<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Thursday, May 20, 2004
தண்ணீர் தண்ணீர்தான்

வரி வரியாய் சரிப்பார்க்கும்
தென்றலுக்கு.
லேசாய் தலையாட்டும்
பச்சிளம் பயிர்
இது என் வேலைஅன்று
என்று கூவிகொண்டே வேரில்
பாயும் உயிர்த் தண்ணீர்

வெள்ளிச்சொம்பு
உள்ளே
புத்தம்புதிதாய்
செத்த எறும்பு
சொம்பின் அடியில்
சூரியன் சிறைபட்டுளான்.
சூரியனை சிறைபிடித்ததில்
களியாட்டம் ஆடும்
னதியைப் பிரிந்த
குவளைத்தண்ணீர்

என் மவுனம் ஆழத்தைவிட
பெரிதென்பதாயும்
அலைகோஷமெல்லாம்
அற்ப ஒலியென்றும்
சர்வகணமும் உறங்கும்
நீலத்தைக் காட்டி
உப்பை மறைக்கும்
மாகடலின் தண்ணீர்

உள்ளே புழுக்கமென
வெளியே காற்றாடிக் கொள்ள
விரைந்து என் குவளையில் விழும்
சூடு இயந்திரத் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்தான்
இங்கும் எங்கும்.


Posted at 10:15 am by karthikramas

thangamani
May 20, 2004   03:38 PM PDT
 
சென்ற குறிப்பில் பதிவுகளுக்கு பின்னுள்ள புரிதலுக்கு மிக்க நன்றி! என்று எழுத வந்து பதிவுகளுக்கு நன்றி என எழுதிவிட்டேன். கவிதை முயற்சிகள் தொடரட்டும். :)
karthikramas
May 20, 2004   02:16 PM PDT
 
ஆமாங்க , அதை தப்பா அடிச்சு அடிச்சு அதுவே சரிங்கறா
மாதிரி அயிடுச்சு. அதுக்கு ஒரு வழி செய்யணும்தான் :-)
-/பெயரிலி.
May 20, 2004   01:33 PM PDT
 
அண்ணாச்சி பாட்டு படா ஜோராத்தான் இருக்கு. ஆனா, இந்த 'நானா'க்கு நீங்க கட்டாயம் ஏதாச்சும் வழி பண்ணித்தான் ஆகணும். சொல்லோட மொகப்புல மூஞ்சி சதா 'னா'ன்னு நிக்குறது அழகாவா இருக்கு?
karthikramas
May 20, 2004   12:01 PM PDT
 
டுபுக்கண்ணே :-),
வருக வருக!! காபி டீ எதாவது குடிக்கிறீங்களா? :-)
னீங்கள் வந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி :-)
Dubukku
May 20, 2004   11:18 AM PDT
 
இப்போதான் முதல் தடவை இங்கு வருகிறேன். (இவ்வளவு நாள் உங்க் ப்ளாக் எங்க இருக்குன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன். பின்னூட்டம் குடுக்கும் போது ஏன் வலைப்பதிவு முகவரியைக் குடுக்கமாட்டேன்ங்கிறீங்க? வலைப்பதிவு நல்லா இருக்கு.
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry