கவிதை எழுதுவதென்பது நிலவை எக்கிப் பிடித்து
பிஞ்சுக் குழந்தையின் கைக்குள் அவசரமாய் சேர்ப்பதுவாம்
கவிதை எழுதுவதென்பது சில நேரங்களில் குழந்தைக்கு
குழந்தையாகி நிலவை தரேன் என்று அடம்பிடித்து அழுதலாம்
கவிதை எழுதுவதென்பது மலருக்குள் இறங்கி வண்ணத்தை பிரித்தெடுத்து சட்டைப் பைக்குள் போட்டுப் பிடரி தெரிக்க ஓடுதலாம்
கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்
தலீவா இது எப்பிடி கீது ??
இத்த படிச்சீ அத்த மாதிரியே ட்ரை பண்ணது ஹி ஹி ...
தலைப்பு நல்லா கீது...
சுந்தரவடிவேல் , தங்கமணி யெல்லாம் எழுதுனாங்கன்னா பெயரிலியின் மாதிரியே
உண்மையிலேயே நல்ல கவிதைகள் 2 கிடைக்கும்... அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன்....
Posted at 08:36 pm by karthikramas
 |  |  |
Thangamani May 18, 2004 01:27 AM PDT
//கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்//
இந்த உவமை நன்று.
எனது கவிதை குடியானவன் கை ரொட்டி; போராளியின் கைக் குண்டு என்கிறார் முகமத் தார்வீஷ் (பாலஸ்தீனக் கவிஞர்) :)
|
 |

 |  |  |
Sundaravadivel May 15, 2004 08:24 AM PDT
பெயரிலி மாதிரிக் கவியெழுத என்னோட பேரெல்லாம் சரிப்படாதய்யா! |
 |

 |  |  |
karthikramas May 12, 2004 09:03 AM PDT
மரவண்டு சார்,
இந்தாங்க புடிச்சுக்கோங்க,
கவிதையெழுதுவதென்பது தூண்டிலில் மீன் பிடிக்கச் சென்று
நீர்பரப்பில் தோல்போல் நெளியும் நிலவைப் பிடித்து திரும்புதலாம்.
|
 |

 |  |  |
maravantu May 10, 2004 01:19 AM PDT
¾¨ÄÅ¡
¸Å¢¨¾ ±ØÐÅÐ àñÊø §À¡ðÎ Á£ý À¢ÊôÀÐ Á¡¾¢Ã¢Â¡õ ..
«¾ü¦¸øÄ¡õ ¦À¡Ú¨Á §ÅñÎÁ¡õ ..
þó¾¢Ãý ±Ø¾¢Â ¸¨¾ , ¸Å¢¨¾, º¢üÀõ , µÅ¢Âõ ±ýÈ áÄ¢ø ÀÊò¾Ð |
 |

 |  |  |
Karthikramas@yahoo.com May 9, 2004 08:40 PM PDT
"தெரிக்க " வில இஸ்பெல்லிங் மிஸ்டேக்கு தலைங்களா
"தெறிக்க" ந்னு இருக்கனும்
அஜீஸ் பண்ணிக்கோங்க... |
 |