|
|
 |
Tuesday, April 06, 2004
Article on Casteism otherwise called as plague
http://www.pucl.org is a great set up. I wonder such a thing exists in chennai and other cities.
(Badri would be interested)
The acute and complex 21st century problem that would continue to plague Indian democracy is Casteism. The clash of war between constitutionalism, i.e., equality, fraternity and unity among the people of India, the grand vision of the basic structure built in the Preamble and the caste-based discrimination, instead of resolution, even after 54 years of Independence and 52 years of the working of the Constitution, has been continually raging. Casteism and the wicked assertion of caste hierarchy have been much more menacingly raising ugly head. For failure to tackle this menace, the civil society, instead of integration, is getting further fragmented and disintegrated. The centrality of the issue, therefore, is to tackle Casteism.
Read More :http://www.pucl.org/reports/TamilNadu/2001/Casteism.htmBy -- ByJustice Dr. K. Ramaswamy, Member, N.H.R.C.
(Prabhu may read this article as it talks about so many Laws ...)
Posted at 04:44 pm by karthikramas
Permalink
Posted at 04:02 pm by karthikramas
Permalink
Guide on Intellectual Property rights
Posted at 03:52 pm by karthikramas
Permalink
Women's movement priorities
Posted at 03:46 pm by karthikramas
Permalink
Open source C++ development
An open source C++ development platform.
If any one is in interested opensource C++ or willing to help Please visit.
http://www.ntllib.org/upp/index.html
I wish we could have a completely Tamil programming laguage. I have no Idea How far we are to there.
Posted at 03:15 pm by karthikramas
Permalink
Sunday, April 04, 2004
பையனுக்கு மாப்பிள்ளையும், பெண்ணுக்கு மணப
சமீபத்தில் ராயர் காப்பி கிளப்பில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து
வேறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. அதெல்லாம் இருக்கட்டும் தி எல் வோர்ட் (The L word) என்றொரு தொலைக்காட்சித் தொடர் வருகிறதே பார்த்தீர்களா?
என்னங்க அதப் பாக்கலன்னா எப்பிடி? நிறைய பேர் அதை பார்த்தால் தன் கருத்தை
மாற்றிக்கொள்வார்கள். மாற்றி கொள்வார்களோ இல்லையோ தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சும்மா சொல்லக் கூடாது சார் அட அடா!! என்னமா இயக்கி இருக்கிறார்கள் தொடரை. தொடர் முழுக்க சூடு தாங்கல. ஒவ்வொரு பாத்திரமும் கவர்ச்சியா நடிக்க வைத்து நம்மை யெல்லாம் சொக்க வைக்கிறாங்க.
இதெல்லாம் நான் சொல்லவில்லை ;-), ஒரு ரிவியூவில் படித்தேன். ஒரிரண்டு நாட்கள் பார்க்கவும் செய்தேன். பிடித்திருந்தது நடித்த பெண்களை.
சரி விஷயத்துக்கு வருவோம். ராயர்களில் சிலர் ஒரின சேர்க்கை திருமனத்தை ஆதரித்தனர். இவர்களில் பத்ரி,டைனோ போன்றவர்கள் மனிதாபிமானத்தைக் மேற்கோளிட்டு மடல்களை எழுதியிருந்தனர். ரூமியோ "பெண் முலையை இன்னொரு பெண் வருடுவதில் என்னய்யா சுகம் விளையப்போகுதுன்னு" சொல்வது
மாதிரி எழுதியிருந்தார். இவரது கேள்வி உண்மையில் இது முறையானதா? உபயோகமுள்ளதா? என்பதுதான். நான் சில மடல்களை மட்டுமே படித்தேன். மற்றவைகளை படிப்பேன்.
கேள்விகளும் சிந்தனைகளும் பின்வருமாறு :
-----------------------------------
1. ஓரினச் சேர்க்கை முறை? சரியா? ஒத்துக் கொள்ளப்படவேண்டியதா? முட்டாள்த்தனமா?
2. ஓரினச் சேர்க்கையில் இன்பம் விளைவது உண்மையா?
3. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டியது சரியாகுமா? சமூக அங்கீகாரம் தரத் தகுதியானதா?
4. ஓரினச் சேர்க்கையின் மீது நாம் கொள்ள வேண்டிய சரியான பார்வையெது?
1. நமது பழக்கங்கள் அனைத்தும் நாம் இந்த சமூகத்தில் இருந்து பெற்றுக் கொண்டவை. அதாவது
இந்த சமூகத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு நாம் ஒத்துக் கொண்டு கற்றுக் கொண்டவை. எப்படி திருடுதல் கூடாது, கொலை கூடாது என்று கற்றுக் கொண்டோமோ அப்படியேதான் ஓரினச் சேர்க்கை வித்தியாசமானது என்றும் கற்றுக் கொண்டோம். இவைகளை கற்றுகொண்டதானால் நாம் சட்டப்படி ஒரு சிறந்த குடிமகனாய் இருக்கிறோம். வெற்றிகரமான வாழ்க்கையை பெறுகிறோம். எனவே இவற்றை நாம் தலையாய விஷ்யங்களாக போற்றுகிறோம். ஓரினச் சேர்க்கை கூடாது என்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கு ஒரு சரியான காரணத்தை முன் வைக்க வேண்டும். இதன் பதில் கடைசியில் வருகிறது ;-)
2. அனுபவம் இருந்தால்தான் சொல்ல முடியும் என்று யாராவது சொன்னால் இதற்கு யாரும் பதில் சொல்லமுடியாது. நடப்பவைகளை கண்களை திறந்து பார்த்தால், இன்பம் விளைவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையெனில் வேலை மெனக்கெட்டு ஒருவனோ இல்லை ஒருத்தியோ கஷ்டப்பட்டு (??) இதில் ஏன் ஈடுபடவேண்டும்.
3. எந்த புது விஷயமும் அல்லது வித்தியாசமான விஷயமும் முதலில் அங்கீகரத்தை பெறுவது என்பது இயல்பாய் நடப்பது இல்லை. கலிலியோ முதல் நம் சுதந்திரம் வரை அங்கீகாரம் என்பது எடுத்தவுடன் பெறப்பட்டதாய் நமக்கு காட்டவில்லை. சமுதாய அங்கீகாரம் வேண்டும் என்பது எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியம் சமூக மனிதாபிமானம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வேண்டும்.
4. நமது சட்டங்கள் யாவும் மத, மற்றும் இறை நம்பிக்கைகளின் ஊற்றுக் கால்களிலிருந்து வெளிவந்தவையே. எனவேதான் சட்டம் கீதையையும்.பைபிளையும் தினமும் உண்மையின் சாட்சியாக அழைத்துக்கொள்கிறது.ஒரு மதத்தில் பல திருமணம் முறையானதாகவும் இன்னொரு மதத்தில் அது சட்டத்துக்கு புறம்பானதாகவும் இருப்பதை சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது சட்டத்துக்கு இறைனம்பிக்கையை தாண்டிய அறிவு இல்லை.அல்லது சட்டம் இறையை தாண்டிப் பாயாது என்றும் சொல்லலாம்.இந்து மதத்தில் மனிவியிடம் பிள்ளைப் பேற்றுக்காக தவிர வேறு மற்ற எந்த காரணத்த்க்காகவும் உடலுறுவு வைத்து கொள்வது சட்டப்படி தவறு என்பதை சமிபத்தில் நண்பனிட்மிருந்து அறிந்து கொண்டேன். இந்த சட்டம் எங்கே? நமது நடைமுறை எங்கே?? நாம் சட்டப்படி ஏற்கனவே குற்றவாளிகள்தாம் என்பது நமக்கே தெரியும்.. யாரையும் கேட்கவேண்டியதில்லை. எனினும் நாம் எப்படி சரியானவர்கள் ஆகிறோம்? ஒரு திருமணத்திற்கு மேல் கூடாது என்கிற சட்ட எல்லையைத் தாண்டும் போது ஒரு இந்து சட்டப்படி குற்றவாளி ஆகிறான். ஆனால் ஒரு இசுலாமியருக்கு இச்சட்டம் பொருந்தாது.
எனவே ஓரினச்சேர்க்கையாளர்கள், இறைனம்பிக்கையின் அடிப்படையில் விளைந்த சட்டத்திடம் அங்க்கீகாரம் கேட்பது, மிகவும் தவறான இடத்தில் சென்று முறையிடுகிறார்கள் எனபதாகும். இறைவாதத்தில் எங்கிமே ஓரினச் சேர்க்கையானது ஊக்குவிக்கப்படவில்லை. இந்த காரணத்தைக் கொண்டுதான் ரூமி போன்றவர்கள் இது "இயற்கைக்கு மாறானது" என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் நடைமுறை பிரச்சினை இறைவாதத்தை பொருட்படுத்தவில்லை என்பதுதான் கண்கூடு.இறைவாதத்தை பொருட்படுத்தாதவர்களிடம் இறைவாத சட்டத்தை ஏற்கசொல்வது சரியானதல்ல. மாறாக அது இறைக்கு விளைக்கும் அவமானமே என்றாகிறது, எனது பார்வையில்.
னமது நோக்கில், இவர்கள் தவறு செய்வது போல் இருந்தாலும் அது தவறு அல்ல என்று பார்ப்பதே சரியானதாக இருக்க முடியும். அதாவது பைத்தியங்களின் பார்வையில் நாம் பைத்தியம் என்பது போல்(அப்பாடா இந்த உதாரணத்தை உபயோகப்படுத்த ஒரு இடம் கிடைத்தது). நாம் பைத்தியமாக ஆகாதவரையில் ஒரு சாதாரண மன நிலையிலிருப்பவரை "பைத்தியம்" என்று சொல்ல நமக்கு மனம் வராது.
நமது பார்வையில் இவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள். அவர்கள் பார்வையில் நாமும் அப்படியே என்பதை சிந்திக்க மறக்ககூடாது. இவர்களை அங்கீகரிக்காமல் இருப்பது ஒருவித ஆதிக்க மனப்பான்மையேதான்.
ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.
அங்கீகாரம் கொடுத்தவுடன், ஓரினச் சேர்க்கையாளர்களும் போகிற வருகிறவர்களை வம்புக்கிழுக்காமல் இருக்குமாறும் சட்டம் இயற்றப்படவேண்டும். சரி சட்டப்படி அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலைமையை ஊதிப் பெருசாக்கி யோசிப்போம்.
பூங்காக்களிளும், வீதிகளிலும் ஓரினர்களின் சேஷ்டைகளை (??) பொறுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகும்.
குடும்பங்களில் இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
திருமணங்களின் மதிப்பு என்னவாகும்?
நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்?
அமெரிக்காவில் குடியுரிமைச் சட்டமும் கேள்விக்குள்ளாக்கபடும். அதாவது ஏமாற்றுதல்களுக்கு எளிதில் இது வழிகோலும். உதாரணமாய், நான்(?? ஹ’ஹ’) மாசாசுசெட்ஸ் சென்று ஒருவருடன் தங்கி அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் , சட்டப்படி(by certificate of marriage) குடுயுரிமையை விண்ணப்பிக்கலாம். சட்டத்தை எதிர்த்து போராட்டம் கூட நடத்தலாம்.
மொத்தத்தில் ஒரு புதிய சமூகமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். அதனால் ஏற்படும் அழிவுகளுக்கும் நாம் தயாராக வேண்டும். ஆனால் மனிதாபிமானப் பார்வை வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் தயக்கம் இல்லை.
Posted at 10:33 pm by karthikramas
Permalink
Tuesday, March 30, 2004
இணையத்தில் பள்ளி சாத்தியமா?
இன்று மழை என்ற வலைப்பதிவில் நண்பரொருவர்(யார் அவர்??) தான் வாரமுடிவுகளில் சிறு பிள்ளைகளின் பள்ளிக்கு செல்வதும் அவர்களது பாடமுறை மற்றும் பயிற்று முறை குறித்து சிந்தனைகளை மேற்கொள்வதாகவும் சொல்லியிருந்தார். அவர் வலைப்பதிவின் சுட்டியை தொலைத்து விட்டேன் , மன்னிக்கவும்.
என்னடா இந்த மனுஷர் நல்ல விதமா யோசிக்கிறாரே, எதோ நம்மால் முடிந்த தகவலை தேடித்தரலாம்னு கூகிள் பகவானை வேண்டியபோது ப்ரயத்னா என்றொரு வலைப்பதிவு கண்ணில் பட்டது. அட! இந்த மனிதருக்கு நம்து வலைப்பதிவுகளைப் பற்றி
அறிமுகம் செய்யலாமா? என்று யோசிக்கும் போதே பார்ட்டி நம்ம பத்ரி சாரின் நண்பர் என்று எழுதியிருந்தார்.... திருப்பதிக்கே லட்டு வியாபாரம் எதுக்கு பண்ணணும்னு பேசாம, கப்சிப்னு நடையை கட்டிபுட்டேன். ப்ரயத்னாவும் இந்திய கல்வி முறை மேம்பாடிகளை குறித்து நமது பத்ரி எழுதியவகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
பத்ரி அப்படி என்ன எழுதியுள்ளார் என்று படித்தேன். பத்ரி கல்விமுறையின் குறைபாடுகளை சுட்டியுள்ளார். ஏற்கனவே மண்டையில் முட்டிக் கொண்டிருந்தவைகளில் பலவற்றை பத்ரி நம்க்கு முன்னாடி எழுதிபுட்டாரேன்னு நினைச்சிக்கிடேன்.
அலாவுதீன் ஜீனி மாதிரி ஒரு யோசனை வந்தது, உடனே மடமடவென மசாலாவில உறைச்சதெல்லாம் குறித்து கொண்டேன். (இதெல்லாம் ஏற்கனெவே இருந்தால் போடா லூசுன்னு திட்டாதீங்க)
1. இணையப் பள்ளி இன்றைய தமிழ் இணைய மற்றும் ஆஙில இணைய உலகில் சாத்தியமா என்று தோன்றியதே இந்த யோசனையின் சாராம்சம்.
2. பள்ளி பாடப்புத்தகங்களை வலைப்பக்கங்களில் தேடல் வசதியுடன் ஏற்படுத்தித் தர ஆகும் முயற்சி மிகவும் எளிதில் சாத்தியமான ஒன்றாக தோன்றுகிறது. கல்வித்துறையுடன் கைகோர்த்தால் இதை எளிதி செய்து விடலாம்.
3. ஒன்று முதல் பனிரெண்டு வரையிலான பாடபுத்தகங்களை வலையேற்றம் செய்ய வேண்டும்.
4. தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் துணையுடன் அரசு இவ்வ்லைப்பக்கங்களுக்கு வந்து பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படலாம்.
4.1 இம்முறையினால் பாடபுத்தகங்களை அச்சடித்து வெளியிட ஆகும் செலவு இல்லாமலாகுவதும் ,
குழந்தைகள் பாடபுத்த்கங்கள் இல்லாமலே கல்வி கற்கும் முறையையும் செயல்படுத்த முடியும்
4.2 மாணவர்களுக்கு வலைப்பக்கங்களிலேயே நோட்டுபுத்தகமும் அமைத்து கொடுத்துவிடலாம்.
4.3 தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்ய கற்றுத்தருவது பாடமாக கொள்ளலாம்.
4.4 உடனடி இணைய பேசு முறை எனப்படும் சாட் முறையை கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மிகவும் உயர்ந்த மற்றும், அதிக வருமானம் உடைய கல்வியாளர் ஒருவரை க்கொண்டு பாடம் நடத்தாலாம். இது 1 கல்வியாளருக்கு க்கு 1000 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயன் தரமுடியும்.
4.5 ஓய்வு பெற்ற சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வியாளர் தன் வீட்டிலிருந்த படியே தமிழகமெங்கும் உள்ள இணைய பள்ளிக்கு பாடம் நடத்த முடியும்.
4.6 இணையத்தில் உள்ள இலவச சேவைகளான யாகூ,காட்மெயில் போன்றவற்றை மாணவர்களின் பள்ளித் தொடர்பு சாதனமாக பயன்படுத்தாலம்.
4.7 இம்முறையில் இணையக் குழுமங்களும் பெரும் உதவியாய் அமையும்.
4.8 இணைய பக்கங்களில் தேர்வு நடத்த பெறுவதால் , தேர்வித்தாளை த்ரித்துதளை
அங்கீகாரம் பெற்ர ஒரு இணைய கல்வியாளறோ அல்லது பல இடங்களில் உள்ள பல்வேறு கல்வியாளர்களோ செய்யமுடியும்.
4.9 அங்கீகாரம் என்பது ஒரு கடவுச்சொல் தெரிந்தால் போதும் என்ற அளவிற்கு எளிமையாக்கப்படலாம்.
5. இணையத்தில் உள்ள பல்வேறு பக்கங்களை, பல்வேறு பல்கலைகளின் இணைய புத்தகங்களையும்
எளிதில் சுட்டிகள் தந்து இணைத்து ஒரு நூலகம் உருவாக்கலாம்.
6. இனையத்தை உப்யோகிக்க கற்று கொடுக்க தேவைப்படும் முயற்சி மிகவும் எளிமையானது. மாணவர்களுக்கு இணையத்தை உபயோகிக்க கற்று கொடுத்து விட்டால் போதும். மற்றவைகளை அவர்களே கற்று கொள்வார்கள்.இணையத்தில் தேடுவது எப்படி என்று மாணவர்களுக்கு சொல்லித்தரலாம்.
இணையத்தை 3ம் வகுப்பு குழந்தைகள் கூட கற்று கொள்ள முடியும் என்று எனக்குப் படுகிறது.
7. கிராமங்களில் ஊருக்கொரு இணையம் பார்க்க உதவும் ப்ரொவுசிங் ஏற்பாடுகளை செய்து தரலாம்.
இவை ஒரு குடும்ப செலவு என்ற கணக்கில் அரசிடமிருந்து மாத உதவித்தொகை என்ற வசதியில் செயல் படலாம். ஆனால் இந்த பிரவுசிங் அல்லது இணைய வசதி செய்து தரும் நிறுவனத்தினால் நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் பெறும் வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாஅன்வை.
8 அரசு தொடக்க காலத்தில் கிராமத்தில் இணைய பார்க்கும் வசதியை செய்து தரும் தொழிலில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இன்கு இன்னொரு பிரச்சினையும் ஞாபக வருகிறது. நமது மத்திய மற்று மானில அரசுகளின் துறைகளில் உள்ள பிரிவுகள் இது போன்ற எந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருஇகிறது.
உதாரணமாய், கிராமத்திற்கு ஒரு தொலைபேசி இணைப்பு என்ற வசதியை தொலை தொடர்பு நிறுவனத்திடமிருந்து வாங்குவது இன்னொரு மிகப் பெரும் உபரி பிரச்சினையாகிவ்டும்.
Posted at 02:50 pm by karthikramas
Permalink
இளமையில் கலவியும் உண்மை நிலவரமும்.
இந்தியா ஒளிர்கிறது என்று சிலரும் இந்தியா உளறுகிறது என்று சிலரும் சொல்ல கேட்கிறோம்.
உண்மையில் இரண்டுமே உண்மைதான் என்னை பொறுத்தவரை.
ஒளிரும் இடங்களையும் , அந்த ஒளி சிறிதும் புக முடியாத இருளான இடங்களை இந்தியாவில்
ஒரு சேர வெகு அருகாமையில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள் இந்தியர்களே.
இளமையில் பாலியியல் குறித்த மாதிரி ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்ட
கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. எத்தனையோ வலங்களில் இது ஒன்று என்று எண்ணிக்கொண்டாலும் இளையவர்கள் சம்பந்தமானது என்பதால் என் கவனம் குவிந்தது.
சில அதிர்ச்சிக்குரிய செய்திகளை இக்கட்டுரையில் பார்க்க முடிந்தது என்னால்.ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 121 இளைஞர்களில் அனைவரும் வீதிவாழ் இளைஞர்கள். 14 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடன் உடலுறவு தொடர்பு வைத்துக் கொள்ளும் பெண்கள் 8 முதல் 12 வயதுக்குட்ப்பட்டவர்களும் உள்ளனர்.
Experiences of sexual coercion among street
boys in Bangalore, India
BY
Jayashree Ramakrishna, Mani Karott and
Radha Srinivasa Murthy
என்கிற கட்டுரை படித்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அரசியலுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும்
உள்ள இடைவெளி இதைவிட கொடூரமானதாக தெரிந்து கொள்ள முடியாது. சென்னை என்ன லட்சனமோ??
மூலக்கட்டுரைக்கான சுட்டி:
http://www.who.int/reproductive-health/publications/towards_adulthood/14.pdf
இந்திய வீதி இப்படிதான் உள்ளது. இந்தியா ஒளிர்கிறதா? அல்லது உளறுகிறதா? என்று முடிவு உன்களுக்கே தெரியும்.கவலைப்படவேண்டிய இன்னொன்று, வீதிகளில் நடப்பவை வீட்டுச் சுவர்களை தாண்டி உள்ளே வர எத்தனை காலம் ஆகிவிடப்போகிறது?? இந்தியா ஒளிரும் தீபாவளி நாளும்,கிரிக்கட் பட்டாசுகளும் என்னைத் தொடுவதில்லை.
Posted at 12:21 am by karthikramas
Permalink
Sunday, March 28, 2004
இளமையில் கலவி??
இளமையில் கல்வி என்று சமூகத்தின் பெரியவர்கள் எல்லோருடைய வாயாலும் சொல்ல கேட்டிருப்போம். இளமையில் கல்வி முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றுதான். மறுக்கவும் முடியாத ஒன்றுதான். இளமைக் கால கல்வியின் அடிப்படையிலேயே ஒருவனின் / ஒருவளின் பிற்கால வாழ்வு வசதிகளின் அடிப்படையில் வெற்றிகரமாய் அமைகிறது. எனவேதான் கல்வி இளமையில் அவசியம் என்பது மறுக்க முடியாததாகிறது.
இப்பொழுது நான் எழுத வந்த பிரச்சினை அதை பற்றியதல்ல. இளமையில் கலவிக்கு அதாவது இளமையில் ஏற்படும் பாலியல் உணர்வுக்கு வடிகாலாய் என்ன உள்ளது? என்பதுதான். இளைஞர்கள் என்ன செய்வது என்று பெரியவர்களைப் பார்த்து கேட்டால் என்ன சொல்லுவார்கள்?. நான் கேட்ட பெரியவர்களிடம் சரியான விடை இல்லை. சமூகத்தில் எந்த பெரியவரும் , எழுத்தாளருமோ, சிந்தனாவாதியோ இதற்கு சரியான விடை சொல்லியோ எழுதியோ நான் பார்த்ததில்லை.
பாலியல் உணர்வுகளால் பையன் கெட்டு போய்விடாமல் வளர்ப்பதுவே பெற்றோரின் முக்கிய கடமை என இருக்கும் சமூக நிலைமை சரியில்லை என்றே தோன்றுகிறது எனக்கு. இந்த கெட்டு போய்விடாமல் வளர்க்கும் முறை என்பது இளைஞர்களின்/யுவதிகளின் வாழ்வில் ஒரு தடுப்புச் சுவர்போன்று அமைந்துவிடுவது நாம் நம் கண்களைமூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைத்து கொள்வதாம். இந்த தடுப்புச் சுவரை இளையவர்கள் மீற முயல்வதும் அதை பெற்றோர்களிடம் சொல்ல மறைத்து அவர்கள் மிகவும் அபாயகரமான பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
பாலியல் உணர்வை ஒரு இளைஞனோ அல்லது யுவதியோ திருமண வயது காலம் வரைதள்ளி போடவேண்டும் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. இவ்வாதத்தில் முட்டாள் தனத்தை வேறொன்றுமில்லை. ஏன்?
உடல் வளர்ச்சியின் விளைவால், ஒரு பெண் தாய்மைப்பேறின் ஆயத்த நிலையாகிய பூப்பெய்தும் நிலைக்கு 14 லிருந்து 16 வயதுக்குள்ளோ அல்லது அருகாமை வயதிலோ வந்து விடுகிறாள். ஓர் ஆண் 16 வயதில் தந்தைப்பேறின் ஆயத்த தகுதிக்கு வந்துவிடுதலும் நடக்கிறது. எனினும் இதை மிகவும் ரகசியமாய் வைத்திருக்கும் பிள்ளைகளாக இவர்கள் வளர ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் மேலும் உடலுணர்வு விஷ்யங்களை தனது நண்பர்களிடமிருந்தே தெரிந்துகொள்கிறார்கள். அனேகமாக எல்லா சமயங்களிலும் இவர்கள் நண்பர்களிடமிருந்து பெறும் பாலியல் உணர்வு மகிழ்ச்சியை தரும் விதத்தில் தான் அமைகிறது.பிரச்சினையின் ஆரம்பம் இங்குதான் உள்ளது. பிள்ளைகள் பாலியல் உணர்வுகள் தரும் சுகத்தினாலும், அவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினாலும் , திருமணம் ஆவது வரை இச்செயல்கள் தவறு என்பதுபோல் சமூகத்தினால் பாவிக்கபடும் காரணத்தினாலும் இவர்களது சுகங்களை மறைத்து வளரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கபடுகிறார்கள்.
இதில் சமூகப்பார்வையின் தவறே மிகபெரியதாய் நான் எங்கும் வாதாடுவேன். முறைப்படி பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தை எய்ட்ஸ் என்கிற உயிர்கொல்லி நோயும்,பிற சமூகச் சீர்கேடுகளும்சமூகத்தின் மிகப்பெரும் உடனடித்தேவையாய் மாற்றியும் நாம் இன்னமும் இது குறித்து மூடத்தனம் காட்டிகொண்டிருப்பது நாமே நம்து குழந்தைகளுக்கு சாவு மணியை அடிக்கக் காத்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறாது.
. இக்கல்வி நமது குழந்தைகளை இழி செயல்களாகிய கற்பழிப்பு,விபச்சாரம்,பாலியல் நோய்களுக்கு பலியாதல், பாலியல் சிறுமதித்தனம் எனப்படும் பெர்வர்ஷன் போன்றவற்றில் ஈடுபடாமல் நிச்சயம் காப்பாற்றும். இக்கல்வியின் கட்டமைப்பும், நடைமுறைப் படுத்தப்படும் விதமும்
சிந்தானாவாதிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு வடிவமைக்கப்படலாம்.
இக்கல்வியின் போதாமையினாலும், பெரியவர்கள் பாலியலை தீண்டதாகாதனவாக எண்ணி பிள்ளைகளை அவர்கள் காப்பாற்ற செய்யும்
எத்தனத்தினாலும் நிகழ்பவையாக நான் இவைகளை வகுக்கிறேன்.
1. மாணவன் ஒருவன் தனது சக மாணவியை மிக இளம் வயதிலேயே காதலியாக பாவிப்பது.
2. தனது ஆசிரியைகளை பாலியல் பார்வையில் பார்ப்பது, கிண்டல் செய்வது போன்றன.
3. திரையரங்குகளுக்கு சென்றுத் திரைமறைவு திரைப்படங்களைப் பார்ப்பது.
4. தவறான பாலியல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல்.
5. திரைப்படங்களை பார்ப்பதன் விளைவால், திரைப்பட காதாநாயகியையோ, அல்லது தனது அருகாமையில் உள்ள ஒரு பெண்ணையோ காதலியாய் பாவித்தல்.
6. பெற்றோர்களை எதிரியாய் பார்த்தல்.
7. இளைஞர்கள் கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுதல். நான் இங்கு நல்ல குடும்ப இளைஞர்கள் மனதளவில் அடையும் பிரச்சினையை சுட்டுகிறேன். ரவுடுகளையோ குண்டாக்களையோ அல்ல.
இன்னும் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பாலியல் உணர்வை ஒரு இளைஞனோ அல்லது யுவதியோ திருமண வயது காலம் வரைதள்ளி போடவேண்டும் என்று சொல்லும் பெரியவர்களை பார்த்து நான் கேட்பதெல்லாம் , உங்களால் எத்தனை நாள் பாலியல் உணர்வை தள்ளி போடமுடியும் என்பதுதான். யாரை ஏமாற்ற முயல்கிறோம்? எத்தனை நாள் ஏமாற்றுவதாய் நினைத்து கொண்டு ஏமாந்து கொண்டிருக்கப் போகிறோம். எத்தனை செய்திகளில் படிக்கிறோம்? இளைஞர்கள் உடலுறவு சம்பந்தமான விஷயங்களில் சிக்கிக் கைது செய்யப்படுவதும், இளம் பெண்கள் விபச்சாரம் வரை செல்வதும் இன்றைய நாளிதழ்களின் மிக சாதரணமான செய்திகளாகிவிட்டது.
எனது கேள்வியெல்லாம், இளைஞர்கள் பாலுணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு வடிகாலாய் இருப்பதற்குமான வழிகள் என்ன உள்ளன இன்றைய நடைமுறையில் என்பதுதான்? நமது மிக பழைய பழக்கமான "பால்ய விவாக முறை" யே கூட சரியாய் இருக்குமோ என்ற கேள்வி எழுப்ப வைப்பனவாக உள்ளன தற்சமயம் நடைமுறையில் இருக்கும் , திருமண முறைகளும், வயது வரம்புகளும் இன்றைய பிழைப்பு மற்றும் உடலுறவு சார்ந்த பழக்கங்களும்.
பால்ய விவாக முறைக்கும், இன்றைய திருமணவயது முறைக்கும் இடைப்பட்டதானதாகவு, சமுக சீர்குலைவுக்கு காரணமாய் அமையாததுமாகிய ஒரு தீர்வு முறை,பிரச்சினைகளை களையும் ஒரு முறை நமக்கு அவசியம்.
இதற்கு விபச்சாரம் ஒரு தீர்வுமுறையாகுமா? இல்லைதான். ஆனால் நிலவுகின்ற நிலைமையைப் பார்த்தால், சட்டம் எந்த அளவுக்கு தடுத்து விட்டது? எனக் கேட்கத் தோன்றுகிறது. சமூகப் பெருசுகள் மட்டும் இம்முறையை உபயோகிக்க வில்லையா?
விபச்சாரத்தை முறைப்படுத்துவது ஒரு நல்ல தொடக்க நிலை முயற்சியாக இருக்கும். இளைஞர்களும் யுவதிகளும் தவறான முறைகளில் ஈடுபட்டு உடல் நிலையையும், மன நிலையும் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க இது வழி செய்யும். இதில் மிகவும் கண்டிப்பான சட்டங்கள் அமுலாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.உதாரணமாய்,
1.வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு கடுமையுடன் கடைபிடிக்கப் படவேண்டும்.
2.ஆணுறைகளும், பெண்களுக்கான சாதனங்களும் அவசியம் கடைபிடிக்கப் படவேண்டும்.
இது போன்ற மற்றவைகளையும் சிந்தித்து செயல்படுத்தலாம்.
Posted at 04:00 pm by karthikramas
Permalink
Thursday, March 25, 2004
இருப்பதா போவதா?
ஏதோ ஆன்மீக கேள்வியெல்லாம் இல்லீங்க! கொஞ்சம் புரியிறமாதி கேக்கணும்னா
இந்தியா திரும்பி போவதா? இல்லை அமெரிக்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டிலோ தங்கிவிடுவதா? புலம் பெயர்ந்தவர்கள் வாழ்வின் மிகவும் மிக்கியமானதொரு கேள்வி இது. இதன் விஸ்வரூபத்தை சொல்லி மாளாது.
சமீபத்தில் வலைப்பூவில் லேசான பேச்சு அடிபட்டது, இது மிகவும் பெரிய , சிக்கலான விஷயம்.
இருந்தாலும் எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.
இதையொட்டி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன எனக்கும் என் நண்பர்களுக்கும். இதில் இந்தியாவுக்கு போகவேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய காரணங்கள் சொல்கிறார்கள்.
அமெரிக்காவில் தங்கிவிடவேண்டும் என்பவர்களும் நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். இப்படி போகிறது இந்த விவாதம்.
போகவேண்டாம் என்று சொல்ல வைக்கும் காரணங்கள்.
----------------------------------------------
1.எல்லோருக்கும் தாய் நாட்டுக்கு திரும்பி செல்ல முதல் தடையாய் இருப்பது, அல்லது தடை என அவர்கள் நினைப்பது அங்கு சென்று என்ன வேலை செய்வது. திரும்பிப் போனால் வேலை கிடைக்குமா?
2.இங்கு இருப்பது போல் தனிமை இந்தியாவில் கிடைக்காது. இந்தியாவிலோ தனிமை குறைந்து
குடும்பபிரச்சினைகள்(மாமியார் மருமகள் சச்சரவு)
3.இளைமையை வெளி நாட்டில் கழிக்க வேண்டும்.
4.இந்த அளவு சுத்தமும் ,ஆரோக்கியமும் இந்தியாவில் இல்லை.
5.இதே அளவு வருமானம் கிடைக்காது.
6.தற்சமயம் எப்படியோ சமாளித்து ஒரு கவுரவத்துக்கு வந்து விட்டோம். இந்தியா போனால் இது நிலைக்காது.
7.இந்தியாவில் என்ன பெரிதாய் இருக்கிறது. இந்தியா போவது முட்டாள்த்தனம். குடும்பத்தாரை
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரவைத்து பார்த்து கொள்ளலாம்.
போகவேண்டும் என்று சொல்ல வைக்கும் காரணங்கள்:
---------------------------------------------
1.வேலையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன வெளிநாட்டில். இந்தியாவில் இந்த அளவுக்கு வேலை இழக்கும் வாய்ப்புகள் இல்லை.
2.குடும்பத்தை கவனித்து கொள்வது கடினமாய் உள்ளது. எல்லா குடும்ப சுமைகளை இருவரே சுமக்க வேண்டியுள்ளது.
3.தாய் தந்தை,குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்வது வாழ்க்கையே இல்லை. எத்தனை சம்பாதித்து என்ன பிரயோசனம்?
4.பச்சை அட்டை எனப்படும் நிரந்தர தங்கும் உரிமை கிடைக்கவில்லை எனில் போய்விடவேண்டும்.
இப்படி வாதங்கள் நீண்டு கொண்டே போனாலும் எந்த காரணத்தையும் சுலபமாய் மறுத்துவிட முடிவதில்லை. அனைத்து காரணங்களிலும் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
கடைசியில் ஆத்ம திருப்தி எந்த வழியை எடுத்தால் கிடைக்கும்?
எனறு கேள்வியை மாற்றி கேட்டால் , ஒருவருக்கு தலையை பிய்த்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று தோன்றும்.
என்னால் இதற்கு நிச்சயம் பதில் சொல்ல முடியவில்லை. இவைகள் ஒவ்வொருவரின் பார்வைக்கும் மதிப்பீடுகளுக்கும் உட்பட்டு முடிவெடுக்கும் விஷ்யமாய் உள்ளது. இவ்விரு முடிவுகளுக்கும் சாதகமான/பாதகமான நிகழ்ச்சிகளை வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
என் ஓட்டு இந்தியாவுக்கே. இது என் தனிப்பட்ட வாழ்வின் சூழலையும்,விருப்பையும் வைத்து எடுக்கப்பட்ட முடிவு. வெளினாட்டில் தங்குபவர்களை தவறென்று சொல்ல ஏதுமில்லை.
நாளை நம் கையில் இல்லை என்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்....
Posted at 08:32 pm by karthikramas
Permalink
|