வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து..
வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து,
நிறைய எழுத இருந்தாலும் , முக்கிய சில கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.
வெ.சா. //ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது.//
இந்த தயக்கத்துக்கும் காரணம் ஆணாதிக்க சமுதாயமே என்று நான் சொன்னால் மறுக்கமுடியுமா?
பெண்களை சில வார்த்தைகளை புழங்க முடியாதபடிக்கு ஆளாக்கியதில் ஆண்களுக்கு பங்கு இல்லையா என்ன? கிராமங்களில் சர்வ சாதாரணமாய் இத்தகைய வார்த்தைகள் பெண்களால் உபயோகிக்கப்டுகின்றன. அங்கு ஆணதிக்கம் இந்த மொழிக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை போலும்.
வெ.சா.// இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.//
புழக்கமில்லாதது அதனால் எழுதப்படக்கூடாது என்பது ஒரு கியானத்தனமான வாதம். இந்த வார்த்தைக்கு அதாவது "யோனி" ("யோனி" எனக்கு மிகப் பழம் வார்த்தை,புழக்கத்தில் உள்ள வார்த்தை)
இப்பொழுதிலிருந்து இந்த கவிதாயினிகாளாலேயே புழக்கத்துக்கு வர ஆரம்பிக்கட்டுமே? யாருக்கு நட்டம்?
வெங்கட சாமிநாதன் இப்பொழுது செய்வது போலவே தான் ,பல வார்த்தைகளை பெண்கள் புழங்கவிடாமல் செய்து உள்ளது சமூகம். அதில் ஆண்கள் உள்ளனர் என்பதை மறைக்க முடியாது.
புழக்கத்துக்கு ஆரம்பம் இன்று இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்?
சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எத்தனிஅயோ வார்த்தைகளைப் பெற்ற தமிழ் இதையும் பெற்றுக் கொள்ளட்டுமே?
நம் புழக்கம் என்ன எல்லா சமஸ்கிருத வார்த்தைகளையும நீக்கப்பட்டதாகவா உள்ளது?