எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமென
அன்புள்ள செல்வராஜ்,
உங்கள் நீண்ட பதிவுக்கு நன்றி. நான் கூட முதலில் உங்கள் ஒற்றை வரி மறுமொழியைப் பார்த்து , என்னடா, மனிதர் மென்மையாய் பேசிவிட்டு போய்விட்டாரே என்று நினைத்தேன்.
பின்பு நம்ம பெயரிலி லேசாய் ஜகா வாங்கியவுடன் நானும் கொஞசம் கவனம் குவித்தேன்.
னீங்கள் சொன்ன அத்தனையையும் நானும் கவிதையில் பார்த்தேன். மிகவும் ரசிக்கவும் செய்தேன்.
னீங்கள் சொன்ன ஒன்று மட்டும் ஒரு 2 வரி குறிப்பு சொல்ல விழைகிறேன். நான், கவிதை நாரணந்தான் படைத்தான் என்று கவிதை ஏற்றுக் கொள்வதாய், எழுதியிருந்தால் , அதை நான் பிடித்த இன்னொரு குரங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்(பிள்ளையாரை இப்போதைக்கு தவிர்ப்போம் ..:-)).
நான் சொல்ல வந்தது,
இதே கவிதையை கடவுள் ஏற்பாளர் எழுதுவது கடினம். ஏன்? நீங்கள் சொன்னது போல் அதிர்ச்சி தரும் சில வரிகள் கடவுள் ஏற்பாளரின் நம்பிக்கை எல்லையில் நுழைய வாய்ப்புள்ளது.
அந்த எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமெனில், கவிஞரை கடவுள் மறுப்பாளராய் காணவும் வாய்ப்புள்ளது.
ஒரு கடவுள் மறுப்பாளர் இந்தக் கவிதையை எழுதுமிடத்தில் (இந்த இடத்தில் கவிஞர், சு.வ அல்ல)
அவரது நம்பிக்கை மறுப்புக்கும், நாரணன் வாயில் உலகம் தெரிகிறது என்ற கவிதைவரிகள் முரணாய் இருக்கும் என்பதை சொல்ல வந்தேன்.அவ்வெல்லைக் கோடு எங்கு சஞ்சரிக்கிறது என்பதுதான் இங்கு அனைவரின் பார்வை எழுப்பும் கேள்வியாகிறது.
எனவேதான் அக்கவிதை குறித்துக் குறிப்பு எழுதுவதைத் தவிர்த்தேன்.
தங்க மணி சொல்வது போல் , அவ்வெல்லைக் கோட்டை குறித்து எழுதி நாம் மதிப்பவர்களிடம் தவறான புரிதலைத் தரும் அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன்.
---
உங்கள் வலைப்பதிவின் சுட்டியையும், பின் தொடர்தலையும் எனக்குள் இருக்கும் சோம்பேறி அனுமதித்தவுடன் செய்துவிடுகிறேன்.