<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, May 17, 2004
சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...

சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...
  இக்கவிதையை பார்ப்பது எப்படி என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்சினை. இதை எழுதியவர் கடவுள்  மறுப்பு கருத்தாளர் என்பது எரிகிறதாய் காட்டப்படும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாம்.

இந்த கவிதை குறித்து என்னால் ஒரு குறிப்பை எழுதி அனைத்து திருமால் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவுடைய கைதட்டலை பெறமுடியும். அல்லது இதே கவிதைகுறித்து இன்னொரு முகமாய் ஒரு குறிப்பு எழுதி திருமால் இதனால் அவமானப்பட்டுவிட்டாரா என்று கேட்டு, திருமால் பக்தர்களின் வயிற்றெரிச்சலையும், கடவுள் மறுப்பாளர்களின் வாயார வாழ்த்தையும் பெற முடியும்.

என்னை பொறுத்தவரை இரண்டுமே வேண்டியதில்லை. இது ஒரு கவிதை , கவிதை மட்டுமே என்ற பார்வை இருபுறத்தாருக்கும் உதவுமென நினைக்கிறேன்...

இக்கவிதையில் அழகியல் உள்ளதா என்றால் உள்ளது என்றே சொல்வேன். அதே சமயம் இக்கவிதையில் பக்தியையோ அறிவையோ பார்க்கமுடியாது என்றும் சொல்வேன். ஏனெனில் நாரணந்தான் படைத்தான் என்பதையே கடவுள் மறுபாளர்கள் ஏற்பதில்லை  என நம்புகிறேன். அப்படி ஏற்பவர்களின் ஏற்பும் ஏற்புக்குரியதல்ல, இவ்வாறு கவிதைஎழுதின்.

:-)  :-)
 


Posted at 03:49 pm by karthikramas

Sundaravadivel
May 18, 2004   08:08 AM PDT
 
என்னத்தச் சொல்ல!
Thangamani
May 18, 2004   01:21 AM PDT
 
கவிதை கவிதைதான், ஆனால் இதனால் நாம் மதிக்கிறவர்களிடமிருந்து (பத்ரி, வெங்கட்) ஒரு தவறான புரிதலுக்கு இலக்காகிவிடுகிற அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்க்க நான் விரும்புவேன். அதனால் தான் வாசகர் அந்த உணர்வை எய்யும் வண்ணம் சொல்லப்படுதல் அவசியமாகிறது. அப்போது பிரச்சாரம், அவதூறு போன்றவைகளுக்கு இடமில்லை அல்லவா?

உங்கள் 'ராணுவ அத்துமீறல்கள்' லிலும் ஒரு கமெண்ட்டை எழுதியுள்ளேன்.

சுந்தரவடிவேலின் மேல் உள்ள புரிதலுக்கு நன்றி.
செல்வராஜ்
May 18, 2004   12:33 AM PDT
 
கார்த்திக், இது பற்றிய எனது பதிவு இங்கே. http://selvaraj.weblogs.us/archives/020465.html
பின் தொடர்தல் வசதி உங்கள் பதிவில் இல்லாததால் இணைப்புக் கொடுக்க முடியவில்லை. அப்படியே இடது பக்கத்தில் எனது பதிவுச் சுட்டியை ஒருநாள் சரி செய்து விடுங்கள். நன்றி.
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry