<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Sunday, May 23, 2004
நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா..


நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா
----------------------------------
  என்னைப் பொறுத்தவரையில் சோனியாதான் பிரதமராய் வந்திருக்கவேண்டும்.

அவர் வரக்கூடாது என்று சொல்வதற்கான வாதங்களில் எதுவுமே பலமுள்ளதாக அறிவுள்ளதாக இல்லை.

1." அவர் 71 சண்டையின் போது நாட்டை விட்டு சென்று விட்டார்." என்று ஒரு காரணம்.
 செல்லட்டுமே அதனால் என்ன? போர் என்று வந்துவிட்டால் நமது இந்தியர்கள் பிற நாட்டிலிருந்து திரும்பிவரவில்லையா?. போர் என்ற போது வாழ்வா சாவா என்ற பிரச்சினை வரும்போது அப்படி செய்வதுதான் புத்திசாலித்தனம். அவர் என்ன ராணுவ ஜெனரலா? விட்டுப் போய்விட்டார் புறமுதுகு காட்டி என்று சொல்ல?
எல்லாவற்றுக்கும் மேல் , அவர் அன்று பிரதமரா? இல்லை?

2. அவருக்கு அனுபவம் இல்லை. என்கிறது ஒரு வாதம்?
 அட அடா, இந்திய மக்கள் எப்போது கண் விழித்து இப்படி யெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்கள். என்ன ஒரு அக்கறை நாட்டின் மீது. இந்த அக்கறை, டெஸ்மா உபயோகித்து முண்டாந்தாரமாய் , வீட்டில் உட்கார்திருந்த போது தான் வந்திவந்திருக்க வேண்டும்.மன்மோகன் முதல் முறை அரசியல் அனுபவமே இல்லாது , நாட்டின் மிக முக்கியமான பதவியான, பொருளாதாரதுறை மந்திரி ஆனாரே? அப்போ எங்கே போச்சு இந்த அறிவு?
அனுபவமில்லாமல், இன்னும் எத்க்னை முதலமைச்சர்கள், சினிமா அனுபவத்தைக் கொண்டு ஆட்சி செய்தபோது எங்கே போச்சு இந்த அக்கறை? கர்ம வீரர் , கர்ம வீரராய் ஆக படிப்பா தேவைப் பட்டது?

3. "அவருக்கு சட்டப்படி குடியுரிமை இல்லை"- என்கிறது ஒருவாதம்.
இதற்கு வெட்கப்பட வேண்டியது, இந்தைய குடியுரிமைச் சட்டமா? அல்லது சோனியாவா?
தூத்தெரி!! இப்படி ஒன்றைச் சொல்ல வெட்கமில்லை, இந்த வழக்கை முறையீட்டுக்கு அனுப்பியவனுக்கு? வாயிடாமே வாயிட்?

அதாவது 1984  லிருந்து ஒருவர், இல்லீகலாய் இந்தியாவில் இருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட்டு, பிரதம மந்திரி பதவிக்கும் வர தயாராகி விட்டார். அது வரை எதுவுமே கேட்காத குடியுரிமைச் சட்டம் திடீரென்று இண்ரு எழுந்து கொண்டுவிட்டது. அவர் பிரதமந்திரியின் துணைவியாராய் இருந்தபோதுகூட தூங்கிக் கொண்டுதான் இருந்தது இந்திய கையாலாகாத குடியுரிமைச் சட்டம்.
போடா, டெஸ்மா போல , இந்திய குடியுரிமைச் சட்டம் வயகரா சாப்பிடவில்லை போலும்.

 அவர் 2 குடியுரிமை வைத்திருக்கிறார்(***திருத்தம்****, சோனியாவிடம் இரண்டு குடியுரிமை இல்லை. ). இருக்கட்டுமே? இது எந்த விதத்தில் பிரதம மந்திரி பதவியில் வேலை செய்வதை பாதிக்கும்? இதுவரை அப்படி இல்லை , அதனால் இப்போது செய்யக்கூடாது என்பது வாஸ்து பேரைச் சொல்லி ஏமாத்துபவனைவிட கீழ்த்தரமானது.

சோனியா பிரதமராக்கூடாது என்று சொலவ்தில்,
குறுகிய மனப்பான்மைதான் தெரிகிறது. நாடுகளின் எல்லைகளைக் கடந்து யோசிக்கத்தெரியாத, பல கோடி முண்டங்கள் அளித்த ஒட்டுகளைக் கொண்டு பிரதமராவதைவிட பிச்சை எடுப்பது பரவாயில்லைதான்.
எதோ அவர் ராணுவ ரகசியங்களை விற்றுவிடுவார் என்று சொன்னால், கேட்க கொஞசம் நல்லாவாவது இருக்கும். மிகவும் கீழ்த்தரமாண உணர்வுக்ளால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களிடையே நடக்கும் அரசியலுக்கு இதைவிட ஒரி சிறந்த உTகாரணம் இருக்க முடியாது.   இந்த முடிவு குறித்து பின்னால் சோனியா வருத்தப்படுவார் என்று நினைக்கையில் எனக்கு இப்போதே வருத்தம் ஏற்படுகிறது.

 
வாழ்க (வெட்கங்கெட்ட)இந்திய ஜனநாயகம்....

 


Posted at 01:19 am by karthikramas

Eelanathan
May 31, 2004   12:10 AM PDT
 
&#2959;&#2985;&#3021; &#2970;&#3006;&#2990;&#3007; &#2962;&#2992;&#3009; &#2997;&#3006;&#2992;&#2990;&#3006;&#2965; &#2986;&#3007;&#2985;&#3021;&#2985;&#3010;&#2975;&#3021;&#2975;&#2980;&#3021;&#2980;&#3007;&#2994;&#3021; &#2990;&#2975;&#3021;&#2975;&#3009;&#2990;&#3021; &#2980;&#3006;&#2985;&#3021; &#2958;&#2996;&#3009;&#2980;&#3009;&#2997;&#2980;&#3014;&#2985;&#3021;&#2993; &#2970;&#2986;&#2980;&#2990;&#3006;?
karthikramas
May 23, 2004   09:24 PM PDT
 
http://www.soniagandhi.org/php/showContent.php?linkid=1

Sonia, whose Italian origin gave her opponents propaganda grist became a full-fledged Indian citizen in 1984 after the death of Indira Gandhi.
karthikramas
May 23, 2004   09:19 PM PDT
 
http://news.bbc.co.uk/2/hi/south_asia/3546851.stm

Media analyst Bhaskar Rao said: "The foreign origin [of Sonia Gandhi] was not an issue."

Long before the election she surrendered her Italian passport in favour of full Indian citizenship.

Sonia herself said in a television interview: "I never felt they look at me as a foreigner. Because I'm not. I am Indian."

Her campaign this year was boosted by the entry of her son, Rahul, as a candidate. Her daughter Priyanka has also campaigned energetically for her.

karthikramas
May 23, 2004   09:19 PM PDT
 
http://news.bbc.co.uk/2/hi/south_asia/3546851.stm

Media analyst Bhaskar Rao said: "The foreign origin [of Sonia Gandhi] was not an issue."

Long before the election she surrendered her Italian passport in favour of full Indian citizenship.

Sonia herself said in a television interview: "I never felt they look at me as a foreigner. Because I'm not. I am Indian."

Her campaign this year was boosted by the entry of her son, Rahul, as a candidate. Her daughter Priyanka has also campaigned energetically for her.

karthikramas
May 23, 2004   08:56 PM PDT
 
அனாதையாரே, ஒரு இணைய தளத்தில், சோனியா அம்மையார், இன்னும் இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்யவில்லை என்று படித்தேன். முடிந்தால் பக்கத்தின் முகவரி தருகிறேன்.
Anathai
May 23, 2004   06:27 PM PDT
 
கார்த்திக்,

சோனியா இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கின்றாரா? அப்படி எங்கே படித்தீர்கள்? எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் வசிப்போர் இரட்டைக்குடியுரிமை வைத்திருக்க முடியாது அல்லது கூடாது சட்டப்படி. அது ஒரு சில நாடுகளுக்கு செல்லாது. குறிப்பாக இங்கிலாந்து. ஒருவர் இங்கிலாந்தில் பிறந்தவராக இருந்தால் அவர் எக்காலத்திலும் தன்குடியுரிமையை இழக்கமுடியாது அவரே விரும்பினாலும் கூட. இத்தாலியும் அது போன்ற நாடா? அந்த வகையில் சோனியா இரட்டைக் குடியுரிமைக்காரர் எனக் கருதப்படுகின்றாரா?

அனாதை
செல்வராஜ்
May 23, 2004   10:15 AM PDT
 
நீங்கள் சொல்வதில் பலவற்றோடு உடன்படுகிறேன். அனுபவம் இல்லை என்றால் அடுத்த தேர்தலில் இறக்கிவிட்டு விடுவார்கள் மக்கள். சட்டப்படி அவருக்குக் குடியுரிமை இருக்கிறதே? இங்கு பிறக்கவில்லை என்பது தானே பலர் ஆட்சேபம்? சட்டப்படி அதுவும் தடையில்லை.
Sundaravadivel
May 23, 2004   07:34 AM PDT
 
நெஞ்சத்தழகிய சிங்கர் வேலையை சுறுசுறுப்பா ஆரம்பிச்சுட்டார். நீங்க என்னடான்னா ஒரு வாரம் பின்னாடி ஓடுறீங்க! பாஜக போட்ட கூப்பாடு அசிங்கமென்றாலும் எனக்கு என்ன சந்தோஷம்னா சுஷ்மா ஆண்ட்டி மொட்டை அடிச்சிக்க வேண்டி இருக்கலை. ஆனதாகட்டுமண்ணாச்சி, இந்தியா நிஜமாகவே ஒளிரப் போகுதுன்னு நினைப்போம் :)
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry