<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Wednesday, May 19, 2004
நண்பர் அருணின் கட்டுரை குறித்து..

நண்பர் அருணின் கட்டுரை குறித்து..


எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெயரிலி ஒரு கேள்வி கேட்டிருந்தார், இன்றைய செல்வராஜின் பின்னூட்டப்குதியில்.
அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால், இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

சென்ற வார வலைப்பூ ஆசிரியராகப் பணிபுரிந்த டுபுக்கு, சும்மா பேசும் போது கூட அரசியலை எல்லாம் தவிர்த்து வந்த ஒரு நகைச்சுவை விரும்பி. ஆனால், அவர் தனது குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட போது, அதில் பூணூல் பளிச்சென்று தெரியுமாறு ஒரு புகைப்படத்தைப் போட்டார். அவரது எழுத்துக்களை உன்னிப்பாய் ஊன்றி கவனித்தால், அவர் எந்த உள்நோக்கத்தோடும் அதை செய்திருக்க மாட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த அந்த விஷயத்திற்கு, நான் அப்போதே விளையாட்டாய் ஒரு பாராட்டை மறுமொழியாய் ஏற்றி வைத்தேன். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். கீழ்க்கண்ட கட்டுரையில் நான் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

> வலைப்பூவில் எனக்கு தெரிந்து டுபுக்குவின் பூணுலை குறித்து நான் படித்த பதிவு, அருணின் இந்தக் கட்டுரைதான்.
இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
-
தமிழ் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் என்றால், கண்டிப்பாய் பிராமண துவேஷிகளாக இருக்க வேண்டும், கடவுள்களையும் புராணங்களையும் கிண்டல் அடிக்க வேண்டும் என்று சிலருக்குத் தவறாய் போதிக்கப்பட்டு இருக்கிறது.

> இது வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டு. அருணே பிராமணத் தமிழறிஞர்களை குறிபிட்டுள்ளாரே?. அவர்கள் இந்த பட்டியலில் வரவில்லை என்றால், அவர்களுக்கு இந்த போதனை போதிக்கப்படவில்லை என்று அர்த்தமா? இல்லை போதிக்கப்ப்டு அது அவர்கள் மண்டையில் ஏறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
-
அதனால், அவர்கள் இன்னும் அந்த வட்டத்திலிருந்து வெளியே வரத்தயாரில்லை. இணைய உலகிலும், அந்த வெறுப்புகள் உமிழப்பட்டு வரத்தான் செய்கிறது.

>தமிழ் ஆர்வம் வேறு வட்டம். பிராமண மூடத்தன எதிர்ப்பு சத்தியமாய் வேறு வட்டம். இரண்டுக்கும் ஒரே மையம் என்று எப்படி சொல்லுகிறார்?
-
வேதங்களைக் கிண்டல் செய்வதும், இந்துக் கடவுள்களைக் கிண்டல் செய்வதிலும் ஒரு சிலருக்கு அலாதிப் பிரியம் இருக்கத் தான் செய்கிறது. இதில் என்ன கூத்தென்றால், அதில் பலர் நன்கு படித்தறிந்தவர்கள் என்பது தான். ஒவ்வொரு விஷயமாக வருவோம்.

> இங்கு நண்பர் அருண் "வேதங்களை கிண்டல் செய்வதும்" என்று பூசிய மொழுகியபடி எழுதியுள்ளார். நான் கூட வேதங்களை கிண்டல் செய்ததுண்டு. எதிர்காலத்திலும் செய்வேன். அது தவறான கருத்தை பரப்ப அல்ல, ஒரு நேர்முகத்தேர்வைப் போல.
வேதம் இதைச் சொல்கிறதே?இதைத் தெரிந்துகொள் என்று சொல்கிறதே? தெரிந்துகொண்டாயா என்று கேள்வி எழுப்புவேன், எனக்கு அந்த சுதந்திரத்தை அதே வேதம்தான் தந்துள்ளது என்று சொன்னால் மறுக்க முடியுமா?
பிரச்சினையின் சாரம் அதுவல்ல, வேதம் படித்தவன் நான், இன்னொருவன் வேதம் படிக்காதவன் என்ற காரணத்தாலேயே, அவனுக்கு மனித அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களைத் தான் சாட வேண்டும் என்கிறேன். அவர்களைச் சாடுவது சமுகத்தின் ஒவ்வொருவரின் கடமையும் என்கிறேன். குறைந்தபட்சம், இவர்கள் அவனைவிட எந்தவிததில் உயர்ந்தவர்கள் என்று இவர்களுக்காவது தெரியுமா என்று கேட்கிறேன். அப்படி இவர்களுக்கே தெரியாத பட்சத்தில், இவர்கள் எதைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.
-
கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் ஓத வேண்டுமா என்று கேள்வி எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் மந்திரங்களின் அதிர்வுகளில், பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானப் பூர்வமாகவே நிருபீக்கப்பட்டிருக்கிறது.

> இது ஆசிரியரின் நம்பிக்கையாய் இருக்கும் பட்சத்தில் அதை குறைகூறமுடியாது. ஆனால் நிருபிக்கமுடியுமா? என்று கேட்கலாம். ஏனெனில் "அறிவியற் பூர்வமாக" என்று சொல்லியிருப்பதால்.
-
 அதுவும் போக, தமிழில் மந்திரங்கள் சொல்லப்படாத கோவில்களே இல்லை எனலாம். ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகங்கள் எல்லாம் இன்றும் எல்லாக் கோவில்களிலும் பாடப்பட்டுத் தான் வருகின்றன.

> தமிழில் மந்திரங்கள் சொல்லப்படுவத்ன் பின்னால், மேலே சொல்லப்பட்ட, "தவறாய் போதிக்கப்பட்டவர்களின்" மாபெரும் உழைப்பும்,
போராட்டமும் உள்ளது என்று சொல்ல்வேண்டுவதும் இங்கு அவசியம். இது போராட்டத்தினால் விளைந்த நிலை, சமத்துவத்தாலோ சனாதனம் என்று அழைக்கபடும் மாய்மாலத்தாலோ விளைந்தது அல்ல.
-
 இதே போல கேள்வி எழுப்புவர்கள் எல்லாம், கோவில்களிலோ அல்லது கடவுள்களிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான். மக்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருப்பதால் தான், குடமுழுக்கிற்கும், பண்டிகை தினங்களில் கோவில்களுக்கும் கூட்டம் குவிகிறது. தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதரவாய்த் தீர்ப்பளித்த போதெல்லாம், 'ஆ?...தமிழன் அறிவாளி' என்று துள்ளிக் குதிக்கும் தலைவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு மட்டும், மூடநம்பிக்கை கொண்ட மடையர்கள் என்று எள்ளி நகையாடுவது அரசியல் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்?

>அரசியல் வாதிகளின் சுயனலத்துக்கு எடுத்துக்காட்ட, வேறு எத்தனையோ இதைவிட சிறப்பான உதாரணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
-
வேதங்களிலும், புராணங்களிலும் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், தற்போதைய சாதீயக்குறியீட்டின் மூலம் வழங்கப்படும் பிராமணர்கள் இல்லை.

> இப்படிச் சொல்லும் ஆசிரியர், அதாவது இப்பொழுது இருக்கும் பிராமணர்கள் , சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரா என்ன?
-
அதாவது, அயல்நாடுகளுக்கு வந்து, கணிப்பொறியில் தட்டி, காசு சம்பாதித்து, ஜாதி என்று விண்ணப்படிவத்தில் கேட்கப்படும் போது 'பிராமின்' என்று நிரப்பிக் கொள்ளும் பிராமணர்கள் இல்லை. இப்போது பிராமணன் என்று சொல்லிக் கொள்பவர்கள், அடையாளத்தைத் தான் வைத்துள்ளார்கள், உண்மையான அர்த்தங்கள் இழந்து போய் வெகுநாட்களாயிற்று. அவர்கள் எல்லாம் அதில் பெருமை கொள்ளவொ, சிறுமை கொள்ளவோ ஒன்றுமே இல்லை.
அதை வைத்துக் கொள்வதும், இழக்க நினைப்பதும் அவனவன் சௌகர்யம். அந்தக் காலத்தில் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், நான்கு வேதங்களையும் கற்றறிந்து, உலக நன்மைக்காகக் கடவுள்களைப் பிரார்த்தித்து, அரிசியைப் பிச்சையாய் வாங்கி உண்டு வந்தவன். சமுதாயத்தில் சத்ரியன் என்று அழைக்கப்பட்டவர்களும், தாழ்ந்தவர் என்று அழைக்கப்பட்டவர்களும் நான்கு வேதங்களைக் கற்றறிந்து பிராமண நிலைக்கு உயர்ந்ததாய்ப் பலர் சொல்லியும், படித்தும் அறிந்திருக்கிறேன். பல ரிஷிக்களாலும், முனிவர்களாலும், தோன்றிய காலமே தெரியாத வேதங்களில், அரிய விஷயங்களாகப் பல நல்ல விஷயங்கள் போதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்குப் பின்னால் வந்த சில சுயநல பிராமணர்கள், பல இடைச்செருகல்களைப் புகுத்தியும், தவறான
விளக்கங்களும் அளித்து தகிடு தத்தங்கள் செய்துள்ளார்கள்.

> இந்த சுயனல பிராமணர்களையும், "தவறாய் போதிக்கப்பட்டவர்கள்" பட்டியலில் சேர்த்திருந்தால் கட்டுரைக்கு வலு சேர்ந்திருக்கும்.
இவர்கள் அளித்த விளக்கங்களை பின்பற்றும் போற்றும் பிராமணர்கள் இன்றும் இருந்தால் அவர்களை என்ன செய்வது என்று ஆசிரியர் யோசித்துப் பார்ப்பாரா?
-
ஆனால், எந்த சமுதாயம் தவறு செய்ததோ, அதிலிருந்தே பல நல்லவர்களும் தோன்றி, இழைக்கப்பட்ட அநியாயங்களை எதிர்த்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் தமிழில் ஆர்வலர்களாகவும், விற்பன்னவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அதற்கு ஒரு அற்புத உதாரணம், சுப்பிரமணிய பாரதியார்.
>சுப்பிரமணிய பாரதியார் உயிரோடு இருக்கும் போதே எதிர்த்த பிராமணர்களை என்ன சொல்லுவது?

'சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!' என்று போதித்தான். இது நம்மாளு என்ற படத்தில் வரும் எளிய வரிகளில் வரும் பாட்டை சொல்கிறேன், 'பாண்டியிலே நம்ம பாரதியார் இருந்தார், பக்கத்திலே ஒரு தாழ்ந்தவரும் இருந்தார், பூணூலைத்தான் நீ மாட்டுன்னார்...எல்லாரும் அய்யருன்னு வெளுத்து வாங்கினார்!' தமிழில் பல சேவைகள் செய்து, அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்த உ.வே.சாமிநாத அய்யர், தமிழ்த்தாத்தா என்றே வழங்கப்படுகிறார்.
ஆனால், அவர்களைப் போன்ற நல்லவர்களையும், தமிழ் விற்பன்னர்களையும் வசதியாய் மறந்து விட்டு, இன்னும் வசை பொழிகின்றனர்.

>இதையே பிராமணத் துவேஷத்தை ஆதரிக்க , வசதியாய் ஆசிரியர் பாரதியை துனைக்கு அழைத்துக் கொண்டார் என்றும் ஒருவரால் சொல்ல முடியும்.
> குத்தமுள்ள நெஞ்சாய் இல்லையென்றால் எந்த பிராமணரும் இந்த சாடல் தன்னைக் குறித்ததல்ல என்று போக வேண்டியதுதானே?
ஆதாரமுடைய அராஜங்களைக் குறித்து குரல் எழுப்பினால் அது வசை ஆகாது என்று ஆசிரியர் அறிவார் என்று நம்புகிறேன்.

பெரியார் ராஜாஜி என்ற பிராமணரோடு கூடிக் குலாவினால், நட்பு வேறு, கொள்கை வேறு என்று பாராட்டுவார்கள். அதில் கூட எல்லாப் பெருமையும் பெரியாருக்குத் தான்.
-
> பெரியாரின் சேவைகளை ராஜாஜி ஒப்புக் கொண்டாலும், கட்டுரை ஆசிரியர் ஒப்புக் கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இல்லைஎனில் ராஜாஜி பெரியாரின் நட்பாய் பழகியிருப்பாரா என்ன?

ஆத்திகத்தில் நம்பிக்கை கொண்ட ராஜாஜி, நாத்திகப் பெரியாரோடு அதே போல் நட்பு பழகியது அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை! இதில் ஒரு கொடுமை என்னவென்றால், பெரியார் ஆனதென்ன ராஜாஜி என்ற உவமையைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும் என்றால் பல் துலக்குவதேன் என்று குதர்க்கமாய் பேசுவதையும், சரஸ்வதி மலஜலம் கழிப்பது நாவிலா என்று கேள்வி கேட்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள்.

> இதற்கும் மேலே சொன்ன, "கருத்து எதிரியல்ல , கருத்தைக் காரணமாய் காட்டி மனிதனை மறுக்கும் மனிதனே மறுக்கப்படவேண்டியவன்" என்பது பொருந்தும்

 இன்றும் கூட, தமிழகக் கட்சிகள் சிலவற்றிற்கு பேசுவதற்கு விஷயமே இல்லை என்றால், 'பிடி..பிராமண எதிர்ப்பை' என்று கிளம்பி விடுவார்கள்.
> கட்சிகளில் எந்த கட்சி புனிதமான கட்சி?

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் தான் இப்படி என்றால், அயல்நாடு வந்த பின்னும் பிராமண துவேஷம் ஒரு சிலரிடம் கொடிகட்டிப் பறப்பதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. போன முறை பெட்னாவில் கூட, பல பிராமண எதிர்ப்புப் பிரச்சாரங்கள், 'மாதவன் வராமல் போகட்டும், மாமிகள் கோபம் கொள்ளட்டும்' என்றெல்லாம் கவிதை பாடினார்கள் என்று தெரிய வந்தது. ஏதோ மாதவன் வராமல் போனால், மாமிகளுக்கு மட்டும் தான் கோபம் வருவது போல ?! ஒரு சீக்கிய சகோதரன் தலைப்பாகை அணிவதில் எங்கும் தயக்கம் காட்டுவதில்லை, ஒரு இஸ்லாமிய சகோதரன் குல்லா அணிவதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை...அவர்களைப் போலவே, பிராமணர்களும் பூணூலை அணிந்து வெற்றுடம்புடன் வரும் போது மட்டும், எதற்கு ஆயிரத்தெட்டு கேள்விகள், நக்கல் பிரச்சாரங்கள் என்று தெரியவில்லை? சகமனிதர்களை ஜாதி போன்ற காரணங்களைச் சொல்லி, யார் ஒதுக்கி வைத்தாலும் தவறு தான். அது தண்ணி தெளித்து தீட்டு என்று சொல்லும் பிராமணனாய் இருந்தாலும் சரி, கொட்டாங்குச்சியில் காப்பி ஊத்தி, வேலிகளில் அலுமினியத் தட்டுகளை சாத்தி வைக்கச் சொல்லும்வேறு எவராயிருந்தாலும் சரி..எல்லாம் தவறு தான். ஆனால், இது போன்ற இழிசெயல்களை, இப்போதிருக்கும் பல பிராமணர்கள் செய்வதில்லை, நம்புவதுமில்லை..ஏன் வெறுப்பவர்கள் கூட என்று சொல்லலாம். எல்லா சாதிகளிலும் விதிவிலக்குகள் இருக்குகிறார்கள், அதே போல்...நான் சொன்ன மேற்கூறியவர்களிலும் இருக்கத் தான் செய்வார்கள்.

ஒவ்வொருவனின் நம்பிக்கையும் அவனவனோடு. அவனது வீட்டிற்குள் அவன் எது வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளட்டும், ஆனால்..அது அடுத்தவனை உரசாத வரை, அதைக் கேள்வி எழுப்புவதும், நக்கல் அடிப்பதும் குரூர மனப்பான்மையின் மறுவடிவம். முன்னால் எல்லாம், காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லக்கூடாது, மற்றவர்கள் சொல்லக்கூடாது என்று பல பொய்ப் பிரச்சாரங்கள் இருந்து வந்தன.
சமீபத்தில் இங்கு வந்த சுவாமி ஒருவர், எல்லோரையும் தியானம் இருக்கச் சொல்லி, பெண்கள் உட்பட சொல்லலாம் என்று கூறி, காயத்ரி மந்திரத்தைப் போதித்தார்.அதே போலவே, சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று சொல்லி, பிராமணர்களைத் தாண்டி வெளியே விடாததும், ஒரு பெரும் தவறு தான். ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுப் பல காலம் ஆகி விட்டது.

> பிராமணியத்துக்குள்ளேயே இருக்கும்  தீண்டாமை குறித்து ஆசிரியர் எழுதியுள்ளது வரவேற்புக்குரியதே. இதையே செய்யும்
பகுத்தறிவு மட்டும் எப்படி மக்கிப் போனதாக இருக்க முடியும்??


இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்ட


Posted at 09:26 pm by karthikramas

karthikramas
May 20, 2004   10:43 AM PDT
 
அண்ணாச்சி,
விட்டுத்தள்ளுங்க, அவரவர் மனசாட்சிக்கு தெரியாதா? நடுனிலைமை எதுவென. வேறு வேலையைப் பாக்கலாம். அது சரி என் தண்ணீர் கவிதைப் பற்றி எப்படி உள்ளது?? நடுவில் கொஞசம் சொதப்பியதாய்ப் படுகிறது எனக்கு :-)
-/பெயரிலி.
May 20, 2004   10:08 AM PDT
 
நான் சொன்னது அருணின் பதிவு,
http://arunviews.blogspot.com/2004_05_16_arunviews_archive.html#108481091337825571
இலே பின்குறிப்புக்குமேலான கடைசிப்பந்திகுறித்தது. வன்னியர்-தேவர்-தலித் வெட்டுக்குத்தெல்லாம் பிராமணியம்/பார்ப்பனியம்/வருணாச்சிரம'தர்மம்' என்பவற்றின் கீழே வருகின்றதால், எதிர்-பிராமணியம் அவசியம் என்பதும் அ·து எதிர்-பிராமணர் நிலைப்பாடாகக் கொள்ளக்கூடாது என்பதையும் குறித்தது. அருண் இரண்டு நிலைகளையும் குழப்பிக்கொண்டதாகத் தோன்றியது.
karthikramas
May 20, 2004   09:29 AM PDT
 
எல்லாம் இதையும், அச்சுத கவிதை குறித்து நான் மறுப்பு தெரிவித்ததற்கும் ஏதாவது சம்பந்தமாய் கேட்டீர்களோ என்று நினைத்தேன். அவ்வளவுதான். :-) :-)

//சம்பந்தப்படாமல் ஒரு விடயம்; எல்லாம் சரிதான்; பிராமணர்களுக்கு எதிரானதென்பதற்கு பிராமணத்துக்கு எதிரானது என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றதென்பதினைக் கண்டு கொள்ளாமலே நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். anti-brahmin & anti-brahminism இரண்டும் வேறானவை அல்லவா?//
செல்வராஜ்
May 19, 2004   10:32 PM PDT
 
அதானே. எனக்கும் கூட இந்தக் கரடி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஆனால் கார்த்திக் நல்ல கேள்விகளை பதில்களை இங்கே வைத்துள்ளதாகத் தான் தெரிகிறது.
-/¦ÀÂâĢ.
May 19, 2004   09:44 PM PDT
 
/அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால்,/

ஐயோ அண்ணாச்சி, இதென்ன புதுக்கரடி! எங்கே நேர்மையைச் சந்தேகித்தேன்! தயவு செய்து சுட்டிக்காட்டீரும். பிறகு அதுவேறு கிளையாக வளரப்போகுது. வர வர யாரோட அவல், எவளோட உரலென்றே போதும் போய் அவலா உமியா என்றே தெரியாமல் இடித்துக்கொண்டிருக்கிறோம்போல ஆகிவிட்டது!

அட அச்சுதா!!
என் தலைக்கே அச்சுத்தியலா? :-)
-/¦ÀÂâĢ.
May 19, 2004   09:43 PM PDT
 
/அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால்,/

ஐயோ அண்ணாச்சி, இதென்ன புதுக்கரடி! எங்கே நேர்மையைச் சந்தேகித்தேன்! தயவு செய்து சுட்டிக்காட்டீரும். பிறகு அதுவேறு கிளையாக வளரப்போகுது. வர வர யாரோட அவல், எவளோட உரலென்றே போதும் போய் அவலா உமியா என்றே தெரியாமல் இடித்துக்கொண்டிருக்கிறோம்போல ஆகிவிட்டது!

அட அச்சுதா!!
என் தலைக்கே அச்சுத்தியலா? :-)
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry