<< April 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, April 26, 2004
அள்ளி விடறது

சுந்தர வடிவேலின் (பரதேசி நாந்தாண்டா ;-)) என்கிற பதிவை படித்தவுடன் இன்ஸ்பிரேஷன் வது எழுதுவது இது.
இந்த போலீசு மாமு கிட்ட மாட்டற அனுபவமே ஒரு வித்தியாசமானதுதான்.
ஒருமுறை விர்ஜினியாவிலிருந்து நியூஜெர்சிக்கு கழுதை வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்துச்சு. அதாவது ஒருத்தரஓட பொட்டிய சுமந்துகிட்டு போயி  குடுத்துட்டு வரனும். நானும் என்கூட புதிதாக வந்திருந்த ஒரு நண்பனும் போனோம்.
நண்பன் அப்பத்தான் அமெரிக்காவுக்கு வந்த புதுசு.

எனக்கு சாதரணமாவே அமெரிக்காவுக்கு யாராவது புதுசா வந்தா அவங்ககிட்ட "அள்ளி விடறது"(ரீல் சுத்தறது) பழக்கம். அப்பறம் கொஞ்சம் நாள் கழிச்சு அள்ளிவிட்டத சொல்லி சிரிப்போம். என் இன்னொரு நண்பன் அள்ளி விட்ட ஒரு உதாரணத்த சொல்றேன்.
நாசாவில புது ப்ராஜக்ட் ஒன்னு பண்றாங்கடான்னு, ஆரம்பிச்சான். சாட்டலைட் மூலமா,அப்படியே  நம்ம கார் நம்பர் ப்ளேட்ட ஸ்கேன் பண்ணி, சிகப்பு விளக்க தாண்டி போனா, டிக்கட் எழுதி வீட்டுக்கு தபால் பண்ணிட போறாங்க ந்னு சொன்னான்.
இத சொல்லி முடிச்சவுடனே சுத்தி இருந்த அத்தன பேரும் முகத்தில இருந்த அத்தனை ஓட்டைகளையும் திறந்து அவன பார்த்து சிரிச்சது அவனுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அதுக்கப்பறம் அண்ணனை நாங்க ஓட்டுன ஓட்டுல பய அன்னிக்கு ஓடுனவந்தான் இன்னும் திரும்பி வரல.

இந்த மாதிரி நான் அள்ளி விட்ட சில ரீல்கள்.

 புதுசா என்கூட அமெரிக்க வந்தவர் ஒருத்த்ர்கிட்ட, காபியில சர்க்கரைக்கு பதிலா ஒரு கசப்பு சிரப் ஒன்ன ஊத்தி குடுத்தன். நானும் அத ஊத்திதான் குடிச்சேன். அந்த எளவ வாயில வைக்க முடியாம இருந்தாலும், தினமும் நான் அந்த சிரப்ப காலை 3 தரம் சயந்தரம் 3 தரம் குடிக்கிற மாதிரி ஒரு ரியாக்ஷன் முகத்தில காட்டுனன். மனுசனும், நம்ம அமெரிக்காவுக்கு புதுசுன்னு காட்டிக்க கூடாதுன்னு, குடிச்சுபுட்டு, திருவிழாவுல தொலைஞ்ச புள்ள மாதிரி முழிச்சார். ரொம்ப நாள் கழிச்சு, எனக்கு அந்த சிரப்பை குடிச்சு பழக்கமே இல்லன்னு சொன்னேன். அன்னிக்குதான் எனக்கு எதிரியா மாறுனார் அவர்.

 ஒரு அம்மா அமெரிக்காவுக்கு வந்த புதுசுல பனிக் காலம். அந்த அம்மாவுக்கு இள வயசுதான். ஒரு 28 லேர்ந்து 30 இருக்கும்.
அம்மா நல்லா படிச்சவங்க தான். வெளில ரோட்டுல நடந்துக்கிட்டு இருக்கும் போது , ஒரு குதூகலத்துல கிழே விழுந்து கிடந்த ஐசை எல்லாம் கையில எடுத்து விளையாடினாங்க. நான் உடனே, கொட்டுற பனி எல்லாம், கவர்மென்டு சொத்து, னீங்க கையில எடுக்குறத
போலிசு பார்த்தா , உங்கள புடிச்சு கொண்டு போய் ஜெயில வச்சுடுவாங்க அப்டீன்னேன் பாருங்க! அம்மா மட மடன்னு கைஉஇல இருந்த ஐஸ எல்லத்தை கீழே போடுட்டு கப் சிப். அந்த அம்மா முகத்த பாகனுமே அப்ப, ரொம்பதான் ஜாக்கிரதை உணர்வு போங்க. ரொம்ப நாளைக்கு பனிய கையில எடுக்காமதான் இருந்தாங்க, என் கூட இருக்க அனுமார் பயலுங்க போட்டு குடுத்துட்டானுங்க.


அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் ப்ளூ சிப் க்ரெடிட் கார்டு அறிமுகப்படுத்திய சமயம். இந்த சாட்டலைட்லேர்ந்து போட்டா புடிப்பாங்கன்னு கத விட்டன் பாருங்க, அவன் கிட்டதான் விட்டேன் இந்த புளுகு மூட்டைய.
இப்ப வந்திருக்கிற ப்ளூ சிப் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் அட்டையில ஒரு மைக்ரோப்ராஸஸ்ஸர் இருக்குன்னேன். அதை கொண்டு போயி எந்த பேங்கு ஏடி எம் மை திறந்தாலும் கதவு தானாய் திறந்திடும், அப்படி ஒரு ப்ரோகிறாம் இருக்கு அதுல, அப்படின்னு ஒரு புளுக்கு மூட்டை உட்டேன். பயலும் ஒரு இரண்டு முறை பேங்க் ஆப் அமெரிக்கா கதவுல போய் தேச்சி தேச்சி பார்த்துட்டு வந்தான்.
அந்த மாதிரியெல்லாம் இல்லன்னு தெரிஞ்சவுடனே என் மேல வந்து விழுந்து என் மலப் பாம்பு மாதிரி நசுக்க பாத்தான் இல்ல.


இப்படி அள்ளி விடரது வாடிக்கையா இருந்தாலும், டிக்கட் கொடுக்கறதுக்காக பக்க்துல போலீசு வரும்போது காரை விட்டு கீழ இறங்க கூடாது அப்படின்னு எல்லாரும் சொல்லி வச்சுருந்தானுங்க. அப்படியே கை ரெண்டுத்தையும் போலிசு மாமா கண்ணுல படற மாதிரி வைக்கனும் ந்னும் சொல்லி இருந்தானுங்க. இதுல எதுவும் ரீல் கிடையாது எல்லாம் உண்மைதான். டிக்கட் குடுக்குற மாமா தன்னோட இடுப்பு துப்பாக்கி மேல கைய வச்சுகுட்டுதான் பக்கத்துல வருவார் அமெரிக்காவுல.
 எங்கே விட்டேன். ஆ.. நியூ ஜெர்சிக்கு கழுத வேலை பாக்க போயிட்டு இருந்தோமா, ஏற்கனவே கிளம்புனது லேட்டு.
மணி 12 ஆயிருக்கும். நியூ ஜெர்சி டர்ன்பைக்க ஒரே ஜம்புல தாண்டிடல்லமுன்னு நினைச்சு, அழுத்து அழுத்துன்னு அழுத்துனன்.
ரோட்டில நானும் கொஞ்சம்  ஈ , 2 காக்கா மட்டும்தான்.  வண்டி வேற நல்ல வி8 வண்டி. போர்டு எக்ஸ்ப்ளோரெர்.
நல்லா ஜம்முன்னு போதுன்னு என் நண்பன்கிட்ட சொல்லிகிட்டு இருக்கும்போதே பின்னாடிலேர்ந்து எவனோ பாட்டு பாடறாமதிரி சத்தம்.
இந்த அர்த்த ராத்த்ரில பாடனும்னா ஒரு வேளை பேயோன்னு கூட தோனுச்சு. என்ன இருந்தாலும் அந்த பேயிக்கு அந்த அளவுக்கு குரல் சரியில்லைன்னு நினைச்சுகிட்டு இரும்போதே பேய் இங்கீலிசுல பேசுச்சு. என்னாடா இது , அமெரிக்க பேய் இங்கிலீசுலதான் பாடும் போல இருக்குன்னு பார்த்தா அப்படியே ஒரு வெளிச்சம். வண்டி ஓரகட்டிறியா இல்ல உன்ன நான் ஏறகட்டட்டுமான்னு ஒரு கொஸ்டின்.
சரின்னு மெதுவா ஓரங்கட்டினேன். இன்னிக்கு எவன் வயித்தெரிச்சல கொட்டுனனோன்னு என்னகு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல அப்ப.
என் நண்பன் கிட்ட சொன்னேன் , கை ரெண்டுத்தையும் நல்லா போலிசு மாமா கண்ணுக்கு தெரியிறாமாதிரி வை, இல்லன்னா சுட்டுபுடுவான்னு சொன்னேன். என் நண்பனும் கை இரண்டுத்தையும் எதோ தண்டா எடுக்க சொன்னா மாதிரி தோளுக்கு மேல நீட்டிக்கிட்டு வயித்துல லேச 50 கிராம் புளிய கரைச்சாப்புல உட்கார்ந்துக்குட்டு இருந்தான். போலிசு மாமா வந்த வுடனே ஒரு ரேஞ்சா கைய தூக்கிகிட்டு இருந்த என் நண்பன பாத்து, கை வலிக்க போவுது ராசா , பராவாயில்லை கைய கீழே போடு அப்படின்னாரே பாக்காலாம்.
மொச புடிக்கிற நாய்கள மூஞ்சிய பாத்தா தெரியுமுடா எங்களுக்குன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு.
     உனக்கு 2 டிக்கட் தரணும் அப்படின்னார். ஏன்னு கேட்டேன்,
 ஒன்னு ரெக்லெஸ் ட்ரைவிங்(அஜாக்கிரதையான ஓட்டம்). இன்னொன்னு ஸ்பீடிங்(வேக கட்டுப்பாட்டை மீறிய வேகம், 92).
மாமா மாமா அதுதானே இதுன்னு சொல்லியிருப்பேன். அன்னிக்கு அவ்வளவு தெரியம் இல்ல எனக்கு. முதல் டிக்கட் பாருங்க.
தேங்க் யூ சர் என்றேன்.  என்ன கார்த்தி அந்தா ஆளு 290 டாலருக்கு அபராதம்னு சொல்றான் , நீங்க நன்றின்னு சொல்றீங்கன்னு கேட்டான் என் நண்பன். என்னடா , சுட மாட்டான்னு தைரியம் வந்தவுடனே நீ பேசுவதானே என்றேன்.
" நாளைக்கு ஒரு இந்தியனுக்கு  டிக்கட் குடுக்க போனான்னா நம்ம எல்லாம் நல்ல பிரஜைகள்னு அவன் நினைக்கனும்டா அப்படின்னேன்."  வேற எந்த காரணமும் எனக்கு அப்ப புத்தில வரல.


Posted at 10:10 pm by karthikramas

karthikramas
May 3, 2004   01:04 PM PDT
 
இராஜன் முருகவேல் அவர்களே,
நன்றி இந்தப் பக்கம் வந்ததுக்கு.
" மோதிர குட்டு" என்று எடுத்து கொள்கிறேன். ;-)
Rajhan
May 3, 2004   01:17 AM PDT
 
நகைச்சுவையாக எழுதுவது கடினம்.. நன்றாகவே எழுதுறீங்க.. இப்போதானே வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. அவ்வப்போது வாறேன். :)
Mathy Kandasamy
April 30, 2004   04:38 PM PDT
 
:))
Name
April 30, 2004   08:21 AM PDT
 
:-)
sundaravadivel
April 29, 2004   05:40 PM PDT
 
எப்படியோ, இந்த ஊரு (போலீசு)க் காரன் நம்மால பொழைக்கிறான்! :)
Pari
April 28, 2004   09:06 PM PDT
 
அள்ளி விடறதுக்கு ஒரு அளவே இல்லியா? :))
karthikramas
April 28, 2004   09:21 AM PDT
 
ஐயையோ,
அள்ளி விடறதெல்லாம் , நண்பர்கள் கிட்டதான். போலிசு கிட்ட/ அரசாங்கத்துகிட்ட எல்லாம் அள்ளி விடற எண்ண்மே வந்தது இல்ல!!! என்ன என்ன ப்ராடு ந்னு நினைச்சுட்டீங்களா? :-)
Kasi
April 28, 2004   07:07 AM PDT
 
அப்புறம் என்ன ஆச்சு, உண்மையிலேயே 290 டாலர் செலவா? இல்லே வக்கில் வெச்சு நான் அவனில்லைன்னு எதாச்சும் அள்ளி விட்டீங்களா?
karthikramas
April 27, 2004   08:54 AM PDT
 
I did not type with all these spelling mistakes, there is something wrong with the conversion, from murasu to Unicode. I guess, I need to check this.
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry