|
|
 |
Friday, April 16, 2004
கண்டேன் பெர்ராரியை...
புத்திமான் பலமான் ஆவான் என்பதை ஒரு எளியவழியில் மீண்டும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் அல்லது வணிக மேலாளருக்கு
ஒரு 55 முதல் 60 வயது இருக்கும். அவறை இதுவரை நான் குறிப்பிட்டுரிந்தால் வணிகன் அல்லது
வெள்ளை வணிகன் என்றுதான் குறிப்பிட்டிருப்பேன். ஆனால் மனிதன் இப்படி என்னை மேலாளர் அவர்களே என்று குறிப்பிட வைத்துவிட்டார். எல்லாம் இந்த இரண்டு நாட்களாய் தான்.
நான் சமீபத்தில் ஒரு கார் வாங்கியிருந்தேன். அதில் கொஞ்சம் தேசி புத்தியை விடுத்து கோண்டா டயோட்டா போன்ற காரை வாங்குவதில்லை என்று ஒத்தை காலில் நின்றுகொண்டிருந்தேன். சுமாராய் 4 வருடங்களாய் இப்படி ஒற்றை காலில் நின்று நின்று இரண்டு கால்களில் ஒன்று குட்டையாய் ஆனதுதான் மிச்சம்.
சரி 4 வருஷமாய் கார் இல்லாமல் அமெரிக்காவில் கார் இல்லாமலிருப்பது, இந்தியாவில் 4 வருஷத்துக்கு துணி இல்லாமல் அலைவது போல்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆபாசமாக எழுதக்கூடாதே என்று நினைத்ததால் , 4 வருஷத்துக்கு சைக்கிளில்லாமல் கஷ்டப்படும் நிலையில்தான் இருந்தேன்னு எழுதிக்கறன்.
ஆனால் எப்படியோ என் நண்பரிகளின் புண்ணியத்தில் இரண்டு டயோட்டாக்களின் சாவிகளும், ஒரு நிஸ்ஸான் அல்டிமாவின் சாவியும், கொஞ்சம் அவன்களின் திட்டோடு என்னிடம் வந்து சேர்ந்தது. எனவே இந்த மூன்று கார்களையும் ஓட்டியது போக மிச்ச நேரத்தில் ஒற்றை காலில் நிற்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.
நான் கார் வாங்கியதும் , என்னடா! இனிமே எங்க காரெல்லாம் ஒட்ட மாட்டியே? சாவியெல்லாம் துக்கி போட்டுவிடுவாயா என்று கேட்டான்கள்.
அதுக்கு நான், "என் கார் சாவி காசு குடுத்து வாஙங்கியது, இந்த பழைய மூன்று சாவிகளும் அன்பால வாங்கியது, எதுக்கு மதிப்பு அதிகம்"னு கேட்டு எல்லார் கண்லயும் தண்ணீர் வரவச்சேன்.
இருந்தாலும் இந்த சனியனால நம்ம காருக்கு இனி தொந்தரவு இல்லை என்றுதான் அவன்கள் நினைத்திருப்பான்கள்.
இப்படி என் ஒற்றை கால் விரதத்தை முடித்து விட்டு, லேசாக நொண்டிக்கொண்டே ஒண்றரை கால்களில் சென்று வாங்கிய காருக்கு 2 கதவுகள் தான்.
இந்த கார் வாங்கும் இடத்துல நடந்தத பத்தின கூத்துக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். கொஞ்ச நாளா ஒரு கதவு வேற சரியா வேலை செய்யல. எனவே நண்பர்கள் "ஒன் டோர் கார்த்திக்" என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள். இது ஒருபுறமிருக்க, அமெரிக்க கார்களுக்கும் , இந்திய கார்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா , கல்யாண மண்டபத்த விட்டு நேரா விவாகரத்து ஆபிஸ¤க்கு தான் போயி நிக்கும். அப்படி ஒரு 16 க்கு 0 பொருத்தம் தான். இந்தியாவுல 4 டோர் காருக்கு தான் மவுசு ஜாஸ்தி, இங்க 2 டோர் காருக்குதான் மவுசு, கீபோர்டு எல்லமே ஜாஸ்தி. இந்தியாவுல பெரிய காருக்கு தான் விலை அதிகம். இங்க அமெரிக்காவுல நண்டு மாதிரி மூஞ்சி இருக்குற இல்லன்னா வாத்து மாதிரி சப்ப மூக்கு இருக்குற காருக்குதான் விலை அதிகம். சைஸ் ஒரு குப்பதொட்டை அளவ விட கொஞ்சம் பெருசுதான். அந்த காரை வாங்கி இரண்டு கத்திரிக்கா அத்கமா வாங்கி டிக்கில வச்சு எடுத்துக்குட்டு கூட வரமுடியாது, அத்தன சின்ன டிக்கி..அமெரிக்காவுல டிக்கி சொன்னா சிரிப்பானுங்க, பூட்டு இல்லன்னா ட்ரங்கு இப்படிதான் சொல்லுவாங்க. டிக்கி அப்படீகிறது ஆபாச சொற்கள் வரிசையில வரும். ஆனா நிறைய வெள்ளைக்காரணுங்க மட்டும் டிக் டிக் க்குன்னு பேர் வச்சிப்பானுங்க , நாசமா போனவனுக.
சரி நண்ட பத்தி,எல்லாமே எத்தனை Hகார்ஸ்பவரு (குதிரை ஓட்ட சக்தி) இருக்கு வண்டில அப்படீங்கறதுலதான் பிரச்சினையே. பாக்க நண்டு மாதிரி இருந்தாலும் , இந்த நண்டுங்க ரோட்டுல பண்ர அளும்பு இருக்கே, பாக்க முடியாதுங்கறேன். ஆமாம்!! உண்மையிலே பாக்க முடியாதுதான். ஏன்னா பாக்கறதுக்குள்லெ நண்டு நம்ம கண்ண விட்டு வேகமா போயிடும்.
அந்த மாதிரி சப்ப மூக்கு பெர்ராரி ஒன்ன, 1999 ல ஒரு முறை பாத்திருக்கேன். ஒரு யூ எப் ஓ (விவரந்தெரியாத பறக்கும் பொருள்??) மதிரி வேகமாய் போச்சு. இன்னும் முயற்சி பண்ணி பார்த்த்ருந்தேன்னா , நேரா கழுத்தௌ சுளுக்கு ஆஸ்பத்திரிதான் போயிருக்கனும் நான்.தரையோட தரையா பாம்பு மாதிரி போச்சு. மத்த போறவர்ர காருங்களல்லாம் ஒரு காராவே மதிக்கல. நானும் அவன மதிக்கல ஹி ஹி.
சரி சரி, ரூட்ட மிஸ்பண்ணிட்டு வேற எங்கேயோ போயிட்டேன்.
2 கதவு கார் வாங்கினேனா? அதுல போகும் போதெல்லாம், எல்லா வெள்ளகாரிங்களும் என்னையே பாப்பளுங்க. இல்லன்னா அப்படிதான் என் கண்ணுக்கு தெரியும். குறிப்பா கல்யாணம் ஆகாத வெள்ளகாரிங்கதான் ரொம்ப முறைப்பாளுக. இல்லன்னா எனக்குதான், அவங்களெல்லாம் கல்யாணம் ஆகாதவங்க மாதிரி தோனும். எப்படியோ என்ன நிறைய பேர் பாக்கறாங்களேன்னு
என் சட்டை காலர் கூட தானாவே மேல நிக்கும்னா பாத்துக்கோங்களேன்.
இப்படி நான் 2 மைனஸ் 1 டோர் காரை எடுத்துக்குட்டு என்மேலாளர் காருக்கு பக்கத்தில வந்து நிறுத்தறதுல ஒரு குஷிதான் எனக்கு.
அந்த ஆளு காரு இருக்கே, அதை வார்த்தையில வர்ணிக்க முடியாதுங்க. அப்படி கொஞ்சம் தகரம்,4 சக்கரம், கொஞசம் பெற்றோல் எல்லாத்தையும் சேர்த்த ஒரு குவியலுங்க அது. ஆங்கிலத்துல ஜன்க்குன்னு சொல்வாங்க.இருந்தாலும் , மனிதன் என்ன காரு ஓட்டறானோ அத வச்சு அவன எடை போட கூடாது. அவன எட போடனும்னா ஒரு வெயிங் மிஷினுதான் வேணும், அப்படீங்கற உயர்ந்த தத்துவத்த பாலோ பண்றவங்க நானு.
அதனால நான் என்னிக்குமே அவன்கிட்ட பெருசா பந்தா கட்டுனதே கிடையாதுங்க.
நேத்து அந்த பாவிப்பய , ஏதோ ஒரு சிவப்பு கலர்ல , என் கார்ல பாதி உயரத்துக்கு ஒரு கார்ல வந்தான்.
இந்த குப்பையை எங்கடா வாங்குனான் இந்த பரதேசின்னு நினைச்சுகிட்டேன். எனக்கு அது என்ன குப்பைன்னு கூட சரியா
தெரியலங்க. சரி அவன் கிட்டயே கேக்கலாம்னு நினைச்சேன்.
"வாட் கைண்ட் ஆப் ஷிட் ஈஸ் இட் "ன்னு கேக்க நினைச்சு
வாட் கைண்ட் ஆப் கார் ஈஸ் இட் ன்னு கேட்டேன்.
அந்த நாசமாப்போனவன் என்ன சொன்னான் தெரியுமா?
ஹோ இட் இஸ் எ பெர்ராரி -ன்னு போட்டானே ஒரு போடு. அப்பதான் இரண்டடி தூரத்துல ஒரு பெர்ராரிய பாத்தேன்.
(எழவு அந்த சனியன நேரா பாத்து அந்த பேர படிச்சுருந்தன்னா கேட்டுருக்கவே மாட்டேன், எல்லாம் போராத நேரம் தான்)
அதுல உக்காந்தேன்னா, என்னோட இரண்டு பெரிய(??) , பின் தொடைக்கி மேல முதுகுக்கு கீழ இருக்குறது மோட்சம் பெற்று விடும்னு ஒரு பட்சி சொல்லிகிட்டே பறந்து கிழக்கு பக்கமா போச்சு.
கூடவே சில விஷயன்களையும், என் மரியாதைக்குரிய வணிக மேலாளர் "அவர்கள்" சொன்னார்கள்.
மைலேஜு ரொம்ப நல்லா குடுக்குதாம். ஒரு கேலனுக்கு 12 மைலாம். நெவேடாவில் 90 மைல் ரோட்டுல
200 மைல் ஸ்பீடு வரைக்கும் ஓட்ட முடியுமாம். பிரச்சினை இல்லாம ஓடுமாம்.
இதெல்லாம் பெர்ராரி வச்சிருக்குற நீங்கள் யாராவது சொல்லபடாதா எனக்கு??
அதன் மாடல கூட சொன்னான். எதோ ஒரு "எம்"ல்ல ஆரம்பிச்சுது.னமக்குதான் அந்த எளவெல்லாம் தெரியாதே.
ஆனா அதுல பெரிய ஆர்வமும் இருந்ததில்ல (அட படுபாவி பொய் சொன்னே வாய்ல புழு வரும்..)
கடகடன்னு மனசுல , ஒரே லெசன்ஸ¤ ஓடுச்சு.
1.புத்திமான் பலவான் ஆவான்(பெர்ராரி வாங்கமுடியாத நீ இப்படிதாண்டா சொல்லிட்டு திரியுனும்- மனசாச்சி)
2.ஒர்த்தன் எந்த காரு ஒட்டுறானோ அத வச்சு அவன எட போடக்கூடாது ( ஏண்டா இப்ப சொல்ளுவியே நீ - மனசாச்சி)
3.எளிமைதான் சிறந்த நண்பன்... (தோடா கதையளக்குறான் பாரு - மனசாச்சி)
4.ஆயில் சேஞ்சுக்கு 60 டாலர் குடுக்குறது மகா பெரிய தப்புதான்... நீ கல்லுரி விட்டு வந்ததும் உன் மாச சம்பளமே அதவிட கம்மி..
ஏ மனசாட்சீ - நிறுத்தமாட்டியா நீ.......
Posted at 08:23 pm by karthikramas
Permalink
வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...
வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...
என்னடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, ஆமா ஆமா அதேதான்
நம்ம ஊருல கழுத்தறுக்கறதுக்குன்னே எவனாவது அடம் புடிச்சா அப்ப சொல்வாங்களே அதே பழமொழிதான்.ஆனா பாருங்க இங்க கழுத்தறுக்கறது ஆளு இல்ல , மிஷினு. அது கழுத்தறுகறது கெட்டதுக்கு இல்ல நல்லதுக்கு. என்னது கழுத்தறுக்குறது நல்லதுக்கான்னு கேக்குறீங்களா? கொஞ்சம் இப்பிடி உக்கார்ந்து ஆசுவாசமா கேளுங்க.
சரி முதல்ல அது எந்த மிஷினு?
கம்ப்யூட்டர்தாஙக அந்த மிஷினு. அதுக்கு நம்ம கன்னித்தமிழில்ல "கணினி "ன்னு பேரு.
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். அது என்ன வெச்சா குடுமி அடிச்சா மொட்டை?
அதுக்கும் கணினிக்கும் என்ன சம்பந்தம்?
என்ன அப்படி சுளுவா சொல்லிட்டீங்க. அதுதான அதோட தாரக மந்திரமே!!
அதாவது, செய்தால் சரியாத்தான் செய்வேன் இல்லன்னா முழுசா தப்பாத்தான் செய்வேன்னு
அடம் புடிக்கும். அதுகிட்ட இந்த, துண்ட கைக்கு மேல போட்டு விரல புடிச்சி பேரம் பேசர சமாச்சாரமே கிடையாது.
சரி மேல சொல்லுங்க கேக்கிறன்.
கணினின்னு சொன்னவுடனே எதோ கஷ்டமான விஷயம்னு னினைக்காதீங்க. அது ரொம்ப சாதரணமான விஷயந்தாங்க. நீங்க கணினி கத்துக்கறதுக்கு முன்னாடி கத்துக்க வேண்டியது இதுதான்.
சரிங்க ஒத்துக்கறன், கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
அப்படியே இன்னொரு விஷயமும் கவனத்துல வச்சிக்குங்க. சிறு துளி பெரு வெள்ளம்.
புரியலையே?
அதாவது, சின்ன சின்னதா , கொஞ்ச கொஞ்சமா ஆனா சரியா சொன்னாதான் கணினி கேக்கும்.
மொத்தமா சொன்னா கோச்சிக்கும், ஆமா சொல்லிபுட்டேன்.
ஓ.. குழந்த புள்ள மாதிரின்னு சொல்றீங்க. சரி சரி!!
கணினி எப்படி இருக்குமுங்க?
அட நம்ம டீவீ பொட்டி மாதிரிதாங்க இருக்கும்.
ஆனா கொஞ்சம் சின்னதா இருக்கும். பக்கத்துல ஒரு டப்பா இருக்கும். அதுலதான் கணினியோட மூளை இருக்கும். கூடவே ஒரு தட்டச்சு பலகை ஒன்னும் இருக்கும்.
அதுலதான் நம்ம கணினிய என்ன செய்ய சொல்றமோ அதை தட்டச்சி சொல்லனும்.
உதாரணமா நம்ம குழந்த புள்ளைங்கள பின்மண்டையில தட்டறதில்லையா அதுமாதிரிதான்.
சரீ, கணினி எதுக்கு வேணும்?
என்னங்க இப்படி கேட்டுடீங்க? எதுக்கு வேணும்னாலும் கணினிய உபயோகபடுத்தலாமுங்க.
அமெரிக்காக்காரன், ராக்கெட்டு உடறதுக்கே கண்ணியதாங்க பயன்படுத்தறான், நீங்க என்ன
இப்படி சொல்லிட்டீங்க?
அமெரிக்காகாரன் எது வேணுன்னுனாலும் செய்யட்டும்.
நான் என்ன பண்றது கணினிய வெச்சுக்கிட்டு?
நீங்க ரொம்ப அவசரபடறீங்க, முதல்ல இந்த படத்த பார்த்து நல்ல ஞாபகம் வெச்சுக்குங்க.
அதுக்கப்பறம், கணினிய எப்படி இயக்குறதுன்னு உங்களுக்கு சொல்லிட்டு,
அதுக்கூம் அப்பறம், அத வெச்சு என்ன பண்ணலாம் நீங்கன்னு சொல்றன்...
பேசி பேசி வாய் வரண்டு போச்சு ஒரு மோருத்தண்ணி கிடையாதா??
(அப்பவே யோசிச்சேன் நீ மோரு கேப்பன்னு ...)...
Posted at 07:25 pm by karthikramas
Permalink
Thursday, April 15, 2004
அண்புள்ள பாரா,
பேட்டியின் ஒரு பகுதியை படிக்கும் முன்னரே சிறியது என்று நினைத்து எழுதிவிட்டேன். காரணம் நான் படித்த போது , பேட்டி ரத்த சிகப்பில் இருந்தது. 2 ம் பாகம் என்ற தலைப்பு அப்போது இல்லை. ஒரு அகால நேரத்தில் படித்தேன். :-)
எஸ் ராமகிருஷ்ணனைபற்றி நான் புரிந்து கொண்டவை இந்த பேட்டியில் இருந்து. (னீங்கள் சொன்ன புஸ்தக ஜோசியம் மாதிரி , பேட்டி ஜொசியம்.)
சிறு வயதில் மிகவும் இணைக்கப்பட்டுள்ள (க்ளோஸ் நிட்?) குடும்பத்த்ல் வளர்ந்ததால், இயற்கையாகவே மென்மையானவராய் இருந்துள்ளார். மிகவும் விட்டு கொடுக்கும் குணம் உள்ளவர் அல்லது மற்றங்களை ஏற்றுகொள்பவ்ர். ஆனால் தனது துறையில்தான் இருப்பது என்ற அடமும் உடையவர்.
இப்படி மாற்றங்களை ஏற்றுக் கொள்வதால், செளகரியங்களையும் அதைவிட மிகப் பெரும் இடையூறுகளையும் சந்தித்திருப்பார்
தன் வாசிப்பில் இருந்து கருத்துகளை பின் மூளையில் சேகரித்து கொள்பவர். அவர் தெரிந்து கொண்ட காரணங்களை தனது புனைவுகளில் சொல்ல முனைகிறார். இது மிகப் பெரும் வரிகளில் அவரது படைப்புகளில் நடக்கலாம். அல்லது இப்படியும் சொல்லலாம். இந்த காரணத்துக்கா இது விளைந்தது, அல்லது இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்ல கூடியதாய் உள்ளன இவரது சிந்தனை ஓட்டம். புனைவுகளின் பின்னணியில் அவசியம் ஒரு காரனத்தை காட்ட முயல்கிறார் என்றும் சொல்லலாம். அவர் சொன்னது போல் கனவுகளை மிகச் சரியான வாழ்வியல் அலது தினசரி வாழ்க்கை உதாரணங்களில் பொருத்துவதில்தான் இவரது வெற்றி அமைகிறது.
===================================
னான் சொன்னது அததனையும் டுபாக்குராய் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.. :-)
Posted at 07:01 pm by karthikramas
Permalink
Wednesday, April 14, 2004
திண்ணை என் கடிதத்தை எடிட் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பியது.
நான் எதிர்பார்த்தது தான். ஒன்றும் இல்லை , வாசகர் சுவாரஸ்யத்துக்காக வம்பு சண்டைகளை எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள் என்று யோசித்தேன்.
சரி, திண்ணைக்கு எடிட்டிங் அறிவு மிகவும் குறைவு என்பது ஊரே அறிந்த விஷயம்தானே...
கடிதத்தின் திருத்திய வடிவம் இது. இதற்காவது, மிஸ்டர் கேனையன் பதிலளிக்கிறாரா என்று பார்க்கிறேன். அவரால் சத்தியாமாய் பதில் சொல்ல முடியாது என்பது நான் அறிந்ததே...
அப்படியும் அவர் பதில் சொன்னால் இன்னும் நூறு கேள்விகளை எழுதி அனுப்புவதாய் இருக்கிறேன்.
மிஸ்டர் கேனையன் என்ன செய்கிறார் என்றுதான் பார்க்கிறேன்.....
திண்ணையின் ஜனனாயகம்தான் என்னை புல்லரிக்க வைக்கிறது.
***********************************************
திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். இருப்பினும், நாத்திகத்தின் கருத்தாங்களின் பிடியில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல்.முடிந்தால் ஆசாரகீனன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தொடர்ந்துபதில் சொல்லிவிட்டு கட்டுரைகளை மேற்கொண்டு எழுதிச் செல்லட்டும்.
உதாரணமாய் கடவுளை சிலை மட்டுமே என்கிற மூடத்தனத்தை பெரியாரியம் பரப்புவதை அடியோடு வெறுக்கிறேன். என்வேதான் பெரியாரிகளுக்கு,சிலைக்கு செருப்பு மாலை போடும் மிக இழிந்த ஒரு யோசனை உருவாயிற்று. இது பெரும் பாலான மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்பதை கூடவா அந்த இயக்கத்தால் யோசிக்கமுடியவில்லை. இவர்களில் பலர் நாய்க்கும், பாம்புக்கும் பயப்படுபவர்கள். ஆனால் கடவுளுக்கு பயப்படாதவர்கள் என்னே இவர்களது வீரம்.
உதாரணமாய் ஒரு கேள்வி,
ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடைய உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை "கடவுள்" என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?
இவர்கள் "கொழுனன்" என்றால் புருசன் என்று அர்த்தம் கற்பிப்பார்கள்.
"கற்பு" என்றால் உடல் ரீதியானது என்று அர்த்தம் செய்துகொண்டு,கற்பு என்பது என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். பெய் என்று சொன்னால் மழை பெய்யலையே, அதனால் எல்லா பெண்களும் கற்பில்லாதவர்களா என்று வாய் கூசாமல் கேட்பார்கள்.
ஜால் சாப்பு செய்யாமல், கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். பெரியார் கடவுளை ஒத்துகொண்ட இடம்
கட்டுரைகளில் எழுதப்படாமல் இருக்கலாம். நீங்களும் படிக்காமல் இருக்கலாம். வரலாஅற்று சம்பவங்களையும், பெரியார் "எனக்கு பின்னால் ஒரு கூட்டம் வளர்ந்து விட்டது, என்னால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிகொள்ள முடியாது" என்று சொன்னதை பார்த்தவர்களும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாகத்தெரியும்.
இது போல் ஆயிரம் கேள்விகளை என்னால் அள்ளி வீசமுடியும். என் நோக்கம் அதுவல்ல.
பெரியாரிகளையோ, அவரது கருத்துகளை இகழ்வதோ என் நோக்கமல்ல. மாறாக பெரியாரியத்தை பேணுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற என் ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்.
******************************************************
Posted at 08:36 pm by karthikramas
Permalink
Tuesday, April 13, 2004
நான் திண்ணைக்கு எழுதிய இவ்வாரக் கடிதம். திண்ணை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்..
=======================================================
அன்புள்ள வாசகர்களுக்கு,
திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.
அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.
இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல்(மிஸ்டர் ஆசார கீனன்(இன்னாடா பேரு இது ஆசாரகேனயைன்னு!!!), யார்ரா இந்த கார்த்தின்னு னினைச்சீங்கன்னா, திண்ணை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடாதேன்னு, முன்குறிப்பா சில வரிகள்.
நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். எனவே என் வாள் (என்ன வாள் வாள்னு பிராமணபிள்ளை போல பேசறான்னு நினைக்கப்படாது) பெரியாரை அவமதிக்க துணியாது.
இதோ வந்டேன் மேட்டருக்கு:
பெரியாரின் எத்தனையோ சிந்தனைகளை நான் ஏற்றாலும், இந்த டுபாக்கூர் கத்தலாகிய , "பெய்யுன்னா மழை பெய்யுமா?"
"ஊரில் எல்லா பொன்னுகளுக்கும் கற்பில்லையா?","கற்புன்னா இன்னா?" இதெயெல்லாம் தான் கொஞ்சம் கேட்டா பல்பு ப்ளிக்கர் ஆவுது மைண்டுக்குள்ளே.
ஐயா சாமி ஒரே ஒரு கேள்விதானுங்க கேக்க போறேன். அது கூட நான் கேக்கலைங்க ஒரு புழு கேக்குது.
இந்த இடத்துல அந்த புழுவ நான் ரெப்ரெசண்ட் பண்றதால அந்த புழுவுக்கு கார்த்தி புழுன்னு பேரு வச்சிடாலாம்.
கார்த்திபுழு இன்னா கேக்குதுன்னா, உங்க பெரியார் பெரிசு, சிலைகளுக்கு (ராமாரா, புள்ளையாரா?? மறந்துடுச்சு மன்னிச்சிக்கீங்க).செருப்பு மாலை போட்டாரே, என்ன மாறி புழுவுங்க எல்லாம் சிலைங்கள கும்புடுறதுல்ல. ஒரு டப்பாவுல களிமண்ண போட்டு வச்சீங்கன்னா மூடி இருந்தா கூட தட்பவெட்பனிலை சரியா இருந்தா, என்ன மாதிரி புழு உண்டாயிடுங்க. இந்த மாறி புழுவ உண்டாக்கறவரதான் நாங்க கடவுள்ன்னு கும்பிறதுங்க. உங்களால டெஸ்டு பண்ண முடியல்லன்னா, ஒரு மாம்பழம் வாங்கி அழுக வச்சி பாருங்க, சீப்பான டெஸ்ட் கேசா முடியுமுங்க. அந்த கடவுளுக்கு எங்க செருப்பு மாலை போடுவாரு உங்க பெரியார் பெருசு ங்கறதுதான் இந்த கார்த்தி புழுவோட கேள்விங்க.
னைசா கேள்வி புரியல்லைன்னு ஆசாரகேனையன் எஸ்கேப் ஆயிடுவார், அதனால நொள்ள தமிழ்ல கேட்கிறேன்.
ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடை உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை
"கடவுள்" என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?
மிஸ்டர் கேனையன்(ஷார்ட்டா)
உண்மையிலேயே னீங்கள் பெரியாரியாய் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் அளித்துவிட்டு, உங்கள் தட்டச்சு தவப்பணியை
தொடருங்கள். உண்மையிலேயே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தாக்கா அட்லீஸ்டு எங்கிட்டயாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா பெரியாரிகிட்டயும் கேட்டுபாருங்கள். (பெரியாரிடமே இந்த கேள்வி கேட்டாயிற்று, மிஸ்டர் கேனையன்! அதை பத்தி அவர் வெளில மூச்சு உட்டுக்கல?)
சும்மா மீனிங் தெரியாம, "கொழுநன்" ன்னா புருசன்ங்காரன், "எல்லா பொன்னுங்களுக்கும் கற்பில்லையான்னு" கேள்வியெல்லாம் கைவலிக்க தட்டச்சி, திண்ணை மாறி மாதிரி ஒரு இடத்துல சீன் போட்டாக்கா உங்களுக்கு எல்லாம், ஐன்ஸ்டீன்னு மனுசுல நெனப்பு.
இவ்ளோ கஷ்டப்பட்டு அடிச்சுருக்கேன் இத்தையும் உங்க பெரியார் கட்டுரை பட்டியல்ல ஒரு லிங்க் குடுங்களேன். முடியல்லன்னா உங்க கட்டுரைக்கு இத்தோட ஒரு முற்றுபுள்ளி வைங்கள்.
என்னுடைய கடிதத்துக்கு,திரு ஆசாரகீனனனிடமிருந்து என்னால் எதிர்பார்க்கப்படும். ட்ரேட்மார்க் திண்ணை புஸ்வாண பதிலகள் சில.
1. கார்த்தி என்பவரது கேள்வி என்னை மிகவும், வாய்விட்டு வலிக்குமளவுக்கு 10 நிமிடங்கள் வரை சிரிக்க வைத்தது.
வாய் வலிக்கு மருத்துவரிடம் போனால் செலவு இவர்தான் தரவேண்டும்.
2. இவர் எதை வேண்டுமானாலும் "கடவுள்" என்று சொல்லட்டுமே, யார் தடுத்தது, அதற்கு நான் யேன் பதில் சொல்ல வேண்டும். வேறொருவர் குப்பைதொட்டியையோ, குஷ்புவையோ கூட "கடவுள்" என்று சொல்லலாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.இதற்கும் எனது கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம்.
3. ஆசாரகீனன் என்றால் என்ன என்று புரியவில்லை இவருக்கு, புழு எப்படி வந்தது என்று புரிந்ததாக சொல்வதை நம்பமுடியவில்லை.
4. இவருக்கு பெரியார் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை. இந்த மாதிரி ஜந்துக்கள் பெரியாரை மதிப்பதை விட சும்மா இருக்கலாம்.
5. பிரச்சினையை திசைமாற்ற முயற்சிக்கிறார். இவரூக்கு பதிலளிப்பதற்க்கு எனக்கு நேரமில்லை.
பொறுமையும் இல்லை.
6.இவருக்காக நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை. (மீசை துடிக்கிது லேசா..)
Posted at 04:42 am by karthikramas
Permalink
Sunday, April 11, 2004
APACHE installation / PHP installation on Linux
Guide To Insatll Apache web server and PHP on Red Hat Linux 6.2. This guide is copied from
http://www.phpfreaks.com/tutorials/12/2.php
==========================================
When you are ready to setup a web server, you need something reliable. You need something with power. You'll also need something that is hard to hack. The Apache Foundation has a great free web server package that is known and used worldwide as the number one solution for web hosting. This tutorial will show you how to setup an Apache + PHP web server that will solve all of your problems.
This is a Linux tutorial. A Windows tutorial may come soon.
Step 1. Obtaining the Source Packages
I always recommend that you compile via source package (tarballs). The reason being is that you have control over what goes into your installation. It's more of the "Advanced" installation where you get to select installation options. Here's some addresses of the sites. I will not post specific files here because they may be updated by the time you read this tutorial:
Make a directory on your linux box called something like "/usr/local/src/webserver" Download these files to here. You may do this via SSH and CD to that directory and type "wget the_url_here" for the respective files.
Apache Web Server - http://www.apache.org/dyn/closer.cgi/httpd/
Look for the Apache 1.3.2x series. At the time of writing this tutorial, Apache 2 and PHP are not working properly unless you do some massive testing with CVS code, but that's not recommened!
PHP - http://www.php.net/downloads.php
Look for the 4.2.x series under Complete Source Code.
Step 2. Unpacking the Source Packages
Go to the source directory and type:
tar zxvf apache_1.xxxxx.tar.gz
tar zxvf php_4.xxx.tar.gz
Step 3. Create an Install Script for Apache
You will now have two new directories. Let's start by creating a simple script that you can edit. For this, I use a program in linux called "Pico". It's much easier to use than VI but it's up to you.
Type: pico
You'll be brought up into an editor program.
Here we're going to type in exactly what we would type in the command line, except make it editable so it's easier to manage when we want to add or remove different configure options. Here's the script I use for Apache:
cd apache_1.3.xx (Make sure this matches the proper directory)
./configure
--prefix=/www (This is where you want to install Apache Server to)
--enable-module=so
--enable-module=rewrite
--enable-shared=rewrite
--enable-module=setenvif
--enable-shared=setenvif
--enable-module=mime
--enable-shared=mime
--enable-module=mime_magic
--enable-shared=mime_magic
--enable-module=speling
--enable-shared=speling
--enable-module=dir
--enable-shared=dir
--enable-module=auth
--enable-shared=auth
--enable-module=access
--enable-shared=access
--enable-module=alias
--enable-shared=alias
--enable-module=status
--enable-shared=status
--enable-module=userdir
--enable-shared=userdir
--enable-module=vhost_alias
--enable-shared=vhost_alias
--enable-module=env
--enable-shared=env
--enable-module=log_referer
--enable-shared=log_referer
--enable-module=log_config
--enable-shared=log_config
--enable-module=log_agent
--enable-shared=log_agent
--enable-module=headers
--enable-shared=headers
make
make install
Note: The behind every line is important except for the last line in that option. Do not put one for the last line!
Note2: Do not put any of my comments in () your install script!
Decide which modules you need here at the apache website http://httpd.apache.org/docs/mod/index.html And edit this setup accordingly.
Save this by pressing CTRL X and you'll be prompted to enter a file name. Let's call this "apache_install".
Step 4. Create an Install Script for PHP
This script will serve the same purpose as creating an install script for Apache. It saves you time when you need to recompile your server. Here's the script I use: cd php-4.2.xx (Check this path with your specific system, wherever you upacked the tarball)
./configure
--with-mysql
--with-apxs=/www/bin/apxs (This is where you installed Apache to)
--enable-trans-sid
--enable-ftp
make
make install
Please check with PHP's website to see what configure options you need here: http://www.php.net/manual/en/install.configure.php After you have determined your installation options, press Ctrl X to get out of pico and save this as "php_install".
Now type:
chmod +x apache_install
chmod +x php_install
Step 5. Installing Apache and PHP
Now that the scripts are built, we can install them.
For Apache type:
./apache_install
You'll see a bunch of things happening on your screen, it's ok. It's going to configure the source tree then make the installation files and install them.
For PHP type:
./php_install
Just like the apache script, you'll see a bunch of things happening. It's ok. Let PHP do it's thing and keep your eyes open for any errors.
Now, cd into your php_4.xxx directory and type:
cp php.ini-dist /usr/local/lib/php.ini
This copies the php.ini to it's proper place.
 Step 6. Configuring Apache
Here's the part where we are going to have to edit the Apache Web Server's configuration file because by default it does not support php. That's ok, but we'll finish up a few things here.
Type:
pico /www/conf/httpd.conf
You'll once again be in the PICO editor and you'll see your Apache configuration file. Don't get to carried away right now because we want to ensure that things are working properly before going through alot of configuration, only to find out we'll have to recompile again to fix errors.
Scroll down to a section where you see some items like this:
LoadModule vhost_alias_module libexec/mod_vhost_alias.so
LoadModule env_module libexec/mod_env.so
LoadModule config_log_module libexec/mod_log_config.so
LoadModule agent_log_module libexec/mod_log_agent.so
LoadModule referer_log_module libexec/mod_log_referer.so
LoadModule mime_module libexec/mod_mime.so
LoadModule autoindex_module libexec/mod_autoindex.so
LoadModule dir_module libexec/mod_dir.so
LoadModule action_module libexec/mod_actions.so
LoadModule speling_module libexec/mod_speling.so
LoadModule userdir_module libexec/mod_userdir.so
LoadModule alias_module libexec/mod_alias.so
LoadModule rewrite_module libexec/mod_rewrite.so
LoadModule access_module libexec/mod_access.so
LoadModule auth_module libexec/mod_auth.so
LoadModule headers_module libexec/mod_headers.so
LoadModule setenvif_module libexec/mod_setenvif.so
LoadModule php4_module libexec/libphp4.so
The red line is the one you want to ensure is properly added. It may be in a different order than this, but if your php installed properly, you'll see this line here. If it is not there, you'll probably want to go back and check to see if PHP configured and installed properly.
Next, we want to look at this section. For some reason, especially on SSL installations, this line is never added but it is required for PHP to run properly. This is very important to do. This was not in the PHP installation directions for Apache. If you are having problems with being prompted to download your PHP scripts in the web browser, this is a 99% probabilty of why:
ClearModuleList
AddModule mod_vhost_alias.c
AddModule mod_env.c
AddModule mod_log_config.c
AddModule mod_log_agent.c
AddModule mod_log_referer.c
AddModule mod_mime.c
AddModule mod_negotiation.c
AddModule mod_status.c
AddModule mod_include.c
AddModule mod_autoindex.c
AddModule mod_dir.c
AddModule mod_cgi.c
AddModule mod_asis.c
AddModule mod_imap.c
AddModule mod_actions.c
AddModule mod_speling.c
AddModule mod_userdir.c
AddModule mod_alias.c
AddModule mod_rewrite.c
AddModule mod_access.c
AddModule mod_auth.c
AddModule mod_headers.c
AddModule mod_so.c
AddModule mod_setenvif.c
AddModule mod_php4.c
Once again, the red line is the really important one here.
Next, we need to add a handler to Apache to recognize what to do with the PHP scripts. While still in your PICO editor, Add this somewhere around the line that says:
AddType application/x-tar .tgz
And add these two lines below it:
AddType application/x-httpd-php .php
AddType application/x-httpd-php-source .phps
Last, we are going to setup some directory default documents. Look for the line that says:
DirectoryIndex index.html
Change it to:
DirectoryIndex index.html index.php default.php index.htm
This allows any directory with these files to load them by default. Trust me, you need this.
Press Ctrl X again to exit your PICO editor and hit Y to save the current document.
Â
Step 7. Setup a Test PHP Script
This is another great way to test your PHP to see if it's working. CD to /www/htdocs and type "pico". Once again, in pico type this:
Now, press CTRL X and then save this as "info.php"
Â
Step 8. Start the Apache Web Server
Let's do two things here. One, we'll check if your configuration is right. Type:
/www/bin/apachectl configtest
Press enter and you should see a "SYNTAX OK". If it's ok, let's type this:
/www/bin/apachectl start
Now, let's go to your web browser and type in: http://localhost/info.php
You should see an nice formatted page that the PHP engine generated telling you all of your PHP information. If this is correct, you can pat yourself on the back and have a coke.
If things did not go well for you, I recommend you go back and check your configure options in the original scripts we created.
-- Notes --
With this installation, your default Document Root is /www/htdocs
To restart apache type: /www/bin/apachectl restart
To stop apache type: /www/bin/apachectl stop
Stay tuned for more tutorials about how to setup your own Virtual Hosts and DNS server to run off of your home connection.
Posted at 10:54 pm by karthikramas
Permalink
Saturday, April 10, 2004
போஸ்ட் நியூக்கில் ஒரு வலைத்தளம்
வெங்கட்டு அண்ணன் தமிழறிவியற் கட்டுரைகள் எழுத வலைப்பதிவாளர்களுக்கு போஸ்ட் நியூக்கில் ஒரு வலைத்தளம் அமைத்து தர முன்வந்துள்ளார். அவருடன் சேர்ந்து கார்த்திக்(நான்), சங்கர்(சுவடு) பிஎச்பி கற்றுக்கொண்டு நிரலிகளை மாற்றியமைத்து தருவதாய் சொல்லியுள்ளோம். சங்கர் அதைத்தொடர்ந்து வெங்கட்டு அண்ணன் எங்களிடம் படப்போகும் அவஸ்தையையும் அழகாய் விவரித்துள்ளார். நானும் வெங்கட்டு அண்ணனும் வேலை செய்வது இப்படித்தான் இருக்கப்போகுது.
வெங்கட்டு: நீதான் கார்த்திக்கோ
நான்: நீங்கதான் வெங்கட்டோ..
வெங்கட்டு: இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.. இணையத்துல போறவங்க வர்ரவங்க கிட்ட எல்லாம்
சண்டை போடுறியாமே என்ன விஷ்யம்..
நான் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்ணா.. அதெயெல்லாம் எச்சை தொட்டு..
வெங்கட்டு: என்னது?..
நான்: இல்லங்ணா எச்சை தொட்டு அழிச்சுடுங்கண்ணு சொல்ல வந்தேன்..காசியண்ண,மதியக்கா,உஷாக்கா வெல்லாம் எனக்கு பிரண்டு
வெங்கட்டு: முதலில் இந்த நிரலியை மாத்து....
நான்: ம்ம்ம் எனக்கு பிஎச் பி தெரியாதுங் கண்ணே..
வெங்கட்டு: அது எனக்கு தெரியும்.. சொல்றத செய்டா சோவண்ணா..
நான்: அண்ணே எனக்கு இன்னிக்கு லேசா தலை வலிக்குது...
வெங்கட்டு: என்னது..
நான்: இல்லங்ணா , காபி குடிக்கனும் போல இருக்குது..
வெங்கட்டு: என்னாது ..
நான்: இல்லீங்கண்ணா, அம்மா ஞாபகம் வந்துடுச்சு ..ம்ம்ம்ம்(அழுவது போல் நடிக்கிறேன்)
வெங்கட்டு: எங்கிட்ட மாட்டுன இல்ல உங் கதை கோயிந்தா தான்.. காபி கிடையாது ஓன்னும் கிடையாது போய் வேலைப் பாரு.
நான்: சரிங்ணா ரெஸ்ட்ரூமாவது..(சதி லீலாவதி கமல் மாதிரி நெளிகிறேன்)
வெங்கட்டு: எனக்குன்னே வந்து சேர்ந்தான் பாரு... இவனுங்கள வச்சு நான் போஸ்ட் நியூக் செய்ஞ்சா அடுத்த புத்தாண்டுக்கு கூட ரிலீஸ் பண்ணமுடியாது. போல இருக்கு..
நான்: (முனுமுனுத்தபடி..) முதல்ல போய் இந்த ஜோசியக்காரன பாக்கனும், ஏழரை , எட்டரைன்னு ஏதோ சொன்னான்.
வெங்கட்டு: என்ன அங்க சத்தம்..
நான்: இல்லங்கன்னா இங்க ஒருத்தர் உங்கள பத்தி விசாரிச்சாரு , நல்ல விதமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.
(ரெஸ்ற்றூமிலிருந்து வந்துவிட்டேன்..)
வெங்கட்டு: பி எச் பி ன்னா என்னதெரியுமா?
நான்: permanent head problem...
வெங்கட்டு: அடீங்.. (அதற்குள் நான் எஸ்கேப் ஆயிவிட்டேன்)
சங்கர் நல்ல பிள்ளையா எல்லாத்தையும் முடித்து விடிகிறார்.
வெங்கட்டு: அந்த variable அல்லோகேட் பண்ண சொன்னனே என்ன ஆச்சு.
சங்கர்: அது முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா
வெங்கட்டு: அந்த சர்வர் காண்பிகரேஷன செக் பண்ண சொன்னனே என்ன ஆச்சு.
சங்கர்: அதுவும் முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா
வெங்கட்டு: சரி சாப்பிட்டியா
சங்கர்: அதுவும் முந்தா நேத்தே முடிச்சுட்டேங்ணா.. ஆங் இல்லண்ணா
வெங்கட்டு: டேய் ஓவரா நல்ல புள்ளயா சீன் போட்டா இப்படித்தான் ஆகும், போய் சாப்பிடு...
இப்படியாக தொடர்கிறது... பி எச் பி....
Posted at 05:29 pm by karthikramas
Permalink
Thursday, April 08, 2004
காசி அண்ணன் இன்று அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் பொருட்களின் பின்னணியில் இருக்கும் அறிவியலைப் பற்றி வலைப்பதியலாம் என்ற ஒரு கருத்தை சொன்னார்.
இதனால் மக்களின் அறிவியல் பார்வை விரிவடையும் என்றும் சொன்னார்.
அவருடன் நான் முழுதும் ஒத்துப்போகிறேன்.
இருந்தாலும் என்னுடைய இதற்கு இணையான சிந்தனை(parallel thinking only) இங்கு எழுகிறேன்.அன்றாட தேவைக்கான பொருட்களின் அறிவியலைவிட எனக்கு ஏனோ அதைவிட ஒரு
ப்ரோகிராம்மிங் லாங்குவேஜை பற்றி தமிழில் எழுதி வைப்பது இன்னும் உபயோக மாய் இருக்கும் என தோன்றுகிறது. இனி அதை நிரலெழுதுதல் என குறிப்பிடுகிறேன்.
எத்தனையோ(லட்சமா?) தமிழிளைஞர்கள் மிகுந்த தமிழறிவோடும், சொற்ப ஆங்கில அறிவோடும், வேலையில்லாமலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கணித அறிவும் உள்ளது. தமிழறிவும் உள்ளது.
பிரச்சினை என்ன வேலை இல்லை. இவர்களுக்கு எளிய தமிழில் ஜாவா என்பதை இப்படி புரிந்து கொள்ளலாம். சி ++ ஐ இப்படி புரிந்து கொள்ளலாம் என்று நாம் எழுதிவைத்தால் நிரலெழுதுவதில் இவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். ஆர்வம் உண்டாகுமோ இல்லை, நிரலெழுதுதலை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும். முதற்படி அறிமுகத்தை நம் கட்டுரைகள் செய்தால் கூட மேற்கொண்ட புரிதல்களை மற்ற ஆங்கில புத்த்கங்களிலிருந்து பெற்றுகொள்வார்கள்.
நிரலெழுத என்ன அடிப்படை அறிவுதேவை? அறிவியலை புரிந்து கொள்ளுவதைவிட மிகவும் சொற்பமான அறிவே தேவை. அறிவியல் கட்டுரையை படிக்க ஒரு இளைஞன் காசு கொடுத்து இணையத்தில் வந்து படிக்கமுடியுமா? ஆனால் தமிழில் ஒரு 200 கட்டுரைகள் நிரலெழுதும் வழிகளை பற்றிய புரிதலை தரக்கூடிய கட்டுரைகள் இருந்தால் , அதற்காக் ஒரு தமிழிளைஞன் காசு கொடுத்து இணையத்துக்கு வந்து கற்று கொண்டாலும் சாலத்தகும். ஏனெனில் அது அவன் வாழ்வு சார்ந்த பிரச்சினையாகிவிடும்.
சரி , இந்த பக்கத்தில் நமக்கு இது எப்படிப்பட்ட வேலை? மிகவும் எளிமையான , அல்லது சிறு முயற்சியைக் கோரும் வேலைதான். யோசித்து பாருங்கள். நம்மில் மிகப்பெரும்பாலோர் நிரலெழுது வேலைகளில் இருக்கிறோம். நம்மால் அதை மிக எளிதில் எழுதிவிட முடியும். நமக்கு தேவையான அளவு தொழில் அறிவும் அனுபவமுமு உள்ளது. அதை நமது தம்பிகளுக்கு கிடைக்கச் செய்வோம்.
நமது இளைய தம்பிகள் நிரலெழுத கற்றுக்கொண்டால், நிரலெழுதுவது மட்டுமல்லாமல் அவர்கள் ஒரு நிரழெழுதியாய் சிந்திக்கவும் தொடங்கிவிடுவார்கள்.
ஒரு கத்தரிக்காயை வெட்டி நான் படம் போட்டு அதன் பகுதிகளை பற்றி எழுதுகிறேன்.
கத்தரிக்காய் சாப்பிடும் எவரும் அதை புரிந்துகொண்டால் நலமே? ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய
கட்டாயம் இல்லை. சாப்பிட்டால் போதுமானது. அது போலவே ஒரு கை பேசியின் அறிவியலைப் பற்றி எழுதினால், தெரிந்து கொண்டால் நல்லதுதான். அறிவு நிச்சயம் விரிவடையும்தான். ஆனால் எந்த அளவுக்கு என் இன்றைய தேவைக்கு அவசியம் அது? எனக்கு அவசியம் கைபேசி வாங்கும் அளவு பணம்தானே ஒழிய கைபேசியின் அறிவியல் இல்லை.
அதற்காக் கைபேசியின் அறிவியலை எழுதுவதை நான் குறைகூறவில்லை.
நாம் உடனடி தேவையை பூர்த்தி செய்வது பற்றி யோசித்து அதை பூர்த்தி செய்வோம். நம் கட்டுரைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையிலுள்ள , மிக அவசியமான பிரச்சினையாகிய வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவட்டுமே!! நம்மில் எத்தனை பேர் ஊர்களிலிருந்து சென்னை வந்து
வேலை செய்து உயர்ந்திருக்கிறோம். அது போல் எத்தனையோ தமிழறிவு கொண்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் எதாவது செய்வோமே..
இந்த செய்தி மிகவும் மகிழ்வூட்டுவதாக உள்ளது. அதாவது அடுத்துவரும் 4 ஆண்டுகளில் 1 லட்சம் கணினி வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புள்ளது. இதில் சில ஆயிரமோ அல்லது சில நூறு இளைஞர்களோ நம்து கட்டுரைகள்¡ல் வேலைவாய்ப்புக்கேற்ற கல்வியை பெறட்டுமே!!
இதற்கான உத்திகளைபற்றியும் மாதிரி கட்டுரையும் நான் எழுதுகிறேன்.
ஒரு தொடர்ச்சியாய் சிந்தித்துப் பாருங்கள், அடுத்த 4 ஆண்டுகளில் 100 அறிமுக கட்டுரைகள், 200 இடைனிலை கட்டுரைகள் மற்றும் மொழிப் பெயர்ப்புகளும் தமிழில் இருந்தால் எத்தனை பேருக்கு உதவும். எத்தனை இளைஞர்களுக்கு வழிகாட்டும்.
சுருங்கச்சொன்னால் , நமக்கு இணையக்கடலில் முத்துகள் தேவையில்லை, கட்டுமரங்கள்தான் தேவை அல்லது நீச்சல்தான் கற்று கொள்ளத்தேவை. நிரலெழுதிகளை உருவாக்குவோம். தமிழகத்தை வளமாக்குவோம்.
The Hindu - 13.03.2004
CHENNAI, MARCH 12. About one lakh jobs in information technology are likely to be created over the next three-four years in Chennai, with the setting up of new development centres by three major players, Infosys, Wipro and Tata Consultancy Services.
Posted at 07:40 pm by karthikramas
Permalink
இந்த வாரம் வலைப்போவில் துறைசார் மற்றும் அறிவையல் பதிப்புகள் பற்றிய பேச்சு நடந்தது.
அதற்கு முன் வாரத்தில் பிரபு, சுட்ட எழுத்துகள் , சுடாத எழுத்துகள், மற்றும் சுரதாவின் மருத்துவ பதிவு போன்றவற்றைப்ற்றி கோடிட்டு எழுதினார். பிரபுவும் சட்டம் பற்றிய தனது துறைசார் எழுத்துகளை பதிக்கிறார்.
சுந்தரவடிவேல் , நக்கீரனின் பதிவில் உள்ள கேள்வியாகிய "சினிமா,அரசியல்,இலக்கியம்" இதைவிட்டா வேறு பதிக்க கூடாதா என்கிற கேள்வியை வலைப்பூவில் கேட்க இந்த கேள்வி தீ பற்றிகொள்கிறது.ரவி ச்ரீனிவாஸ் அத்யெல்லாம் படிக்க தமிழ்வலைப்பதிவில் ஆளு இருக்கா? என்னய்யா உங்க சீரியஸ்னஸ் என்று நறுக்குன்னு கேட்கிறார்.
அருணா இதைத்தொடர்ந்து தந்து வலைப்பதிவில் கூட்டு வலைப்பதிவு பற்றி எழுதுகிறார்.
கார்த்திக்கோ தமிழ்வலைப்பதிவு இன்னும் குழந்தைதான் என்று ஒரு நொண்டிச் சாக்கை சொல்கிறார்.
பிற்காலத்தில் இது வரலாம் என்று ஒரு உப்பு சப்பில்லா ஆருடம் சொல்கிறார்.
இந்தச் சுற்று பேச்சு வார்த்தையில், சுந்தரவடிவேல்,அருணா,பாலாஜிபாரி,காசி,டுபுக்கு,கைகாட்டி,தஙமணி,ரமணி,உஸ்கா,கார்த்திக்ராமாஸ் அகியோர் கலந்து கொள்கிறர்கள்.
தமிழ் வலைப்பதிவின் பிதாமகர்களில் ஒருவரான பத்ரி , 5 நாள் கிரிக்கட் பந்தயத்தை பார்க்க லாகூர் சென்றுவிட்டார்.
வெங்கட்டு , நிறைய விஷ்யங்களில் முன்னோடியாய் இருப்பதைப் போல், தான் ஏற்கனவே சிந்தித்து
பதித்து வைத்திருந்த, கருத்துபக்கத்தை காண்பிக்கிறார்.
ஸ்லாஷ்டாட்,போஸ்ட்னூக் என்கிற வாய் சுளுக்கிகொள்ளும் வார்த்தைகளையும் தளங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
விவாதம் எந்த முறை சிறந்தது என்று திரும்புகிறது.
மதி கூட்டு வலைப்பதிவு செய்துதர முன்வருகிறார்.
ரவியோ கட்டுரைகளை எப்படி எழுதுவது வகைப்படுத்துவது என்று சில சில விஷ்யங்களை சொல்கிறார்.
இரண்டாம் நாள் பேச்சுவார்த்தையில் டுபுக்கு,கார்த்திக்ராமாஸ்,ரவி ஸ்ரீனிவாஸ்,காசி ஆகியோர் கலந்து கொள்கிறர்கள்.
சுந்தரவடிவேல் ஆசிரியாக இருந்தாலும் அவரால் மறுமொழி இடமுடியாத அவலத்துக்கு ஆளாகிறார்.
விடாமுயற்சியுடன் கருத்து கணிப்பு நடத்துகிறார்,எந்த முறை சிறந்தது என்று.
கார்த்திக்ராமாஸ் ஒரு ஓட்டு நல்ல ஓட்டும் , இன்னொரு கள்ள ஓட்டும் போஸ்ட் நியூக்கிற்கு போடுகிறார். இவரது பிரச்சினை என்னவென்றால் இவருக்கு போஸ்ட்னியூக் என்றால் என்ன்வென்றே தெரியாது. முதலில் உதவிசெய்வதாய் கைதூக்கிவிட்டு, பின் பிஎச்பி தெரியாது என அசடு வழிகிறார்.
பிரகாஸ் கேள்விகேட்டு விளக்கப்பக்கங்களுக்கு சென்று படித்து வருகிறார். இன்னும் நிறைய கேள்விகளை கேட்கப்போகிறார் என்று ஒரு குண்டைத்தூக்கி போடுகிறார். லாகூர் சென்ற பத்ரி திரும்பிவந்து, அருணாவுடன் சேர்ந்து உஷாவுக்கு வலைப்பதிவை பார்க்கும் ஒன்னாங்கிளாச் பாடத்தை நடத்துகிறார். டுபுக்கு லதா எழுத்துரு மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார் , வேலை செய்யுமென்று.
டைனோ,கார்த்திக்,சுந்தரவடிவேல் கொஞசம் நேரம் நகைச்சுவையில் கோல்கேட்டு விளம்பரம் செய்கிறார்கள். முத்து டிஸ்கியில் எழுதிய சு.வேலை வேலை ஒழுங்கா செய் நைனா என்கிறார். ரஜினி ராம்கி போஸ்ட் நியூக் என்கிற அரசியல் கட்சிக்கு ஜே போட்டுவிட்டார்.
காசி எதைபற்றி வலைப்பதிவது என ஒரு பெரிய பதிப்பபை பதிக்கிறார். அன்றாட பொருட்களின் பின் உள்ள அறிவியலை எழுதினால் ரொம்ப உபயோகமாய் இருக்கும் என முதல் பெஞ்சு மாணவனாய் சொல்கிறார். மதி கூட்டு + போஸ்டுனியூக் இரண்டுத்தையும் கலந்து அதிலேர்ந்து ஒரு 50 கிராம் எடுத்து செய்ய்லாம் என்கிறார்.
பிகேஸ் வந்து , யோவ்!! மச மசன்னு பேசிக்கிட்டு நிக்காம எதையாவது எழுதி தொலைஙைய்யா என்று சொல்கிறார். மத்ததெல்லாம் அப்பால பாக்கலாம் என்கிறார்.....
கருத்து கணிப்பில் ரஜினி ராம்கி ஓட்டுபோட்ட போஸ்ட் நியூக்கே 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது என
சுந்தரவடிவேலு அறிவிக்கிறார்.
பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அனைவருக்கும் போஸ்ட்னியூக் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் போஸ்ட்னியூகில் இடமுண்டு(இன்னாயா குழப்பற?? அது அப்படிதாங்க உக்கூம்).
Posted at 01:48 pm by karthikramas
Permalink
Wednesday, April 07, 2004
போஸ்ட் நியூக் ல் செய்தால் தொகுப்பு முறை ச
துறைசார் கட்டுரைகளையும், அறிவியல் கட்டுரைகளை எழுத சிறந்த முறை எது என
ஓட்டெடுப்பு நடக்கிறது (சுந்தரவடிவேல் வாரத்தில்) ?
மறுமொழி இட முடியவில்லை. எனவே என் குழப்பத்தை இங்கே எழுதிகிறேன்.
இந்த கணிப்புக்கு ஒட்டுபோடுவதில் கொஞசம் குழம்பி போய்ட்டேன்.(அது சகஜந்தானே என்கிறீர்களா?)
1. போஸ்ட் நியூக் ல் செய்தால் தொகுப்பு முறை சிறப்பாய் இருக்கும், தானியங்கித் தனமாய் தொகுத்துகொள்ளும்(ஆட்டோமாடிக்).போஸ்ட் நியூக்கில் எழுதுவதற்கு முதலில் கொஞ்சம் உழைப்பு தேவைப்பட்டாலும் பின்னர் பயன் அதிகம் இருக்கும்.கொஞசம் நாள் கழித்து ஆரம்பித்தாலும், பயன் அதிகமுடையது போ. நீயூக்கே.
2. கூட்டு வலைப்பதிவில் பதிந்தால் தொகுப்புக்கு மீண்டும் உழைப்பு தேவைப்படும்.
ஏதாவது குழப்பி இருந்தால் மன்னிக்கவும்
Posted at 03:06 pm by karthikramas
Permalink
|