<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Monday, May 31, 2004
சு.கி. சிவத்தின் சுக்காரொட்டிப் பேச்சு..

   இன்று காலையில் நண்பனின் வீட்டில் சன் தொலைக்காட்சியில் சு.கி. சிவம் அவர்களின்
ஒரு உரையைக் கேட்க நேரிட்டது.
  
    சுகி சிவத்தின் நண்பர் ஒருவர் தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைத்து அழைக்க 6 மணிநேரம் பயணம் செய்து இவர் வீட்டிற்கு
வந்து "நேரில் அழைத்தாராம்".  சுகி சிவமோ, ஏண் நேரில் வந்து அழைத்தால் தான் திருமணத்துக்கு வருவேனா? தபாலில் அழைத்தால்
வர மாட்டேனா? என்று கேட்டாராம். அதைக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னாராம் அழைத்த நண்பரிடம்.

  அந்த க்ஷணத்தில் சுகி சிவத்தின் ஒளிவட்டத்தில் பிறந்த கருத்துதான், இனியாரும் நேரில் சென்று அழைப்பது நேரவிரயம் என்பது.
நேரம் பொன்போன்றது என்ற பழைய குருடி கருத்தை பிரதிபலிக்க, தனது ஒளிவட்டத்தில் பிறந்த ,"நேரில் அழைப்பது பாவம், மேலும் நேரவிரயம்" என்ற கருத்தை சன் தொலைக்காட்ட்சியில்  காலையில் வேலைமெனக்கெட்டு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்து
நேயர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

  இந்த மாதிரி அரைவேக்காடுகளை அறிஞராய் காட்டும் சன் தொலைக்காட்சியை என்ன செய்வது?
பேரறிஞர் சுகி சிவத்துக்கு சில கேள்விகள்!  அவரது நண்பர் 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார் என்றால் என்ன பொருள்? நேரவிரயம் செய்கிறார் என்றா?  அவர் சுகி சிவத்தின் வீட்டில் தங்கியிருக்க வில்லை என்று பொருள். அல்லது சுகிசிவத்தை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்காதவர் என்று பொருள்.  எனவே தனது வாழ்வின் மிக முக்கியமான திருமணத்தைச் சாக்காக கொண்டு தந்து அன்புக்கு
பாத்திரமானவரை சந்திக்க வருகிறார் என்று பொருள். எல்லாவற்றுக்கும் மேலாக , தமிழ் நாட்டில் "நேரில் அழைத்தல்தான் கெளரவம்" என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு, சுகி சிவம் தனது திருமணத்துக்கு வந்துவிடுவார் என்று நிச்சயித்துக் கொள்கிறார் என்று பொருள்.
  சுகி சிவம் தனது வீட்டுத் திருமணங்களுக்கு யாரையுமே நேரில் சென்று அழைக்காதவரா? குறைந்த பட்சம் இனிமேலாவது அப்படி செய்ய தயாராய் இருக்கிறாரா?

  நேரில் வந்து அழைக்கவில்லை , அதனால் போகவில்லை வேறு எத்தனையோ  திருமணங்களைப் பற்றி சுகிசிவம் கேள்விப்பட்டிருப்பாரே, அந் நிலை தமிழ்நாட்டில் இருக்க இவரது நண்பரா காரணம்? தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோ நடைமுறைகளில் இதுவும் ஒன்று.அதற்கு சுகி சிவத்தின் நண்பர் என்ன செய்வார்? அவர் வெறுமனே அதை பின்பற்றுகிறார் அவ்வளவுதான். அதைவிட
சுகி சிவத்தை தனது திருமணத்தில் நிச்சயமாய் பார்த்துவிடவேண்டும் என்று உறுதி படுத்தி கொள்கிறார்.
 
  சந்தோஷத்தை தொலைத்த மனித வாழ்வில், இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனிதன் தனது இனபத்தை சக மனிதனிடம் பகிர்ந்துகொள்கிறான். அதை பெரிது படுத்த மிகவும் விழைகிறான். உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள் , அவர் தனது 6 மணிநேரப் பயணம்
தொல்லையானது என்றோ , அலுப்பூட்டியது என்றோ யாரிடமும் சொல்லமாட்டார். மாறாக உங்களை சந்தித்த சந்தோஷத்தை
எண்ணிக்கொண்டு தனது அலுப்பை மறந்திருப்பார். அது ஒருவகையில் அவரே அவருக்கு தெரியாமல் உங்களுக்கு செய்யும் தியாகம்.
அவருக்கு நேரவிரய உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்கள் நண்பருடன் உங்களுடைய நட்பு அப்படியில்லை எனினும் எனக்கு இருக்கிறது அது போன்ற ஏகப்பட்ட நட்பு.


   இந்த அரைவேக்காட்டின் நண்பர் ஒருவர் சொன்னது. அவரது நண்பர் தனக்கு ஏன் அழைப்பிதழ் வைக்கவில்லை என்று கேட்டாரம்,
அதுக்கு அந்த அரைவேக்காடு, "தீபாவளி , பொங்கல் எல்லாம் சொல்லிவிட்டா கொண்டாடுகிறோம்? " என்று பதில் சொன்னதாம்.
அதை இந்த அரைவேக்காடு சுகி சிவம், "எத்தனை உயர்ந்த சிந்தனை என்று பாரட்டியது"?
நீங்களே  உங்கள் வசதிப் போல திட்டிக்கொள்ளுங்கள்.அந்த நண்பர் நடத்திய திருமணத்துக்கு வேறு யாருமே வரவில்லையா? அய்யர் கூடவா? சுகிசிவம் போனாரா இல்லையா? :-)
  


  இனிமேல் யாரும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்காமல் , நேரத்தை விரயம் செய்யாமல் உழைத்தால் இருந்தால், இந்தியா 2020-ல் வல்லரசாகிவிடும் என்று ஒரு முடிவான அறிவுரை வேறு.   யோவ் வருதுய்யா வாயில அசிங்கமாய்!
நீ இனிமேல் சன் நேயர்களின் நேரத்தை விரயம் செய்யாமல் இருந்தால் கூட இந்தியா 2020 -ல் வல்லரசாய் ஆகிவிடும்தான், வேலையை விட்டு போய்விடுகிறாயா?


---------
  இந்த அரைவேக்காடு, இன்னொரு அரைவேக்காட்டை வேறு புகழ்கிறது. எதோ திருக்குறள் முனுசாமியாம் அதன் பெயர்.
எங்கோ இரண்டும் ஒரு இடத்தில் பேச்சாற்ற போயிருந்ததாம். ஞாயிற்றுக் கிழமையாம், நள்ளிரவு 12 மணிக்கு கூட்டம் அதிகமிருந்ததாம்.
இந்த அரைவேக்காடு அந்த அரைவேக்காட்டைப் பார்த்து "ஏன் கூட்டம்?" என்று கேட்க, அந்த அரைவேக்காடு "எல்லாம் அன்எம்ப்ளாயிடு"அல்லது "வேலை வெட்டியத்தவனுங்க நாளை மறுநாள் வேலை போகவேண்டும் என்ற எண்ணமோ அவசியமோ இல்லாதவர்கள்" என்று பதில் சொல்லியதாம்.

  எத்தனை கொழுப்பு பாருங்கள்? இவர்களை மதித்து இலக்கிய கூட்டம் கேட்க வருபவர்களை இதுகள் மதிக்கும் லட்சணம்.
ஒருவேளை இதுகள் பேச்சைக் கேட்பது எத்தனை முட்டாள்தனம் என்று இதுகளே சொல்லுதுகள் போல. :-)

   தனது பேச்சைக் கேட்க வந்திருப்பவர்களின் உணர்வைக் கூட புரிந்து கொள்ளமுடியாத ஜென்மங்கள் , திருக்குறளுக்கு விளக்கம் வேறு செய்கிறதுகள்.  திருக்குறள் முனுசாமி தனது பெயரை திருக்குறள் முட்டாள்சாமி என்று வைத்துக் கொண்டால் மிகப் பொருத்தமாய் இருக்கும்.அதை கேட்க தமிழகத்தில் ஆட்களும் உள்ளது. இந்த மாதிரி அரைவேக்காடுகள் பேசுவதை சன் தொலைக்காட்சி தவிர்த்தால் மக்கள் அதிக பயன் பெறுவர்.

--
யாராவது சுகி சிவத்தின் அஞ்சல் முகவரி தந்தால் இப்பதிவை அவருக்கு சமர்ப்பணமாய் அனுப்பி வைப்பேன்.


Posted at 10:00 am by karthikramas
Comments (16)  

இன்னுமொரு சூரியநமஸ்காரம்.

 பத்ரியின் தமிழ் Vs செம்மொழி குறித்த பதிவு இது.
 இதற்கு மெய்யப்பனின் தொடர்பதிவு இது.

1. முதலில், தமிழ் பற்றி ஆழ் நிலை உண்மைகள் தமிழர்கள்/தமிழ் நாட்டில் உள்ளவர்க(தெலுங்கர்,கன்னடர்,பிற மாநிலத்தவர்)
   அனைவருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இது வரலாறு சார்ந்து மிகவும் முக்கியமான செயல்பாடு.உதாரணமாய் தமிழின் பழம் இலக்கியங்களின் கால வரலாறு தமிழ்நாட்டில் ஒரு கல்லூரி மாணவனுக்குகூட சராசரியாய் தெரிந்திரிக்க வில்லை என்று எளிதில் சொல்லிவிடமுடியும். இது மொழிசார் தொழில்சார் கல்வி  நமக்கு அந்நியப்பட்டதின் விளைவு. அந்நியமாக்கப்பட்டது என்ற உண்மைகள் தெரியவரலாம், தமிழக அரசியலை கிளறிப்பார்த்தால்.

2. செம்மொழி ஆக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை திராவிடக் கட்சிகளின் பம்மாத்தாக இருந்தால் கூட இருந்தாலும்,
 தமிழுக்கு அதனால் பலன்கள் உண்டு (தமிழ் குறித்த ஆய்வுகள், மத்திய அரசில் தமிழின் அங்கீகார நிலை) என்பதினால்,
இந்த கோரிக்கை தமிழர்கள்/ மொழியியல் தெரிந்தவர்கள் வரவேற்க வேண்டிய ஒன்றே என நான் கருதுகிறேன்

3. இதனால் நடைமுறையில் என்ன லாபம் என்ற கேள்வி சரியான கேள்வியாய் இருக்கமுடியாது. ஏனெனில் எந்த ஒரு மொழியின் பயனும் நடைமுறைதளத்தில் இருப்பதைவிட ஒரு அறிவுசார் ,சிந்தனைசார் தளத்தில் தான் அதிகமாய் இருக்கமுடியும்.
அது சிந்தனை சார் தளத்தில் இருந்துதான் அதன் நடைமுறை பயன் தளத்துக்கு நகரும். தமிழ் வழி தொழிற்கல்விக்கு இம்மாதிரியான ஒரு சிந்தனைத்தளம் பின்னிருந்து இயக்குவது மிகவும் அவசியம்.

   இந்த சிந்தனைத் தளத்தில் தமிழ்  போதிய அளவு இல்லாததனால்தான், தமிழ் நாட்டில் ஆங்கிலக்கல்வி மோகிக்கப்படுவதன் பல காரணங்களில் ஒன்றாக சொல்லலாம். எனவே தமிழ்தொழிற்கல்வி வெற்றியடைய,அதற்கு ஒரு பின்இயங்கு சிந்தனைத்தளம் அவசியம். அது
மத்திய அரசால் அங்கீகரிக்கபட்டு இருப்பது, மொழி சார்பு உடைய மாநிலமாகிய அல்லது தமிழை எள்ளும் மனப்போக்குடைய மாநிலமாகிய
தமிழகத்துக்கு மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.

4.  தமிழின் கால வரலாறு,தொன்மைத்தனமை(பழம் எழுத்து வடிவம்) ஆகியவை வெகு ஜனதளத்துக்கு வரவேண்டியதும் அவசியம்.
இது தமிழர்களின் பெரும்பான்மையான எண்ணமாகிய மட்டப்படுத்தப்பட்ட உணர்வைக் களைய உதவும். அது போன்றஒரு உணர்வு இல்லை என்று மறுத்துவிட முடியாது. உதாரணமாய் கல்லுரிகளில் தமிழ் பட்டம் படித்த மாணவர்கள் கூட "தமிழ்ப் பட்டம் படித்து என்ன பெரிதாய் ஆகிவிட்டது" என்று சொல்வதைப் பார்க்க முடியும். இதை வேலை வாய்ப்புக்கு அப்பாற்ப்பட்டு மனோதத்துவ அளவில் பார்க்கிறேன். மொழி அதனளவில்(எந்த மொழியாகிலும்) அறிவியலுடன் கலக்க ஆயத்தமாய்தான் உள்ளது.அறிவியலும் மொழியின் குறையீடு உள்ள இடங்களில் சமரசம் செய்துகொள்ள ஆயத்தமாய்தான் உள்ளது. மொழியை அறிவியலிடம்கொண்டு செல்பவர்கள்தான் எண்ணிக்கையில் குறைவாய் உள்ளனர்,தமிழைப் பொறுத்தவரை. அப்படி குறைவாய் உள்ளவர்களின்
சட்டைப் பைகளும் அநேகம் நேரம் காலியாய் உள்ளது.

5. மட்டையடியாய் எதிர்க்கலாம் என்றால்,  சமஸ்கிருதம் படிப்பதனால் மட்டும் என்ன பெரிய நடைமுறை லாபம் வந்துவிடப்போகிறது?
இந்த கேள்வி மிகவும் முக்கியமாய் படுகிறது எனக்கு.

    ஏன், அதே கோணத்தில் இந்தியை எடுத்துக் கொள்ளுங்கள், வீதிக்கு வீதி ஒரு பிரச்சார சபா வைத்து, இந்தியை தமிழ்நாட்டில் பின்னாலிருந்து முட்டித்தள்ளவேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசுடன் தலையீடு என்பது ஒரு சப்பைக் கட்டு வாதம். ஏனெனில் பாராளுமன்றத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பேசுதல்,எழுதுதல் என்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

 சமஸ்கிருதத்துக்கு சப்பைக் கட்டு கட்டுபவர்கள் சீன, சப்பானிய மொழிகள் பெற்ற மிகப்பெரும் கணினித் துறைவளர்ச்சி எப்படி சாத்தியமானது என்ற என் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாத கணினி முட்டாள்களாக அல்லது மொழியறிவு முட்டாள்களாக உள்ளனர். :-)  இந்த கருத்தை/கேள்வியை நான் திண்ணையிலும் கேட்டேன், சரியான பதில் கிடைக்கவில்லை. உங்கள் இந்தப் பதிவை,சமஸ்கிருத-தமிழ் பட்டிமன்றமாய் மாற்ற எனக்கு விருப்பமில்லை :-). சம்பந்தமிருப்பதால் மட்டும் சொன்னேன்.

  தமிழ் செம்மொழியாய் ஆக்கப்பட/அங்கீகரிக்கப் படவேண்டும் என்பது, மிகவும் காலம் தாழந்த, ஆனால் அவசியமான,திராவிட கட்சிகளின் சுயசிந்தனையற்ற, ஆனால் மிகவும் வரவேற்கப்படவேண்டியதொரு விசயம்.


Posted at 08:42 am by karthikramas
Comments (1)  

Sunday, May 23, 2004
நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா..


நெஞ்சு பொறுக்குதில்லையே!! - சோனியா
----------------------------------
  என்னைப் பொறுத்தவரையில் சோனியாதான் பிரதமராய் வந்திருக்கவேண்டும்.

அவர் வரக்கூடாது என்று சொல்வதற்கான வாதங்களில் எதுவுமே பலமுள்ளதாக அறிவுள்ளதாக இல்லை.

1." அவர் 71 சண்டையின் போது நாட்டை விட்டு சென்று விட்டார்." என்று ஒரு காரணம்.
 செல்லட்டுமே அதனால் என்ன? போர் என்று வந்துவிட்டால் நமது இந்தியர்கள் பிற நாட்டிலிருந்து திரும்பிவரவில்லையா?. போர் என்ற போது வாழ்வா சாவா என்ற பிரச்சினை வரும்போது அப்படி செய்வதுதான் புத்திசாலித்தனம். அவர் என்ன ராணுவ ஜெனரலா? விட்டுப் போய்விட்டார் புறமுதுகு காட்டி என்று சொல்ல?
எல்லாவற்றுக்கும் மேல் , அவர் அன்று பிரதமரா? இல்லை?

2. அவருக்கு அனுபவம் இல்லை. என்கிறது ஒரு வாதம்?
 அட அடா, இந்திய மக்கள் எப்போது கண் விழித்து இப்படி யெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்கள். என்ன ஒரு அக்கறை நாட்டின் மீது. இந்த அக்கறை, டெஸ்மா உபயோகித்து முண்டாந்தாரமாய் , வீட்டில் உட்கார்திருந்த போது தான் வந்திவந்திருக்க வேண்டும்.மன்மோகன் முதல் முறை அரசியல் அனுபவமே இல்லாது , நாட்டின் மிக முக்கியமான பதவியான, பொருளாதாரதுறை மந்திரி ஆனாரே? அப்போ எங்கே போச்சு இந்த அறிவு?
அனுபவமில்லாமல், இன்னும் எத்க்னை முதலமைச்சர்கள், சினிமா அனுபவத்தைக் கொண்டு ஆட்சி செய்தபோது எங்கே போச்சு இந்த அக்கறை? கர்ம வீரர் , கர்ம வீரராய் ஆக படிப்பா தேவைப் பட்டது?

3. "அவருக்கு சட்டப்படி குடியுரிமை இல்லை"- என்கிறது ஒருவாதம்.
இதற்கு வெட்கப்பட வேண்டியது, இந்தைய குடியுரிமைச் சட்டமா? அல்லது சோனியாவா?
தூத்தெரி!! இப்படி ஒன்றைச் சொல்ல வெட்கமில்லை, இந்த வழக்கை முறையீட்டுக்கு அனுப்பியவனுக்கு? வாயிடாமே வாயிட்?

அதாவது 1984  லிருந்து ஒருவர், இல்லீகலாய் இந்தியாவில் இருக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட்டு, பிரதம மந்திரி பதவிக்கும் வர தயாராகி விட்டார். அது வரை எதுவுமே கேட்காத குடியுரிமைச் சட்டம் திடீரென்று இண்ரு எழுந்து கொண்டுவிட்டது. அவர் பிரதமந்திரியின் துணைவியாராய் இருந்தபோதுகூட தூங்கிக் கொண்டுதான் இருந்தது இந்திய கையாலாகாத குடியுரிமைச் சட்டம்.
போடா, டெஸ்மா போல , இந்திய குடியுரிமைச் சட்டம் வயகரா சாப்பிடவில்லை போலும்.

 அவர் 2 குடியுரிமை வைத்திருக்கிறார்(***திருத்தம்****, சோனியாவிடம் இரண்டு குடியுரிமை இல்லை. ). இருக்கட்டுமே? இது எந்த விதத்தில் பிரதம மந்திரி பதவியில் வேலை செய்வதை பாதிக்கும்? இதுவரை அப்படி இல்லை , அதனால் இப்போது செய்யக்கூடாது என்பது வாஸ்து பேரைச் சொல்லி ஏமாத்துபவனைவிட கீழ்த்தரமானது.

சோனியா பிரதமராக்கூடாது என்று சொலவ்தில்,
குறுகிய மனப்பான்மைதான் தெரிகிறது. நாடுகளின் எல்லைகளைக் கடந்து யோசிக்கத்தெரியாத, பல கோடி முண்டங்கள் அளித்த ஒட்டுகளைக் கொண்டு பிரதமராவதைவிட பிச்சை எடுப்பது பரவாயில்லைதான்.
எதோ அவர் ராணுவ ரகசியங்களை விற்றுவிடுவார் என்று சொன்னால், கேட்க கொஞசம் நல்லாவாவது இருக்கும். மிகவும் கீழ்த்தரமாண உணர்வுக்ளால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்களிடையே நடக்கும் அரசியலுக்கு இதைவிட ஒரி சிறந்த உTகாரணம் இருக்க முடியாது.   இந்த முடிவு குறித்து பின்னால் சோனியா வருத்தப்படுவார் என்று நினைக்கையில் எனக்கு இப்போதே வருத்தம் ஏற்படுகிறது.

 
வாழ்க (வெட்கங்கெட்ட)இந்திய ஜனநாயகம்....

 


Posted at 01:19 am by karthikramas
Comments (8)  

திண்ணையின் நீலகண்டனின்..

ஆனந்தன் , 
 நன்றி இந்த கட்டுரைக்கு. திண்ணையின் நீலகண்டனின் கட்டுரையைப் படித்து கொஞசம் ரத்தக் கொதிப்பு வந்து அடங்கியது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு, அப்படியே குமரி மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு ஒரு குண்டி சிரிப்பு தகும்.
தனது  ஒவ்வொரு கட்டுரையிலும், ஹிந்து என்று 4 தடவையாவது எழுதவில்லை என்றால் மனிதர் கான்ஸ்டிபேஷனில் கஷ்டப்படுவார் போல இருக்கு. 

அ.நீ://ஹிந்துக்களை தீவைத்து எரித்தவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு வலுவின்மையால் தள்ளூபடி செய்யப்பட்ட போது எந்த தன்னார்வ அமைப்பும் அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. ////உண்மையில் குஜராத் கலவரங்கள் என்னதான் மதச்சார்பற்றவாதிகள் கூக்குரலிட்டாலும் அவை கலவரங்கள்தான். சமபலமற்ற நிலையில் நடந்த கலவரங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.//
//

நீலகண்டனின்  இந்த வரிகள், அவரது ரத்தத்தில் ஊறியிருக்கும், இந்து வெறியை தெளிவாய் காண்பிக்கின்றன.
என்ன ஒரு திமிர்? என்ன ஒரு நளினம். சம நிலையின்றி எழுத.இதை படித்தவுடன், நீங்கள் எழுதுபது எத்தனி நாகரரீகமான எழுத்து என்பது தெரிகிறது.

பிராவோ, அறிஞரே, உமக்கு ஏற்ற இடம் திண்ணைதான்.


Posted at 12:18 am by karthikramas
Comments (2)  

Friday, May 21, 2004
வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து..

வெங்கட சாமிநாதனின் கட்டுரை குறித்து,
நிறைய எழுத இருந்தாலும் , முக்கிய சில கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.
 வெ.சா.  //ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது.//


  இந்த தயக்கத்துக்கும் காரணம் ஆணாதிக்க சமுதாயமே என்று நான் சொன்னால் மறுக்கமுடியுமா?
பெண்களை சில வார்த்தைகளை புழங்க  முடியாதபடிக்கு ஆளாக்கியதில் ஆண்களுக்கு பங்கு இல்லையா என்ன? கிராமங்களில் சர்வ சாதாரணமாய் இத்தகைய வார்த்தைகள் பெண்களால் உபயோகிக்கப்டுகின்றன. அங்கு ஆணதிக்கம் இந்த மொழிக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை போலும்.

 வெ.சா.// இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.//

 புழக்கமில்லாதது அதனால் எழுதப்படக்கூடாது என்பது ஒரு கியானத்தனமான வாதம்.  இந்த வார்த்தைக்கு அதாவது "யோனி" ("யோனி" எனக்கு மிகப் பழம் வார்த்தை,புழக்கத்தில் உள்ள வார்த்தை)
இப்பொழுதிலிருந்து இந்த கவிதாயினிகாளாலேயே புழக்கத்துக்கு வர ஆரம்பிக்கட்டுமே? யாருக்கு நட்டம்?
வெங்கட சாமிநாதன் இப்பொழுது செய்வது போலவே தான் ,பல வார்த்தைகளை பெண்கள் புழங்கவிடாமல் செய்து உள்ளது சமூகம். அதில் ஆண்கள் உள்ளனர் என்பதை மறைக்க முடியாது.
புழக்கத்துக்கு ஆரம்பம் இன்று இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்?
சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எத்தனிஅயோ வார்த்தைகளைப் பெற்ற தமிழ் இதையும் பெற்றுக் கொள்ளட்டுமே?
நம் புழக்கம் என்ன எல்லா சமஸ்கிருத வார்த்தைகளையும நீக்கப்பட்டதாகவா உள்ளது?


Posted at 10:52 am by karthikramas
Comments (2)  

Thursday, May 20, 2004
தண்ணீர் தண்ணீர்தான்

வரி வரியாய் சரிப்பார்க்கும்
தென்றலுக்கு.
லேசாய் தலையாட்டும்
பச்சிளம் பயிர்
இது என் வேலைஅன்று
என்று கூவிகொண்டே வேரில்
பாயும் உயிர்த் தண்ணீர்

வெள்ளிச்சொம்பு
உள்ளே
புத்தம்புதிதாய்
செத்த எறும்பு
சொம்பின் அடியில்
சூரியன் சிறைபட்டுளான்.
சூரியனை சிறைபிடித்ததில்
களியாட்டம் ஆடும்
னதியைப் பிரிந்த
குவளைத்தண்ணீர்

என் மவுனம் ஆழத்தைவிட
பெரிதென்பதாயும்
அலைகோஷமெல்லாம்
அற்ப ஒலியென்றும்
சர்வகணமும் உறங்கும்
நீலத்தைக் காட்டி
உப்பை மறைக்கும்
மாகடலின் தண்ணீர்

உள்ளே புழுக்கமென
வெளியே காற்றாடிக் கொள்ள
விரைந்து என் குவளையில் விழும்
சூடு இயந்திரத் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்தான்
இங்கும் எங்கும்.


Posted at 10:15 am by karthikramas
Comments (5)  

Wednesday, May 19, 2004
நண்பர் அருணின் கட்டுரை குறித்து.. (தொடர்ச்

இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்டு புரிந்தவர்கள் இருக்கிறார்கள். பிராமண சமுதாயத்திலும் கண்டிப்பாய் மேற்கூறியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பிராமணர்களை இழிவு செய்வதும், கண்மூடித்தனமாகக் கண்டிப்பதும் கைத்தட்டல்கள் பெறுவதற்கும், கவனத்தை ஈர்ப்பதற்குமே ஒழிய...உண்மையில் அந்தக் கண்மூடித்தனங்கள் பெரும்பான்மையான பிராமணர்களிடத்தில் பல காலங்களாக இல்லை, அது தான் உண்மை! அந்தத் தவறுகள் மறைவதற்கும், அழிவதற்கும், அடக்கப்பட்டதற்கும், பெரியாரெல்லாம் தோன்றுவதற்கு முன்னால், பல பிராமணர்களே காரணமாய் இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

திண்ணியத்தில் நடந்த கொடுமையோ அல்லது சுடச்சுட தற்போது வெளிவந்திருக்கும் தலித் மீதான தாக்குதல்களோ தற்கால பிராமண சமுதாயத்திலிருந்து சத்தியமாய் செய்யப்பட்டதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சாதிக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவர்களும், கண்டனக் கணைகளைத் தொடுப்பவர்களும், தங்களது இலக்குகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்களது இன்றைய இலக்காய்த் திகழ்ந்து வரும் பிராமணர்களுக்கு, வில் வைத்திருப்பவர்கள் சுட்டும் விஷயத்தில் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

> தங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்ன ஆசிரியர், தலித்திய தாக்குதல்களை களைய பிராமணர்களையும் அழைத்திருந்தால் இன்னும் நியாயமான் தொனி ஒலித்திருக்கும். ஏன் அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா என்ன? பிராமணப் பெண்களுக்§இப்பொழுதுதான் காயத்ரி மந்திரம் கிடைத்துள்ளது. அந்த பொறுப்பு வர இன்னும் சில காலம் ஆகுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Posted at 09:33 pm by karthikramas
Comments (11)  

நண்பர் அருணின் கட்டுரை குறித்து..

நண்பர் அருணின் கட்டுரை குறித்து..


எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெயரிலி ஒரு கேள்வி கேட்டிருந்தார், இன்றைய செல்வராஜின் பின்னூட்டப்குதியில்.
அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால், இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

சென்ற வார வலைப்பூ ஆசிரியராகப் பணிபுரிந்த டுபுக்கு, சும்மா பேசும் போது கூட அரசியலை எல்லாம் தவிர்த்து வந்த ஒரு நகைச்சுவை விரும்பி. ஆனால், அவர் தனது குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட போது, அதில் பூணூல் பளிச்சென்று தெரியுமாறு ஒரு புகைப்படத்தைப் போட்டார். அவரது எழுத்துக்களை உன்னிப்பாய் ஊன்றி கவனித்தால், அவர் எந்த உள்நோக்கத்தோடும் அதை செய்திருக்க மாட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த அந்த விஷயத்திற்கு, நான் அப்போதே விளையாட்டாய் ஒரு பாராட்டை மறுமொழியாய் ஏற்றி வைத்தேன். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். கீழ்க்கண்ட கட்டுரையில் நான் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

> வலைப்பூவில் எனக்கு தெரிந்து டுபுக்குவின் பூணுலை குறித்து நான் படித்த பதிவு, அருணின் இந்தக் கட்டுரைதான்.
இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
-
தமிழ் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் என்றால், கண்டிப்பாய் பிராமண துவேஷிகளாக இருக்க வேண்டும், கடவுள்களையும் புராணங்களையும் கிண்டல் அடிக்க வேண்டும் என்று சிலருக்குத் தவறாய் போதிக்கப்பட்டு இருக்கிறது.

> இது வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டு. அருணே பிராமணத் தமிழறிஞர்களை குறிபிட்டுள்ளாரே?. அவர்கள் இந்த பட்டியலில் வரவில்லை என்றால், அவர்களுக்கு இந்த போதனை போதிக்கப்படவில்லை என்று அர்த்தமா? இல்லை போதிக்கப்ப்டு அது அவர்கள் மண்டையில் ஏறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
-
அதனால், அவர்கள் இன்னும் அந்த வட்டத்திலிருந்து வெளியே வரத்தயாரில்லை. இணைய உலகிலும், அந்த வெறுப்புகள் உமிழப்பட்டு வரத்தான் செய்கிறது.

>தமிழ் ஆர்வம் வேறு வட்டம். பிராமண மூடத்தன எதிர்ப்பு சத்தியமாய் வேறு வட்டம். இரண்டுக்கும் ஒரே மையம் என்று எப்படி சொல்லுகிறார்?
-
வேதங்களைக் கிண்டல் செய்வதும், இந்துக் கடவுள்களைக் கிண்டல் செய்வதிலும் ஒரு சிலருக்கு அலாதிப் பிரியம் இருக்கத் தான் செய்கிறது. இதில் என்ன கூத்தென்றால், அதில் பலர் நன்கு படித்தறிந்தவர்கள் என்பது தான். ஒவ்வொரு விஷயமாக வருவோம்.

> இங்கு நண்பர் அருண் "வேதங்களை கிண்டல் செய்வதும்" என்று பூசிய மொழுகியபடி எழுதியுள்ளார். நான் கூட வேதங்களை கிண்டல் செய்ததுண்டு. எதிர்காலத்திலும் செய்வேன். அது தவறான கருத்தை பரப்ப அல்ல, ஒரு நேர்முகத்தேர்வைப் போல.
வேதம் இதைச் சொல்கிறதே?இதைத் தெரிந்துகொள் என்று சொல்கிறதே? தெரிந்துகொண்டாயா என்று கேள்வி எழுப்புவேன், எனக்கு அந்த சுதந்திரத்தை அதே வேதம்தான் தந்துள்ளது என்று சொன்னால் மறுக்க முடியுமா?
பிரச்சினையின் சாரம் அதுவல்ல, வேதம் படித்தவன் நான், இன்னொருவன் வேதம் படிக்காதவன் என்ற காரணத்தாலேயே, அவனுக்கு மனித அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களைத் தான் சாட வேண்டும் என்கிறேன். அவர்களைச் சாடுவது சமுகத்தின் ஒவ்வொருவரின் கடமையும் என்கிறேன். குறைந்தபட்சம், இவர்கள் அவனைவிட எந்தவிததில் உயர்ந்தவர்கள் என்று இவர்களுக்காவது தெரியுமா என்று கேட்கிறேன். அப்படி இவர்களுக்கே தெரியாத பட்சத்தில், இவர்கள் எதைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.
-
கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் ஓத வேண்டுமா என்று கேள்வி எழுப்புபவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இருக்கும் மந்திரங்களின் அதிர்வுகளில், பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானப் பூர்வமாகவே நிருபீக்கப்பட்டிருக்கிறது.

> இது ஆசிரியரின் நம்பிக்கையாய் இருக்கும் பட்சத்தில் அதை குறைகூறமுடியாது. ஆனால் நிருபிக்கமுடியுமா? என்று கேட்கலாம். ஏனெனில் "அறிவியற் பூர்வமாக" என்று சொல்லியிருப்பதால்.
-
 அதுவும் போக, தமிழில் மந்திரங்கள் சொல்லப்படாத கோவில்களே இல்லை எனலாம். ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகங்கள் எல்லாம் இன்றும் எல்லாக் கோவில்களிலும் பாடப்பட்டுத் தான் வருகின்றன.

> தமிழில் மந்திரங்கள் சொல்லப்படுவத்ன் பின்னால், மேலே சொல்லப்பட்ட, "தவறாய் போதிக்கப்பட்டவர்களின்" மாபெரும் உழைப்பும்,
போராட்டமும் உள்ளது என்று சொல்ல்வேண்டுவதும் இங்கு அவசியம். இது போராட்டத்தினால் விளைந்த நிலை, சமத்துவத்தாலோ சனாதனம் என்று அழைக்கபடும் மாய்மாலத்தாலோ விளைந்தது அல்ல.
-
 இதே போல கேள்வி எழுப்புவர்கள் எல்லாம், கோவில்களிலோ அல்லது கடவுள்களிலோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான். மக்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருப்பதால் தான், குடமுழுக்கிற்கும், பண்டிகை தினங்களில் கோவில்களுக்கும் கூட்டம் குவிகிறது. தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதரவாய்த் தீர்ப்பளித்த போதெல்லாம், 'ஆ?¡...தமிழன் அறிவாளி' என்று துள்ளிக் குதிக்கும் தலைவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு மட்டும், மூடநம்பிக்கை கொண்ட மடையர்கள் என்று எள்ளி நகையாடுவது அரசியல் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்?

>அரசியல் வாதிகளின் சுயனலத்துக்கு எடுத்துக்காட்ட, வேறு எத்தனையோ இதைவிட சிறப்பான உதாரணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.
-
வேதங்களிலும், புராணங்களிலும் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், தற்போதைய சாதீயக்குறியீட்டின் மூலம் வழங்கப்படும் பிராமணர்கள் இல்லை.

> இப்படிச் சொல்லும் ஆசிரியர், அதாவது இப்பொழுது இருக்கும் பிராமணர்கள் , சூத்திரர்களாய் ஆகிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறாரா என்ன?
-
அதாவது, அயல்நாடுகளுக்கு வந்து, கணிப்பொறியில் தட்டி, காசு சம்பாதித்து, ஜாதி என்று விண்ணப்படிவத்தில் கேட்கப்படும் போது 'பிராமின்' என்று நிரப்பிக் கொள்ளும் பிராமணர்கள் இல்லை. இப்போது பிராமணன் என்று சொல்லிக் கொள்பவர்கள், அடையாளத்தைத் தான் வைத்துள்ளார்கள், உண்மையான அர்த்தங்கள் இழந்து போய் வெகுநாட்களாயிற்று. அவர்கள் எல்லாம் அதில் பெருமை கொள்ளவொ, சிறுமை கொள்ளவோ ஒன்றுமே இல்லை.
அதை வைத்துக் கொள்வதும், இழக்க நினைப்பதும் அவனவன் சௌகர்யம். அந்தக் காலத்தில் உயர்த்தி சொல்லப்பட்ட பிராமணன் என்பவன், நான்கு வேதங்களையும் கற்றறிந்து, உலக நன்மைக்காகக் கடவுள்களைப் பிரார்த்தித்து, அரிசியைப் பிச்சையாய் வாங்கி உண்டு வந்தவன். சமுதாயத்தில் சத்ரியன் என்று அழைக்கப்பட்டவர்களும், தாழ்ந்தவர் என்று அழைக்கப்பட்டவர்களும் நான்கு வேதங்களைக் கற்றறிந்து பிராமண நிலைக்கு உயர்ந்ததாய்ப் பலர் சொல்லியும், படித்தும் அறிந்திருக்கிறேன். பல ரிஷிக்களாலும், முனிவர்களாலும், தோன்றிய காலமே தெரியாத வேதங்களில், அரிய விஷயங்களாகப் பல நல்ல விஷயங்கள் போதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்குப் பின்னால் வந்த சில சுயநல பிராமணர்கள், பல இடைச்செருகல்களைப் புகுத்தியும், தவறான
விளக்கங்களும் அளித்து தகிடு தத்தங்கள் செய்துள்ளார்கள்.

> இந்த சுயனல பிராமணர்களையும், "தவறாய் போதிக்கப்பட்டவர்கள்" பட்டியலில் சேர்த்திருந்தால் கட்டுரைக்கு வலு சேர்ந்திருக்கும்.
இவர்கள் அளித்த விளக்கங்களை பின்பற்றும் போற்றும் பிராமணர்கள் இன்றும் இருந்தால் அவர்களை என்ன செய்வது என்று ஆசிரியர் யோசித்துப் பார்ப்பாரா?
-
ஆனால், எந்த சமுதாயம் தவறு செய்ததோ, அதிலிருந்தே பல நல்லவர்களும் தோன்றி, இழைக்கப்பட்ட அநியாயங்களை எதிர்த்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் தமிழில் ஆர்வலர்களாகவும், விற்பன்னவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அதற்கு ஒரு அற்புத உதாரணம், சுப்பிரமணிய பாரதியார்.
>சுப்பிரமணிய பாரதியார் உயிரோடு இருக்கும் போதே எதிர்த்த பிராமணர்களை என்ன சொல்லுவது?

'சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!' என்று போதித்தான். இது நம்மாளு என்ற படத்தில் வரும் எளிய வரிகளில் வரும் பாட்டை சொல்கிறேன், 'பாண்டியிலே நம்ம பாரதியார் இருந்தார், பக்கத்திலே ஒரு தாழ்ந்தவரும் இருந்தார், பூணூலைத்தான் நீ மாட்டுன்னார்...எல்லாரும் அய்யருன்னு வெளுத்து வாங்கினார்!' தமிழில் பல சேவைகள் செய்து, அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்த உ.வே.சாமிநாத அய்யர், தமிழ்த்தாத்தா என்றே வழங்கப்படுகிறார்.
ஆனால், அவர்களைப் போன்ற நல்லவர்களையும், தமிழ் விற்பன்னர்களையும் வசதியாய் மறந்து விட்டு, இன்னும் வசை பொழிகின்றனர்.

>இதையே பிராமணத் துவேஷத்தை ஆதரிக்க , வசதியாய் ஆசிரியர் பாரதியை துனைக்கு அழைத்துக் கொண்டார் என்றும் ஒருவரால் சொல்ல முடியும்.
> குத்தமுள்ள நெஞ்சாய் இல்லையென்றால் எந்த பிராமணரும் இந்த சாடல் தன்னைக் குறித்ததல்ல என்று போக வேண்டியதுதானே?
ஆதாரமுடைய அராஜங்களைக் குறித்து குரல் எழுப்பினால் அது வசை ஆகாது என்று ஆசிரியர் அறிவார் என்று நம்புகிறேன்.

பெரியார் ராஜாஜி என்ற பிராமணரோடு கூடிக் குலாவினால், நட்பு வேறு, கொள்கை வேறு என்று பாராட்டுவார்கள். அதில் கூட எல்லாப் பெருமையும் பெரியாருக்குத் தான்.
-
> பெரியாரின் சேவைகளை ராஜாஜி ஒப்புக் கொண்டாலும், கட்டுரை ஆசிரியர் ஒப்புக் கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இல்லைஎனில் ராஜாஜி பெரியாரின் நட்பாய் பழகியிருப்பாரா என்ன?

ஆத்திகத்தில் நம்பிக்கை கொண்ட ராஜாஜி, நாத்திகப் பெரியாரோடு அதே போல் நட்பு பழகியது அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை! இதில் ஒரு கொடுமை என்னவென்றால், பெரியார் ஆனதென்ன ராஜாஜி என்ற உவமையைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், திருப்புகழைப் பாட பாட வாய் மணக்கும் என்றால் பல் துலக்குவதேன் என்று குதர்க்கமாய் பேசுவதையும், சரஸ்வதி மலஜலம் கழிப்பது நாவிலா என்று கேள்வி கேட்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள்.

> இதற்கும் மேலே சொன்ன, "கருத்து எதிரியல்ல , கருத்தைக் காரணமாய் காட்டி மனிதனை மறுக்கும் மனிதனே மறுக்கப்படவேண்டியவன்" என்பது பொருந்தும்

 இன்றும் கூட, தமிழகக் கட்சிகள் சிலவற்றிற்கு பேசுவதற்கு விஷயமே இல்லை என்றால், 'பிடி..பிராமண எதிர்ப்பை' என்று கிளம்பி விடுவார்கள்.
> கட்சிகளில் எந்த கட்சி புனிதமான கட்சி?

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் தான் இப்படி என்றால், அயல்நாடு வந்த பின்னும் பிராமண துவேஷம் ஒரு சிலரிடம் கொடிகட்டிப் பறப்பதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. போன முறை பெட்னாவில் கூட, பல பிராமண எதிர்ப்புப் பிரச்சாரங்கள், 'மாதவன் வராமல் போகட்டும், மாமிகள் கோபம் கொள்ளட்டும்' என்றெல்லாம் கவிதை பாடினார்கள் என்று தெரிய வந்தது. ஏதோ மாதவன் வராமல் போனால், மாமிகளுக்கு மட்டும் தான் கோபம் வருவது போல ?! ஒரு சீக்கிய சகோதரன் தலைப்பாகை அணிவதில் எங்கும் தயக்கம் காட்டுவதில்லை, ஒரு இஸ்லாமிய சகோதரன் குல்லா அணிவதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை...அவர்களைப் போலவே, பிராமணர்களும் பூணூலை அணிந்து வெற்றுடம்புடன் வரும் போது மட்டும், எதற்கு ஆயிரத்தெட்டு கேள்விகள், நக்கல் பிரச்சாரங்கள் என்று தெரியவில்லை? சகமனிதர்களை ஜாதி போன்ற காரணங்களைச் சொல்லி, யார் ஒதுக்கி வைத்தாலும் தவறு தான். அது தண்ணி தெளித்து தீட்டு என்று சொல்லும் பிராமணனாய் இருந்தாலும் சரி, கொட்டாங்குச்சியில் காப்பி ஊத்தி, வேலிகளில் அலுமினியத் தட்டுகளை சாத்தி வைக்கச் சொல்லும்வேறு எவராயிருந்தாலும் சரி..எல்லாம் தவறு தான். ஆனால், இது போன்ற இழிசெயல்களை, இப்போதிருக்கும் பல பிராமணர்கள் செய்வதில்லை, நம்புவதுமில்லை..ஏன் வெறுப்பவர்கள் கூட என்று சொல்லலாம். எல்லா சாதிகளிலும் விதிவிலக்குகள் இருக்குகிறார்கள், அதே போல்...நான் சொன்ன மேற்கூறியவர்களிலும் இருக்கத் தான் செய்வார்கள்.

ஒவ்வொருவனின் நம்பிக்கையும் அவனவனோடு. அவனது வீட்டிற்குள் அவன் எது வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளட்டும், ஆனால்..அது அடுத்தவனை உரசாத வரை, அதைக் கேள்வி எழுப்புவதும், நக்கல் அடிப்பதும் குரூர மனப்பான்மையின் மறுவடிவம். முன்னால் எல்லாம், காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லக்கூடாது, மற்றவர்கள் சொல்லக்கூடாது என்று பல பொய்ப் பிரச்சாரங்கள் இருந்து வந்தன.
சமீபத்தில் இங்கு வந்த சுவாமி ஒருவர், எல்லோரையும் தியானம் இருக்கச் சொல்லி, பெண்கள் உட்பட சொல்லலாம் என்று கூறி, காயத்ரி மந்திரத்தைப் போதித்தார்.அதே போலவே, சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று சொல்லி, பிராமணர்களைத் தாண்டி வெளியே விடாததும், ஒரு பெரும் தவறு தான். ஆனால், இந்தத் தவறுகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுப் பல காலம் ஆகி விட்டது.

> பிராமணியத்துக்குள்ளேயே இருக்கும்  தீண்டாமை குறித்து ஆசிரியர் எழுதியுள்ளது வரவேற்புக்குரியதே. இதையே செய்யும்
பகுத்தறிவு மட்டும் எப்படி மக்கிப் போனதாக இருக்க முடியும்??


இன்றும் மனித நேயம் மரத்துப் போன பிராமணர்கள் சிலரும் இருக்கலாம், அவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்புவதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாகத் தானிருப்பார்கள். எல்லா சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள், தமிழில் தொண்ட


Posted at 09:26 pm by karthikramas
Comments (6)  

நம் வரலாறு..

நண்பர்களுக்கு,
(குறிப்பாய் அருண்,மதி,சுந்தரவடிவேல்,தங்கமணி,செல்வராஜ்,பரி,பத்ரி ஆகியோர்களுக்கு)..

அருண் கட்டுரை சிந்தனையை தூண்டுவதாய் உள்ளது என்பதில் ஐயமேதுமில்லை. வழக்கமாய் எழுதுவது போல் நக்கலுடன் எதிர்வினை ஒன்றை எழுதலாம் என்றால் மனம் ஒரு fபுல்லை fபுல்லாய் குடித்தது போல் தடுமாறுகிறது.

சுந்தரவடிவேலின் அச்சுதவாய் ரோக கவிதையினால் அருண் தனது கட்டுரையை எழுதியிருந்தால்,
நண்பர் அருணுக்கு எனது மிகப் பணிவான வேண்டுகோள், அக்கவிதையை பிராமணத்துவேஷமாய் பார்க்க வேண்டாம் என்பது மட்டும்தான். சுந்தரவடிவேலரும் தான் இன எதிர்ப்பாளர் இல்லை என்று சொல்லியாகிவிட்டது.தங்கமணியும் அது போலவே ஒரு பதிலை சொல்லியுள்ளார். எனினும் பாரதியின் கூற்றை காண்பித்து மிக நாகரீகமாக எதிர்த்துள்ளார். இத்துடன் விட்டு விட்டு அடுத்ததைப் பார்க்கலாம். அல்லது பேசவே அநாகரிகமான அளவுக்கு வார்த்தைகளை கொட்டி விளையாடலாம். இரண்டுக்கும் நான் தயார். எனினும் முன்னதையே விழைகிறேன்.

மூடப்பிராமணியம் பிராமணர்களாலும் எதிர்க்கப்பட வேண்டியதே என்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன்.அதுபோலவே மற்ற மேல் ஜாதி,மேல் இன மூடத்தனங்களும் அனைவராலும் எதிர்க்கபடவேண்டியதே. நம் வரலாறு நமக்கு பெருமை தரும் காட்சிகளை காட்டாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!

 


Posted at 12:01 am by karthikramas
Comments (2)  

Tuesday, May 18, 2004
தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில்..

கீழ் கண்டவை இந்திய தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில் வீசிய அலை.
ஒரே இடத்தில் இருந்தால் படிக்க எளிதாக இருக்குமென நினைத்து குவித்து வைத்துள்ளேன்.
சில பதிவுகளில்,பக்கத்தை சற்று கீழே இழுத்து படிக்க வேண்டியிருக்கும்.
 பிரகாஷ் , அவரது கருத்துகளை ராயர் க்ளப்பில் எழுதியிருந்தார். அவரது பதிவில் போட்டால் அனைவருக்கும் உதவும்.

**வேறு யாரையாவது பட்டியலில் தவற விட்டிருந்தால் , எனக்கு தெரிவித்தால் சேர்த்துவிடுவேன் :-) **

தேர்தல் குறித்து எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன். இவற்றை பார்த்தவுடன் வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். :-)  சோனியா பிரதமாரவதில் உள்ள சர்ச்சை குறித்து மட்டும் எழுதுவேன்...

Aruna
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_15.html
Amalasingh
http://amalasingh.blogspot.com/2004_04_18_amalasingh_archive.html
Aappu
http://aappu.blogdrive.com/archive/cm-5_cy-2004_m-5_d-19_y-2004_o-0.html
Arun
http://arunviews.blogspot.com/2004_05_16_arunviews_archive.html
Badri
http://thoughtsintamil.blogspot.com/2004_05_09_thoughtsintamil_archive.html
Balasubra
http://etamil.blogspot.com/2004_05_01_etamil_archive.html
BB
http://www.tamillinux.org/~balaji/archives/000303.html
DuraiSwamy
http://odai.blogspot.com/2004_05_09_odai_archive.html
Hari
http://harilama.blogspot.com/2004_05_02_harilama_archive.html
Idlyvadai
http://idlyvadai.blogspot.com/2004_05_01_idlyvadai_archive.html
JohnBosco
http://johnbosco.blogspot.com/2004_05_09_johnbosco_archive.html
kathavu-karthikeyan
http://kathavu.blogspot.com/2004_05_09_kathavu_archive.html
Kasi
http://kasi.thamizmanam.com/index.php?catid=1&blogid=1
Malan
http://elections2004.yarl.net/archives/000787.html
PARA
http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=168&fldrID=1
pari
http://pari.kirukkalgal.com/index.php?itemid=55
pkp
http://pkp.blogspot.com/2004_05_01_pkp_archive.html
raja
http://raja.yarl.net/archives/2004_05.html
Kosapettai
http://kosappettai.blogspot.com/2004_05_09_kosappettai_archive.html
Poetraj
http://poetraj.blogspot.com/2004_05_01_poetraj_archive.html
Rajmu
http://www.rajmu.blogspot.com/2004_04_01_rajmu_archive.html
RajniRamki
http://rajniramki.blogspot.com/2004_05_01_rajniramki_archive.html
Shankar
http://suvadu.blogspot.com/2004_05_01_suvadu_archive.html
PKS
http://pksivakumar.blogspot.com/2004_05_09_pksivakumar_archive.html
Nose-Sundar
http://mynose.blogspot.com/2004_05_16_mynose_archive.html
Thangamani
http://ntmani.blogspot.com/2004/05/blog-post_14.html
Valaippoo-dubukku
http://valaippoo.yarl.net/archives/000759.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000300.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000305.html
Venkatesh,Rajini Interview
http://sifyrayan.blogspot.com/2004_04_11_sifyrayan_archive.html

 


Posted at 10:39 pm by karthikramas
Comments (1)  

Next Page