குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்...
ரமணிதரனின் கொடுத்துவைத்தாரும் அல்லாதாரும் பதிவை வைத்து வடித்தது இது..பிடித்துள்ளதா என ரமணிதான் சொல்ல வேண்டும். ;-)
குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்
==============================
நாளை இருப்பேனா அல்ல
தின்றிரவுக்குள் இறப்பேனா
எதிர்காலத்தை தீட்டுவதா
எதிர்காலம் எனைத் தீண்டாது என்றிருப்பதா
சென்றவர் வரும் வரை சென்னியில் அனல் கொதிக்க
வருவாரா? வரமாட்டார் என்ற செய்திவருமா?
ஒரு மணித்தியாலத்தில் இத்தனை
நாசங்கள் நடக்கும் நாட்டினில்
நான் நேசங்களை நினைப்பது நியாயமா?
மறையாதாவனை
மறைந்தேன் எனச் சொல்லி
மன்றாட வைத்தவனை மறப்பதா?
இறைவனை துதிப்பதா?
வீடு விட்டு போன நண்பன்
வீடுலகம் சேர்ந்து விட்டான் என
தேடவும் துணியார் அழுவார் அரற்றுவார்
விடுகதை போல் ஆகிவிட்ட
வாழ்விதனை வாழ்வதா விடுப்பதா?
துப்பாக்கியின் முகத்தினை
முகத்தினுக்கு நேராக
தப்பிக்க வழியின்றி பார்க்கின்ற வேளைதனில்
என் உடம்பினை வாட்டுவது கோபமா? ஆண்மையா?
எங்கிருந்தோ வந்தனர்
இந்தியர் யாம் உதவவே வந்தோம் என்றனர்
வந்திருந்த தந்தையர் நாட்டர்
குந்தகமே குறியென செய்தனர்
சிந்தின எம் இரத்ததின் நிறம்
வேறென? நினைந்தனர்
எம் விதியை இதனினும்
விதியற்றவரோடு ஒப்பிட்டு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
கதவு ஒன்றைத் தவிர
வேறு கதவிலை நாம் புக
எருதின் நோய் காக்கை அறியாதுதான்
இனப்பிரச்சினை அங்குமுண்டோ?
மனிதன் காக்கைகளாய் மாறிவிட்ட
வன்முறையை விட
நாம் பார்க்கும் இனவன்முறை
பெரிதிலையோ?
Posted at 08:31 pm by karthikramas
 |  |  |
karthikramas May 11, 2004 01:14 PM PDT
சு,வ, எப்படி ? :-) |
 |

 |  |  |
Karthikramas@yahoo.com May 9, 2004 08:15 PM PDT
ஐய்யா ஜாலி,
இந்த வாரம் மூணு மோதிரக் குட்டுகள்.
முதலில், இராஜன் முருகவேல், இப்பொழுது , தங்கமணி, சுந்தரவடிவேல் :-)
நன்றிகள் பல சாமிகளே |
 |

 |  |  |
Sundaravadivel May 8, 2004 08:37 AM PDT
அன்றைக்கே சொல்ல நினைத்தேன். என்னமோ மறுமொழிப்பெட்டியில சிக்கல். நல்லாருக்கு. தலைப்பைக் கொஞ்சம் மாத்தலாம். எப்படின்னு கேக்காதீங்க!! |
 |

 |  |  |
Thangamani May 7, 2004 12:23 PM PDT
நல்ல கவிதை; ஆனால் இதனால் நீங்கள் இந்திய துரோகியென சிலர் மண்ணை வாரி இறைக்கலாம் அல்லது பொடாவைக் காட்டி மிரட்டலாம். பார்த்துக்கங்க! |
 |

 |  |  |
-/ramanitharan, k. May 1, 2004 01:10 AM PDT
அண்ணாச்சி, நிறையச் சொல்லலாம். பிற்கு சொல்கிறேன். என்னைவிடச்ப் பட்டதுயர் சொல்லப்பலர் இருக்கையிலே, நான் சொல்வது மிகையானதாகத் தோன்றிவிடலாமல்லவா? மீதிப்படி, நிங்கள் சொன்னது நானறிந்த காலத்திலே நிஜம். |
 |