<< June 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05
06 07 08 09 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Tuesday, May 18, 2004
தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில்..

கீழ் கண்டவை இந்திய தேர்தல் 2004 குறித்து வலைப்பதிவுகளில் வீசிய அலை.
ஒரே இடத்தில் இருந்தால் படிக்க எளிதாக இருக்குமென நினைத்து குவித்து வைத்துள்ளேன்.
சில பதிவுகளில்,பக்கத்தை சற்று கீழே இழுத்து படிக்க வேண்டியிருக்கும்.
 பிரகாஷ் , அவரது கருத்துகளை ராயர் க்ளப்பில் எழுதியிருந்தார். அவரது பதிவில் போட்டால் அனைவருக்கும் உதவும்.

**வேறு யாரையாவது பட்டியலில் தவற விட்டிருந்தால் , எனக்கு தெரிவித்தால் சேர்த்துவிடுவேன் :-) **

தேர்தல் குறித்து எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன். இவற்றை பார்த்தவுடன் வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். :-)  சோனியா பிரதமாரவதில் உள்ள சர்ச்சை குறித்து மட்டும் எழுதுவேன்...

Aruna
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_15.html
Amalasingh
http://amalasingh.blogspot.com/2004_04_18_amalasingh_archive.html
Aappu
http://aappu.blogdrive.com/archive/cm-5_cy-2004_m-5_d-19_y-2004_o-0.html
Arun
http://arunviews.blogspot.com/2004_05_16_arunviews_archive.html
Badri
http://thoughtsintamil.blogspot.com/2004_05_09_thoughtsintamil_archive.html
Balasubra
http://etamil.blogspot.com/2004_05_01_etamil_archive.html
BB
http://www.tamillinux.org/~balaji/archives/000303.html
DuraiSwamy
http://odai.blogspot.com/2004_05_09_odai_archive.html
Hari
http://harilama.blogspot.com/2004_05_02_harilama_archive.html
Idlyvadai
http://idlyvadai.blogspot.com/2004_05_01_idlyvadai_archive.html
JohnBosco
http://johnbosco.blogspot.com/2004_05_09_johnbosco_archive.html
kathavu-karthikeyan
http://kathavu.blogspot.com/2004_05_09_kathavu_archive.html
Kasi
http://kasi.thamizmanam.com/index.php?catid=1&blogid=1
Malan
http://elections2004.yarl.net/archives/000787.html
PARA
http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=168&fldrID=1
pari
http://pari.kirukkalgal.com/index.php?itemid=55
pkp
http://pkp.blogspot.com/2004_05_01_pkp_archive.html
raja
http://raja.yarl.net/archives/2004_05.html
Kosapettai
http://kosappettai.blogspot.com/2004_05_09_kosappettai_archive.html
Poetraj
http://poetraj.blogspot.com/2004_05_01_poetraj_archive.html
Rajmu
http://www.rajmu.blogspot.com/2004_04_01_rajmu_archive.html
RajniRamki
http://rajniramki.blogspot.com/2004_05_01_rajniramki_archive.html
Shankar
http://suvadu.blogspot.com/2004_05_01_suvadu_archive.html
PKS
http://pksivakumar.blogspot.com/2004_05_09_pksivakumar_archive.html
Nose-Sundar
http://mynose.blogspot.com/2004_05_16_mynose_archive.html
Thangamani
http://ntmani.blogspot.com/2004/05/blog-post_14.html
Valaippoo-dubukku
http://valaippoo.yarl.net/archives/000759.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000300.html
Venkat
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000305.html
Venkatesh,Rajini Interview
http://sifyrayan.blogspot.com/2004_04_11_sifyrayan_archive.html

 


Posted at 10:39 pm by karthikramas
Comments (1)  

எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமென

அன்புள்ள செல்வராஜ், உங்கள் நீண்ட பதிவுக்கு நன்றி. நான் கூட முதலில் உங்கள் ஒற்றை வரி மறுமொழியைப் பார்த்து , என்னடா, மனிதர் மென்மையாய் பேசிவிட்டு போய்விட்டாரே என்று நினைத்தேன். பின்பு நம்ம பெயரிலி லேசாய் ஜகா வாங்கியவுடன் நானும் கொஞசம் கவனம் குவித்தேன். னீங்கள் சொன்ன அத்தனையையும் நானும் கவிதையில் பார்த்தேன். மிகவும் ரசிக்கவும் செய்தேன். னீங்கள் சொன்ன ஒன்று மட்டும் ஒரு 2 வரி குறிப்பு சொல்ல விழைகிறேன். நான், கவிதை நாரணந்தான் படைத்தான் என்று கவிதை ஏற்றுக் கொள்வதாய், எழுதியிருந்தால் , அதை நான் பிடித்த இன்னொரு குரங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்(பிள்ளையாரை இப்போதைக்கு தவிர்ப்போம் ..:-)). நான் சொல்ல வந்தது, இதே கவிதையை கடவுள் ஏற்பாளர் எழுதுவது கடினம். ஏன்? நீங்கள் சொன்னது போல் அதிர்ச்சி தரும் சில வரிகள் கடவுள் ஏற்பாளரின் நம்பிக்கை எல்லையில் நுழைய வாய்ப்புள்ளது. அந்த எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து விடுவோமெனில், கவிஞரை கடவுள் மறுப்பாளராய் காணவும் வாய்ப்புள்ளது. ஒரு கடவுள் மறுப்பாளர் இந்தக் கவிதையை எழுதுமிடத்தில் (இந்த இடத்தில் கவிஞர், சு.வ அல்ல) அவரது நம்பிக்கை மறுப்புக்கும், நாரணன் வாயில் உலகம் தெரிகிறது என்ற கவிதைவரிகள் முரணாய் இருக்கும் என்பதை சொல்ல வந்தேன்.அவ்வெல்லைக் கோடு எங்கு சஞ்சரிக்கிறது என்பதுதான் இங்கு அனைவரின் பார்வை எழுப்பும் கேள்வியாகிறது. எனவேதான் அக்கவிதை குறித்துக் குறிப்பு எழுதுவதைத் தவிர்த்தேன். தங்க மணி சொல்வது போல் , அவ்வெல்லைக் கோட்டை குறித்து எழுதி நாம் மதிப்பவர்களிடம் தவறான புரிதலைத் தரும் அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன். --- உங்கள் வலைப்பதிவின் சுட்டியையும், பின் தொடர்தலையும் எனக்குள் இருக்கும் சோம்பேறி அனுமதித்தவுடன் செய்துவிடுகிறேன்.

Posted at 12:16 pm by karthikramas
Comments (3)  

Monday, May 17, 2004
சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...

சுந்தரவடிவேலரின் கவிதை குறித்து...
  இக்கவிதையை பார்ப்பது எப்படி என்பது ஓவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதுதான் பிரச்சினை. இதை எழுதியவர் கடவுள்  மறுப்பு கருத்தாளர் என்பது எரிகிறதாய் காட்டப்படும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாம்.

இந்த கவிதை குறித்து என்னால் ஒரு குறிப்பை எழுதி அனைத்து திருமால் பக்தர்களின் ஏகோபித்த ஆதரவுடைய கைதட்டலை பெறமுடியும். அல்லது இதே கவிதைகுறித்து இன்னொரு முகமாய் ஒரு குறிப்பு எழுதி திருமால் இதனால் அவமானப்பட்டுவிட்டாரா என்று கேட்டு, திருமால் பக்தர்களின் வயிற்றெரிச்சலையும், கடவுள் மறுப்பாளர்களின் வாயார வாழ்த்தையும் பெற முடியும்.

என்னை பொறுத்தவரை இரண்டுமே வேண்டியதில்லை. இது ஒரு கவிதை , கவிதை மட்டுமே என்ற பார்வை இருபுறத்தாருக்கும் உதவுமென நினைக்கிறேன்...

இக்கவிதையில் அழகியல் உள்ளதா என்றால் உள்ளது என்றே சொல்வேன். அதே சமயம் இக்கவிதையில் பக்தியையோ அறிவையோ பார்க்கமுடியாது என்றும் சொல்வேன். ஏனெனில் நாரணந்தான் படைத்தான் என்பதையே கடவுள் மறுபாளர்கள் ஏற்பதில்லை  என நம்புகிறேன். அப்படி ஏற்பவர்களின் ஏற்பும் ஏற்புக்குரியதல்ல, இவ்வாறு கவிதைஎழுதின்.

:-)  :-)
 


Posted at 03:49 pm by karthikramas
Comments (3)  

எங்கும் அமைதி...

மனிதர்களில்லா உலகு
நானும் பேசுவதை நிறுத்திகொள்கிறேன்.
எங்கும் அமைதி

Posted at 09:53 am by karthikramas
Comments  

Thursday, May 13, 2004
சுந்தரவடிவேலரே..

ஐயோ சு.வ.
 அதை ஏன் கேக்குறீங்க....  இந்த வலைப்பூவ ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க(னம்ம உஷாரா அவங்கள திட்டிடனும் அவங்க நம்மள திட்டறதுக்கு முன்னால :) )... படா பேஜாரா பூட்சுபா.. நான் கூட இந்தப் பக்கம் வரமாட்டேன், ஒரு மாசம் வேலை நிறைய இருக்கு; லீவு குடுங்கன்னு கேட்டு, டமில் ப்ளாக்ஸ் க்ரூப்பில அறிக்கையெல்லாம் விட்டேன்.  24 மணினேரம் கூட தாங்கல. கை அரிப்புதான் மிச்சம்.இவனுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா ? அப்படின்னு எல்லோரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. என்னத்த சொல்ல. ..இப்ப எல்லாம் ப்ளாக் கூட அதிகம் எழுதறது இல்ல. கமெண்ட்டு எழுதறதுக்கே டைம் பத்தமாட்டேங்குது... இதுல் சில பேர்கிட்ட எதிர்வினை எழுதுறன்னு வேற வாய குடுத்து வம்ப விலைக்கு வாங்குறது..உருப்புட்டா மாதிரிதான்...நானு... ம் :-)

Posted at 08:17 pm by karthikramas
Comments (4)  

Sunday, May 09, 2004
கவிதை எழுதுவதென்பது...

கவிதை எழுதுவதென்பது நிலவை எக்கிப் பிடித்து
   பிஞ்சுக் குழந்தையின் கைக்குள் அவசரமாய் சேர்ப்பதுவாம்
கவிதை எழுதுவதென்பது சில நேரங்களில் குழந்தைக்கு
   குழந்தையாகி நிலவை தரேன் என்று அடம்பிடித்து அழுதலாம்
கவிதை எழுதுவதென்பது மலருக்குள் இறங்கி வண்ணத்தை பிரித்தெடுத்து சட்டைப் பைக்குள் போட்டுப் பிடரி தெரிக்க ஓடுதலாம்
கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
   சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்


தலீவா இது எப்பிடி கீது ??
இத்த படிச்சீ அத்த மாதிரியே ட்ரை பண்ணது ஹி ஹி ...

தலைப்பு நல்லா கீது...
  சுந்தரவடிவேல் , தங்கமணி யெல்லாம் எழுதுனாங்கன்னா பெயரிலியின் மாதிரியே
உண்மையிலேயே நல்ல கவிதைகள் 2 கிடைக்கும்... அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன்....


Posted at 08:36 pm by karthikramas
Comments (5)  

Friday, May 07, 2004
ராணுவ அத்துமீறல்கள் -??


எந்த ராணுவமும் நல்ல ராணுவம் அல்ல - No army is good army - என்று சொல்வார்கள். ஆதிக்கம் செலுத்துகிற அல்லது அதிகாரம் கொண்ட ராணுவம் செய்கிற அத்துமீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்துத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பது இந்த நிஜத்தை உணர்த்தும். ஈராக் சிறைச்சாலையில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து CBS தொலைகாட்சி தன் 60 Minutes நிகழ்ச்சியில் காட்டிய புகைப்படங்கள் ஈராக்கில் அதிகாரம் செலுத்துகிற அமெரிக்கர்களையும் ஆங்கிலேயர்களையும் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளன. தவறு செய்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் சிறப்பாகும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் நடவடிக்கைகள் தடுக்குமோ தடுக்காதோ ஆனால் ஜனநாயகத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக ராணுவ வீரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமையும்.

 சமீபத்தில் இணையத்தில் நடந்த விவாதங்களின்போது இந்தியாவில் மனித உரிமை மீறப்படவில்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அதன் அடிப்படையில் பயங்கரவாதக் குழுக்கள் செய்கிற அத்துமீறல்கள் படுகொலைகள் ஆகியவற்றை விடுதலைக்காக என்கிற நோக்கத்துக்காகப் பொறுத்துக் கொள்ளலாம் என்று "அறிவுபூர்வமான" வாதங்கள் வைக்கப்பட்டன.
>>>
-   இதிலிருந்து நண்பர் பி.கே.எஸ், பயங்கர வாத குழுக்கள் செய்யும் அத்துமீறல்களை ஆதரிக்கவி-ல்லை என்று சொல்கிறார். வரவேற்புக்குரிய கருத்துதான்.
-இதே போல் "வீரன்" வாஞ்சி நாதன் செய்ததையும் அத்து மீறல் என்று சொல்வாரா?? வாஞ்சி நா
-தனை "பயங்கரவாதி"  என்று உரத்து குரல் கொடுப்பாரா?? இந்த நிலைக்கும் அந்த நிலைக்கும் -உள்ள
-வித்தியாசம்தான் என்ன என்று பிரித்து பொருள் தருவாரா??
-பாரதி மாறு வேடம் பூண்டதை கோழைத்தனம் என்று சொல்வாரா?? பாரதி திரைமறைவு வேலை
-செய்த கீழ்த்தரமானவன் என்று சொல்வாரா??
-சுபாஷ் சந்திரபோஸ் அமைத்ததை பயங்கரவாத போராளிக் குழு என்று சொல்வாரா??
- ஏனெனில் அரசு ஆங்கிலேய அரசாய் இருந்தபோது, அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய குழு தா-னே சந்திரபோஸினுடையது!!
>>>>>>>>
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அட்டூழியங்கள் செய்யவில்லையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது. குஜராத்தில் நடந்தது தெரியாதா என்றும் கேட்டார்கள். எந்த நாட்டின் அரசாங்கமும் ராணுவமும் செய்கிற அட்டூழியங்களைப் பத்திரிகைகள் தைரியமாக அம்பலப்படுத்த இயலும்.
>>>>>>>>

 பத்திரிகைகள் அம்பலத்த முடியாத குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்ல வருகிறாரா?
--Classifeid informations -ஐ எப்படி வகுக்கிறார்??
--உளவுத்துறை ஊழல்களை கணக்கில் கொண்டாரா?
>>>>>
   பாதிக்கப்பட்டவர்களும் நீதி தேடிக் கொள்ளும் வழிகள் உள்ளன. நீதியும் பரிகாரமும் தேட உதவ சட்டங்கள் இருக்கின்றன. உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து சர்வதேச நீதிமன்றம் வரையும் மிலிட்டிரி டிரிபியூனல்வரையும் பல மார்க்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
>>>

-  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? அரசும் ராணுவமும் என்ன செய்தாலும்  நடவடிக்கை
-எடுக்கலாம்/ எடுக்க முடியும், எனவே  அரசோ / ராணுவமோ / அரசும் ராணுவமும் சேர்ந்தோ
-செய்வதை செய்யட்டும் பின் "நடவடிக்கைகளை" எடுத்துக் கொள்ளலாம் என்றா??

>>>>>>
ஆனால் பின் லேடனோ மற்றும் விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கடத்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களும் செய்கிற அத்துமீறல்களையும் அரசியல் படுகொலைகளையும் எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க இயலாது; எந்த நீதியையும் பெற்றுவிட இயலாது. இதை நம்மில் பலர் அறிந்திருந்தும் அறியாதவர்போல் அபிமானத்தாலோ கட்டாயத்தாலோ கண்மூடித்தனமாகவோ நடிக்கிறோம்.
>>>>>>>>>

-  சரி இதிலிருந்தும் என்ன சொல்ல வருகிறார்? நம்மில் அறிந்தவர்கள் எல்லோரும், விடுதலைக்காகக் கஞ்சாவும் போதைப் பொருளூம் கட-த்துகிற, தற்¦-காலைப் படைகள் நிறுவி அப்பாவி மனிதரைக் கொல்கிற இயக்கங்களை தேடிக் கண்டுபிடிக்க கிளம்பலாம் என்றா?
- இல்லை வீட்டுக்கொரு இளைஞனை பின் லேடனைக் கண்டுபிடிக்க கொடுக்கலாம் என்றா?
>>>
இலங்கையில் இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லா ராணுவங்களைப் போலவும் இந்திய ராணுவமும் ராணுவம் தானே. இந்திய அமைதி காக்கும்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பரிகாரமும் நிச்சயம் சட்டபூர்வமான வழிகள் மூலம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடந்தன என்று அடிக்கடிச் சொல்பவர்கள் - அவை குறித்து ஏதும் சட்டரீதியான புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா, அத்தகைய புகார்கள் என்ன ஆயின என்பதைப் பற்றி ஏதும் சொல்வதில்லை. புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையென்றால், அது கண்டிக்கப்படத்தக்கது.
>>
 ஆனால், புகார்கள் ஏதும் கொடுக்காமல் அல்லது பத்திரிகைகளில் ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவராமல் வெறுமனே இந்திய அமைதி காக்கும்படை அத்துமீறலில் ஈடுபட்டது என்று சொல்வது அதன் உண்மையை மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுத்துவிடக் கூடும்.
>>>
-அடேங்கப்பா!!! மறைக்கவே முடியாத மாபெரும் பூசணிக்காயை ஏன் மறைக்க மல்லு கட்டுகிறார்.
- அமைதிப்படையின் அட்டூழியங்கள் பத்திரிகைகளில் வரவேயில்லை என்கிறாரா? அல்லது
-பத்திரிகைகளில் வந்தால்தான் அவை "நடவடிக்கை" எடுக்கப்படும் அளவுக்கு qualify ஆகும் என்கிறாரா??
-"அது கண்டிக்கப்படத்தக்கது." என்று சொன்னதோடு நிறுத்தியிருக்கலாமே? அமைதிப் படைக்கு வக்காலத்து வாங்க காரணம் என்ன?
-நண்பர் பி கே எஸ் இந்திய ராணுவத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கு ஒரு சல்யூட்டும், எனது வாதத்தின் அடுத்த தளத்தையும் -சொல்வேன். இப்ப முடீயாதே! :-)
>>>
இதை எழுதியதன் மூலம் இந்திய ராணுவம் புனிதமானது என்று நான் சொல்ல வரவில்லை. எந்த ராணுவமும் செய்த அட்டூழியங்களுக்குப்
பதிலாகக் கூட பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் செயல்பாடுகளையோ விடுதலை என்ற பெயரால் கூட ஆதரிக்க இயலாது என்பதே என் நிலை.
>>>
உதாரணமாக, ராஜீவ் காந்தி கொலை போன்ற ஒரு படுகொலை மேலைநாடுகளில் நிகழ்த்தப்பட்டிருந்தால் - அதற்குக் காரணமான இயக்கம் ராணுவரீதியான பதிலடியால் வேரறுக்கப்பட்டிருக்கும்.
>>>
-இந்திரா அம்மையாரின் படுகொலையின் போது சீக்கியர்கள் வேரருக்கப்பட்டது போலா??
>>
தன்னுடைய குடிமக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாலே நாடுகள் ராணுவ ரீதியான பதிலடிகள் தருவது வழக்கமாகிப் போய்விட்டன.
>>>
இந்த வழக்கத்தை நண்பர் பி கே எஸ் ஆதரிக்கிறாரே?? ஏன்?? காந்தி மகான் நடத்திய அகிம்சா கூட்டத்தின் மீது தடியடி ஏவிய ஆங்கில அரசின் நடவடிக்கையை ஆதரிப்பாரா??

>>>

இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத்தான் செய்கின்றன.
காரணமான இயக்கங்களின் நோக்கங்கள் புனிதமானவையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. விடுதலையை பயங்கரவாத்தின் வழியாகவும் வன்முறை வழியாகவும் யாரும் ஆதரிப்பதில்லை. பாலஸ்தீனத்திலிருந்து, ஆப்கன்கானிஸ்தான், ஈராக் வரை ராணுவ பதிலடிகளையே மக்கள் பார்த்து வருகிறார்கள். சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது.
>>>>
-- அதாவது காந்தி மகானை ஆங்கிலேயர்கள் சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்கிறாரா??
-- இல்லை அந்த அளவுக்கு ஆங்கிலேயருக்கு அவர் மீது வெறுப்பு இருந்திருக்க வில்லை என்கிறாரா??
>>>

 ஆனால், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வின்பால் இந்தியாவுக்கு இருக்கிற அக்கறையின் காரணத்தினாலும் கூடவே, ராஜீவ் காந்தி படுகொலைக்கு இந்தியா ராணுவ ரீதியான பதிலடி தராமல் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று அனைவரும் அறிவர். இதுதான் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் கண்டறிய முடியும்; களைந்து கொள்ள முடியும். பயங்கரவாதமோ தன் குறைபாடுகளை மறைத்துக் கொள்ளவும் குறுகிய நோக்கங்களுக்காகவும் மற்றவரைக் களையெடுக்கும்.
>>>>>>>>>
""ஈராக் சிறையில் வாடுபவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனிதாபிமானம் உள்ளவர் செய்யக் கூடியதல்ல.""
"சிலநேரங்களில் இவை அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது."
- அமெரிக்க ராணுவத்துக்கு , அவர்கள் எதிரிகள்தானே ? "அப்படியிருக்க அவசியமானகவும் ஆகிவிடுகிறது"  லாஜிக் வருகிறது இல்லையா??
-இதன் ஆரம்பம் வெகு நாட்களுக்கு முன்னாலேயே நடக்க ஆரம்பித்து, இத்தனை நாட்கள் கழித்து பத்திரிகைகளில் வருகிறதே??
- இந்த ஈராக் கொடுமைகளை பற்றிய எச்சரிக்கை , எப்பொழுதோ அமெரிக்க அரசுக்கு வந்தது எனபது செய்தி.
-
-ஜனனாயகம் இத்தனை நாள் எவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது?? நண்பர் சொல்வாரா??

>>>>
 அமெரிக்காவும் உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டங்களின் வழியாக தவறிழைத்தவர்கள் வெளிக்கொணரப்பட்டதும், தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதுமே ஜனநாயகத்தின் சிறப்பு என்று மேற்கண்ட உதாரணத்தால் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
>>>>

-வெளிக்கொணரப்பட வில்லையென்றால்??  எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகலாம் என்று விளங்கிக் கொள்ளலாமா??
>>>
மேலும் CBS TV இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்னர் - அது பற்றி அமெரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்ததாகவும் - ஈராக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கடுமையான சண்டைகளால் - இதைச் சற்றுத் தாமதமாக ஒளிபரப்பும்படி அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க - இருவாரங்கள் தாமதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டிருக்கிறது என்றும் அறிகிறோம். தன் நாட்டின் ராணுவம் செய்த அத்துமீறல்களையும் கூட ஒளிபரப்ப வேண்டாம் என்று தடுக்கிற அதிகாரம் கையிலிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் அனுமதித்ததும் ஜனநாயகத்தின் ஓர் அம்சமே. இதையே பின் லேடனும் அல்லது விடுதலைக்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிற பிற இயக்கங்களூம் செய்திருப்பார்களா என்ற கேள்விக்கான பதில் நாமறிந்ததே.
>>>>
-இனி பின் லேடன் தினமும் CBS-ல் தினசரி அப்பாயிண்டுமெண்டுகளை உலகத்துக்கு சொல்லிவிட்டு, வேலை செய்யுமாறு கேட்டுக்கெ--ள்ளப்படுகிறார். 
>>>>
எதற்காக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அமெரிக்க அரசாங்கத்திடம் CBS தொலைகாட்சி தகவல் சொல்லியது என்பது என் கேள்வி. இத்தகவல் சொல்லப்பட்டது நாகரீகத்துக்காகவா (Courtesy) அல்லது அப்படி ஏதும் சட்டரீதியான நிர்ப்பந்தம் தொலைகாட்சிகளூக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள் குறித்து வருந்துகிற நண்பர்கள் (வருந்த வேண்டிய விஷயம்தான் அது) - மற்றவர்கள் வருந்துவதில்லை என்று குற்றம் சொல்கிற நண்பர்கள் - ஈராக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து வலிமையாகக் குரல் கொடுத்து தங்கள் நடுநிலைமையைப் பறை சாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

----
  அட்டூழியங்களை வரையறுக்கத் தெரியாதவர்கள் தான் குழம்புகிறார்கள், சிந்திப்பவர்களும், காணச் சகியாதவர்களும் அல்ல.
என் கேள்விகளில் குறைஇருந்தாலோ, மாற்று கருத்து இருந்தாலோ தெரிந்தவர்கள் சொல்லவும் கேட்டுக் கொள்கிறேன்.


Posted at 09:42 pm by karthikramas
Comments (5)  

Thursday, May 06, 2004
பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்...

ஐயா எஸ் பொன்னுதுரையின் , சில வரிகள் குறித்து பி.கே. சிவகுமாரின் பதிவு ஒன்றில்
படிக்க நேர்ந்து (எனக்குள் க்ளுக்கென சிரித்து) எழுதியது..

எஸ்.பொ. கேள்விகளூடே பார்க்காதது அல்லது பார்த்துப் பின் மறைத்தது:
==========================================================

எஸ்.பொ://"... அப்போது நான் வாழ்ந்த வாழ்க்கையிலே நான் இந்த ஜாதீய முறைப்படி நான் தாக்கப்படவில்லை. நான் தாக்கப்படாமல் இருக்கக் கூடிய ஒரு நிலையில் நான் தாக்கப்படுகிறேன் என்று சொல்லிக் குரலிடுவது சரியில்லை." //

  எஸ். பொன்னுதுரை இதையே என்னிடம் சொல்லியிருந்தால், "நீ தாக்கப்படாது, நீ தாக்கப்படுகிறாய் என்று குரல் கொடுத்தால் அது சுத்த பொய்யாகும். ஆனால் இந்த கேள்வியின் அர்த்தம், னீ சார்ந்திருக்கும் சமூகத்தில் உள்ள உன்போல் சம மதிப்பீடுகளை கொண்ட மக்கள் தாக்கப்படுகிறார்களே, அதை கண் கொண்டு பார்த்து கருத்தேதும் சொல்லுமையா புண்ணியவானே? இல்லை நான் தாக்கப்படும் வரை பொறுத்திருந்து தான் கருத்து சொல்வேன் என்ற வாதத்தை காதலிக்க காரணம் என்ன ? "  என்று கேட்டிருப்பேன்.

மேலும், "நீ தாக்கப்பட்ட பின், கருத்து சொல்ல இருப்பாய் என்ற நிலைமை இங்கு இல்லையே?, உன்போல் பலர் இல்லாமலாகி இருப்பது தெரிகிறதா? இப்போ புரிகிறதா உனக்கு?" என்றும் கேட்டிருப்பேன்.


எஸ்.பொ://"... என்னுடைய அம்மா அப்பா அனுபவித்தத் துயர்களையாவது நீ எழுதியிருக்கலாம்; ஆனால் நீ அதைக் கூட மறந்துவிட்டாய் என்று சொல்கிறீர்கள்? ஏன் என்மீது அதைத் திணிக்கிறீர்கள்? ஒரு படைப்பாளி என்ற அளவில், will your not give me the freedom to choose what I want to write?"
//

    என்னுடையா அம்மா அப்பா அனுபவித்த துயர்களை நான் எழுத மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஐயா பொன்னுதுரை?
உங்கள் அம்மா அப்பா அனுபவித்த சொத்துகளை தூர எறிந்து விட்டீர்களா? என்று தெரிந்து கொள்ள ஆசையாய் உள்ளது பொன்னுதுரை அவர்களே? சொத்துகளை தூர எறிந்திருக்கும் சித்த பிரமை உங்களுக்கு இல்லை என்று நான் நம்புவதால் இதையும் கேட்கிறேன்,
உங்கள் படைப்புகளில் அவற்றை எழுத வேண்டியதில்லை, கருத்துகளை எழுதுங்கள் என்பதுதானே அக்கேள்வின் ஊடுபாவி தொக்கல்?
இதை என் படைப்பு சுதந்திரத்தில்  தலையிடாதீர்கள் என்று தவறாய் எடுத்துக் கொண்டு தறி கெட்டுப் பேசினால் என்ன அர்த்தம் அய்யா பொன்னுதுரை அவர்களே?

  இதே நிலைப்பாட்டை அவரது பிள்ளைகள் துயரனுபவித்தாலும் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எஸ்.பொ://"... வன்னியிலே நடக்கிற போராட்டத்தை நான் என் படைப்பிலே கொண்டுவரவில்லை. அதிலிருந்து விலகி ஓடிய மனிதன் என்று கூட இப்போது வன்னியில் வாழ்கிற போராளிகளும் எழுத்தாளர்களும் சொல்லலாம். சொல்வது நியாயம். ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் அனுபவத்திற்கு அன்னியமானதை நான் எப்போதும் எழுத மாட்டேன். இதை நான் நெடுகச் சொல்லி வந்திருக்கிறேன்."//

      இப்படிப் பேசிப் போகும் திரு. பொன்னுதுரை அவர்களே! நீங்கள் நிலவை உங்கள் படைப்பில் பேசியதே இல்லை என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் நிலவை பேச வேண்டுமெனில் அல்லது வர்ணிக்க வேண்டிமெனில் , நிலவுக்கு செல்லாதவரை நான் அது பற்றி எழுத முடியாது என்று சொல்லி விட்டால், உங்களை கேள்வி கேக்க எனக்கு தெரியாது?? ;-).

பிரபல எழுத்தாளர்கள் சறுக்குமிடம் உண்டு என்பதாலேயும், யானைகளும் சறுக்கும் என்பதாலும் இது ஒன்று பெரிதல்ல என்றே நினைக்கிறேன்.

இந்த பதில்களால், எஸ். பொ. என் கண்ணுக்கு, சக மனிதனின் துக்கத்தைப் பார்க்கதெரியாத ஜந்துவாக தெரிவது, அவரது மிகப் பெரிய வெற்றியாக இருக்கலாம். சமுகத்தில் படைப்பாளியின் குரலை, பயன்படுத்தப் பட பல வழிகள் உள்ளன என்றும், அதை அவர் தெரிந்து கொள்ள விழையவில்லை என்றும் வாதாடலாம்.
எஸ். பொ. இந்துத்துவவாதியா? எனக்கு தெரியாது ? தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் அடியுங்களேன்.

 


Posted at 07:33 pm by karthikramas
Comments (8)  

Friday, April 30, 2004
குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்...

ரமணிதரனின் கொடுத்துவைத்தாரும் அல்லாதாரும் பதிவை வைத்து வடித்தது இது..பிடித்துள்ளதா என ரமணிதான் சொல்ல வேண்டும். ;-)

குழப்பம் இங்குதான் எனக்கு ஆரம்பம்
==============================
நாளை இருப்பேனா அல்ல
தின்றிரவுக்குள் இறப்பேனா

எதிர்காலத்தை தீட்டுவதா
எதிர்காலம் எனைத் தீண்டாது என்றிருப்பதா

சென்றவர் வரும் வரை சென்னியில் அனல் கொதிக்க
வருவாரா? வரமாட்டார் என்ற செய்திவருமா?

ஒரு மணித்தியாலத்தில் இத்தனை
நாசங்கள் நடக்கும் நாட்டினில்
நான் நேசங்களை நினைப்பது நியாயமா?

மறையாதாவனை
மறைந்தேன் எனச் சொல்லி
மன்றாட வைத்தவனை மறப்பதா?
இறைவனை துதிப்பதா?

வீடு விட்டு போன நண்பன்
வீடுலகம் சேர்ந்து விட்டான் என
தேடவும் துணியார் அழுவார் அரற்றுவார்
விடுகதை போல் ஆகிவிட்ட
வாழ்விதனை வாழ்வதா விடுப்பதா?

துப்பாக்கியின் முகத்தினை
முகத்தினுக்கு நேராக
தப்பிக்க வழியின்றி பார்க்கின்ற வேளைதனில்
என் உடம்பினை வாட்டுவது கோபமா? ஆண்மையா?

எங்கிருந்தோ வந்தனர்
இந்தியர் யாம்  உதவவே வந்தோம் என்றனர்
வந்திருந்த தந்தையர் நாட்டர்
குந்தகமே குறியென செய்தனர்
சிந்தின எம் இரத்ததின் நிறம்
வேறென? நினைந்தனர்

எம் விதியை இதனினும்
விதியற்றவரோடு ஒப்பிட்டு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
கதவு ஒன்றைத்  தவிர
வேறு கதவிலை நாம் புக

எருதின் நோய் காக்கை அறியாதுதான்
இனப்பிரச்சினை அங்குமுண்டோ?
மனிதன் காக்கைகளாய் மாறிவிட்ட
வன்முறையை விட
நாம் பார்க்கும் இனவன்முறை
பெரிதிலையோ?


Posted at 08:31 pm by karthikramas
Comments (5)  

ஒரு சொட்டு வியர்வை...

வருத்தங்களின் அழுத்தத்தால்
வார்த்தைகள் நசுங்கி
குறைந்து விட்ட வேளைகளில்
மீதமிருக்கும் மிச்ச வார்த்தைகளை வைத்துதான்
கவிதைகள் எழுத வேண்டியுள்ளது.
மனிதனால் செய்ய முடியாததை
வார்த்தைகள் செய்துவிடவா போகின்றன?
கவிகளுக்கு அப்படித்தான் போல...

வாழ்வை திரும்பிப் பார்க்கிறேன்
வார்த்தைகள் சிலவும்
வேர்வைகளின் நினைவும்
வருத்தங்களும் மிச்சமுள்ளன..

அழுத்தங்கள் இல்லா
இது போன்ற வேளைகளில் தான்
திரும்பிப் பார்க்ககூட முடிகிறது...


Posted at 07:58 pm by karthikramas
Comments (1)  

Next Page