<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Friday, May 07, 2004
ராணுவ அத்துமீறல்கள் -??


எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

 சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன.
>>>
-   இதிலிருந்து நண்பர் பி.கே.எஸ், பயங்கர வாத குழுக்கள் செய்யும் அத்துமீறல்களை ஆதரிக்கவி-ல்லை என்று சொல்கிறார். வரவேற்புக்குரிய கருத்துதான்.
-இதே போல் "வீரன்" வாஞ்சி நாதன் செய்ததையும் அத்து மீறல் என்று சொல்வாரா?? வாஞ்சி நா
-தனை "பயங்கரவாதி"  என்று உரத்து குரல் கொடுப்பாரா?? இந்த நிலைக்கும் அந்த நிலைக்கும் -உள்ள
-வித்தியாசம்தான் என்ன என்று பிரித்து பொருள் தருவாரா??
-பாரதி மாறு வேடம் பூண்டதை கோழைத்தனம் என்று சொல்வாரா?? பாரதி திரைமறைவு வேலை
-செய்த கீழ்த்தரமானவன் என்று சொல்வாரா??
-சுபாஷ் சந்திரபோஸ் அமைத்ததை பயங்கரவாத போராளிக் குழு என்று சொல்வாரா??
- ஏனெனில் அரசு ஆங்கிலேய அரசாய் இருந்தபோது, அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு தா-னே சந்திரபோஸினுடையது!!
>>>>>>>>
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும்.
>>>>>>>>

 பத்திரிகைகள் அம்பலத்த முடியாத குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்ல வருகிறாரா?
--Classifeid informations -ஐ எப்படி வகுக்கிறார்??
--உளவுத்துறை ஊழல்களை கணக்கில் கொண்டாரா?
>>>>>
   பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
>>>

-  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? அரசும் ராணுவமும் என்ன செய்தாலும்  நடவடிக்கை
-எடுக்கலாம்/ எடுக்க முடியும், எனவே  அரசோ / ராணுவமோ / அரசும் ராணுவமும் சேர்ந்தோ
-செய்வதை செய்யட்டும் பின் "நடவடிக்கைகளை" எடுத்துக் கொள்ளலாம் என்றா??

>>>>>>
ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
>>>>>>>>>

-  சரி இதிலிருந்தும் என்ன சொல்ல வருகிறார்? நம்மில் அறிந்தவர்கள் எல்லோரும், விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கட-த்துகிற, தற்-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களை தேடிக் கண்டுபிடிக்க கிளம்பலாம் என்றா?
- இல்லை வீட்டுக்கொரு இளைஞனை பின் லேடனைக் கண்டுபிடிக்க கொடுக்கலாம் என்றா?
>>>
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது.
>>
 ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும்.
>>>
-அடேங்கப்பா!!! மறைக்கவே முடியாத மாபெரும் பூசணிக்காயை ஏன் மறைக்க மல்லு கட்டுகிறார்.
- அமைதிப்படையின் அட்டூழியங்கள் பத்திரிகைகளில் வரவேயில்லை என்கிறாரா? அல்லது
-பத்திரிகைகளில் வந்தால்தான் அவை "நடவடிக்கை" எடுக்கப்படும் அளவுக்கு qualify ஆகும் என்கிறாரா??
-"அது கண்டிக்கப்படத்தக்கது." என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாமே? அமைதிப் படைக்கு வக்காலத்து வாங்க காரணம் என்ன?
-நண்பர் பி கே எஸ் இந்திய ராணுவத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கு ஒரு சல்யூட்டும், எனது வாதத்தின் அடுத்த தளத்தையும் -சொல்வேன். இப்ப முடீயாதே! :-)
>>>
இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப்
பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
>>>
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும்.
>>>
-இந்திரா அம்மையாரின் படுகொலையின் போது சீக்கியர்கள் வேரருக்கப்பட்டது போலா??
>>
தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன.
>>>
இந்த வழக்கத்தை நண்பர் பி கே எஸ் ஆதரிக்கிறாரே?? ஏன்?? காந்தி மகான் நடத்திய அகிம்சா கூட்டத்தின் மீது தடியடி ஏவிய ஆங்கில அரசின் நடவடிக்கையை ஆதரிப்பாரா??

>>>

இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன.
காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது.
>>>>
-- அதாவது காந்தி மகானை ஆங்கிலேயர்கள் சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்கிறாரா??
-- இல்லை அந்த அளவுக்கு ஆங்கிலேயருக்கு அவர் மீது வெறுப்பு இருந்திருக்க வில்லை என்கிறாரா??
>>>

 ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
>>>>>>>>>
""ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல.""
"சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது."
- அமெரிக்க ராணுவத்துக்கு , அவர்கள் எதிரிகள்தானே ? "அப்படியிருக்க அவசியமானகவும் ஆகிவிடுகிறது"  லாஜிக் வருகிறது இல்லையா??
-இதன் ஆரம்பம் வெகு நாட்களுக்கு முன்னாலேயே நடக்க ஆரம்பித்து, இத்தனை நாட்கள் கழித்து பத்திரிகைகளில் வருகிறதே??
- இந்த ஈராக் கொடுமைகளை பற்றிய எச்சரிக்கை , எப்பொழுதோ அமெரிக்க அரசுக்கு வந்தது எனபது செய்தி.
-
-ஜனனாயகம் இத்தனை நாள் எவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது?? நண்பர் சொல்வாரா??

>>>>
 அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
>>>>

-வெளிக்கொணரப்பட வில்லையென்றால்??  எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகலாம் என்று விளங்கிக் கொள்ளலாமா??
>>>
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
>>>>
-இனி பின் லேடன் தினமும் CBS-ல் தினசரி அப்பாயிண்டுமெண்டுகளை உலகத்துக்கு சொல்லிவிட்டு, வேலை செய்யுமாறு கேட்டுக்கெ--ள்ளப்படுகிறார். 
>>>>
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

----
  அட்டூழியங்களை வரையறுக்கத் தெரியாதவர்கள் தான் குழம்புகிறார்கள், சிந்திப்பவர்களும், காணச் சகியாதவர்களும் அல்ல.
என் கேள்விகளில் குறைஇருந்தாலோ, மாற்று கருத்து இருந்தாலோ தெரிந்தவர்கள் சொல்லவும் கேட்டுக் கொள்கிறேன்.


Posted at 09:42 pm by karthikramas

karthikramas
May 19, 2004   12:23 AM PDT
 
தங்கமணி,
இந்த சுட்டி கொடுத்தற்கு நன்றி. என் வீட்டருகில்,பிரேமதசா கொடும் பாவி எரித்தார்கள்.
1983 என்று நினைக்கிறேன். வருடம் சரியாக நினைவில்லை. அப்பொழுது எனக்கு சரியாய் விளங்கவுமில்லை. ஆனால் மிகவும் வேண்டாத ஒன்று இலங்கையில் நடப்பதாய் மட்டும் புரிந்தது.
இந்த கொடுமைகளை இன்று நினைவு கூர்ந்தாலும் பயமும் அருவருப்புமே மிஞ்சுகிறது.
நண்பர் பிகேஎஸ், இதையெல்லாம் நினைவு கூர்வார் என நம்புகிறேன்.
Thangamani
May 18, 2004   01:02 AM PDT
 
நானும் கொஞ்ச நாளாய் இங்கு வரமுடியவில்லை. இன்றுதான் வந்தேன். உங்கள் கேள்விகளை இரண்டு பதிவிலும் (எஸ்போ, பிகேஸ்) ரசித்தேன். இரண்டும் அதிலிருக்கும் போலித்தனங்களை மட்டும் கேள்விக்குள்ளாக்கி இருப்பது இதில் குறிப்பிடத்தக்கது. எஸ்போவை எனக்குப் பிடிக்கும். அவர் இப்படிச் சொல்லவ்து குறித்து இன்னும் நான் படிக்கவேண்டும். அப்புறம் அரசபயங்கரவாதங்கள் அதிகரித்துப்போன நாட்களில் நாமிருக்கிறோம். கிருஸ்துவம் 10 நூற்றாண்டுக்கு முன் மத்ததின் பெயரால் நடத்திய அட்டூழியங்களை, அராஜகங்களை விட இன்னும் மோசமாக, ஜனநாயகம், இறையாண்மை, அரசியல் சட்டம் (இதெற்கெல்லம் இவர்களே எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பது நாமறிந்தது தானே) இவற்றின் பெயரால் இப்போது அரசுகள் செய்கின்றன. கடவுள், மதம் போல இபோது ஜனநாயகம் கேள்விக்கு அப்பால் உள்ள நம்பிக்கையாக பரப்பப்படுகிறது. ஈழப்படுகொலைகளை பற்றி (அமைதிப்படையின்) முதலில் செய்திகளே வரவில்லை, அநத அளவுக்கு நமது நேர்மையும், ஜனநாயகச் சிறப்பும் இருக்கிறது. தடாவில் கைது செய்து கொடுமைக்குள்ளான அப்பாவிகள் 90%க்கும் மேல். பொடாவிலும் அப்படியே, அமெரிக்க சிறைகளீல் வாடும் எண்ணற்ற கருப்பர்கள் குற்றமற்றவர்கள் என்பது தனிக்கதை, கடவுளின் பேரால் ஏமாற்றுவதும், கொல்வதும் இன்னும் மோசமானது, ஏனெனில் மக்கள் அதன் மேல் நம்பிக்கையிழக்கச் செய்யும். இந்த சுட்டி tip of the iceberg: http://www.tamilcanadian.com/eelam/hrights/index.php?FULL=1000029

உங்கள் பதிவுக்கு நன்றி.
Karthikramas@yahoo.com
May 10, 2004   09:47 PM PDT
 
அண்ணாச்சி,
மின்னஞ்சலை என்ன நத்தையிடம் கொடுத்து அனுப்பியுள்ளீர்களா? இன்னும் வந்து சேரலையே :-)
-/ramanitharan, k.
May 9, 2004   01:25 PM PDT
 
கார்த்திக், இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன்
-/ramanitharan, k.
May 9, 2004   01:24 PM PDT
 
கார்த்திக், இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன்
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry