நண்பர்களுக்கு,
(குறிப்பாய் அருண்,மதி,சுந்தரவடிவேல்,தங்கமணி,செல்வராஜ்,பரி,பத்ரி ஆகியோர்களுக்கு)..
அருண் கட்டுரை சிந்தனையை தூண்டுவதாய் உள்ளது என்பதில் ஐயமேதுமில்லை. வழக்கமாய் எழுதுவது போல் நக்கலுடன் எதிர்வினை ஒன்றை எழுதலாம் என்றால் மனம் ஒரு fபுல்லை fபுல்லாய் குடித்தது போல் தடுமாறுகிறது.
சுந்தரவடிவேலின் அச்சுதவாய் ரோக கவிதையினால் அருண் தனது கட்டுரையை எழுதியிருந்தால்,
நண்பர் அருணுக்கு எனது மிகப் பணிவான வேண்டுகோள், அக்கவிதையை பிராமணத்துவேஷமாய் பார்க்க வேண்டாம் என்பது மட்டும்தான். சுந்தரவடிவேலரும் தான் இன எதிர்ப்பாளர் இல்லை என்று சொல்லியாகிவிட்டது.தங்கமணியும் அது போலவே ஒரு பதிலை சொல்லியுள்ளார். எனினும் பாரதியின் கூற்றை காண்பித்து மிக நாகரீகமாக எதிர்த்துள்ளார். இத்துடன் விட்டு விட்டு அடுத்ததைப் பார்க்கலாம். அல்லது பேசவே அநாகரிகமான அளவுக்கு வார்த்தைகளை கொட்டி விளையாடலாம். இரண்டுக்கும் நான் தயார். எனினும் முன்னதையே விழைகிறேன்.
மூடப்பிராமணியம் பிராமணர்களாலும் எதிர்க்கப்பட வேண்டியதே என்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்.அதுபோலவே மற்ற மேல் ஜாதி,மேல் இன மூடத்தனங்களும் அனைவராலும் எதிர்க்கபடவேண்டியதே. நம் வரலாறு நமக்கு பெருமை தரும் காட்சிகளை காட்டாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!