டு நம்ம கண்ண விட்டு வேகமா போயிடும்.
அந்த மாதிரி சப்ப மூக்கு பெர்ராரி ஒன்ன, 1999 ல ஒரு முறை பாத்திருக்கேன். ஒரு யூ எப் ஓ (விவரந்தெரியாத பறக்கும் பொருள்??) மதிரி வேகமாய் போச்சு. இன்னும் முயற்சி பண்ணி பார்த்த்ருந்தேன்னா , நேரா கழுத்தௌ சுளுக்கு ஆஸ்பத்திரிதான் போயிருக்கனும் நான்.தரையோட தரையா பாம்பு மாதிரி போச்சு. மத்த போறவர்ர காருங்களல்லாம் ஒரு காராவே மதிக்கல. நானும் அவன மதிக்கல ஹி ஹி.
சரி சரி, ரூட்ட மிஸ்பண்ணிட்டு வேற எங்கேயோ போயிட்டேன்.
2 கதவு கார் வாங்கினேனா? அதுல போகும் போதெல்லாம், எல்லா வெள்ளகாரிங்களும் என்னையே பாப்பளுங்க. இல்லன்னா அப்படிதான் என் கண்ணுக்கு தெரியும். குறிப்பா கல்யாணம் ஆகாத வெள்ளகாரிங்கதான் ரொம்ப முறைப்பாளுக. இல்லன்னா எனக்குதான், அவங்களெல்லாம் கல்யாணம் ஆகாதவங்க மாதிரி தோனும். எப்படியோ என்ன நிறைய பேர் பாக்கறாங்களேன்னு
என் சட்டை காலர் கூட தானாவே மேல நிக்கும்னா பாத்துக்கோங்களேன்.
இப்படி நான் 2 மைனஸ் 1 டோர் காரை எடுத்துக்குட்டு என்மேலாளர் காருக்கு பக்கத்தில வந்து நிறுத்தறதுல ஒரு குஷிதான் எனக்கு.
அந்த ஆளு காரு இருக்கே, அதை வார்த்தையில வர்ணிக்க முடியாதுங்க. அப்படி கொஞ்சம் தகரம்,4 சக்கரம், கொஞசம் பெற்றோல் எல்லாத்தையும் சேர்த்த ஒரு குவியலுங்க அது. ஆங்கிலத்துல ஜன்க்குன்னு சொல்வாங்க.இருந்தாலும் , மனிதன் என்ன காரு ஓட்டறானோ அத வச்சு அவன எடை போட கூடாது. அவன எட போடனும்னா ஒரு வெயிங் மிஷினுதான் வேணும், அப்படீங்கற உயர்ந்த தத்துவத்த பாலோ பண்றவங்க நானு.
அதனால நான் என்னிக்குமே அவன்கிட்ட பெருசா பந்தா கட்டுனதே கிடையாதுங்க.
நேத்து அந்த பாவிப்பய , ஏதோ ஒரு சிவப்பு கலர்ல , என் கார்ல பாதி உயரத்துக்கு ஒரு கார்ல வந்தான்.
இந்த குப்பையை எங்கடா வாங்குனான் இந்த பரதேசின்னு நினைச்சுகிட்டேன். எனக்கு அது என்ன குப்பைன்னு கூட சரியா
தெரியலங்க. சரி அவன் கிட்டயே கேக்கலாம்னு நினைச்சேன்.
"வாட் கைண்ட் ஆப் ஷிட் ஈஸ் இட் "ன்னு கேக்க நினைச்சு
வாட் கைண்ட் ஆப் கார் ஈஸ் இட் ன்னு கேட்டேன்.
அந்த நாசமாப்போனவன் என்ன சொன்னான் தெரியுமா?
ஹோ இட் இஸ் எ பெர்ராரி -ன்னு போட்டானே ஒரு போடு. அப்பதான் இரண்டடி தூரத்துல ஒரு பெர்ராரிய பாத்தேன்.
(எழவு அந்த சனியன நேரா பாத்து அந்த பேர படிச்சுருந்தன்னா கேட்டுருக்கவே மாட்டேன், எல்லாம் போராத நேரம் தான்)
அதுல உக்காந்தேன்னா, என்னோட இரண்டு பெரிய(??) , பின் தொடைக்கி மேல முதுகுக்கு கீழ இருக்குறது மோட்சம் பெற்று விடும்னு ஒரு பட்சி சொல்லிகிட்டே பறந்து கிழக்கு பக்கமா போச்சு.
கூடவே சில விஷயன்களையும், என் மரியாதைக்குரிய வணிக மேலாளர் "அவர்கள்" சொன்னார்கள்.
மைலேஜு ரொம்ப நல்லா குடுக்குதாம். ஒரு கேலனுக்கு 12 மைலாம். நெவேடாவில் 90 மைல் ரோட்டுல
200 மைல் ஸ்பீடு வரைக்கும் ஓட்ட முடியுமாம். பிரச்சினை இல்லாம ஓடுமாம்.
இதெல்லாம் பெர்ராரி வச்சிருக்குற நீங்கள் யாராவது சொல்லபடாதா எனக்கு??
அதன் மாடல கூட சொன்னான். எதோ ஒரு "எம்"ல்ல ஆரம்பிச்சுது.னமக்குதான் அந்த எளவெல்லாம் தெரியாதே.
ஆனா அதுல பெரிய ஆர்வமும் இருந்ததில்ல (அட படுபாவி பொய் சொன்னே வாய்ல புழு வரும்..)
கடகடன்னு மனசுல , ஒரே லெசன்ஸ ஓடுச்சு.
1.புத்திமான் பலவான் ஆவான்(பெர்ராரி வாங்கமுடியாத நீ இப்படிதாண்டா சொல்லிட்டு திரியுனும்- மனசாச்சி)
2.ஒர்த்தன் எந்த காரு ஒட்டுறானோ அத வச்சு அவன எட போடக்கூடாது ( ஏண்டா இப்ப சொல்ளுவியே நீ - மனசாச்சி)
3.எளிமைதான் சிறந்த நண்பன்... (தோடா கதையளக்குறான் பாரு - மனசாச்சி)
4.ஆயில் சேஞ்சுக்கு 60 டாலர் குடுக்குறது மகா பெரிய தப்புதான்... நீ கல்லுரி விட்டு வந்ததும் உன் மாச சம்பளமே அதவிட கம்மி..
ஏ மனசாட்சீ - நிறுத்தமாட்டியா நீ.......