<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, May 31, 2004
சு.கி. சிவத்தின் சுக்காரொட்டிப் பேச்சு..

   இன்று காலையில் நண்பனின் வீட்டில் சன் தொலைக்காட்சியில் சு.கி. சிவம் அவர்களின்
ஒரு உரையைக் கேட்க நேரிட்டது.
  
    சுகி சிவத்தின் நண்பர் ஒருவர் தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைத்து அழைக்க 6 மணிநேரம் பயணம் செய்து இவர் வீட்டிற்கு
வந்து "நேரில் அழைத்தாராம்".  சுகி சிவமோ, ஏண் நேரில் வந்து அழைத்தால் தான் திருமணத்துக்கு வருவேனா? தபாலில் அழைத்தால்
வர மாட்டேனா? என்று கேட்டாராம். அதைக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னாராம் அழைத்த நண்பரிடம்.

  அந்த க்ஷணத்தில் சுகி சிவத்தின் ஒளிவட்டத்தில் பிறந்த கருத்துதான், இனியாரும் நேரில் சென்று அழைப்பது நேரவிரயம் என்பது.
நேரம் பொன்போன்றது என்ற பழைய குருடி கருத்தை பிரதிபலிக்க, தனது ஒளிவட்டத்தில் பிறந்த ,"நேரில் அழைப்பது பாவம், மேலும் நேரவிரயம்" என்ற கருத்தை சன் தொலைக்காட்ட்சியில்  காலையில் வேலைமெனக்கெட்டு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்து
நேயர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

  இந்த மாதிரி அரைவேக்காடுகளை அறிஞராய் காட்டும் சன் தொலைக்காட்சியை என்ன செய்வது?
பேரறிஞர் சுகி சிவத்துக்கு சில கேள்விகள்!  அவரது நண்பர் 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார் என்றால் என்ன பொருள்? நேரவிரயம் செய்கிறார் என்றா?  அவர் சுகி சிவத்தின் வீட்டில் தங்கியிருக்க வில்லை என்று பொருள். அல்லது சுகிசிவத்தை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்காதவர் என்று பொருள்.  எனவே தனது வாழ்வின் மிக முக்கியமான திருமணத்தைச் சாக்காக கொண்டு தந்து அன்புக்கு
பாத்திரமானவரை சந்திக்க வருகிறார் என்று பொருள். எல்லாவற்றுக்கும் மேலாக , தமிழ் நாட்டில் "நேரில் அழைத்தல்தான் கெளரவம்" என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு, சுகி சிவம் தனது திருமணத்துக்கு வந்துவிடுவார் என்று நிச்சயித்துக் கொள்கிறார் என்று பொருள்.
  சுகி சிவம் தனது வீட்டுத் திருமணங்களுக்கு யாரையுமே நேரில் சென்று அழைக்காதவரா? குறைந்த பட்சம் இனிமேலாவது அப்படி செய்ய தயாராய் இருக்கிறாரா?

  நேரில் வந்து அழைக்கவில்லை , அதனால் போகவில்லை வேறு எத்தனையோ  திருமணங்களைப் பற்றி சுகிசிவம் கேள்விப்பட்டிருப்பாரே, அந் நிலை தமிழ்நாட்டில் இருக்க இவரது நண்பரா காரணம்? தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோ நடைமுறைகளில் இதுவும் ஒன்று.அதற்கு சுகி சிவத்தின் நண்பர் என்ன செய்வார்? அவர் வெறுமனே அதை பின்பற்றுகிறார் அவ்வளவுதான். அதைவிட
சுகி சிவத்தை தனது திருமணத்தில் நிச்சயமாய் பார்த்துவிடவேண்டும் என்று உறுதி படுத்தி கொள்கிறார்.
 
  சந்தோஷத்தை தொலைத்த மனித வாழ்வில், இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனிதன் தனது இனபத்தை சக மனிதனிடம் பகிர்ந்துகொள்கிறான். அதை பெரிது படுத்த மிகவும் விழைகிறான். உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள் , அவர் தனது 6 மணிநேரப் பயணம்
தொல்லையானது என்றோ , அலுப்பூட்டியது என்றோ யாரிடமும் சொல்லமாட்டார். மாறாக உங்களை சந்தித்த சந்தோஷத்தை
எண்ணிக்கொண்டு தனது அலுப்பை மறந்திருப்பார். அது ஒருவகையில் அவரே அவருக்கு தெரியாமல் உங்களுக்கு செய்யும் தியாகம்.
அவருக்கு நேரவிரய உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்கள் நண்பருடன் உங்களுடைய நட்பு அப்படியில்லை எனினும் எனக்கு இருக்கிறது அது போன்ற ஏகப்பட்ட நட்பு.


   இந்த அரைவேக்காட்டின் நண்பர் ஒருவர் சொன்னது. அவரது நண்பர் தனக்கு ஏன் அழைப்பிதழ் வைக்கவில்லை என்று கேட்டாரம்,
அதுக்கு அந்த அரைவேக்காடு, "தீபாவளி , பொங்கல் எல்லாம் சொல்லிவிட்டா கொண்டாடுகிறோம்? " என்று பதில் சொன்னதாம்.
அதை இந்த அரைவேக்காடு சுகி சிவம், "எத்தனை உயர்ந்த சிந்தனை என்று பாரட்டியது"?
நீங்களே  உங்கள் வசதிப் போல திட்டிக்கொள்ளுங்கள்.அந்த நண்பர் நடத்திய திருமணத்துக்கு வேறு யாருமே வரவில்லையா? அய்யர் கூடவா? சுகிசிவம் போனாரா இல்லையா? :-)
  


  இனிமேல் யாரும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்காமல் , நேரத்தை விரயம் செய்யாமல் உழைத்தால் இருந்தால், இந்தியா 2020-ல் வல்லரசாகிவிடும் என்று ஒரு முடிவான அறிவுரை வேறு.   யோவ் வருதுய்யா வாயில அசிங்கமாய்!
நீ இனிமேல் சன் நேயர்களின் நேரத்தை விரயம் செய்யாமல் இருந்தால் கூட இந்தியா 2020 -ல் வல்லரசாய் ஆகிவிடும்தான், வேலையை விட்டு போய்விடுகிறாயா?


---------
  இந்த அரைவேக்காடு, இன்னொரு அரைவேக்காட்டை வேறு புகழ்கிறது. எதோ திருக்குறள் முனுசாமியாம் அதன் பெயர்.
எங்கோ இரண்டும் ஒரு இடத்தில் பேச்சாற்ற போயிருந்ததாம். ஞாயிற்றுக் கிழமையாம், நள்ளிரவு 12 மணிக்கு கூட்டம் அதிகமிருந்ததாம்.
இந்த அரைவேக்காடு அந்த அரைவேக்காட்டைப் பார்த்து "ஏன் கூட்டம்?" என்று கேட்க, அந்த அரைவேக்காடு "எல்லாம் அன்எம்ப்ளாயிடு"அல்லது "வேலை வெட்டியத்தவனுங்க நாளை மறுநாள் வேலை போகவேண்டும் என்ற எண்ணமோ அவசியமோ இல்லாதவர்கள்" என்று பதில் சொல்லியதாம்.

  எத்தனை கொழுப்பு பாருங்கள்? இவர்களை மதித்து இலக்கிய கூட்டம் கேட்க வருபவர்களை இதுகள் மதிக்கும் லட்சணம்.
ஒருவேளை இதுகள் பேச்சைக் கேட்பது எத்தனை முட்டாள்தனம் என்று இதுகளே சொல்லுதுகள் போல. :-)

   தனது பேச்சைக் கேட்க வந்திருப்பவர்களின் உணர்வைக் கூட புரிந்து கொள்ளமுடியாத ஜென்மங்கள் , திருக்குறளுக்கு விளக்கம் வேறு செய்கிறதுகள்.  திருக்குறள் முனுசாமி தனது பெயரை திருக்குறள் முட்டாள்சாமி என்று வைத்துக் கொண்டால் மிகப் பொருத்தமாய் இருக்கும்.அதை கேட்க தமிழகத்தில் ஆட்களும் உள்ளது. இந்த மாதிரி அரைவேக்காடுகள் பேசுவதை சன் தொலைக்காட்சி தவிர்த்தால் மக்கள் அதிக பயன் பெறுவர்.

--
யாராவது சுகி சிவத்தின் அஞ்சல் முகவரி தந்தால் இப்பதிவை அவருக்கு சமர்ப்பணமாய் அனுப்பி வைப்பேன்.


Posted at 10:00 am by karthikramas

Name
September 16, 2008   01:45 AM PDT
 
very bad criticism.............
Eelanathan
June 7, 2004   08:08 AM PDT
 
அண்ணாச்சி இடையிடையே மற்றவர்களது பின்னூட்டத்தை விட்டு உங்கள் பதிவுகளையும் கொஞ்சம் பாருங்களேன்.நிறைய நல்ல விடயங்களை உங்களிடம் இருந்து கேட்காமல் போய்விடுகிறது
karthikramas
June 6, 2004   10:00 PM PDT
 
அனைவருக்கும் நன்றி. வந்தியதேவன் நீங்கள் சொன்ன பதிவுக்கு மறுமொழி எழுதியுள்ளேன்.
Santhosh
June 5, 2004   03:29 AM PDT
 
நீங்கள் கொஞ்சம் கடுமையாக சொல்லியிருந்தாலு ம், சொன்னது மிகவும் சரி. இவரைப்போல பலர் ஆன்மீகம் என்ற பேரில் Pop-spiritualism cultureஐ வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அது சரி, இவர்கள் இல்லாவிடில் சக்தி விகடன், குமுதம் பக்தி போன்ற பத்திரிக்கையில் யார் எழுதுவார்கள்.
Vanthiyathevan
June 5, 2004   12:55 AM PDT
 
ரசிக்கும்படியான பதிவு. சுள்ளென்றும் இருந்தது. நேரம் கிடைத்தால் வீதிவரை உறவு என்ற எனது பதிவைப் படியுங்களேன்.
Thangamani
June 4, 2004   10:04 AM PDT
 
நமது அறிஞர்களின் இலட்சணம் இது!
Balaji-paari
June 4, 2004   07:03 AM PDT
 
atappaavi,
neengalaumaa? ;)
Karthikramas
June 2, 2004   09:18 PM PDT
 
பெயரிலி ,
உண்மைதான். ஆனால் நான் என்ன சும்மாவா பின்னுட்டம் எழுதுகிறேன்? என் அலுவலகத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டுதானே :P. என்னை மாதிரி யாராவது உண்டா :)

முத்து நன்றி.
Muthu
June 2, 2004   06:29 PM PDT
 
கார்த்திக் ..
ராஜா சொன்னதை வழி மொழிகிறேன் .. :)
-/பெயரிலி.
June 2, 2004   10:03 AM PDT
 
வலைப்பதிவிலே நாங்கள் பின்னூட்டம் பதிகிற நேரத்தினைவிட்டால், நேரவிரயம் அநியாயயமானதே :-)
Karthikramas
June 2, 2004   12:10 AM PDT
 
Correction:
//ிற்றிதழ்களின் பக்கம் பார்த்தால் அத்தனை தரமான் படைப்புகளும், சிந்தனையாளகளும் உள்ளனர். // அவர்களே சுகி சிவத்தை விட நூறு மடங்கு நன்றாய் பேசுவார்கள் , அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஏன் குறிப்பிட்ட சிலரை கட்டி அழவேண்டும். எல்லாம் வெற்று புகழ்தான். இது போன்றவர்களின் புகழ்..... ் நிச்சயம் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் எதிர்காலத்தில். அதுவும.

Karthikramas
June 2, 2004   12:06 AM PDT
 
ராஜா, படித்தேன் உங்கள் பதிலை. நன்றி. கிட்டத்தட்ட நான் கூட அந்த முடிவுக்கு வந்துதான் உள்ளேன். நடப்பது நிழல் பிரதமரின் ஆட்சி.

சுகியாரை குறித்து: அதற்காக அவருடைய மொத்தப் பேச்சையும் நாம் புறந்தள்ள வேண்டியதில்லை.
என் கெட்ட நேரம், அவரின் இந்தப் பேச்சைன் முகத்தில் விழித்தேன் அன்று; அவ்வளவுதான்.
சொந்தக் கருத்தை கலக்கிறேன் பேர்விழி என்று சொத்தைக் கருத்தை, மக்கள் அனைவருக்கும் சொல்லிவிடுகிண்றனர் சில சமயங்களில். உங்களுக்கு தெரியாததல்ல, சிற்றிதழ்களின் பக்கம் பார்த்தால் அத்தனை தரமான் படைப்புகளும், சிந்தனையாளகளும் உள்ளனர். இது போன்றவர்களின் புகழ் நிச்சயம் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் எதிர்காலத்தில். அதுவும் சன் டிவியில் பேசினால் என்ன ஆகும். காசேதான் கடவுளடா!

சுந்தர வடிவேலு, சுராங்கணிக்கா மாலு! கரெக்டா சொன்னீங்க. சன் என் டி .காம் -ல்
அவருக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியுமா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அவசியம் சென்னை போகும் போது *நேரில் சந்தித்து* இதை அவரிடம் கொடுத்து விடுகிறேன். எல்லோருடைய நேரத்தையும் காக்கும் பொறுப்பு எனக்கில்லையா என்ன? :-)

ஈழநாத*ன்*,
அடிதடின்னு வந்தா எனக்கு சப்போர்ட்டு பண்ணுவீங்க இல்ல :-) இல்ல நீங்களும் தர்ம அடி போடுவீங்களோ :-)
ராஜா
June 1, 2004   05:00 PM PDT
 
கார்த்திக், சோனியா மேட்டர் சம்மந்தமா நானும் சில கருத்துக்கள் எழுதியிருக்கேன். வலைப்பூவுல பாருங்க.
ராஜா
June 1, 2004   01:49 PM PDT
 
சுகி சிவம் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்லியிருப்பது ஆச்சரியமா இருக்கு. நான் அவரின் சில மேடை பேச்சிக்களை கேட்டிருக்கிறேன். நல்ல சிந்திக்க தக்க கருத்துக்களை நல்ல உவமானங்களோடு விளக்குவார். இப்போ என்ன ஆச்சு?!.

இதைப் படித்த பிறகு எனக்கு அவர் மேலிருந்த மதிப்பு குறைந்து விட்டது. பாவம் அவரும் என்ன தான் செய்வார்?. ஏதோ ஒரு நாள் மேடையேறி பேசினால் ஏதாவது சிந்தித்து உருப்படியா கருத்து சொல்லலாம். இப்போ தினமும் அரை மணி நேரத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகணும், எதைப் பற்றியாவது பேசணும்னா.. எதப்பத்தி தான் பேசறது?. இதே கதி தான் இவருக்கு முன்னால இந்த வேலைய பாத்த வலம்புரிஜானுக்கும் ஆச்சு. சன் டி.வி.ல பேச வந்த புதுசுல நிறைய புத்தகங்கள் பத்தியும், அறிஞர்கள் பத்தியும் அருமையா பேசி கொண்டிருந்தவர்.. நாளாக நாளாக.. சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், இடுப்பு சுழுக்குக்கு சூரணம் எப்ப்டி செய்யறது, பேதி ஆச்சுனா என்னா கஷாயம் குடிக்கணும்னு பெனாத்த ஆரம்பிச்சு காலைல 8.30 மணினா சன் டி.வி.ய விட்டு எல்லோரும் பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடப் பண்ணார். இப்போ அதே கதி சுகியாருக்குமா.. ஹூம்.. எல்லாம் "டப்பு" பண்ற வேலை.
Eelanathan
May 31, 2004   11:46 PM PDT
 
நேரில் போனால் நானும் வருகிறேன் ரொம்ப நாளாகிவிட்டது அடிதடி வேடிக்கை பார்த்து
sundaravadivel
May 31, 2004   01:50 PM PDT
 
எனக்கு அவரைப் பற்றியோ, நீங்க சொன்னதைப் பற்றியோ எதுவும் தெரியாது, ஆனா ஒன்னே ஒன்னு, இந்தப் பதிவை
எதுக்கு அவரோட முகவரிக்கு அனுப்பனும்? நீங்களே நேராப் போயிக் குடுத்தா அவரு சந்தோசப் படுவார், இல்லையா? :)
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry