ஐயா எஸ் பொன்னுதுரையின் , சில வரிகள் குறித்து பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்
படிக்க நேர்ந்து (எனக்குள் க்ளுக்கென சிரித்து) எழுதியது..
எஸ்.பொ. கேள்விகளூடே பார்க்காதது அல்லது பார்த்துப் பின் மறைத்தது:
==========================================================
எஸ்.பொ://"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை." //
எஸ். பொன்னுதுரை இதையே என்னிடம் சொல்லியிருந்தால், "நீ தாக்கப்படாது, நீ தாக்கப்படுகிறாய் என்று குரல் கொடுத்தால் அது சுத்த பொய்யாகும். ஆனால் இந்த கேள்வியின் அர்த்தம், னீ சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள உன்போல் சம மதிப்பீடுகளை கொண்ட மக்கள் தாக்கப்படுகிறார்களே, அதை கண் கொண்டு பார்த்து கருத்தேதும் சொல்லுமையா புண்ணியவானே? இல்லை நான் தாக்கப்படும் வரை பொறுத்திருந்து தான் கருத்து சொல்வேன் என்ற வாதத்தை காதலிக்க காரணம் என்ன ? " என்று கேட்டிருப்பேன்.
மேலும், "நீ தாக்கப்பட்ட பின், கருத்து சொல்ல இருப்பாய் என்ற நிலைமை இங்கு இல்லையே?, உன்போல் பலர் இல்லாமலாகி இருப்பது தெரிகிறதா? இப்போ புரிகிறதா உனக்கு?" என்றும் கேட்டிருப்பேன்.
எஸ்.பொ://"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
//
என்னுடையா அம்மா அப்பா அனுபவித்த துயர்களை நான் எழுத மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஐயா பொன்னுதுரை?
உங்கள் அம்மா அப்பா அனுபவித்த சொத்துகளை தூர எறிந்து விட்டீர்களா? என்று தெரிந்து கொள்ள ஆசையாய் உள்ளது பொன்னுதுரை அவர்களே? சொத்துகளை தூர எறிந்திருக்கும் சித்த பிரமை உங்களுக்கு இல்லை என்று நான் நம்புவதால் இதையும் கேட்கிறேன்,
உங்கள் படைப்புகளில் அவற்றை எழுத வேண்டியதில்லை, கருத்துகளை எழுதுங்கள் என்பதுதானே அக்கேள்வின் ஊடுபாவி தொக்கல்?
இதை என் படைப்பு சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் என்று தவறாய் எடுத்துக் கொண்டு தறி கெட்டுப் பேசினால் என்ன அர்த்தம் அய்யா பொன்னுதுரை அவர்களே?
இதே நிலைப்பாட்டை அவரது பிள்ளைகள் துயரனுபவித்தாலும் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எஸ்.பொ://"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."//
இப்படிப் பேசிப் போகும் திரு. பொன்னுதுரை அவர்களே! நீங்கள் நிலவை உங்கள் படைப்பில் பேசியதே இல்லை என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் நிலவை பேச வேண்டுமெனில் அல்லது வர்ணிக்க வேண்டிமெனில் , நிலவுக்கு செல்லாதவரை நான் அது பற்றி எழுத முடியாது என்று சொல்லி விட்டால், உங்களை கேள்வி கேக்க எனக்கு தெரியாது?? ;-).
பிரபல எழுத்தாளர்கள் சறுக்குமிடம் உண்டு என்பதாலேயும், யானைகளும் சறுக்கும் என்பதாலும் இது ஒன்று பெரிதல்ல என்றே நினைக்கிறேன்.
இந்த பதில்களால், எஸ். பொ. என் கண்ணுக்கு, சக மனிதனின் துக்கத்தைப் பார்க்கதெரியாத ஜந்துவாக தெரிவது, அவரது மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். சமுகத்தில் படைப்பாளியின் குரலை, பயன்படுத்தப் பட பல வழிகள் உள்ளன என்றும், அதை அவர் தெரிந்து கொள்ள விழையவில்லை என்றும் வாதாடலாம்.
எஸ். பொ. இந்துத்துவவாதியா? எனக்கு தெரியாது ? தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் அடியுங்களேன்.
Posted at 07:33 pm by karthikramas
 | Posted by karthikramas @ 05/11/2004 01:13 PM PDT |  |
பத்ரி,
எஸ்.பொ வின் முழு பேட்டியையும் படித்தேன். மனிதர் இது போல் ஓட்டை உடைச்சல் பதில்களைத்தான் சொல்லியுள்ளார். மாலனும் கூட என்னைப் போன்றே ஒரு இடத்தில் ஆதங்கப்படுகிறார். முழுப் பேட்டியையை கிளறினால் மிகப்பெரிய எதிர்வினை எழுதவேண்டியிருக்கும். அதைத்தான் நம்ம ரமணி செய்கிறேன் என்றாரே. அவர் எழுதட்டும் நாம் படித்து கொள்ளலாம். |
 |

 | Posted by Thangamani @ 05/07/2004 12:33 PM PDT |  |
| அவருடைய முக்கியமான சில கதைகளை நான் படித்துள்ளேன்; எனக்குப் பிடிக்கும்; அவரது ஒரு மகன் புலிகள் இயக்கத்தில் இருந்து போர்த தாக்குதல்களை ஒளிப்பதிவுசெய்யும் திறமை மிக்க விவரண படமெடுப்பவராக கருதப்பட்டு, பின்னொரு தாக்குதலில் உயிர்துறந்தவராக படித்துள்ளேன். அவரது ஆண்மை, தீ போன்றவை நல்ல முய்ற்சிகள். ஆனால் அவரது அந்த பதில்கள் அவர்போன்றோர் சொல்லத்தகுந்ததல்ல. அதைப் படித்தபொழுது நான் எனக்கு என்னுள் வீழ்ந்துபோன ஜெயகாந்தன் நினைவு வந்தது. ஆனால் புலம்பெயர்ந்த படைப்பாளியின் நெருக்கடிகளை நான் அறியேன். நன்றி. |
 |

 | Posted by karthikramas @ 05/07/2004 08:29 AM PDT |  |
Badri,
Thanks, I will read it. I am not critising any of his writing here but , These answers of him are flawful.
I am not agianst es.po.
Thanks. |
 |

 | Posted by Badri @ 05/06/2004 11:36 PM PDT |  |
எஸ்.பொ மிக முக்கியமான ஈழத்தமிழ் எழுத்தாளர்.
கார்திக்: திசைகளில் வந்த எஸ்.பொ வின் செவ்வியை முழுவதுமாகப் படித்திருக்கலாமே? எனது வலைப்பதிவுகளில் தேடினால் தமிழ் இலக்கியம் 2004 (ஜனவரி 2004 வாக்கில்) எஸ்.பொ பற்றி சிறிதாகவும், அவரது புகைப்படமும் காணக்கிடைக்கும்.
|
 |

 | Posted by karthikramas @ 05/06/2004 09:10 PM PDT |  |
அண்ணாச்சி நன்றி,
இது எஸ்.பொ வின் சில வரிகளிக் கொண்டு எழுதியது. பி கே சிவக் குமாரின் பதிவில் கிடைத்த வரிகளிலிருந்து, எஸ்.பொ பொறுப்பற்று பதில் சொல்லியிருப்பதாய் தான் தெரிகிறது... அவர் எழுத மறுத்ததை இப்படியும் எதிர் வாதம் செய்ய்லாம். எஸ்.பொ இந்த பதில்களை என்ன் எரிச்சலிலி சொன்னாரென்றுன் தெரியாது... எஸ்.பொ.வின் படைப்பு பற்றி நான் பேச வரவில்லை./ ஏனெனில் எஸ் பொ வின் ஒரு படைப்பையும் நான் படித்ததில்லை.
இந்த பதில்களிலிருந்து, பி கே எஸ் காண்பிக்கும் வாதத்தை எளிதில் பொய்க்கச் செய்யலாம் என்பது என் எண்ணம் ;-)...
எஸ் பொ மிகப் பெரிய ஆளோ? நானறியேன் பராபரமே !! |
 |

 | Posted by -/ramanitharan, k. @ 05/06/2004 08:43 PM PDT |  |
| «ýÀ¢ý ¸¡÷ò¾¢ì, ±Š.¦À¡Å¢¨É «Å÷ À¨¼ôÒ¸ÙûÇ¡Öõ, «ÅÕ¨¼Â ¦ºùÅ¢¸ÙûÇ¡Öõ «Å¨Ã «È¢ó¾¡÷ Å¡ö¦Á¡Æ¢î¦º¡ü¸é¼¡¸×§Á ±ÉìÌò ¦¾Ã¢Ôõ. ¦À¡ýÛòШà þóÐÅ¡ (¨ºÅºÁ¢¡) ±ýÀ§¾ ±ÉìÌî ºÃ¢Â¡¸ò ¦¾Ã¢Â¡Ð. «¾É¡§Ä, «È¢óÐ ÀƸ¢ÂÅý Á¡¾¢Ã¢ ±ó¾ì¸Õò¨¾Ôõ ¦º¡øÄÓÊ¡Ð; «Ð Ó¨ÈÔÁ¢ø¨Ä. ¬É¡ø, ÁШÃò¾¢ð¼ò¾¢§Ä¢ÕìÌõ ¾¨Çº¢í¸ò¾¢ý "±ð¼¡ñÎì¸¡Ä þÄ츢 ÅÇ÷" ¦¸¡ïºõ ¦ÅÇ¢îºõ ¾Õõ. ¸¡Äò¾¢§Ä ÁÉ¢¾÷ Á¡ÈÄ¡õ; ±Ø¾¢ÂÅ÷ À¡÷¨ÅÔõ §¿¡ì¸§ÅñÊÂÐ. ¾¨Çº¢í¸õ ±Ø¾¢ÂÐ ¿¡üÀÐ ¬ñθǢý ÓýÉ¡ø ±ýÀ¨¾Ôõ »¡À¸õ ¨ÅòÐ즸¡ñÎ ±Š¦À¡Å¢¨Éô ÒâÂÓÂÖí¸û. («ÅÕ¨¼Â ¸¨¾¸¨ÇÔíܼ; ´ýÚ À¾¢×¸Ç¢§Ä ®ÆòÐÈôÀ¢¾Æ¢§Ä Á¡üÈ¢ô§À¡ð¼Ð ¸¢¼ì¸¢ÈÐ). «ÅÕ¨¼Â Á¸ý ´ÕÅ÷ §À¡Ã¡ð¼ò¾¢§Ä þÈó¾¡÷ ±ýÚõ ¿¢¨É츢§Èý. ¿øæÃ¢§Ä À¢Èó¾Å÷ ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ¸¡Äõ Áð¼ì¸¢ÇôÀ¢§Ä§Â þÕó¾¢Õ츢ýÈ¡÷ (¬À¢Ã¢ì¸¡×ìÌô §À¡¸Óý). ¬É¡ø, «ÅÕ¨¼Â º¢ÅÌÁ¡÷ þð¼ ¯ûǢΨ¸ìÌ ¿¡ý À¾¢ø ¦¸¡ïºõ Ţ⚸ ÅÕõ Å¡Ãõ ±Ø¾ ±ñ½¢Â¢Õ츢§Èý. |
 |

 | Posted by -/ramanitharan, k. @ 05/06/2004 08:43 PM PDT |  |
| «ýÀ¢ý ¸¡÷ò¾¢ì, ±Š.¦À¡Å¢¨É «Å÷ À¨¼ôÒ¸ÙûÇ¡Öõ, «ÅÕ¨¼Â ¦ºùÅ¢¸ÙûÇ¡Öõ «Å¨Ã «È¢ó¾¡÷ Å¡ö¦Á¡Æ¢î¦º¡ü¸é¼¡¸×§Á ±ÉìÌò ¦¾Ã¢Ôõ. ¦À¡ýÛòШà þóÐÅ¡ (¨ºÅºÁ¢¡) ±ýÀ§¾ ±ÉìÌî ºÃ¢Â¡¸ò ¦¾Ã¢Â¡Ð. «¾É¡§Ä, «È¢óÐ ÀƸ¢ÂÅý Á¡¾¢Ã¢ ±ó¾ì¸Õò¨¾Ôõ ¦º¡øÄÓÊ¡Ð; «Ð Ó¨ÈÔÁ¢ø¨Ä. ¬É¡ø, ÁШÃò¾¢ð¼ò¾¢§Ä¢ÕìÌõ ¾¨Çº¢í¸ò¾¢ý "±ð¼¡ñÎì¸¡Ä þÄ츢 ÅÇ÷" ¦¸¡ïºõ ¦ÅÇ¢îºõ ¾Õõ. ¸¡Äò¾¢§Ä ÁÉ¢¾÷ Á¡ÈÄ¡õ; ±Ø¾¢ÂÅ÷ À¡÷¨ÅÔõ §¿¡ì¸§ÅñÊÂÐ. ¾¨Çº¢í¸õ ±Ø¾¢ÂÐ ¿¡üÀÐ ¬ñθǢý ÓýÉ¡ø ±ýÀ¨¾Ôõ »¡À¸õ ¨ÅòÐ즸¡ñÎ ±Š¦À¡Å¢¨Éô ÒâÂÓÂÖí¸û. («ÅÕ¨¼Â ¸¨¾¸¨ÇÔíܼ; ´ýÚ À¾¢×¸Ç¢§Ä ®ÆòÐÈôÀ¢¾Æ¢§Ä Á¡üÈ¢ô§À¡ð¼Ð ¸¢¼ì¸¢ÈÐ). «ÅÕ¨¼Â Á¸ý ´ÕÅ÷ §À¡Ã¡ð¼ò¾¢§Ä þÈó¾¡÷ ±ýÚõ ¿¢¨É츢§Èý. ¿øæÃ¢§Ä À¢Èó¾Å÷ ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ¸¡Äõ Áð¼ì¸¢ÇôÀ¢§Ä§Â þÕó¾¢Õ츢ýÈ¡÷ (¬À¢Ã¢ì¸¡×ìÌô §À¡¸Óý). ¬É¡ø, «ÅÕ¨¼Â º¢ÅÌÁ¡÷ þð¼ ¯ûǢΨ¸ìÌ ¿¡ý À¾¢ø ¦¸¡ïºõ Ţ⚸ ÅÕõ Å¡Ãõ ±Ø¾ ±ñ½¢Â¢Õ츢§Èý. |
 |

 | Posted by karthikramas @ 05/06/2004 07:57 PM PDT |  |
இன்னும் கேவலமா, ஒரு கேள்வி தோனுச்சு. அதையும் எழுதியிருந்தேன்னா, எஸ்.பொ. நேரே என்னை அடிக்க கிளம்பி, அமெரிக்காவே வந்தாலும் வந்துடுவார். .. யாராவது வேணும்னா சொல்லுங்க ஈ-மெயில்ல அனுப்புறேன்.
நண்பர் பி.கே. சிவக்குமாரின், "ராணுவ அத்துமீறல்கள் "குறித்தும் சில கேள்விகள் உள்ளது.
நேரபிரச்சினை; இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன்....
|
 |