| Name September 16, 2008 01:45 AM PDT very bad criticism............. | ||
| Eelanathan June 7, 2004 08:08 AM PDT அண்ணாச்சி இடையிடையே மற்றவர்களது பின்னூட்டத்தை விட்டு உங்கள் பதிவுகளையும் கொஞ்சம் பாருங்களேன்.நிறைய நல்ல விடயங்களை உங்களிடம் இருந்து கேட்காமல் போய்விடுகிறது | ||
| karthikramas June 6, 2004 10:00 PM PDT அனைவருக்கும் நன்றி. வந்தியதேவன் நீங்கள் சொன்ன பதிவுக்கு மறுமொழி எழுதியுள்ளேன். | ||
| Santhosh June 5, 2004 03:29 AM PDT நீங்கள் கொஞ்சம் கடுமையாக சொல்லியிருந்தாலு ம், சொன்னது மிகவும் சரி. இவரைப்போல பலர் ஆன்மீகம் என்ற பேரில் Pop-spiritualism cultureஐ வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அது சரி, இவர்கள் இல்லாவிடில் சக்தி விகடன், குமுதம் பக்தி போன்ற பத்திரிக்கையில் யார் எழுதுவார்கள். | ||
| Vanthiyathevan June 5, 2004 12:55 AM PDT ரசிக்கும்படியான பதிவு. சுள்ளென்றும் இருந்தது. நேரம் கிடைத்தால் வீதிவரை உறவு என்ற எனது பதிவைப் படியுங்களேன். | ||
| Thangamani June 4, 2004 10:04 AM PDT நமது அறிஞர்களின் இலட்சணம் இது! | ||
| Balaji-paari June 4, 2004 07:03 AM PDT atappaavi, neengalaumaa? ;) | ||
| Karthikramas June 2, 2004 09:18 PM PDT பெயரிலி , உண்மைதான். ஆனால் நான் என்ன சும்மாவா பின்னுட்டம் எழுதுகிறேன்? என் அலுவலகத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டுதானே :P. என்னை மாதிரி யாராவது உண்டா :) முத்து நன்றி. | ||
| Muthu June 2, 2004 06:29 PM PDT கார்த்திக் .. ராஜா சொன்னதை வழி மொழிகிறேன் .. :) | ||
| -/பெயரிலி. June 2, 2004 10:03 AM PDT வலைப்பதிவிலே நாங்கள் பின்னூட்டம் பதிகிற நேரத்தினைவிட்டால், நேரவிரயம் அநியாயயமானதே :-) | ||
| Karthikramas June 2, 2004 12:10 AM PDT Correction: //ிற்றிதழ்களின் பக்கம் பார்த்தால் அத்தனை தரமான் படைப்புகளும், சிந்தனையாளகளும் உள்ளனர். // அவர்களே சுகி சிவத்தை விட நூறு மடங்கு நன்றாய் பேசுவார்கள் , அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஏன் குறிப்பிட்ட சிலரை கட்டி அழவேண்டும். எல்லாம் வெற்று புகழ்தான். இது போன்றவர்களின் புகழ்..... ் நிச்சயம் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் எதிர்காலத்தில். அதுவும. | ||
| Karthikramas June 2, 2004 12:06 AM PDT ராஜா, படித்தேன் உங்கள் பதிலை. நன்றி. கிட்டத்தட்ட நான் கூட அந்த முடிவுக்கு வந்துதான் உள்ளேன். நடப்பது நிழல் பிரதமரின் ஆட்சி. சுகியாரை குறித்து: அதற்காக அவருடைய மொத்தப் பேச்சையும் நாம் புறந்தள்ள வேண்டியதில்லை. என் கெட்ட நேரம், அவரின் இந்தப் பேச்சைன் முகத்தில் விழித்தேன் அன்று; அவ்வளவுதான். சொந்தக் கருத்தை கலக்கிறேன் பேர்விழி என்று சொத்தைக் கருத்தை, மக்கள் அனைவருக்கும் சொல்லிவிடுகிண்றனர் சில சமயங்களில். உங்களுக்கு தெரியாததல்ல, சிற்றிதழ்களின் பக்கம் பார்த்தால் அத்தனை தரமான் படைப்புகளும், சிந்தனையாளகளும் உள்ளனர். இது போன்றவர்களின் புகழ் நிச்சயம் சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் எதிர்காலத்தில். அதுவும் சன் டிவியில் பேசினால் என்ன ஆகும். காசேதான் கடவுளடா! சுந்தர வடிவேலு, சுராங்கணிக்கா மாலு! கரெக்டா சொன்னீங்க. சன் என் டி .காம் -ல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பமுடியுமா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அவசியம் சென்னை போகும் போது *நேரில் சந்தித்து* இதை அவரிடம் கொடுத்து விடுகிறேன். எல்லோருடைய நேரத்தையும் காக்கும் பொறுப்பு எனக்கில்லையா என்ன? :-) ஈழநாத*ன்*, அடிதடின்னு வந்தா எனக்கு சப்போர்ட்டு பண்ணுவீங்க இல்ல :-) இல்ல நீங்களும் தர்ம அடி போடுவீங்களோ :-) | ||
| ராஜா June 1, 2004 05:00 PM PDT கார்த்திக், சோனியா மேட்டர் சம்மந்தமா நானும் சில கருத்துக்கள் எழுதியிருக்கேன். வலைப்பூவுல பாருங்க. | ||
| ராஜா June 1, 2004 01:49 PM PDT சுகி சிவம் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தை சொல்லியிருப்பது ஆச்சரியமா இருக்கு. நான் அவரின் சில மேடை பேச்சிக்களை கேட்டிருக்கிறேன். நல்ல சிந்திக்க தக்க கருத்துக்களை நல்ல உவமானங்களோடு விளக்குவார். இப்போ என்ன ஆச்சு?!. இதைப் படித்த பிறகு எனக்கு அவர் மேலிருந்த மதிப்பு குறைந்து விட்டது. பாவம் அவரும் என்ன தான் செய்வார்?. ஏதோ ஒரு நாள் மேடையேறி பேசினால் ஏதாவது சிந்தித்து உருப்படியா கருத்து சொல்லலாம். இப்போ தினமும் அரை மணி நேரத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகணும், எதைப் பற்றியாவது பேசணும்னா.. எதப்பத்தி தான் பேசறது?. இதே கதி தான் இவருக்கு முன்னால இந்த வேலைய பாத்த வலம்புரிஜானுக்கும் ஆச்சு. சன் டி.வி.ல பேச வந்த புதுசுல நிறைய புத்தகங்கள் பத்தியும், அறிஞர்கள் பத்தியும் அருமையா பேசி கொண்டிருந்தவர்.. நாளாக நாளாக.. சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், இடுப்பு சுழுக்குக்கு சூரணம் எப்ப்டி செய்யறது, பேதி ஆச்சுனா என்னா கஷாயம் குடிக்கணும்னு பெனாத்த ஆரம்பிச்சு காலைல 8.30 மணினா சன் டி.வி.ய விட்டு எல்லோரும் பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடப் பண்ணார். இப்போ அதே கதி சுகியாருக்குமா.. ஹூம்.. எல்லாம் "டப்பு" பண்ற வேலை. | ||
| Eelanathan May 31, 2004 11:46 PM PDT நேரில் போனால் நானும் வருகிறேன் ரொம்ப நாளாகிவிட்டது அடிதடி வேடிக்கை பார்த்து | ||
| sundaravadivel May 31, 2004 01:50 PM PDT எனக்கு அவரைப் பற்றியோ, நீங்க சொன்னதைப் பற்றியோ எதுவும் தெரியாது, ஆனா ஒன்னே ஒன்னு, இந்தப் பதிவை எதுக்கு அவரோட முகவரிக்கு அனுப்பனும்? நீங்களே நேராப் போயிக் குடுத்தா அவரு சந்தோசப் படுவார், இல்லையா? :) | ||
| Leave a Comment: |