<< April 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Thursday, May 06, 2004
பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்...

ஐயா எஸ் பொன்னுதுரையின் , சில வரிகள் குறித்து பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்
படிக்க நேர்ந்து (எனக்குள் க்ளுக்கென சிரித்து) எழுதியது..

எஸ்.பொ. கேள்விகளூடே பார்க்காதது அல்லது பார்த்துப் பின் மறைத்தது:
==========================================================

எஸ்.பொ://"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை." //

  எஸ். பொன்னுதுரை இதையே என்னிடம் சொல்லியிருந்தால், "நீ தாக்கப்படாது, நீ தாக்கப்படுகிறாய் என்று குரல் கொடுத்தால் அது சுத்த பொய்யாகும். ஆனால் இந்த கேள்வியின் அர்த்தம், னீ சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள உன்போல் சம மதிப்பீடுகளை கொண்ட மக்கள் தாக்கப்படுகிறார்களே, அதை கண் கொண்டு பார்த்து கருத்தேதும் சொல்லுமையா புண்ணியவானே? இல்லை நான் தாக்கப்படும் வரை பொறுத்திருந்து தான் கருத்து சொல்வேன் என்ற வாதத்தை காதலிக்க காரணம் என்ன ? "  என்று கேட்டிருப்பேன்.

மேலும், "நீ தாக்கப்பட்ட பின், கருத்து சொல்ல இருப்பாய் என்ற நிலைமை இங்கு இல்லையே?, உன்போல் பலர் இல்லாமலாகி இருப்பது தெரிகிறதா? இப்போ புரிகிறதா உனக்கு?" என்றும் கேட்டிருப்பேன்.


எஸ்.பொ://"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
//

    என்னுடையா அம்மா அப்பா அனுபவித்த துயர்களை நான் எழுத மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஐயா பொன்னுதுரை?
உங்கள் அம்மா அப்பா அனுபவித்த சொத்துகளை தூர எறிந்து விட்டீர்களா? என்று தெரிந்து கொள்ள ஆசையாய் உள்ளது பொன்னுதுரை அவர்களே? சொத்துகளை தூர எறிந்திருக்கும் சித்த பிரமை உங்களுக்கு இல்லை என்று நான் நம்புவதால் இதையும் கேட்கிறேன்,
உங்கள் படைப்புகளில் அவற்றை எழுத வேண்டியதில்லை, கருத்துகளை எழுதுங்கள் என்பதுதானே அக்கேள்வின் ஊடுபாவி தொக்கல்?
இதை என் படைப்பு சுதந்திரத்தில்  தலையிடாதீர்கள் என்று தவறாய் எடுத்துக் கொண்டு தறி கெட்டுப் பேசினால் என்ன அர்த்தம் அய்யா பொன்னுதுரை அவர்களே?

  இதே நிலைப்பாட்டை அவரது பிள்ளைகள் துயரனுபவித்தாலும் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எஸ்.பொ://"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."//

      இப்படிப் பேசிப் போகும் திரு. பொன்னுதுரை அவர்களே! நீங்கள் நிலவை உங்கள் படைப்பில் பேசியதே இல்லை என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் நிலவை பேச வேண்டுமெனில் அல்லது வர்ணிக்க வேண்டிமெனில் , நிலவுக்கு செல்லாதவரை நான் அது பற்றி எழுத முடியாது என்று சொல்லி விட்டால், உங்களை கேள்வி கேக்க எனக்கு தெரியாது?? ;-).

பிரபல எழுத்தாளர்கள் சறுக்குமிடம் உண்டு என்பதாலேயும், யானைகளும் சறுக்கும் என்பதாலும் இது ஒன்று பெரிதல்ல என்றே நினைக்கிறேன்.

இந்த பதில்களால், எஸ். பொ. என் கண்ணுக்கு, சக மனிதனின் துக்கத்தைப் பார்க்கதெரியாத ஜந்துவாக தெரிவது, அவரது மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். சமுகத்தில் படைப்பாளியின் குரலை, பயன்படுத்தப் பட பல வழிகள் உள்ளன என்றும், அதை அவர் தெரிந்து கொள்ள விழையவில்லை என்றும் வாதாடலாம்.
எஸ். பொ. இந்துத்துவவாதியா? எனக்கு தெரியாது ? தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் அடியுங்களேன்.

 


Posted at 07:33 pm by karthikramas
Comments (8)  

Friday, April 30, 2004
குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்...

ரமணிதரனின் கொடுத்துவைத்தாரும் அல்லாதாரும் பதிவை வைத்து வடித்தது இது..பிடித்துள்ளதா என ரமணிதான் சொல்ல வேண்டும். ;-)

குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்
==============================
நாளை இருப்பேனா அல்ல
தின்றிரவுக்குள் இறப்பேனா

எதிர்காலத்தை தீட்டுவதா
எதிர்காலம் எனைத் தீண்டாது என்றிருப்பதா

சென்றவர் வரும் வரை சென்னியில் அனல் கொதிக்க
வருவாரா? வரமாட்டார் என்ற செய்திவருமா?

ஒரு மணித்தியாலத்தில் இத்தனை
நாசங்கள் நடக்கும் நாட்டினில்
நான் நேசங்களை நினைப்பது நியாயமா?

மறையாதாவனை
மறைந்தேன் எனச் சொல்லி
மன்றாட வைத்தவனை மறப்பதா?
இறைவனை துதிப்பதா?

வீடு விட்டு போன நண்பன்
வீடுலகம் சேர்ந்து விட்டான் என
தேடவும் துணியார் அழுவார் அரற்றுவார்
விடுகதை போல் ஆகிவிட்ட
வாழ்விதனை வாழ்வதா விடுப்பதா?

துப்பாக்கியின் முகத்தினை
முகத்தினுக்கு நேராக
தப்பிக்க வழியின்றி பார்க்கின்ற வேளைதனில்
என் உடம்பினை வாட்டுவது கோபமா? ஆண்மையா?

எங்கிருந்தோ வந்தனர்
இந்தியர் யாம்  உதவவே வந்தோம் என்றனர்
வந்திருந்த தந்தையர் நாட்டர்
குந்தகமே குறியென செய்தனர்
சிந்தின எம் இரத்ததின் நிறம்
வேறென? நினைந்தனர்

எம் விதியை இதனினும்
விதியற்றவரோடு ஒப்பிட்டு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
கதவு ஒன்றைத்  தவிர
வேறு கதவிலை நாம் புக

எருதின் நோய் காக்கை அறியாதுதான்
இனப்பிரச்சினை அங்குமுண்டோ?
மனிதன் காக்கைகளாய் மாறிவிட்ட
வன்முறையை விட
நாம் பார்க்கும் இனவன்முறை
பெரிதிலையோ?


Posted at 08:31 pm by karthikramas
Comments (5)  

ஒரு சொட்டு வியர்வை...

வருத்தங்களின் அழுத்தத்தால்
வார்த்தைகள் நசுங்கி
குறைந்து விட்ட வேளைகளில்
மீதமிருக்கும் மிச்ச வார்த்தைகளை வைத்துதான்
கவிதைகள் எழுத வேண்டியுள்ளது.
மனிதனால் செய்ய முடியாததை
வார்த்தைகள் செய்துவிடவா போகின்றன?
கவிகளுக்கு அப்படித்தான் போல...

வாழ்வை திரும்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகள் சிலவும்
வேர்வைகளின் நினைவும்
வருத்தங்களும் மிச்சமுள்ளன..

அழுத்தங்கள் இல்லா
இது போன்ற வேளைகளில் தான்
திரும்பிப் பார்க்ககூட முடிகிறது...


Posted at 07:58 pm by karthikramas
Comments (1)  

Monday, April 26, 2004
அள்ளி விடறது

சுந்தர வடிவேலின் (பரதேசி நாந்தாண்டா ;-)) என்கிற பதிவை படித்தவுடன் இன்ஸ்பிரேஷன் வது எழுதுவது இது.
இந்த போலீசு மாமு கிட்ட மாட்டற அனுபவமே ஒரு வித்தியாசமானதுதான்.
ஒருமுறை விர்ஜினியாவிலிருந்து நியூஜெர்சிக்கு கழுதை வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்துச்சு. அதாவது ஒருத்தரஓட பொட்டிய சுமந்துகிட்டு போயி  குடுத்துட்டு வரனும். நானும் என்கூட புதிதாக வந்திருந்த ஒரு நண்பனும் போனோம்.
நண்பன் அப்பத்தான் அமெரிக்காவுக்கு வந்த புதுசு.

எனக்கு சாதரணமாவே அமெரிக்காவுக்கு யாராவது புதுசா வந்தா அவங்ககிட்ட "அள்ளி விடறது"(ரீல் சுத்தறது) பழக்கம். அப்பறம் கொஞ்சம் நாள் கழிச்சு அள்ளிவிட்டத சொல்லி சிரிப்போம். என் இன்னொரு நண்பன் அள்ளி விட்ட ஒரு உதாரணத்த சொல்றேன்.
நாசாவில புது ப்ராஜக்ட் ஒன்னு பண்றாங்கடான்னு, ஆரம்பிச்சான். சாட்டலைட் மூலமா,அப்படியே  நம்ம கார் நம்பர் ப்ளேட்ட ஸ்கேன் பண்ணி, சிகப்பு விளக்க தாண்டி போனா, டிக்கட் எழுதி வீட்டுக்கு தபால் பண்ணிட போறாங்க ந்னு சொன்னான்.
இத சொல்லி முடிச்சவுடனே சுத்தி இருந்த அத்தன பேரும் முகத்தில இருந்த அத்தனை ஓட்டைகளையும் திறந்து அவன பார்த்து சிரிச்சது அவனுக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அதுக்கப்பறம் அண்ணனை நாங்க ஓட்டுன ஓட்டுல பய அன்னிக்கு ஓடுனவந்தான் இன்னும் திரும்பி வரல.

இந்த மாதிரி நான் அள்ளி விட்ட சில ரீல்கள்.

 புதுசா என்கூட அமெரிக்க வந்தவர் ஒருத்த்ர்கிட்ட, காபியில சர்க்கரைக்கு பதிலா ஒரு கசப்பு சிரப் ஒன்ன ஊத்தி குடுத்தன். நானும் அத ஊத்திதான் குடிச்சேன். அந்த எளவ வாயில வைக்க முடியாம இருந்தாலும், தினமும் நான் அந்த சிரப்ப காலை 3 தரம் சயந்தரம் 3 தரம் குடிக்கிற மாதிரி ஒரு ரியாக்ஷன் முகத்தில காட்டுனன். மனுசனும், நம்ம அமெரிக்காவுக்கு புதுசுன்னு காட்டிக்க கூடாதுன்னு, குடிச்சுபுட்டு, திருவிழாவுல தொலைஞ்ச புள்ள மாதிரி முழிச்சார். ரொம்ப நாள் கழிச்சு, எனக்கு அந்த சிரப்பை குடிச்சு பழக்கமே இல்லன்னு சொன்னேன். அன்னிக்குதான் எனக்கு எதிரியா மாறுனார் அவர்.

 ஒரு அம்மா அமெரிக்காவுக்கு வந்த புதுசுல பனிக் காலம். அந்த அம்மாவுக்கு இள வயசுதான். ஒரு 28 லேர்ந்து 30 இருக்கும்.
அம்மா நல்லா படிச்சவங்க தான். வெளில ரோட்டுல நடந்துக்கிட்டு இருக்கும் போது , ஒரு குதூகலத்துல கிழே விழுந்து கிடந்த ஐசை எல்லாம் கையில எடுத்து விளையாடினாங்க. நான் உடனே, கொட்டுற பனி எல்லாம், கவர்மென்டு சொத்து, னீங்க கையில எடுக்குறத
போலிசு பார்த்தா , உங்கள புடிச்சு கொண்டு போய் ஜெயில வச்சுடுவாங்க அப்டீன்னேன் பாருங்க! அம்மா மட மடன்னு கைஉஇல இருந்த ஐஸ¤ எல்லத்தை கீழே போடுட்டு கப் சிப். அந்த அம்மா முகத்த பாகனுமே அப்ப, ரொம்பதான் ஜாக்கிரதை உணர்வு போங்க. ரொம்ப நாளைக்கு பனிய கையில எடுக்காமதான் இருந்தாங்க, என் கூட இருக்க அனுமார் பயலுங்க போட்டு குடுத்துட்டானுங்க.


அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் ப்ளூ சிப் க்ரெடிட் கார்டு அறிமுகப்படுத்திய சமயம். இந்த சாட்டலைட்லேர்ந்து போட்டா புடிப்பாங்கன்னு கத விட்டன் பாருங்க, அவன் கிட்டதான் விட்டேன் இந்த புளுகு மூட்டைய.
இப்ப வந்திருக்கிற ப்ளூ சிப் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் அட்டையில ஒரு மைக்ரோப்ராஸஸ்ஸர் இருக்குன்னேன். அதை கொண்டு போயி எந்த பேங்கு ஏடி எம் மை திறந்தாலும் கதவு தானாய் திறந்திடும், அப்படி ஒரு ப்ரோகிறாம் இருக்கு அதுல, அப்படின்னு ஒரு புளுக்கு மூட்டை உட்டேன். பயலும் ஒரு இரண்டு முறை பேங்க் ஆப் அமெரிக்கா கதவுல போய் தேச்சி தேச்சி பார்த்துட்டு வந்தான்.
அந்த மாதிரியெல்லாம் இல்லன்னு தெரிஞ்சவுடனே என் மேல வந்து விழுந்து என் மலப் பாம்பு மாதிரி நசுக்க பாத்தான் இல்ல.


இப்படி அள்ளி விடரது வாடிக்கையா இருந்தாலும், டிக்கட் கொடுக்கறதுக்காக பக்க்துல போலீசு வரும்போது காரை விட்டு கீழ இறங்க கூடாது அப்படின்னு எல்லாரும் சொல்லி வச்சுருந்தானுங்க. அப்படியே கை ரெண்டுத்தையும் போலிசு மாமா கண்ணுல படற மாதிரி வைக்கனும் ந்னும் சொல்லி இருந்தானுங்க. இதுல எதுவும் ரீல் கிடையாது எல்லாம் உண்மைதான். டிக்கட் குடுக்குற மாமா தன்னோட இடுப்பு துப்பாக்கி மேல கைய வச்சுகுட்டுதான் பக்கத்துல வருவார் அமெரிக்காவுல.
 எங்கே விட்டேன். ஆ.. நியூ ஜெர்சிக்கு கழுத வேலை பாக்க போயிட்டு இருந்தோமா, ஏற்கனவே கிளம்புனது லேட்டு.
மணி 12 ஆயிருக்கும். நியூ ஜெர்சி டர்ன்பைக்க ஒரே ஜம்புல தாண்டிடல்லமுன்னு நினைச்சு, அழுத்து அழுத்துன்னு அழுத்துனன்.
ரோட்டில நானும் கொஞ்சம்  ஈ , 2 காக்கா மட்டும்தான்.  வண்டி வேற நல்ல வி8 வண்டி. போர்டு எக்ஸ்ப்ளோரெர்.
நல்லா ஜம்முன்னு போதுன்னு என் நண்பன்கிட்ட சொல்லிகிட்டு இருக்கும்போதே பின்னாடிலேர்ந்து எவனோ பாட்டு பாடறாமதிரி சத்தம்.
இந்த அர்த்த ராத்த்ரில பாடனும்னா ஒரு வேளை பேயோன்னு கூட தோனுச்சு. என்ன இருந்தாலும் அந்த பேயிக்கு அந்த அளவுக்கு குரல் சரியில்லைன்னு நினைச்சுகிட்டு இரும்போதே பேய் இங்கீலிசுல பேசுச்சு. என்னாடா இது , அமெரிக்க பேய் இங்கிலீசுலதான் பாடும் போல இருக்குன்னு பார்த்தா அப்படியே ஒரு வெளிச்சம். வண்டி ஓரகட்டிறியா இல்ல உன்ன நான் ஏறகட்டட்டுமான்னு ஒரு கொஸ்டின்.
சரின்னு மெதுவா ஓரங்கட்டினேன். இன்னிக்கு எவன் வயித்தெரிச்சல கொட்டுனனோன்னு என்னகு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல அப்ப.
என் நண்பன் கிட்ட சொன்னேன் , கை ரெண்டுத்தையும் நல்லா போலிசு மாமா கண்ணுக்கு தெரியிறாமாதிரி வை, இல்லன்னா சுட்டுபுடுவான்னு சொன்னேன். என் நண்பனும் கை இரண்டுத்தையும் எதோ தண்டா எடுக்க சொன்னா மாதிரி தோளுக்கு மேல நீட்டிக்கிட்டு வயித்துல லேச 50 கிராம் புளிய கரைச்சாப்புல உட்கார்ந்துக்குட்டு இருந்தான். போலிசு மாமா வந்த வுடனே ஒரு ரேஞ்சா கைய தூக்கிகிட்டு இருந்த என் நண்பன பாத்து, கை வலிக்க போவுது ராசா , பராவாயில்லை கைய கீழே போடு அப்படின்னாரே பாக்காலாம்.
மொச புடிக்கிற நாய்கள மூஞ்சிய பாத்தா தெரியுமுடா எங்களுக்குன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு.
     உனக்கு 2 டிக்கட் தரணும் அப்படின்னார். ஏன்னு கேட்டேன்,
 ஒன்னு ரெக்லெஸ் ட்ரைவிங்(அஜாக்கிரதையான ஓட்டம்). இன்னொன்னு ஸ்பீடிங்(வேக கட்டுப்பாட்டை மீறிய வேகம், 92).
மாமா மாமா அதுதானே இதுன்னு சொல்லியிருப்பேன். அன்னிக்கு அவ்வளவு தெரியம் இல்ல எனக்கு. முதல் டிக்கட் பாருங்க.
தேங்க் யூ சர் என்றேன்.  என்ன கார்த்தி அந்தா ஆளு 290 டாலருக்கு அபராதம்னு சொல்றான் , நீங்க நன்றின்னு சொல்றீங்கன்னு கேட்டான் என் நண்பன். என்னடா , சுட மாட்டான்னு தைரியம் வந்தவுடனே நீ பேசுவதானே என்றேன்.
" நாளைக்கு ஒரு இந்தியனுக்கு  டிக்கட் குடுக்க போனான்னா நம்ம எல்லாம் நல்ல பிரஜைகள்னு அவன் நினைக்கனும்டா அப்படின்னேன்."  வேற எந்த காரணமும் எனக்கு அப்ப புத்தில வரல.


Posted at 10:10 pm by karthikramas
Comments (9)  

Monday, April 19, 2004
BMG Customer Suport Phone Number

BMG Music service does not list theri contact phne number anywhere in the mails that they send to you.
It is a legal cheat... and a RIPOFF


BMG Customer Suport Phone Number:
BMG MUSIC
Address:
PO BOX 91511
INDIANAPOLIS Indiana 46291
U.S.A.
Phone Number:
317-692-9200
Fax:


Cd retun Address :

 PO BOX NO: 19004
Greenville, South Carolina
zip 29698 9004

Posted at 01:32 pm by karthikramas
Comments (2)  

Friday, April 16, 2004
கண்டேன் பெர்ராரியை...

கண்டேன் பெர்ராரியை...
   புத்திமான் பலமான் ஆவான் என்பதை ஒரு எளியவழியில் மீண்டும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் அல்லது வணிக மேலாளருக்கு
ஒரு 55 முதல் 60 வயது இருக்கும். அவறை இதுவரை நான் குறிப்பிட்டுரிந்தால் வணிகன் அல்லது
வெள்ளை வணிகன் என்றுதான் குறிப்பிட்டிருப்பேன். ஆனால் மனிதன் இப்படி என்னை மேலாளர் அவர்களே என்று குறிப்பிட வைத்துவிட்டார்.  எல்லாம் இந்த இரண்டு நாட்களாய் தான்.

   நான் சமீபத்தில் ஒரு கார் வாங்கியிருந்தேன். அதில் கொஞ்சம் தேசி புத்தியை விடுத்து கோண்டா டயோட்டா போன்ற காரை வாங்குவதில்லை என்று ஒத்தை காலில் நின்றுகொண்டிருந்தேன். சுமாராய் 4 வருடங்களாய் இப்படி ஒற்றை காலில் நின்று நின்று இரண்டு கால்களில் ஒன்று குட்டையாய் ஆனதுதான் மிச்சம்.
சரி 4 வருஷமாய் கார் இல்லாமல் அமெரிக்காவில் கார் இல்லாமலிருப்பது, இந்தியாவில் 4 வருஷத்துக்கு துணி இல்லாமல் அலைவது போல்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆபாசமாக எழுதக்கூடாதே என்று நினைத்ததால் , 4 வருஷத்துக்கு சைக்கிளில்லாமல் கஷ்டப்படும் நிலையில்தான் இருந்தேன்னு எழுதிக்கறன்.
   ஆனால் எப்படியோ என் நண்பரிகளின் புண்ணியத்தில் இரண்டு டயோட்டாக்களின் சாவிகளும், ஒரு நிஸ்ஸான் அல்டிமாவின் சாவியும், கொஞ்சம் அவன்களின் திட்டோடு என்னிடம் வந்து சேர்ந்தது. எனவே இந்த மூன்று கார்களையும் ஓட்டியது போக மிச்ச நேரத்தில் ஒற்றை காலில் நிற்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்.
  நான் கார் வாங்கியதும் , என்னடா! இனிமே எங்க காரெல்லாம் ஒட்ட மாட்டியே?  சாவியெல்லாம் துக்கி போட்டுவிடுவாயா என்று கேட்டான்கள்.
  அதுக்கு நான், "என் கார் சாவி காசு குடுத்து வாஙங்கியது, இந்த பழைய மூன்று சாவிகளும் அன்பால வாங்கியது, எதுக்கு மதிப்பு அதிகம்"னு கேட்டு எல்லார் கண்லயும் தண்ணீர் வரவச்சேன்.
  இருந்தாலும் இந்த சனியனால நம்ம காருக்கு இனி தொந்தரவு இல்லை என்றுதான் அவன்கள் நினைத்திருப்பான்கள்.
 
   இப்படி என் ஒற்றை கால் விரதத்தை முடித்து விட்டு, லேசாக நொண்டிக்கொண்டே ஒண்றரை கால்களில் சென்று வாங்கிய காருக்கு 2 கதவுகள் தான்.
  இந்த கார் வாங்கும் இடத்துல நடந்தத பத்தின கூத்துக்கு இன்னொரு பதிவு தேவைப்படும். கொஞ்ச நாளா ஒரு கதவு வேற சரியா வேலை செய்யல. எனவே நண்பர்கள் "ஒன் டோர் கார்த்திக்" என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள்.   இது ஒருபுறமிருக்க, அமெரிக்க கார்களுக்கும் , இந்திய கார்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா , கல்யாண மண்டபத்த விட்டு நேரா விவாகரத்து ஆபிஸ¤க்கு தான் போயி நிக்கும்.  அப்படி ஒரு 16 க்கு 0 பொருத்தம் தான். இந்தியாவுல 4 டோர் காருக்கு தான் மவுசு ஜாஸ்தி, இங்க 2 டோர் காருக்குதான் மவுசு, கீபோர்டு எல்லமே ஜாஸ்தி. இந்தியாவுல பெரிய காருக்கு தான் விலை அதிகம். இங்க அமெரிக்காவுல  நண்டு மாதிரி மூஞ்சி இருக்குற இல்லன்னா வாத்து மாதிரி  சப்ப மூக்கு இருக்குற காருக்குதான் விலை அதிகம். சைஸ் ஒரு குப்பதொட்டை அளவ விட கொஞ்சம் பெருசுதான். அந்த காரை வாங்கி இரண்டு கத்திரிக்கா அத்கமா வாங்கி டிக்கில வச்சு எடுத்துக்குட்டு கூட வரமுடியாது, அத்தன சின்ன டிக்கி..அமெரிக்காவுல டிக்கி சொன்னா சிரிப்பானுங்க, பூட்டு இல்லன்னா ட்ரங்கு இப்படிதான் சொல்லுவாங்க. டிக்கி அப்படீகிறது ஆபாச சொற்கள் வரிசையில வரும். ஆனா நிறைய வெள்ளைக்காரணுங்க மட்டும் டிக் டிக் க்குன்னு பேர் வச்சிப்பானுங்க , நாசமா போனவனுக.
சரி நண்ட பத்தி,எல்லாமே எத்தனை Hகார்ஸ்பவரு (குதிரை ஓட்ட சக்தி) இருக்கு வண்டில அப்படீங்கறதுலதான் பிரச்சினையே. பாக்க நண்டு மாதிரி இருந்தாலும் , இந்த நண்டுங்க ரோட்டுல பண்ர அளும்பு இருக்கே, பாக்க முடியாதுங்கறேன். ஆமாம்!! உண்மையிலே பாக்க முடியாதுதான். ஏன்னா பாக்கறதுக்குள்லெ நண்டு நம்ம கண்ண விட்டு வேகமா போயிடும்.

அந்த மாதிரி சப்ப மூக்கு பெர்ராரி ஒன்ன, 1999 ல ஒரு முறை பாத்திருக்கேன். ஒரு யூ எப் ஓ (விவரந்தெரியாத பறக்கும் பொருள்??) மதிரி வேகமாய் போச்சு. இன்னும் முயற்சி பண்ணி பார்த்த்ருந்தேன்னா , நேரா கழுத்தௌ சுளுக்கு ஆஸ்பத்திரிதான் போயிருக்கனும் நான்.தரையோட தரையா பாம்பு மாதிரி போச்சு. மத்த போறவர்ர காருங்களல்லாம் ஒரு காராவே மதிக்கல. நானும் அவன மதிக்கல ஹி ஹி.

  சரி சரி, ரூட்ட மிஸ்பண்ணிட்டு வேற எங்கேயோ போயிட்டேன்.
 
  2 கதவு கார் வாங்கினேனா? அதுல போகும் போதெல்லாம், எல்லா வெள்ளகாரிங்களும் என்னையே பாப்பளுங்க. இல்லன்னா அப்படிதான் என் கண்ணுக்கு தெரியும்.  குறிப்பா கல்யாணம் ஆகாத வெள்ளகாரிங்கதான் ரொம்ப முறைப்பாளுக. இல்லன்னா எனக்குதான், அவங்களெல்லாம் கல்யாணம் ஆகாதவங்க மாதிரி தோனும். எப்படியோ என்ன  நிறைய பேர் பாக்கறாங்களேன்னு
என் சட்டை காலர் கூட தானாவே மேல நிக்கும்னா பாத்துக்கோங்களேன்.

இப்படி நான் 2 மைனஸ் 1 டோர் காரை எடுத்துக்குட்டு என்மேலாளர் காருக்கு பக்கத்தில வந்து நிறுத்தறதுல ஒரு குஷிதான் எனக்கு.
அந்த ஆளு காரு இருக்கே, அதை வார்த்தையில வர்ணிக்க முடியாதுங்க. அப்படி கொஞ்சம் தகரம்,4 சக்கரம், கொஞசம் பெற்றோல் எல்லாத்தையும் சேர்த்த ஒரு குவியலுங்க அது. ஆங்கிலத்துல ஜன்க்குன்னு சொல்வாங்க.இருந்தாலும் , மனிதன் என்ன காரு ஓட்டறானோ அத வச்சு அவன எடை போட கூடாது. அவன எட போடனும்னா ஒரு வெயிங் மிஷினுதான் வேணும், அப்படீங்கற உயர்ந்த தத்துவத்த பாலோ பண்றவங்க நானு.

அதனால நான் என்னிக்குமே அவன்கிட்ட பெருசா பந்தா கட்டுனதே கிடையாதுங்க.

நேத்து அந்த பாவிப்பய , ஏதோ ஒரு சிவப்பு கலர்ல , என் கார்ல பாதி உயரத்துக்கு ஒரு கார்ல வந்தான்.
இந்த குப்பையை எங்கடா வாங்குனான் இந்த பரதேசின்னு நினைச்சுகிட்டேன். எனக்கு அது என்ன குப்பைன்னு கூட சரியா
தெரியலங்க.  சரி அவன் கிட்டயே கேக்கலாம்னு நினைச்சேன்.

"வாட் கைண்ட் ஆப் ஷிட் ஈஸ் இட் "ன்னு கேக்க நினைச்சு
வாட் கைண்ட் ஆப் கார் ஈஸ் இட் ன்னு கேட்டேன்.

அந்த நாசமாப்போனவன் என்ன சொன்னான் தெரியுமா?

ஹோ இட் இஸ் எ பெர்ராரி -ன்னு போட்டானே ஒரு போடு. அப்பதான் இரண்டடி தூரத்துல ஒரு பெர்ராரிய பாத்தேன்.
(எழவு அந்த சனியன நேரா பாத்து அந்த பேர படிச்சுருந்தன்னா கேட்டுருக்கவே மாட்டேன், எல்லாம் போராத நேரம் தான்)
அதுல உக்காந்தேன்னா, என்னோட இரண்டு பெரிய(??) , பின் தொடைக்கி மேல  முதுகுக்கு கீழ இருக்குறது மோட்சம் பெற்று விடும்னு ஒரு பட்சி சொல்லிகிட்டே பறந்து கிழக்கு பக்கமா போச்சு.

கூடவே சில விஷயன்களையும், என் மரியாதைக்குரிய வணிக மேலாளர் "அவர்கள்" சொன்னார்கள்.
மைலேஜு ரொம்ப நல்லா குடுக்குதாம். ஒரு கேலனுக்கு 12 மைலாம்.  நெவேடாவில் 90 மைல் ரோட்டுல
200 மைல் ஸ்பீடு வரைக்கும் ஓட்ட முடியுமாம். பிரச்சினை இல்லாம ஓடுமாம்.

இதெல்லாம் பெர்ராரி வச்சிருக்குற  நீங்கள் யாராவது சொல்லபடாதா எனக்கு??

அதன் மாடல கூட சொன்னான். எதோ ஒரு "எம்"ல்ல ஆரம்பிச்சுது.னமக்குதான் அந்த எளவெல்லாம் தெரியாதே.
ஆனா அதுல பெரிய ஆர்வமும் இருந்ததில்ல (அட படுபாவி பொய் சொன்னே வாய்ல புழு வரும்..)
  
கடகடன்னு மனசுல , ஒரே லெசன்ஸ¤ ஓடுச்சு.

1.புத்திமான் பலவான் ஆவான்(பெர்ராரி வாங்கமுடியாத நீ இப்படிதாண்டா சொல்லிட்டு திரியுனும்- மனசாச்சி)
2.ஒர்த்தன் எந்த காரு ஒட்டுறானோ அத வச்சு அவன எட போடக்கூடாது ( ஏண்டா இப்ப சொல்ளுவியே நீ - மனசாச்சி)
3.எளிமைதான் சிறந்த நண்பன்... (தோடா கதையளக்குறான் பாரு - மனசாச்சி)
4.ஆயில் சேஞ்சுக்கு 60 டாலர் குடுக்குறது மகா பெரிய தப்புதான்... நீ கல்லுரி விட்டு வந்ததும் உன் மாச சம்பளமே அதவிட கம்மி..

ஏ மனசாட்சீ - நிறுத்தமாட்டியா நீ.......


Posted at 08:23 pm by karthikramas
Comments (5)  

வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...


வெச்சா குடுமி அடிச்சா மொட்டை...

என்னடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, ஆமா ஆமா அதேதான்
நம்ம ஊருல கழுத்தறுக்கறதுக்குன்னே எவனாவது அடம்  புடிச்சா அப்ப சொல்வாங்களே அதே பழமொழிதான்.ஆனா பாருங்க இங்க கழுத்தறுக்கறது ஆளு இல்ல , மிஷினு. அது கழுத்தறுகறது கெட்டதுக்கு இல்ல நல்லதுக்கு. என்னது கழுத்தறுக்குறது நல்லதுக்கான்னு கேக்குறீங்களா? கொஞ்சம் இப்பிடி உக்கார்ந்து ஆசுவாசமா கேளுங்க.

சரி முதல்ல அது எந்த மிஷினு?

கம்ப்யூட்டர்தாஙக அந்த மிஷினு. அதுக்கு நம்ம கன்னித்தமிழில்ல "கணினி "ன்னு பேரு.

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். அது என்ன வெச்சா குடுமி அடிச்சா மொட்டை?
அதுக்கும் கணினிக்கும் என்ன சம்பந்தம்?

என்ன அப்படி சுளுவா சொல்லிட்டீங்க. அதுதான அதோட தாரக மந்திரமே!!
அதாவது, செய்தால் சரியாத்தான் செய்வேன் இல்லன்னா முழுசா தப்பாத்தான் செய்வேன்னு
அடம் புடிக்கும்.  அதுகிட்ட இந்த, துண்ட கைக்கு மேல போட்டு விரல புடிச்சி பேரம் பேசர சமாச்சாரமே கிடையாது.

சரி மேல சொல்லுங்க கேக்கிறன்.

கணினின்னு சொன்னவுடனே எதோ கஷ்டமான விஷயம்னு னினைக்காதீங்க. அது ரொம்ப சாதரணமான விஷயந்தாங்க. நீங்க கணினி கத்துக்கறதுக்கு முன்னாடி கத்துக்க வேண்டியது இதுதான்.
 
சரிங்க ஒத்துக்கறன், கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.
கணினி சாதாரண விஷயம்தான்.

அப்படியே இன்னொரு விஷயமும் கவனத்துல வச்சிக்குங்க. சிறு துளி பெரு வெள்ளம்.

புரியலையே?

அதாவது, சின்ன சின்னதா , கொஞ்ச கொஞ்சமா ஆனா சரியா சொன்னாதான் கணினி கேக்கும்.
மொத்தமா சொன்னா கோச்சிக்கும், ஆமா சொல்லிபுட்டேன்.

ஓ.. குழந்த புள்ள மாதிரின்னு சொல்றீங்க.  சரி சரி!!

கணினி எப்படி இருக்குமுங்க?

அட நம்ம டீவீ பொட்டி மாதிரிதாங்க இருக்கும்.
ஆனா கொஞ்சம் சின்னதா இருக்கும். பக்கத்துல ஒரு டப்பா இருக்கும். அதுலதான் கணினியோட மூளை இருக்கும். கூடவே ஒரு தட்டச்சு பலகை ஒன்னும் இருக்கும்.
அதுலதான் நம்ம கணினிய என்ன செய்ய சொல்றமோ அதை தட்டச்சி சொல்லனும்.
உதாரணமா  நம்ம குழந்த புள்ளைங்கள பின்மண்டையில தட்டறதில்லையா அதுமாதிரிதான்.

சரீ, கணினி எதுக்கு வேணும்?

என்னங்க இப்படி கேட்டுடீங்க? எதுக்கு வேணும்னாலும் கணினிய உபயோகபடுத்தலாமுங்க.
அமெரிக்காக்காரன், ராக்கெட்டு உடறதுக்கே கண்ணியதாங்க  பயன்படுத்தறான், நீங்க என்ன
இப்படி சொல்லிட்டீங்க?

அமெரிக்காகாரன் எது வேணுன்னுனாலும் செய்யட்டும்.
நான் என்ன பண்றது கணினிய வெச்சுக்கிட்டு?

நீங்க ரொம்ப அவசரபடறீங்க, முதல்ல இந்த படத்த பார்த்து நல்ல ஞாபகம் வெச்சுக்குங்க.
அதுக்கப்பறம், கணினிய எப்படி இயக்குறதுன்னு உங்களுக்கு சொல்லிட்டு,
அதுக்கூம் அப்பறம், அத வெச்சு என்ன பண்ணலாம் நீங்கன்னு சொல்றன்...

பேசி பேசி வாய் வரண்டு போச்சு ஒரு மோருத்தண்ணி கிடையாதா?? 

(அப்பவே யோசிச்சேன் நீ மோரு கேப்பன்னு ...)...


Posted at 07:25 pm by karthikramas
Comments (4)  

Thursday, April 15, 2004
பேட்டி ஜோசியம்..

அண்புள்ள பாரா,
 பேட்டியின் ஒரு பகுதியை படிக்கும் முன்னரே சிறியது என்று நினைத்து எழுதிவிட்டேன். காரணம் நான் படித்த போது , பேட்டி ரத்த சிகப்பில் இருந்தது. 2 ம் பாகம் என்ற தலைப்பு அப்போது இல்லை.  ஒரு அகால நேரத்தில் படித்தேன். :-)

எஸ் ராமகிருஷ்ணனைபற்றி நான் புரிந்து கொண்டவை இந்த பேட்டியில் இருந்து. (னீங்கள் சொன்ன புஸ்தக ஜோசியம் மாதிரி , பேட்டி ஜொசியம்.)

சிறு வயதில் மிகவும் இணைக்கப்பட்டுள்ள (க்ளோஸ் நிட்?) குடும்பத்த்ல் வளர்ந்ததால், இயற்கையாகவே மென்மையானவராய் இருந்துள்ளார். மிகவும் விட்டு கொடுக்கும் குணம் உள்ளவர் அல்லது மற்றங்களை ஏற்றுகொள்பவ்ர். ஆனால் தனது துறையில்தான் இருப்பது என்ற அடமும் உடையவர்.
இப்படி மாற்றங்களை ஏற்றுக் கொள்வதால், செளகரியங்களையும் அதைவிட மிகப் பெரும் இடையூறுகளையும் சந்தித்திருப்பார்

தன் வாசிப்பில் இருந்து கருத்துகளை பின் மூளையில் சேகரித்து கொள்பவர். அவர் தெரிந்து கொண்ட  காரணங்களை  தனது புனைவுகளில் சொல்ல முனைகிறார். இது மிகப் பெரும் வரிகளில் அவரது படைப்புகளில் நடக்கலாம். அல்லது இப்படியும் சொல்லலாம். இந்த காரணத்துக்கா இது விளைந்தது, அல்லது இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்ல கூடியதாய் உள்ளன இவரது சிந்தனை ஓட்டம். புனைவுகளின் பின்னணியில் அவசியம் ஒரு காரனத்தை காட்ட முயல்கிறார் என்றும் சொல்லலாம். அவர் சொன்னது போல் கனவுகளை மிகச் சரியான வாழ்வியல் அலது தினசரி வாழ்க்கை உதாரணங்களில் பொருத்துவதில்தான் இவரது வெற்றி அமைகிறது.
===================================
னான் சொன்னது அததனையும் டுபாக்குராய் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.. :-)


Posted at 07:01 pm by karthikramas
Comments (2)  

Wednesday, April 14, 2004
சுவாரஸ்யத்துக்காக...

திண்ணை என் கடிதத்தை எடிட் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பியது.
நான் எதிர்பார்த்தது தான். ஒன்றும் இல்லை , வாசகர் சுவாரஸ்யத்துக்காக வம்பு சண்டைகளை எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகிறார்கள் என்று யோசித்தேன்.
சரி, திண்ணைக்கு எடிட்டிங் அறிவு மிகவும் குறைவு என்பது ஊரே அறிந்த விஷயம்தானே...
கடிதத்தின் திருத்திய வடிவம் இது. இதற்காவது, மிஸ்டர் கேனையன் பதிலளிக்கிறாரா என்று பார்க்கிறேன். அவரால் சத்தியாமாய் பதில் சொல்ல முடியாது என்பது நான் அறிந்ததே...
அப்படியும் அவர் பதில் சொன்னால் இன்னும் நூறு கேள்விகளை எழுதி அனுப்புவதாய் இருக்கிறேன்.
மிஸ்டர் கேனையன் என்ன செய்கிறார் என்றுதான் பார்க்கிறேன்.....
திண்ணையின் ஜனனாயகம்தான் என்னை புல்லரிக்க வைக்கிறது.

   ***********************************************

திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன். பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம். இருப்பினும், நாத்திகத்தின் கருத்தாங்களின் பிடியில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல்.முடிந்தால் ஆசாரகீனன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு தொடர்ந்துபதில் சொல்லிவிட்டு கட்டுரைகளை மேற்கொண்டு எழுதிச் செல்லட்டும்.
உதாரணமாய் கடவுளை சிலை மட்டுமே என்கிற மூடத்தனத்தை பெரியாரியம் பரப்புவதை அடியோடு வெறுக்கிறேன். என்வேதான் பெரியாரிகளுக்கு,சிலைக்கு செருப்பு மாலை போடும் மிக இழிந்த ஒரு யோசனை உருவாயிற்று. இது பெரும் பாலான மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என்பதை கூடவா அந்த இயக்கத்தால் யோசிக்கமுடியவில்லை. இவர்களில் பலர் நாய்க்கும், பாம்புக்கும் பயப்படுபவர்கள். ஆனால் கடவுளுக்கு பயப்படாதவர்கள் என்னே இவர்களது வீரம்.

உதாரணமாய் ஒரு கேள்வி,

ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடைய உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை "கடவுள்" என்ற வார்த்தையிட்டு நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?
இவர்கள் "கொழுனன்" என்றால் புருசன் என்று அர்த்தம் கற்பிப்பார்கள்.
"கற்பு" என்றால் உடல் ரீதியானது என்று அர்த்தம் செய்துகொண்டு,கற்பு என்பது என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். பெய் என்று சொன்னால் மழை பெய்யலையே, அதனால் எல்லா பெண்களும் கற்பில்லாதவர்களா என்று வாய் கூசாமல் கேட்பார்கள்.
ஜால் சாப்பு செய்யாமல், கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். பெரியார் கடவுளை ஒத்துகொண்ட இடம்
கட்டுரைகளில் எழுதப்படாமல் இருக்கலாம். நீங்களும் படிக்காமல் இருக்கலாம். வரலாஅற்று சம்பவங்களையும், பெரியார் "எனக்கு பின்னால் ஒரு கூட்டம் வளர்ந்து விட்டது, என்னால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிகொள்ள முடியாது" என்று சொன்னதை பார்த்தவர்களும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாகத்தெரியும்.
இது போல் ஆயிரம் கேள்விகளை என்னால் அள்ளி வீசமுடியும். என் நோக்கம் அதுவல்ல.
பெரியாரிகளையோ, அவரது கருத்துகளை இகழ்வதோ என் நோக்கமல்ல. மாறாக பெரியாரியத்தை பேணுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்களோ என்ற என் ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்.       


******************************************************

Posted at 08:36 pm by karthikramas
Comments  

Tuesday, April 13, 2004
கடிதம்

நான் திண்ணைக்கு எழுதிய இவ்வாரக் கடிதம். திண்ணை வெளியிடுமா என்பது சந்தேகம்தான்..
=======================================================
அன்புள்ள வாசகர்களுக்கு,
   திண்ணையில் ஆசாரகீனன் என்பவர் தந்தை பெரியாரின் கட்டுரைகளை தட்டச்சி அனுப்பி வெளியிடுகிறார்.
அவரது முயற்சி கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விடாது ஒரு தவம் போல் செய்து வருகிறார்.

இருந்தாலும் ஒரு சின்ன சிக்கல்(மிஸ்டர் ஆசார கீனன்(இன்னாடா பேரு இது ஆசாரகேனயைன்னு!!!), யார்ரா இந்த கார்த்தின்னு னினைச்சீங்கன்னா, திண்ணை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடாதேன்னு, முன்குறிப்பா சில வரிகள்.
   நான் பெரியாரை அவர்களை மிகவும் மதிப்பவன். சமத்துவத்தை மிகவும் பேணுபவன். ஆதிக்கத்தை, பிராமணீயமாயினும் அல்லது எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்ப்பதற்காக யோசித்து தூக்கம் வராமல் தவிப்பவன்.  பெரியார் மிகப்போற்றும் சமத்துவம் என் வாளின் மறுமுனையாம்.  எனவே என் வாள் (என்ன வாள் வாள்னு பிராமணபிள்ளை போல பேசறான்னு நினைக்கப்படாது) பெரியாரை அவமதிக்க துணியாது.

இதோ வந்டேன் மேட்டருக்கு:

 பெரியாரின் எத்தனையோ சிந்தனைகளை நான் ஏற்றாலும், இந்த டுபாக்கூர் கத்தலாகிய , "பெய்யுன்னா மழை பெய்யுமா?"
"ஊரில் எல்லா பொன்னுகளுக்கும் கற்பில்லையா?","கற்புன்னா இன்னா?" இதெயெல்லாம் தான் கொஞ்சம் கேட்டா பல்பு ப்ளிக்கர் ஆவுது மைண்டுக்குள்ளே.

ஐயா சாமி ஒரே ஒரு கேள்விதானுங்க கேக்க போறேன். அது கூட நான் கேக்கலைங்க ஒரு புழு கேக்குது.
இந்த இடத்துல அந்த புழுவ நான் ரெப்ரெசண்ட் பண்றதால அந்த புழுவுக்கு கார்த்தி புழுன்னு பேரு வச்சிடாலாம்.

கார்த்திபுழு இன்னா கேக்குதுன்னா, உங்க பெரியார் பெரிசு, சிலைகளுக்கு (ராமாரா, புள்ளையாரா?? மறந்துடுச்சு மன்னிச்சிக்கீங்க).செருப்பு மாலை போட்டாரே, என்ன மாறி புழுவுங்க எல்லாம் சிலைங்கள கும்புடுறதுல்ல. ஒரு டப்பாவுல களிமண்ண போட்டு வச்சீங்கன்னா மூடி இருந்தா கூட தட்பவெட்பனிலை சரியா இருந்தா, என்ன மாதிரி புழு உண்டாயிடுங்க. இந்த மாறி புழுவ உண்டாக்கறவரதான் நாங்க கடவுள்ன்னு கும்பிறதுங்க. உங்களால டெஸ்டு பண்ண முடியல்லன்னா, ஒரு மாம்பழம் வாங்கி அழுக வச்சி பாருங்க, சீப்பான டெஸ்ட் கேசா முடியுமுங்க. அந்த கடவுளுக்கு எங்க செருப்பு மாலை போடுவாரு உங்க பெரியார் பெருசு ங்கறதுதான் இந்த கார்த்தி புழுவோட கேள்விங்க.

னைசா கேள்வி புரியல்லைன்னு ஆசாரகேனையன் எஸ்கேப் ஆயிடுவார், அதனால நொள்ள தமிழ்ல கேட்கிறேன்.
   ஒரு மாம்பழத்தில் எப்படி புழு உண்டாகிறது? அதாவது உயிரற்ற பல பொருட்களின் கூட்டு சேர்க்கையில், ஒரு அசையும் தன்மையுடை உயிர் உருவாவது எப்படி. இந்த முறையின்கண் இந்த அவனியையும் அண்டங்களையும் படைத்த பொருள் எது? அந்த பொருளை
"கடவுள்" என்ற வார்த்தையிட்டு  நான் அழைத்தால் , எங்கே போய் செருப்பு மாலை போடுவீர்கள்?

மிஸ்டர் கேனையன்(ஷார்ட்டா)
உண்மையிலேயே னீங்கள் பெரியாரியாய் இருந்தால் இந்த கேள்விக்கு பதில் அளித்துவிட்டு, உங்கள் தட்டச்சு தவப்பணியை
தொடருங்கள். உண்மையிலேயே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தாக்கா அட்லீஸ்டு எங்கிட்டயாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா பெரியாரிகிட்டயும் கேட்டுபாருங்கள். (பெரியாரிடமே இந்த கேள்வி கேட்டாயிற்று, மிஸ்டர் கேனையன்! அதை பத்தி அவர் வெளில மூச்சு உட்டுக்கல?)

சும்மா மீனிங் தெரியாம, "கொழுநன்" ன்னா புருசன்ங்காரன், "எல்லா பொன்னுங்களுக்கும் கற்பில்லையான்னு" கேள்வியெல்லாம் கைவலிக்க தட்டச்சி, திண்ணை மாறி மாதிரி ஒரு இடத்துல சீன் போட்டாக்கா உங்களுக்கு எல்லாம், ஐன்ஸ்டீன்னு மனுசுல நெனப்பு.

இவ்ளோ கஷ்டப்பட்டு அடிச்சுருக்கேன் இத்தையும்  உங்க பெரியார் கட்டுரை பட்டியல்ல ஒரு லிங்க் குடுங்களேன். முடியல்லன்னா உங்க கட்டுரைக்கு இத்தோட ஒரு முற்றுபுள்ளி வைங்கள்.


என்னுடைய கடிதத்துக்கு,திரு ஆசாரகீனனனிடமிருந்து என்னால் எதிர்பார்க்கப்படும். ட்ரேட்மார்க் திண்ணை புஸ்வாண பதிலகள் சில.

1. கார்த்தி என்பவரது கேள்வி என்னை மிகவும், வாய்விட்டு வலிக்குமளவுக்கு 10 நிமிடங்கள் வரை சிரிக்க வைத்தது.
வாய் வலிக்கு மருத்துவரிடம் போனால் செலவு இவர்தான் தரவேண்டும்.
2. இவர் எதை வேண்டுமானாலும் "கடவுள்" என்று சொல்லட்டுமே, யார் தடுத்தது, அதற்கு நான் யேன் பதில் சொல்ல வேண்டும்.  வேறொருவர் குப்பைதொட்டியையோ, குஷ்புவையோ கூட "கடவுள்" என்று சொல்லலாம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.இதற்கும் எனது கட்டுரைகளுக்கும் என்ன சம்பந்தம்.
3. ஆசாரகீனன் என்றால் என்ன என்று புரியவில்லை இவருக்கு, புழு எப்படி வந்தது என்று புரிந்ததாக சொல்வதை நம்பமுடியவில்லை.
4. இவருக்கு பெரியார் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை. இந்த மாதிரி ஜந்துக்கள் பெரியாரை மதிப்பதை விட சும்மா இருக்கலாம்.
5. பிரச்சினையை திசைமாற்ற முயற்சிக்கிறார். இவரூக்கு பதிலளிப்பதற்க்கு எனக்கு நேரமில்லை.
பொறுமையும் இல்லை.
6.இவருக்காக நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை. (மீசை துடிக்கிது லேசா..)


Posted at 04:42 am by karthikramas
Comments (1)  

Next Page