Entry: f (X) = 1 / 9 * ( X ^ 2) Tuesday, June 22, 2004



f (X) = 1 / 9 * ( X  ^ 2)
 தலைப்பைப் பாத்துட்டு, என்ன இது குரங்கின் வேலை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சான்னு கேக்காதீங்க.
இணையத்திலிருந்து உருவிய ஒரு சூத்திரம் இது. தார் போட்ட ரோடுகளில்  கார் செல்லும் வேகத்தைக் கொண்டு இரண்டு கார்களுக்கும் இடையில் தேவைப்படும் இடைவெளியை கணக்கிடுவத்ற்கு இச்சூத்திரம் பயன்படுகிறது. (உபயம்: http://calculator.maconstate.edu/ave_rate_change_lesson/ )
  இந்தச் சூத்திரத்தின் படி  30 மைல் வேகத்தில் செல்லும் ஒரு காருக்கு முன் 100 அடிகள் இடைவெளி தேவை. அதே போல 60 மைல் வேகத்தில் செல்லும் ஒரு காருக்குமுன் தேவையான இடைவெளி 400 அடிகள். (அது எப்படி 30 க்கு 100 60 க்கு 200 தானே என்று குதிரைக்கு குர்ரம்னு கேக்காதீங்க.) சூத்திரத்தைப் பயன்படுத்தினால் அப்படித்தான் வருகிறது. 400 அடியா யோவ் நீ என்ன அமெக்காவுலதான் இருக்கியான்னு என்னைக் கலாய்த்துப் பயனில்லை. அப்புறம் பாசமலர் சிவாஜிகணேசன் ரேஞ்சுக்கு சோகமான , விபத்துக்களைப் பற்றி எழுதி உங்களையும் அழ வைச்சுடுவேன் ஜாக்கிரதை.
  அட 400 வேண்டாமுய்யா, 60 மைலுக்கு க்கு ஒரு 100 விடுங்களேன் , மறுபடியும் வாழ்றதுக்கு ஒரு தூரத்து நம்பிக்கைக் கிடைக்கும். :)  என்ன விடுவீர்கள்தானே?

   3 comments

karthikramas
June 22, 2004   01:26 PM PDT
 
//முன்னாடி இருக்கிற காருக்கும் முன்னாடி இருக்கற காரோட டெய்ல் லாம்ப் வரைக்கும் பாத்து ஓட்ட பழகணும்.//
யாரையாவது கொலை பண்ண திட்டம் தீட்டுறீங்களா? :). நானும் அப்படி ஓட்டுவதுண்டு ஆனாலும் மண்டையில் உறைச்சவுடன் கொஞ்சம் இடவெளி விடுகிறேன் இப்பெல்லாம்.
karthikramas
June 22, 2004   01:21 PM PDT
 
பரி இப்படி அநியாயத்துக்கு உண்மையப் போட்டு உடைச்சுட்டீஙகளே. அது என்னமோ உண்மைதான். லைசன்சுக்கு என்னத்த பெரிசா படிச்சேன். ஒன்னும் இல்ல.
அப்பறம் ட்ரக்க ஞாபகப்படுத்தினீஙக, ஒரு புராணமே எழுத வேண்டியிருக்கும். நீங்க சொல்றததான்
நானும் செய்றேன். துஸ்டனைக் கண்டால் தூர விலகு. ட்ரக்கைக் கண்டால் ஓடி ஒளி. :)
Pari
June 22, 2004   01:07 PM PDT
 
லைசன்ஸ்க்கு படிக்கிறப்போ ஒழுங்கா படிக்கலியா? :-)புத்தகத்திலயே இந்த breaking distance அட்டவணை இருக்குமே(சூத்திரம் எல்லாம் ஞாபகம் வச்சி, கணக்கு பண்ணி... நடக்கிற காரியமா).

முன்னாடி இருக்கிற காருக்கும் முன்னாடி இருக்கற காரோட டெய்ல் லாம்ப் வரைக்கும் பாத்து ஓட்ட பழகணும்.

தடிமாட்டு வண்டிங்க பின்னாடி போறதில்ல. போவ வேண்டி இருந்தா இடைவெளி விடுமின் தான்.

ட்ரக் மகானுபாவர்கள் பக்கத்துல போனா ஸ்பீட் லிமிட்டெல்லாம் மறந்து ஒரே அழுத்து, முன்னாஆஆஆடி ஓடிடணும். இல்லெ பின் தங்கிடணும்.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments