<< April 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Saturday, April 10, 2004
போஸ்ட் நியூக்கில் ஒரு வலைத்தளம்

வெங்கட்டு அண்ணன் தமிழறிவியற் கட்டுரைகள் எழுத வலைப்பதிவாளர்களுக்கு போஸ்ட் நியூக்கில் ஒரு வலைத்தளம் அமைத்து தர முன்வந்துள்ளார். அவருடன் சேர்ந்து கார்த்திக்(நான்), சங்கர்(சுவடு) பிஎச்பி கற்றுக்கொண்டு நிரலிகளை மாற்றியமைத்து தருவதாய் சொல்லியுள்ளோம். சங்கர் அதைத்தொடர்ந்து வெங்கட்டு அண்ணன் எங்களிடம் படப்போகும் அவஸ்தையையும் அழகாய் விவரித்துள்ளார். நானும் வெங்கட்டு அண்ணனும் வேலை செய்வது இப்படித்தான் இருக்கப்போகுது.

வெங்கட்டு:  நீதான் கார்த்திக்கோ
நான்: நீங்கதான் வெங்கட்டோ..
வெங்கட்டு: இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.. இணையத்துல போறவங்க வர்ரவங்க கிட்ட எல்லாம்
          சண்டை போடுறியாமே என்ன விஷ்யம்..
நான் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்ணா.. அதெயெல்லாம் எச்சை தொட்டு..
வெங்கட்டு: என்னது?..
நான்: இல்லங்ணா எச்சை தொட்டு அழிச்சுடுங்கண்ணு சொல்ல வந்தேன்..காசியண்ண,மதியக்கா,உஷாக்கா வெல்லாம் எனக்கு பிரண்டு
வெங்கட்டு: முதலில் இந்த நிரலியை மாத்து....
நான்: ம்ம்ம்  எனக்கு பிஎச் பி தெரியாதுங் கண்ணே..
வெங்கட்டு: அது எனக்கு தெரியும்.. சொல்றத செய்டா சோவண்ணா..
நான்: அண்ணே எனக்கு இன்னிக்கு லேசா தலை வலிக்குது...
வெங்கட்டு: என்னது..
நான்: இல்லங்ணா , காபி குடிக்கனும் போல இருக்குது..
வெங்கட்டு: என்னாது ..
நான்: இல்லீங்கண்ணா, அம்மா ஞாபகம் வந்துடுச்சு ..ம்ம்ம்ம்(அழுவது போல் நடிக்கிறேன்)
வெங்கட்டு: எங்கிட்ட மாட்டுன இல்ல உங் கதை கோயிந்தா தான்.. காபி கிடையாது ஓன்னும் கிடையாது போய் வேலைப் பாரு.
நான்: சரிங்ணா ரெஸ்ட்ரூமாவது..(சதி லீலாவதி கமல் மாதிரி நெளிகிறேன்)
வெங்கட்டு: எனக்குன்னே வந்து சேர்ந்தான் பாரு... இவனுங்கள வச்சு நான் போஸ்ட் நியூக் செய்ஞ்சா அடுத்த புத்தாண்டுக்கு கூட ரிலீஸ் பண்ணமுடியாது. போல இருக்கு..
நான்: (முனுமுனுத்தபடி..) முதல்ல போய் இந்த ஜோசியக்காரன பாக்கனும், ஏழரை , எட்டரைன்னு ஏதோ சொன்னான்.
வெங்கட்டு: என்ன அங்க சத்தம்..
நான்: இல்லங்கன்னா இங்க ஒருத்தர் உங்கள பத்தி விசாரிச்சாரு , நல்ல விதமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.
 (ரெஸ்ற்றூமிலிருந்து வந்துவிட்டேன்..)
வெங்கட்டு: பி எச் பி ன்னா என்னதெரியுமா?
நான்: permanent head problem...
வெங்கட்டு: அடீங்..  (அதற்குள் நான் எஸ்கேப் ஆயிவிட்டேன்)
சங்கர் நல்ல பிள்ளையா எல்லாத்தையும் முடித்து விடிகிறார்.
வெங்கட்டு:  அந்த variable அல்லோகேட் பண்ண சொன்னனே என்ன ஆச்சு.
சங்கர்: அது முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா
வெங்கட்டு:  அந்த சர்வர் காண்பிகரேஷன செக் பண்ண சொன்னனே என்ன ஆச்சு.
சங்கர்: அதுவும் முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா
வெங்கட்டு:  சரி சாப்பிட்டியா
சங்கர்: அதுவும் முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா.. ஆங் இல்லண்ணா
வெங்கட்டு: டேய் ஓவரா நல்ல புள்ளயா சீன் போட்டா இப்படித்தான் ஆகும், போய் சாப்பிடு...
இப்படியாக தொடர்கிறது... பி எச் பி....


Posted at 05:29 pm by karthikramas
Comments (4)  

Thursday, April 08, 2004
ஆனா, ஆவன்னா ,சினா, சி ++

 

காசி அண்ணன் இன்று அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் பொருட்களின் பின்னணியில் இருக்கும் அறிவியலைப் பற்றி வலைப்பதியலாம் என்ற ஒரு கருத்தை சொன்னார்.
இதனால் மக்களின் அறிவியல் பார்வை விரிவடையும் என்றும் சொன்னார்.
அவருடன் நான் முழுதும் ஒத்துப்போகிறேன்.

இருந்தாலும் என்னுடைய இதற்கு இணையான சிந்தனை(parallel thinking only) இங்கு எழுகிறேன்.அன்றாட தேவைக்கான பொருட்களின் அறிவியலைவிட எனக்கு ஏனோ அதைவிட ஒரு
ப்ரோகிராம்மிங் லாங்குவேஜை பற்றி தமிழில் எழுதி வைப்பது இன்னும் உபயோக மாய் இருக்கும் என தோன்றுகிறது. இனி அதை நிரலெழுதுதல் என குறிப்பிடுகிறேன்.

   எத்தனையோ(லட்சமா?) தமிழிளைஞர்கள் மிகுந்த தமிழறிவோடும், சொற்ப ஆங்கில அறிவோடும், வேலையில்லாமலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கணித அறிவும் உள்ளது. தமிழறிவும் உள்ளது.
பிரச்சினை என்ன வேலை இல்லை.  இவர்களுக்கு எளிய தமிழில் ஜாவா என்பதை இப்படி புரிந்து கொள்ளலாம். சி ++ ஐ இப்படி புரிந்து கொள்ளலாம் என்று நாம் எழுதிவைத்தால் நிரலெழுதுவதில் இவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். ஆர்வம் உண்டாகுமோ இல்லை, நிரலெழுதுதலை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும். முதற்படி அறிமுகத்தை  நம் கட்டுரைகள் செய்தால் கூட மேற்கொண்ட புரிதல்களை மற்ற ஆங்கில புத்த்கங்களிலிருந்து பெற்றுகொள்வார்கள்.

   நிரலெழுத என்ன அடிப்படை அறிவுதேவை? அறிவியலை புரிந்து கொள்ளுவதைவிட மிகவும் சொற்பமான அறிவே தேவை. அறிவியல் கட்டுரையை படிக்க ஒரு இளைஞன் காசு கொடுத்து இணையத்தில் வந்து படிக்கமுடியுமா? ஆனால் தமிழில் ஒரு 200 கட்டுரைகள் நிரலெழுதும் வழிகளை பற்றிய புரிதலை தரக்கூடிய கட்டுரைகள் இருந்தால் , அதற்காக் ஒரு தமிழிளைஞன் காசு கொடுத்து இணையத்துக்கு வந்து கற்று கொண்டாலும் சாலத்தகும். ஏனெனில் அது அவன் வாழ்வு சார்ந்த பிரச்சினையாகிவிடும்.

  சரி , இந்த பக்கத்தில்  நமக்கு இது எப்படிப்பட்ட வேலை? மிகவும் எளிமையான , அல்லது சிறு முயற்சியைக் கோரும் வேலைதான். யோசித்து பாருங்கள்.  நம்மில் மிகப்பெரும்பாலோர் நிரலெழுது வேலைகளில் இருக்கிறோம். நம்மால் அதை மிக எளிதில் எழுதிவிட  முடியும்.  நமக்கு தேவையான அளவு தொழில் அறிவும் அனுபவமுமு உள்ளது. அதை நமது தம்பிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.

நமது இளைய தம்பிகள் நிரலெழுத கற்றுக்கொண்டால், நிரலெழுதுவது மட்டுமல்லாமல் அவர்கள் ஒரு நிரழெழுதியாய் சிந்திக்கவும் தொடங்கிவிடுவார்கள்.
  ஒரு கத்தரிக்காயை வெட்டி நான் படம் போட்டு அதன் பகுதிகளை பற்றி எழுதுகிறேன்.
கத்தரிக்காய் சாப்பிடும் எவரும் அதை புரிந்துகொண்டால் நலமே? ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய
கட்டாயம் இல்லை. சாப்பிட்டால் போதுமானது. அது போலவே ஒரு கை பேசியின் அறிவியலைப் பற்றி எழுதினால், தெரிந்து கொண்டால் நல்லதுதான். அறிவு நிச்சயம் விரிவடையும்தான். ஆனால் எந்த அளவுக்கு என் இன்றைய தேவைக்கு அவசியம் அது? எனக்கு அவசியம் கைபேசி வாங்கும் அளவு பணம்தானே ஒழிய கைபேசியின் அறிவியல் இல்லை.
 அதற்காக் கைபேசியின் அறிவியலை எழுதுவதை நான் குறைகூறவில்லை.
 நாம் உடனடி தேவையை பூர்த்தி செய்வது பற்றி யோசித்து அதை பூர்த்தி செய்வோம். நம் கட்டுரைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையிலுள்ள , மிக அவசியமான பிரச்சினையாகிய வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவட்டுமே!!  நம்மில் எத்தனை பேர் ஊர்களிலிருந்து சென்னை வந்து
வேலை செய்து உயர்ந்திருக்கிறோம். அது போல் எத்தனையோ  தமிழறிவு கொண்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் எதாவது செய்வோமே..

இந்த செய்தி மிகவும் மகிழ்வூட்டுவதாக உள்ளது. அதாவது அடுத்துவரும் 4 ஆண்டுகளில் 1 லட்சம் கணினி வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புள்ளது. இதில் சில ஆயிரமோ அல்லது சில நூறு இளைஞர்களோ நம்து கட்டுரைகள்¡ல் வேலைவாய்ப்புக்கேற்ற கல்வியை பெறட்டுமே!!

இதற்கான உத்திகளைபற்றியும் மாதிரி கட்டுரையும் நான் எழுதுகிறேன்.

ஒரு தொடர்ச்சியாய் சிந்தித்துப் பாருங்கள், அடுத்த 4 ஆண்டுகளில் 100 அறிமுக கட்டுரைகள், 200 இடைனிலை கட்டுரைகள் மற்றும் மொழிப் பெயர்ப்புகளும் தமிழில் இருந்தால் எத்தனை பேருக்கு உதவும். எத்தனை இளைஞர்களுக்கு வழிகாட்டும்.


சுருங்கச்சொன்னால் , நமக்கு இணையக்கடலில் முத்துகள் தேவையில்லை, கட்டுமரங்கள்தான் தேவை அல்லது நீச்சல்தான் கற்று கொள்ளத்தேவை. நிரலெழுதிகளை உருவாக்குவோம். தமிழகத்தை வளமாக்குவோம்.


The Hindu - 13.03.2004
CHENNAI, MARCH 12. About one lakh jobs in information technology are likely to be created over the next three-four years in Chennai, with the setting up of new development centres by three major players, Infosys, Wipro and Tata Consultancy Services.
 


Posted at 07:40 pm by karthikramas
Comments (4)  

நாட்டு நடப்பு


இந்த வாரம் வலைப்போவில் துறைசார் மற்றும் அறிவையல் பதிப்புகள் பற்றிய பேச்சு நடந்தது.

அதற்கு முன் வாரத்தில் பிரபு, சுட்ட எழுத்துகள் , சுடாத எழுத்துகள், மற்றும் சுரதாவின் மருத்துவ பதிவு போன்றவற்றைப்ற்றி கோடிட்டு எழுதினார். பிரபுவும் சட்டம் பற்றிய தனது துறைசார் எழுத்துகளை பதிக்கிறார்.

சுந்தரவடிவேல் , நக்கீரனின் பதிவில் உள்ள கேள்வியாகிய "சினிமா,அரசியல்,இலக்கியம்" இதைவிட்டா வேறு பதிக்க கூடாதா என்கிற கேள்வியை வலைப்பூவில் கேட்க இந்த கேள்வி தீ பற்றிகொள்கிறது.ரவி ச்ரீனிவாஸ் அத்யெல்லாம் படிக்க தமிழ்வலைப்பதிவில் ஆளு இருக்கா? என்னய்யா உங்க சீரியஸ்னஸ் என்று  நறுக்குன்னு கேட்கிறார்.
அருணா இதைத்தொடர்ந்து தந்து வலைப்பதிவில் கூட்டு வலைப்பதிவு பற்றி எழுதுகிறார்.
கார்த்திக்கோ தமிழ்வலைப்பதிவு இன்னும் குழந்தைதான் என்று ஒரு நொண்டிச் சாக்கை சொல்கிறார்.
பிற்காலத்தில் இது வரலாம் என்று ஒரு உப்பு சப்பில்லா ஆருடம் சொல்கிறார்.
 
இந்தச் சுற்று பேச்சு வார்த்தையில், சுந்தரவடிவேல்,அருணா,பாலாஜிபாரி,காசி,டுபுக்கு,கைகாட்டி,தஙமணி,ரமணி,உஸ்கா,கார்த்திக்ராமாஸ் அகியோர் கலந்து கொள்கிறர்கள்.
தமிழ் வலைப்பதிவின் பிதாமகர்களில் ஒருவரான பத்ரி , 5 நாள் கிரிக்கட் பந்தயத்தை பார்க்க லாகூர் சென்றுவிட்டார்.
வெங்கட்டு , நிறைய விஷ்யங்களில் முன்னோடியாய் இருப்பதைப் போல், தான் ஏற்கனவே சிந்தித்து
பதித்து வைத்திருந்த, கருத்துபக்கத்தை காண்பிக்கிறார்.
ஸ்லாஷ்டாட்,போஸ்ட்னூக் என்கிற வாய் சுளுக்கிகொள்ளும் வார்த்தைகளையும் தளங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
விவாதம் எந்த முறை சிறந்தது என்று திரும்புகிறது.
மதி கூட்டு வலைப்பதிவு செய்துதர முன்வருகிறார்.
ரவியோ கட்டுரைகளை எப்படி எழுதுவது வகைப்படுத்துவது என்று சில சில விஷ்யங்களை சொல்கிறார்.
இரண்டாம் நாள் பேச்சுவார்த்தையில் டுபுக்கு,கார்த்திக்ராமாஸ்,ரவி ஸ்ரீனிவாஸ்,காசி ஆகியோர் கலந்து கொள்கிறர்கள்.
சுந்தரவடிவேல் ஆசிரியாக இருந்தாலும் அவரால் மறுமொழி இடமுடியாத அவலத்துக்கு ஆளாகிறார்.
விடாமுயற்சியுடன் கருத்து கணிப்பு நடத்துகிறார்,எந்த முறை சிறந்தது என்று.
கார்த்திக்ராமாஸ் ஒரு ஓட்டு நல்ல ஓட்டும் , இன்னொரு கள்ள ஓட்டும் போஸ்ட் நியூக்கிற்கு  போடுகிறார். இவரது பிரச்சினை என்னவென்றால்  இவருக்கு போஸ்ட்னியூக் என்றால் என்ன்வென்றே தெரியாது. முதலில் உதவிசெய்வதாய் கைதூக்கிவிட்டு, பின் பிஎச்பி தெரியாது என அசடு வழிகிறார்.
பிரகாஸ் கேள்விகேட்டு விளக்கப்பக்கங்களுக்கு சென்று படித்து வருகிறார். இன்னும் நிறைய கேள்விகளை கேட்கப்போகிறார் என்று ஒரு குண்டைத்தூக்கி போடுகிறார். லாகூர் சென்ற பத்ரி திரும்பிவந்து, அருணாவுடன் சேர்ந்து உஷாவுக்கு வலைப்பதிவை பார்க்கும் ஒன்னாங்கிளாச் பாடத்தை நடத்துகிறார். டுபுக்கு லதா எழுத்துரு மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார் , வேலை செய்யுமென்று.
டைனோ,கார்த்திக்,சுந்தரவடிவேல் கொஞசம் நேரம் நகைச்சுவையில் கோல்கேட்டு விளம்பரம் செய்கிறார்கள். முத்து டிஸ்கியில் எழுதிய சு.வேலை  வேலை ஒழுங்கா செய் நைனா என்கிறார். ரஜினி ராம்கி போஸ்ட் நியூக் என்கிற அரசியல் கட்சிக்கு ஜே போட்டுவிட்டார்.
காசி எதைபற்றி வலைப்பதிவது என ஒரு பெரிய பதிப்பபை பதிக்கிறார். அன்றாட பொருட்களின் பின் உள்ள அறிவியலை எழுதினால் ரொம்ப உபயோகமாய் இருக்கும் என முதல் பெஞ்சு மாணவனாய் சொல்கிறார். மதி கூட்டு + போஸ்டுனியூக் இரண்டுத்தையும் கலந்து அதிலேர்ந்து ஒரு 50 கிராம் எடுத்து செய்ய்லாம் என்கிறார்.
பிகேஸ் வந்து , யோவ்!! மச மசன்னு பேசிக்கிட்டு நிக்காம எதையாவது எழுதி தொலைஙைய்யா என்று சொல்கிறார். மத்ததெல்லாம் அப்பால பாக்கலாம் என்கிறார்.....
  கருத்து கணிப்பில்  ரஜினி ராம்கி ஓட்டுபோட்ட போஸ்ட் நியூக்கே 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது என
சுந்தரவடிவேலு அறிவிக்கிறார்.

 பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அனைவருக்கும் போஸ்ட்னியூக் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற கட்சிகளுக்கு  ஓட்டு போட்டவர்களுக்கும் போஸ்ட்னியூகில் இடமுண்டு(இன்னாயா குழப்பற?? அது அப்படிதாங்க உக்கூம்).


Posted at 01:48 pm by karthikramas
Comments (3)  

Wednesday, April 07, 2004
போஸ்ட் நியூக் ல் செய்தால் தொகுப்பு முறை ச

துறைசார் கட்டுரைகளையும், அறிவியல் கட்டுரைகளை எழுத சிறந்த முறை எது என
ஓட்டெடுப்பு நடக்கிறது (சுந்தரவடிவேல் வாரத்தில்) ?
மறுமொழி இட முடியவில்லை. எனவே என் குழப்பத்தை இங்கே எழுதிகிறேன்.

இந்த கணிப்புக்கு ஒட்டுபோடுவதில் கொஞசம் குழம்பி போய்ட்டேன்.(அது சகஜந்தானே என்கிறீர்களா?)

1. போஸ்ட் நியூக் ல் செய்தால் தொகுப்பு முறை சிறப்பாய் இருக்கும், தானியங்கித் தனமாய் தொகுத்துகொள்ளும்(ஆட்டோமாடிக்).போஸ்ட் நியூக்கில் எழுதுவதற்கு முதலில் கொஞ்சம் உழைப்பு தேவைப்பட்டாலும் பின்னர் பயன் அதிகம் இருக்கும்.கொஞசம் நாள் கழித்து ஆரம்பித்தாலும், பயன் அதிகமுடையது போ. நீயூக்கே.

2. கூட்டு வலைப்பதிவில் பதிந்தால் தொகுப்புக்கு மீண்டும் உழைப்பு தேவைப்படும்.

ஏதாவது குழப்பி இருந்தால் மன்னிக்கவும்


Posted at 03:06 pm by karthikramas
Comments (1)  

Tuesday, April 06, 2004
Article on Casteism otherwise called as plague

http://www.pucl.org is a great set up. I wonder such a thing exists in chennai and other cities.
(Badri would be interested)


The acute and complex 21st century problem that would continue to plague Indian democracy is Casteism. The clash of war between constitutionalism, i.e., equality, fraternity and unity among the people of India, the grand vision of the basic structure built in the Preamble and the caste-based discrimination, instead of resolution, even after 54 years of Independence and 52 years of the working of the Constitution, has been continually raging. Casteism and the wicked assertion of caste hierarchy have been much more menacingly raising ugly head. For failure to tackle this menace, the civil society, instead of integration, is getting further fragmented and disintegrated. The centrality of the issue, therefore, is to tackle Casteism.

Read More :http://www.pucl.org/reports/TamilNadu/2001/Casteism.htmBy -- ByJustice Dr. K. Ramaswamy, Member, N.H.R.C.

(Prabhu may read this article as it talks about so many Laws ...)

Posted at 04:44 pm by karthikramas
Comments (1)  

France's ban

France's ban on wear "parthaa" by muslim women :
http://www.geotamil.com/pathivukal/article_ranji_april2004.html


I will write my own views on this critical subject..

Posted at 04:02 pm by karthikramas
Comments (1)  

Guide on Intellectual Property rights

A Free guide Found in Net on Intellectual Property rights. (Ravi May be Interested)

Link to Page
http://www.leeds.ac.uk/cedars/guideto/ipr/

Direct link to guide
http://www.leeds.ac.uk/cedars/guideto/ipr/guidetoipr.pdf

(Karthik will read later ..)

Posted at 03:52 pm by karthikramas
Comments  

Women's movement priorities
Open source C++ development

An open source C++ development platform.
If any one is in interested opensource C++ or willing to help Please visit.

http://www.ntllib.org/upp/index.html

I wish we could have a completely Tamil programming laguage. I have no Idea How far we are to there.

Posted at 03:15 pm by karthikramas
Comments (1)  

Sunday, April 04, 2004
பையனுக்கு மாப்பிள்ளையும், பெண்ணுக்கு மணப

 சமீபத்தில் ராயர் காப்பி கிளப்பில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து
வேறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. அதெல்லாம் இருக்கட்டும் தி எல் வோர்ட் (The L word) என்றொரு தொலைக்காட்சித் தொடர் வருகிறதே பார்த்தீர்களா?
என்னங்க அதப் பாக்கலன்னா எப்பிடி? நிறைய பேர் அதை பார்த்தால் தன் கருத்தை
மாற்றிக்கொள்வார்கள். மாற்றி கொள்வார்களோ இல்லையோ தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சும்மா சொல்லக் கூடாது சார் அட அடா!! என்னமா இயக்கி இருக்கிறார்கள் தொடரை. தொடர் முழுக்க சூடு தாங்கல. ஒவ்வொரு பாத்திரமும் கவர்ச்சியா நடிக்க வைத்து நம்மை யெல்லாம் சொக்க வைக்கிறாங்க.

   இதெல்லாம் நான் சொல்லவில்லை ;-), ஒரு ரிவியூவில் படித்தேன். ஒரிரண்டு  நாட்கள் பார்க்கவும் செய்தேன். பிடித்திருந்தது நடித்த பெண்களை.

சரி விஷயத்துக்கு வருவோம். ராயர்களில் சிலர் ஒரின சேர்க்கை திருமனத்தை ஆதரித்தனர். இவர்களில் பத்ரி,டைனோ போன்றவர்கள் மனிதாபிமானத்தைக் மேற்கோளிட்டு மடல்களை எழுதியிருந்தனர். ரூமியோ "பெண் முலையை இன்னொரு பெண் வருடுவதில் என்னய்யா சுகம் விளையப்போகுதுன்னு" சொல்வது
மாதிரி எழுதியிருந்தார். இவரது கேள்வி உண்மையில் இது முறையானதா? உபயோகமுள்ளதா? என்பதுதான். நான் சில மடல்களை மட்டுமே படித்தேன். மற்றவைகளை படிப்பேன்.

கேள்விகளும் சிந்தனைகளும் பின்வருமாறு :
-----------------------------------
1. ஓரினச் சேர்க்கை முறை? சரியா? ஒத்துக் கொள்ளப்படவேண்டியதா? முட்டாள்த்தனமா?
2. ஓரினச் சேர்க்கையில் இன்பம் விளைவது உண்மையா?
3. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டியது சரியாகுமா? சமூக அங்கீகாரம் தரத் தகுதியானதா?
4. ஓரினச் சேர்க்கையின் மீது நாம் கொள்ள வேண்டிய சரியான பார்வையெது?


1. நமது பழக்கங்கள் அனைத்தும் நாம் இந்த சமூகத்தில் இருந்து பெற்றுக் கொண்டவை. அதாவது
இந்த சமூகத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு நாம் ஒத்துக் கொண்டு கற்றுக் கொண்டவை. எப்படி திருடுதல் கூடாது, கொலை கூடாது என்று கற்றுக் கொண்டோமோ அப்படியேதான் ஓரினச் சேர்க்கை வித்தியாசமானது  என்றும் கற்றுக் கொண்டோம். இவைகளை கற்றுகொண்டதானால் நாம் சட்டப்படி ஒரு சிறந்த குடிமகனாய் இருக்கிறோம். வெற்றிகரமான வாழ்க்கையை பெறுகிறோம். எனவே இவற்றை நாம் தலையாய விஷ்யங்களாக போற்றுகிறோம். ஓரினச் சேர்க்கை கூடாது என்று எதிர்ப்பதற்கு காரணம்  என்ன என்று யோசித்தால் அதற்கு ஒரு சரியான காரணத்தை முன் வைக்க வேண்டும். இதன் பதில் கடைசியில் வருகிறது ;-)

2. அனுபவம் இருந்தால்தான் சொல்ல முடியும் என்று யாராவது சொன்னால் இதற்கு யாரும் பதில் சொல்லமுடியாது. நடப்பவைகளை கண்களை திறந்து பார்த்தால், இன்பம் விளைவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.  இல்லையெனில் வேலை மெனக்கெட்டு ஒருவனோ இல்லை ஒருத்தியோ கஷ்டப்பட்டு (??) இதில் ஏன் ஈடுபடவேண்டும்.

3. எந்த புது விஷயமும் அல்லது வித்தியாசமான விஷயமும் முதலில் அங்கீகரத்தை பெறுவது என்பது இயல்பாய் நடப்பது இல்லை. கலிலியோ முதல் நம் சுதந்திரம் வரை அங்கீகாரம் என்பது எடுத்தவுடன் பெறப்பட்டதாய் நமக்கு காட்டவில்லை. சமுதாய அங்கீகாரம் வேண்டும் என்பது எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியம் சமூக மனிதாபிமானம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வேண்டும்.

4.      நமது சட்டங்கள் யாவும் மத, மற்றும் இறை நம்பிக்கைகளின் ஊற்றுக் கால்களிலிருந்து வெளிவந்தவையே. எனவேதான் சட்டம் கீதையையும்.பைபிளையும் தினமும் உண்மையின் சாட்சியாக அழைத்துக்கொள்கிறது.ஒரு மதத்தில் பல திருமணம் முறையானதாகவும் இன்னொரு மதத்தில் அது சட்டத்துக்கு புறம்பானதாகவும் இருப்பதை சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது சட்டத்துக்கு இறைனம்பிக்கையை தாண்டிய அறிவு இல்லை.அல்லது சட்டம் இறையை தாண்டிப் பாயாது என்றும் சொல்லலாம்.இந்து மதத்தில் மனிவியிடம் பிள்ளைப் பேற்றுக்காக தவிர வேறு மற்ற எந்த காரணத்த்க்காகவும் உடலுறுவு வைத்து கொள்வது சட்டப்படி தவறு என்பதை சமிபத்தில் நண்பனிட்மிருந்து அறிந்து கொண்டேன். இந்த சட்டம் எங்கே? நமது நடைமுறை எங்கே?? நாம் சட்டப்படி ஏற்கனவே குற்றவாளிகள்தாம் என்பது நமக்கே தெரியும்.. யாரையும் கேட்கவேண்டியதில்லை. எனினும் நாம் எப்படி சரியானவர்கள் ஆகிறோம்? ஒரு திருமணத்திற்கு மேல் கூடாது என்கிற சட்ட எல்லையைத் தாண்டும் போது ஒரு இந்து சட்டப்படி குற்றவாளி ஆகிறான். ஆனால் ஒரு இசுலாமியருக்கு இச்சட்டம் பொருந்தாது.
 
   எனவே ஓரினச்சேர்க்கையாளர்கள், இறைனம்பிக்கையின் அடிப்படையில் விளைந்த சட்டத்திடம் அங்க்கீகாரம் கேட்பது, மிகவும் தவறான இடத்தில் சென்று முறையிடுகிறார்கள் எனபதாகும். இறைவாதத்தில் எங்கிமே ஓரினச் சேர்க்கையானது ஊக்குவிக்கப்படவில்லை. இந்த காரணத்தைக் கொண்டுதான் ரூமி போன்றவர்கள் இது "இயற்கைக்கு மாறானது" என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

   ஆனால் உண்மையில் நடைமுறை பிரச்சினை இறைவாதத்தை பொருட்படுத்தவில்லை என்பதுதான் கண்கூடு.இறைவாதத்தை பொருட்படுத்தாதவர்களிடம் இறைவாத சட்டத்தை ஏற்கசொல்வது சரியானதல்ல. மாறாக அது இறைக்கு விளைக்கும் அவமானமே என்றாகிறது, எனது பார்வையில்.

   னமது நோக்கில், இவர்கள் தவறு செய்வது போல் இருந்தாலும் அது தவறு அல்ல என்று பார்ப்பதே சரியானதாக இருக்க முடியும். அதாவது பைத்தியங்களின் பார்வையில் நாம் பைத்தியம் என்பது போல்(அப்பாடா இந்த உதாரணத்தை உபயோகப்படுத்த ஒரு இடம் கிடைத்தது).  நாம் பைத்தியமாக ஆகாதவரையில் ஒரு சாதாரண மன நிலையிலிருப்பவரை "பைத்தியம்" என்று சொல்ல நமக்கு மனம் வராது.
 நமது பார்வையில் இவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள். அவர்கள் பார்வையில் நாமும் அப்படியே என்பதை சிந்திக்க மறக்ககூடாது. இவர்களை அங்கீகரிக்காமல் இருப்பது ஒருவித ஆதிக்க மனப்பான்மையேதான்.

ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.

  அங்கீகாரம் கொடுத்தவுடன், ஓரினச் சேர்க்கையாளர்களும் போகிற வருகிறவர்களை வம்புக்கிழுக்காமல் இருக்குமாறும் சட்டம் இயற்றப்படவேண்டும். சரி சட்டப்படி அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலைமையை ஊதிப் பெருசாக்கி யோசிப்போம்.
பூங்காக்களிளும்,  வீதிகளிலும் ஓரினர்களின் சேஷ்டைகளை (??) பொறுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகும்.

குடும்பங்களில் இது என்ன விளைவை ஏற்படுத்தும்?

திருமணங்களின் மதிப்பு என்னவாகும்?

நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்?

அமெரிக்காவில் குடியுரிமைச் சட்டமும் கேள்விக்குள்ளாக்கபடும். அதாவது ஏமாற்றுதல்களுக்கு எளிதில் இது வழிகோலும். உதாரணமாய்,  நான்(?? ஹ’ஹ’)  மாசாசுசெட்ஸ் சென்று ஒருவருடன் தங்கி அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் , சட்டப்படி(by certificate of marriage) குடுயுரிமையை விண்ணப்பிக்கலாம். சட்டத்தை எதிர்த்து போராட்டம் கூட நடத்தலாம்.

மொத்தத்தில் ஒரு புதிய சமூகமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். அதனால் ஏற்படும் அழிவுகளுக்கும் நாம் தயாராக வேண்டும். ஆனால் மனிதாபிமானப் பார்வை வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் தயக்கம் இல்லை.


Posted at 10:33 pm by karthikramas
Comments (1)  

Next Page